அர்ஜுனன் தீர்த்த யாத்திரை
A.K. செல்வதுரை
அர்ச்சுனன் தரிசித்த அற்புதத் திருத்தலங்கள் - அத்தியாயம் 1
வீரகால் அளந்த குறளாய்
ஆனாது சீறும் மழுவல் வில்லும் வெல்லும் முனை
அலம் உற்ற செங்கையவராய்
வான்நடர் வந்து தொழுமண் நாடர் யாவரையும்
மடிவிக்க வந்தவடிவாய்
நாளாவிதம் கோள்பரி ஆள் ஆகி நின்று அருளும்
நாராயணாய நமவே.
பாண்வர்களுக்கு திருதராட்டிரன் காண்டவப்பிரஸ்தம் என்னும் காட்டை அழித்து, அங்கே வசிக்கும்படிக் கூறினார். அது கொடிய பேய்கள் உலவும் காடு. ஸ்ரீ கிருஷ்ண பகவான் துனையால் விண்ணுலகத் தச்சன் விசுவகர்மா வரவழைக்கப்பட்டான், ஒரு அழகு மிக்க நகரை உருவாக்கினான். அந்த நகரம் இந்திரனுடைய பொன்னுலகத்தையே மிஞ்சும்படியாக இருந்ததால் இந்திரப்பிஸ்தம் என்று வழங்கலாயிற்று.
இந்திரப்பிரஸ்த்த்தில் பாண்டவர்கள் அரசாட்சி செய்து வந்தபோது அங்கே ஒரு நாள் நாரத முனிவர் வந்தார். அவர்கள் சகோதர ஒற்றுமையைப் பார்த்து மகிழ்ந்து அவர்கள் ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு நியமனம் வகுத்தார். அதாவது அவர்கள் ஐந்து பேரும் திரெளபதியுடன் இல்லறம் நடத்தும்போது ஆண்டுக்கு ஒருவர் மட்டுமே இல்லறம் நடத்த வேண்டும் என்றார். அப்படி ஒருவர் இல்லறம் நடத்தும்போது மற்றவர் காண நேர்நதால் அந்தப் பாவப் பிராய்ச்சித்தத்திற்காத் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று கூறிச் சென்றார்.
ஒரு நாள் பாண்டவர்களில் நடுப் பிறந்தோனாகிய அர்ச்சுனன் தனிமையில் அமர்ந்திருந்தான். அப்போது ஒரு அந்தணன் ஓடோடி வந்து அவனிடம் பதற்றத்துடன் முறையிட்டான், "ஐயா நான் என்னவென்று சொல்லுவேன், எனது பசுக் கூட்டங்களை யாரோ கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட்டார்கள். உங்கள் அரசாட்சியில் இப்படி ஒரு கொடுமையா?" என்று.
அர்ச்சுனன் அந்த அந்தணரைப் பார்த்து, "பயப்படாதீரகள், உங்க்கள் பசுக் கூட்டங்களை நான் மீட்டு வந்து தருவேன்" என்று கூறிப் புறப்பட்டான். ஆயுதங்கள் வைத்திருக்கும் கிடங்குக்கு ஒடினான். ஒடிய வேகத்தில், பரபரப்பில் அங்கு வழியில் இருந்த தருமரையும் திரௌபதியையும் பார்க்கவில்லை. ஆயுதங்களை எடுத்துக்கொண்டு திரும்பும் போது தருமர் திரௌபதியுடன் தனிமையில் அமர்ந்திருந்த வேளையில் திரௌபதியின் பாதங்களைக் கண்டான். போகும்போது பார்காததற்குக் காரணம், மனநிலை, அவசரம். பிறகு அந்தணனின் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து சென்ற கள்வர்களைத் தேடிப்பிடித்து விட்டான். அவர்களை வென்று சிறைப் பிடித்ததுடன் பசுக் கூட்டங்களையும் மீட்டு அந்தணர் வசம் ஒப்படைத்தான்.
பிறகு நாரத முனிவர் வகுத்துக் கொடுத்த நியமன விதி பிசகியதால் தீர்த்த யாத்திரை புறப்படுவது என முடிவு செய்தான். தருமர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்டானில்லை, எனவே தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.
குருக்ஷேத்திரம்
இந்திரப்பிரஸ்தம் என்பதுதான் இன்றைய குருஷேத்திரம். டில்லியில் இருந்து 96 கிளோ மீட்டர் பிரயாணம் செய்ய வேண்டும். அர்ஜுனன் தனது தீர்த்த யாத்திரையை இங்கே இருந்துதான் தொடங்குகிறான். இது மிகவும் புண்ணியம் வாய்ந்த பூமியாகும். இங்கு பயணிகளுக்குத் தமிழ் நாட்டு உணவு கிடைக்க வசதியாக தருமசாலை ஒன்று உள்ளது. கீதா மந்திர் என்ற ஒரு அற்புதமான இடம் உள்ளது. இங்கு அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் தேருடன் கீதோபதேசம் செய்யும் காட்சி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வரிசையாக பஞ்சபாண்டவர்களின் சிலைகள் உள்ளன.
இங்கே "பாணகங்கை' என்று சொல்லக்கூடிய இடம் ஒரு பெரிய கிணறாக உள்ளது. இதன் கரையில் "பீஷ்மரின் சரதல்பசயனம்" உள்ளது ஒரு தனி அறையில் அம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் சிலை உள்ளது. பக்கத்தில் வில்லேந்திய அர்ச்சுனன் சிலை. பீஷ்மர் அர்ச்சுனனை தண்ணீர் தாகம் தணிக்கும்படி வேண்ட, ஒரு அஸ்திரத்தால் பூமியைப் பிளந்து நீர் வரவழைத்த இடமே "பாணகங்கை'. தனக்குப் படுக்கை வேண்டும் என்று பீஷ்மர் கேட்க அர்ச்சுனன் அஸ்திரங்களால் படுக்கை ஏற்படுத்திக் கொடுத்த இடம் தான் சரதல்பசயனக் கூடம்".
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும்
செம்மென் கனி இதழாளொடுகில் நாள் நலம் உற்றாள்
அம்மென்கொடி அனையாளும் இராவானை அளித்தாள்"
இங்கு "சூரியகுண்டம்' என்ற இடம் பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு உள்ள ஊர்களில் பெரிய ஊர் ஸ்தானேஸ்வர் என்ற ஊராகும். இது ஒரு பிரசித்தி பெற்ற சிவ க்ஷேத்திரமாகும். இங்கு சங்கராச்சாரியார் பீடம் உள்ளது.
A.K. செல்வதுரை
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















