Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 


Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
கண்ணீர் அஞ்சலி
மழலைகள் குழு






செப்டம்பர் 18, 2009 அன்பர்களுக்கு ஒரு இரங்கல் செய்தி:

தனது அழகான கவிதைகளாலும், ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளாலும், சினிமா செய்திகளாலும் நம் அனைவரையும் மகிழச் செய்து வந்தவர் திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சிறு கட்டிபோல கழுத்தில் ஆரம்பித்த ஒன்று உமிழ் நீர் சுரப்பிகளைத் தாக்கியுள்ள கொடிய புற்று நோய் என்று கண்டுபிடிக்கப் பட்டு அடையாறு புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில மாதங்களுக்கு முன் அந்த மருத்துவ மனையில், இனி சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என்று அனுப்பி விட்டனர்.

சென்ற ஜூன் மாதம் அவர் கழுத்திலும், காதுக்கடியிலும் கட்டிகள் போல ஆரம்பித்த சில வெடித்து துன்பம் அதிகரிக்க மைலாபூர் கல்யாணி ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது வரை அவருக்குக் கொடுக்கப் பட்டு வந்த சிகிச்சை தவறானது என்றும் ஆறு ஊசிகள், ஒவ்வொன்றும் 21 நாள் இடைவெளியில், போட்டுக் கொண்டால் (Chemotherapy) குணப்படுத்த முடியும் என்று சொல்லி ஜூன் மாதம் கடைசி வாரம் முதல் ஊசியும் போட்டனர். ஒரு ஊசி மட்டும் ரூ. 8,000- இது தவிர மருத்துவ மனை செலவுகள். கல்யாணி ஆஸ்பத்திரியிலும் மூன்று ஊசிகள் போட்ட பின்பு சில வாரங்களுக்குமுன் இனி சிகித்சை அளிப்பதில் பயன் இல்லை என்று சொல்லி வீட்டிற்கு அவரை அனுப்பி விட்டனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு அவரை மாத்தூரில் உள்ள ஜீவோதயா என்ற புற்று நோய் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் மருத்துவ மனையில் சேர்த்தார் அவர் மனைவி.

ஜீவோதயாவில் சில நாட்கள் கழித்த தாயுமானவன் இன்று காலை 11.50 அளவில் இறைவனடி சேர்ந்தார்.

பல திறமைகள் இருந்தும் காசு சேர்க்கும் திறமை தெரியாதவர் திரு தாயுமானவன். அவரது உயிரைக் காப்பாற்ற உதவுவது நம் அனைவரது கடமை. அவரது மருத்துவச் செலவுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

நடராஜன் கல்பட்டு


தாயுமானவர் அவர்களது வலைத்தளம்

ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட விவரங்கள்

நம் எல்லோரையும் ஊக்குவித்து தன் எழுத்தாலும் கவியாலும் நம் மனம் கவர்ந்து, தன் உடல் நிலையையும் பொருட் படுத்தாது தமிழுக்காக வாழும் தாயுமானவர் அவர்களே,

உங்கள் பெருமையும் நிலைமையும் நாங்கள் அறிந்ததே. இன்று நீங்கள் இறைவனடி சேர்ந்தீர்கள் என்று உங்கள் மனைவி "அன்பு" அவர்கள் அழுகையினூடே சொன்னது கேட்டு சொல்லொணாத் துயருற்றேன். அவரது பாதிப்பையும் அன்பையும் வெறும் வார்த்தைகளாக்கிக் கொள்ள இயலவில்லை ஒரு வேண்டுதல் உங்களுக்காக:

அந்தத் தாயுமானவன் எங்கள் அனைவரின் வேண்டுதலையும் செவி சாய்த்துக் கேட்கட்டும். உங்கள், எங்கள் எண்ணங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு வலிமை தரட்டும். எங்களின் பிரார்த்தனைகள் தாயுமானவரை சேரட்டும். எங்கள் ஒவ்வொருவரின் மனசுக்குள்ளும் இருந்த "இவர் குணமாக வேண்டும்" என்ற வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்கவில்லை. தமிழைக் கொடுத்து, அறிவைக் கொடுத்து, நல் நினைவைக் கொடுத்து, திறமை கொடுத்து, சித்திரம் கொடுத்து, சுவரை இடித்து விட்டது நியாயமா?

அவரை மீட்டுக் கொடுக்கத் தவறிய போதிலும், எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் குடும்பத்தைக் காக்க வேண்டுமெனப் பிரார்த்தனை செய்கிறோம்.

"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே!"

பட்டினத்தார்

"தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
த்ரயுபெருந்து ராயுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யானிதற் கிலன் ஒர்கைம் மாறே"

மணிவாசகர்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

"இந்தப் பாசுரத்தை கூறி கூன் பாண்டியன் தன் கொடு நோயைத் தீர்த்தார்"

தாயுமானவரைக் காக்க வேண்டி நாம் செய்த பிரார்த்தனையை செவிசாய்க்காவிடினும் தெய்வம் அவரது குடும்பத்தைக் காக்க வேண்டும்னும் பிரார்த்தனையை செவிமடுக்கும் என நம்புகிறோம்.

வேண்டுதலுடன்
மழலைகள் ஆசிரியர் குழு

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button