மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
பார்வமணி
|
|
மானிட ஜென்மம்உலகில் ஜீவராசிகள் ஸ்ருஷ்டியானதிலிருந்து படிப்படியாக பல ஜீவன்களை அடைந்து, இப்பொழுது பெறும் பேற்றை எய்தற்குறிய மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இந்த உயர் பிறவியை, மறு ஜன்மம் எடுக்க வேண்டியிருந்தால் காப்பாற்றிக்கொள்ளவும் அல்லது இதை விட மேன்மையான பதவியை, அதாவது பிறப்பில்லாமையை அடைவதற்கான வழிமுறைகளில் நம் காலத்தை செலவிடுவதுதான் நாம் இந்த மனிதப் பிறவி எடுத்ததின் பயனாகும் (அதாவது நோக்கமாகும்). நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமானால் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் அதன் இயல்புக்கு ஏற்ற முறையில் நிறைவுள்ள பூரணத்வத்தை அடைய முயற்சி செய்வது புலனாகும். புல், பூண்டு, மரம், பறவை மற்றும் மான் முதலிய பிராணிகள் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பில் செயல்படும்போது, உற்பத்தி செய்யும் திறமை ( creative power) உடைய மனிதன் தன்னுடைய முயற்சியாலும் மன உறுதியாலும் நிறைவு காண வேண்டாமா? என்கிறார் டாக்டர். ராதாகிருஷ்ணன்.மேலும் இந்த முயற்சி, உடல், மனம், ஆத்மா இவை மூன்றையும் ஒன்றுபடுத்துவதில்தான் இருக்கிறது. உடல் என்பது ஸ்தூல உருவத்தில் காட்சி தரும் மனமேயாகும். மனம் நுண்ணிய அடுக்குகள் கொண்டது. மனிதன் தன் உடலை முற்றும் அடக்கி ஆளும் சக்தி பெறும்போது அவனுடைய மனத்தையும் அடக்கும் சக்தி பெறுகிறான். மனிதன் இன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போகக்கூடிய சூழ்நிலையில் ஒரு முடிவு பெறாத சோதனைப் பொருள் என்கிறார் டக்டர். ராதாகிருஷ்ணன். அவன் விழிப்படைந்தால் புதிய முறையில் சிந்திக்கவும் செயல்படவும் செய்வான். இந்த விழிப்புணர்ச்சி பெற (In evolution) அதாவது பரிணாமத்தின் படியில் இன்னொறு படி மேலே செல்ல வேண்டும். மிகுந்த உயர்ந்த ஸ்தானமான பரம்பொருளின் பாதத்தை அடைவதுதான் அது. பல இயற்கை நியதிகளுக்கு மனிதன் உட்படுகிறான். இவன் இந்த நியதிகளைப் பிற பிராணிகளுடன் பகிர்ந்து கொள்கிறான். ஓரே ஒரு நியதியை மட்டும் அவன் பகிர்ந்து கொள்வதில்லை. அவன் நினைத்தால் அந்த நியதியை மீறவும் முடியும் அதுதான் தர்மம் என்ற சட்டமாகும். இந்த தர்மத்திலிருந்து நழுவாமலும், மனிதப் பிறவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவன் கடைப்பிடிக்கவேண்டிய ஒரே வழி எங்கும் நிறைந்த பரம்பொருளை தியானித்து அவன் பாதங்களை அடைய வழி தேடுவதுதான். ஏன் தர்மத்திலிருந்து நழுவாமல் தர்மத்தைக் காக்கவேண்டும்? ஓர் உதாரணம் எடுத்துக்கொள்வோம். இரு நாடுகள் உள்ளன. ஒரு நாட்டின் நாணயம் மற்ற நாட்டில் செலாவணி ஆகாது. ஒரு தேசத்தில் உள்ளவன் சூழ்நிலை காரணமாக அடுத்த தேசத்தில் குடி புக வேண்டியிருக்கிறது. தன்னிடமுள்ள நாணயம் அனைத்தையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்பொழுது பக்கத்து தேசத்துக்காரன் இவனுடைய பணத்தை வாங்கிக்கொண்டு அந்த தேசத்துப் பணத்தை நோட்டுகளாகக் கொடுத்தால் இவன் சந்தோஷமாக எடுத்து செல்வான் அல்லவா? அது மாதிரி நாம் இந்த பூமியில் கொண்டுள்ள பணமும் பொருட்களும் மேல் லோகத்தில் செலாவணி செய்ய முடியாது. அங்கு செலாவணி ஆகக்கூடியது இங்கு நாம் செய்யும் நற்காரியமும் தர்மங்களுமேயாகும்.
இதற்கான வழிகள் வேதத்திலும், உபநிஷத்திலும், கீதையிலும் சொல்லப்பட்டுள்ளன. பின் நூற்றாண்டுகளில் தோன்றிய தவ சிரேஷ்டர்களும், மத ஆச்சார்யர்களும் தங்களுடைய தவ வலிமையினாலும், அறிவின் வன்மையினாலும் கடவுளின் சொரூபத்தையும் ஜகத்தின் இயல்பையும் நன்றாக அறிந்து நமக்கு சுலபமாக புரிந்து கொள்ளும் வகைளும் கஷ்டமில்லாமல் லகுவாக செய்யக்கூடிய வகையிலும் வழி வகுத்து தந்துள்ளனர். இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும்.என்னவென்றால் பல வழி முறைகளை ஏற்படுத்தியவர்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
மனிதன் இந்த வட்டத்தின் போக்கிலேயே சென்று எவ்வளவு ஜன்மாக்களை எடுக்க வேண்டுமோ அவைகளை எடுத்து கடவுளைச் சேரலாம். அல்லது சாந்தமான வகையில் பக்தி (அன்பு) செலுத்துவதின் மூலம் வந்தவழியே திரும்பிச் சென்று கடவுளை அடையலாம். அல்லது, இன்னும் சீக்கிரமாக, வேகமாக எதிர் நோக்கி, யோக முறையில் கடவுளை அடையலாம். இந்த முறை சிறிது கடினமானது. எல்லோராலும் பின்பற்ற முடியாது. ஏன் என்று சிறிது பார்ப்போம். ( தொடரும்) ( பார்வமணி) |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |