Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

 என் படைப்புகள்

கடிதங்கள்

கடிதம் 1
கடிதம் 2
கடிதம் 3
கடிதம் 4
கடிதம் 5
கடிதம் 6
கடிதம் 7
கடிதம் 8
கடிதம் 9
கடிதம் 10
கடிதம் 11
கடிதம் 12
கடிதம் 13
கடிதம் 14
கடிதம் 15
கடிதம் 16
கடிதம் 17
கடிதம் 18
கடிதம் 19
கடிதம் 20
கடிதம் 21

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
வாழும் முறைமை - கடிதம் 22
அசலம்




இராமன் ஸீதையுடனும் இலக்ஷுமணனுடனும் வனவாஸம் சென்றதால் இராம பட்டாபிஷேகம் தடைபட்டுவிட்டது என்று சென்ற இதழில் படித்தோம். அப்படி அவர்கள் காட்டில் சென்று சித்திரகூடத்தில் வசித்துவந்தார்கள். இனி அயோத்தியையில் தசரதர் மூர்ச்சையாகி விழுந்து என்ன ஆனார் எனப் பார்ப்போம். அவர் அந்த நிலையிலிருந்து மீளாமலேயே இறந்து விட்டார். இறக்கும் போது புத்திரர்கள் யாரும் அங்கிருக்கவில்லை. இது ஒரு முனிவனின் சாபத்தால் வந்தது. முன்பு தசரதன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது ஒரு குளத்தில் யானை தண்ணீர் குடிக்கிறதுபோல் சப்தம் வந்தது. அந்த திசையை நோக்கி தசரதன் அம்பெய்தார். அது சென்று துளைத்தது ஒரு ருஷி புத்திரனின் மார்பில். அவன் கீழே விழுந்தான். தசரதன் அங்கு சென்று பார்க்கையில் தன் தவறு புரிந்து வருந்தினார். மன்னிப்பும் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் “ஹே ராஜன், என் பெற்றோர்கள் கண் தெரியாமல் காட்டில் குடிசையில் இருக்கிறார்கள். அவர்களுக்குக் குடிக்க ஜெலம் கொண்டுசெல்ல வந்தேன், இப்படி செய்துவிட்டீரே. ஆனாலும் அவர்கள் தாகமுடன் இருப்பார்கள். நீங்கள் சென்று இந்த ஜெலத்தை அவர்களுக்குப் பருகக் கொடுங்கள்” என்று விண்ணப்பித்தான். தசரதரும் சரி என்று சொல்லி அவர்களை அணுகி நடந்த அசம்பாவிதமான நிகழ்ச்சியை விளக்கி ஜெலத்தைக் கொடுத்தார். அவர்கள் மிகவும் துக்கிதராகி, “ஏக ஆதரவாகியிருந்த ஒரே மகனையும் இந்த எங்கள் வயது காலத்தில் எங்களுக்கு சுச்ரூஷை செய்ய இல்லாமல் பண்ணிவிட்டாயே? புத்திரசோகம் என்பது என்ன என்று உனக்குத் தெரியணும். ஆகையால் நீ உயிர் தறக்கும் தருவாயில் உன்னுடன் கூட உன புத்திரர்களீல் யாரும் இருக்காமல் போகட்டும்” என்று சாபம் தந்தார்கள். அதன் விளைவுதான் இது.

பரதனும் சத்ருக்னனும் தங்கள் தாய்மாமன் அரண்மனைக்குச் சென்றிருந்தார்கள். அவர்களை வரவழைக்க ஆள் சென்றது. அவர்கள் வந்ததும், குழந்தைகள் அரண்மனையில் சோக நிலை தவழ்வதை உணர்ந்து தாயிடம் என்னவாயிற்று என்று கேட்டனர். கைகேயி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் நடந்தவற்றை முழுதும் ஒப்பித்தாள். இதைக் கேட்டு வெகுண்டெழுந்தான் பர்தன். “சே, நீயும் ஒரு தாயா? எப்பொழுதிருந்து இந்த சுய நல புத்தி வந்தது? முதல் புத்திரனுக்குத் தானே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். அதில் என்ன தவறு செய்தார் ததந்தை? இராமனை உன் முதல் பிள்ளை என்று சொல்வாயே, இப்போ என்ன ஆச்சு? இப்படி அரக்கத்தனமான செயலைச் செய்து அண்ண்ன்மார்களையும் அண்ணியையும் காட்டில் திரிய வழி வகுத்ததோடல்லாமல் தந்தைக்கு யமனாகவும் வந்துவிட்டாயே, இது முறையா?” என்று சீறினான். கைகேயி அவனை சமாதானப் படுத்தும் விதம் மந்தரை சொன்ன காரணங்களையே சொன்னாள். அதாவது “இராமன் பட்டாபிஷேகம் நடந்தால், நம் கதி அதோகதிதான். அவர்களுக்கு சேவகம் செய்ய நேரிடும். நமக்கு ஒன்றும் இராது. நாம் நலிந்தவர்களாவோம். ஆகையால் நான் உனக்குப் பட்டாபிஷேகம் செய்ய் உன் தந்தையின் சம்மதத்தைப் பெற்றுவிட்டேன். நீ சுகமாக இருக்க வேண்டும்.” என்றெல்லாம் சொன்னாள். இதைக் கேட்ட பரதன் “சீ, இப்படியும் ஒரு தாயைப் பார்க்க முடியாது. இப்படி ஸ்வார்த்த புத்தியுடன் செயல் புரிந்தாயே, விளைவு என்ன ஆயிற்று பார்த்தாயா? அண்ணனிருக்கும்போது தம்பி ராஜாவாகிறது என்பது சாஸ்திர விரோதம். அதுவும் உன் சுயநலத்திற்காக அவர்களைக் காட்டில் அல்லல் பட வைத்தது பெரும் தவறு. எப்படி நீ நான் இதற்கு வணங்குவேன் என்று நினைத்தாய்? இது ஒருபோதும் நடக்காது” என்றெல்லாம் சீறினான். அங்கிருந்த கௌஸல்யை, சுமித்ரா, ராஜகுரு வஸிஷ்டர், மந்திரிகள் மற்றும் ராஜசபையோர் உள்பட பரதனை சமாதானப்ப்டுத்தி இப்படி உரைத்தார்கள், “ஹே பரதா! ந்டக்கக் கூடாதது நடந்து விட்டது. இப்போது மூத்த புத்திரனும் அடுத்தவனும் இங்கில்லை. அப்பாவின் ஈமச்சடங்குகளை நீதான் ஒழுங்கே செய்யணும்” என்று சொல்லி அவனைக்கொண்டு ஈமச்சடங்குகளைச் செய்ய வைத்தார்கள். பிறகு ராஜகுரு சொன்னார்: “பரதா, இராமனின் பட்டாபிஷேகம் தடைபட்டதால் நீ பட்டாபிஷேகம் செயததுகொள்ள வேண்டும்.” என்று.

இதைக் கேட்ட பரதன் இனத்துடன் குருவை நோக்கிச் சொன்னான்: “பூஜாராகிய குருதேவா! தர்மம் தெரரிந்த தாங்களும் எனது தாய் சொல்வதுபோல் சொல்லலாமா? அண்ணனிருக்கத் தம்பிக்குப் பட்டம் கட்டுவது அதர்மமல்லவா? எனது தாயின் ஈனச்செயலால் இப்படி ஆகிவிட்டது. அதில் எனக்குப் பங்கில்லை. நான் ஒருபோதும் ஸிம்ஹாஸனத்திற்கு ஆசைப் பட்டதில்லை. நான் பட்டம் சூடிக்கொள்ள வற்புறுத்தாதீரகள். மனனிப்புக் கோருகிறேன்” என்றான். அவன் வினய புத்தியைப் பாராட்டினாலும், நடக்க வேண்டியதைச் செய்யத் தூண்ட வேண்டும் என்று அவர் அவனிடம் இவ்வண்ணம் உரைத்தார்: “இரமன் இல்லாததாலும், அவன் பட்டாபிஷேகம் நட்காததாலும் இப்போது அயோத்தியை இராஜா இல்லாத நாடாகிவிட்டது. இதை சாதகமாக்கி விரோதிகள் படை எடுக்க நேரிடலாம். அரக்கர்களும் கொள்ளைக்காரர்களும் தலைதூக்கி நாட்டுக்குக் கெடுதல் ஏற்ப்படும். ஆகையால் இரமன் வரும் வரை நீதான் இராஜாவாக வேண்டும்” என அறிவரை கூறினார்.

என்னே ஒரு தர்மசங்கடமான நிலை! பரதனின் நற்குணத்திர்க்கு இப்படி ஒரு சோதனையா? அவன் தவித்தான். “குரு சொல்வதைத் தட்டவும் இயலாது ஆனால் இதற்கு ஒப்புக்கொண்டால் தாயுடன் சேர்ந்து பரதனும் சூழ்ச்சி செய்தான் என ஜெனங்கள் நினைப்பார்கள். தனக்கு ராஜ்யத்தில் ஆசை இல்லை. அண்ணனுக்கு சேவை செய்தே தன் கடமை. எப்படி அண்ணன் அமரவேண்டிய ஸிம்ஹாஸந்த்தில் தன்னால் இருக்க முடியும்? அதுவும் ராஜாவாக இருக்கத் தமக்கு என்ன தகுதியிருக்கிறது? இப்படி தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டாளே என் தாய், என் செய்வது?” என வருந்தினான். பிறகு நன்றாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். குருவிடம் இப்படி உரைத்தான்: ”அதிகப் பிரசங்கி என்று கருதாதீர்கள். எனக்குப் பட்ட ஒரு எண்ணத்தை இதற்கு ஒரு வழி காண்பதற்காகச் சொல்கிறேன். தாங்கள் அதை நன்றாக சிந்தித்து உத்தரவிடுங்கள், சிரமேற்கொண்டு செயல் படுகிறேன். அதாவது, நாம் எல்லோரும், பிரஜைகளும் சேர்ந்து ஒன்றாகத் திரண்டு வனத்திற்குப் போய், அண்ணனிடம் தந்தையின் இறப்பைச் சொல்லி, ராஜ்யம் ராஜாவில்லாது போய்விட்டதாலும் தாங்கள் வனவாஸம் செல்லத் தந்தை சொல்லவில்லை, என தாய் சுயநலத்துடன் செய்த சூழ்ச்சியே. இப்போது தங்கள் திரும்ப வந்து ராஜ்யபாரம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் எங்கள் எல்லோருடைய வேண்டுகோளும்” எனக் கூறி அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம். இதனாலென் தாய் செய்த பாபத்திற்குப் ப்ரிஹாரம் கிடைத்ததுபோல் ஆகும்:” என்றான். இதைக் கேட்ட ராஜகுருவும் சபையோரும், “பரதன் சொல்வது சரியே. நாம் முயன்று பார்ப்போம்,. இராம்ம் என்ன செய்கிறாரோ பார்ப்போம்” என்றனர். இப்படி எல்லோருமாகத் திரண்டு கானகம் சென்று இராமனை வேண்டினார்கள்.

அயோத்தியா வாசிகளுடனும் குரு, சபையோர் முதலியவருடனும் புறப்பட்டு பரதனும் சத்ருக்னனும் இராமனைத் தேடி வனம் வந்தார்கள். அங்கு சித்ரகூடத்தில் அவர்களைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினார்கள். அவர்கள் தந்தையின் மறைவைக் கேட்டுத் துடித்தாரகள். அவர்களை சமாதானப்படுத்தி, குரு இராமனைக்கொண்டு ஈமச்சடங்குகள் செய்வித்தார். பிறகு பரதன் இராமனிடம் தன் அவல நிலையைப் பற்றியும் கைகேயியின் சூழ்ச்சியைப் பற்றியும் விளக்கி எல்லோரும் திரும்ப அயோத்தியைக்கு வந்து பட்டாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டினான். அதற்கு இராமன் அது நியாயமில்லை. தந்தை சொல்லவில்லையானாலும், அடுத்தது தாய் சொன்னாலும் அதைத் தட்டக் கூடாது. தாய் தந்தையர்கள் சொலவதைத் தலைமேல் ஏற்றுப் பணிபுரிவதுதான் ஒரு நல்ல தனயனுக்கு லக்ஷணம். அதுவும் தாய்க்குத் தந்தை கொடுத்த வரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியது தனயனின் கடமை. தந்தையின் கடன் தனயன் தீர்க்க வேண்டும். ஆதலால் தான் 14 வருடம் முடியுமட்டும் அயோத்தியை திரும்ப இயலாது. அது தர்மமில்லை எனக் கூறி அதுவரை பரதனே ராஜ்யத்தை ஆள வேண்டும் எனக் கட்டளையும் இட்டுவிட்டார்.

இதை கேட்ட பரதன் வீண்டும் துடித்து, பல காரணங்களைக் காட்டி இராமனைத் திரும்ப அழைக்க முயற்சித்தான். என்ன சொல்லியும் மசியாத அண்ணன் சொல்லைத் தட்டவும் முடியவில்லை, ஆனால் தான் ராஜ்ய பாரம் ஏற்கவும் கூடாது. எனன செய்ய என்று இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான். இங்கும் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாரே அண்ணன் என வருந்தினான். ஒரு தர்மசங்கடத்திலிருந்து விடுபட்டு இன்னொரு தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொண்டு விட்டோமே, என்ன செய்ய என வருந்தினான். பிறகு தீர்க்கமாக சிந்தித்து, தான் ராஜ்ய பாரத்தை ஏற்றுப் பட்டாபிஷேகம் செய்து கொள்ளவும் கூடாது, ஆனால் அண்ணனின் சொல்லைத் தட்டவும் கூடாது, அயோத்தியை ராஜாவில்லாத நிலையை அடையவும் கூடாது. இதற்கு ஒரே வழி பளீரென்று அவன் மூளையில் துலங்கியது. இப்படி இராமனிடம் சொன்னான்: “நீங்கள் திரும்ப வந்து பட்டாபிஷேகம் செய்துகொள்ள மறுப்பதாலும் உங்கள் சொலலைத் தட்டக்கூடாது, அயோத்தியையில் அராஜகத்வம் நிகழ்க்கூடாது என்பதாலும் நான் ஒரு உபாயம் சொல்வேன், அதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. இந்த எனது வேண்டுகோளை நிறைவேற்றித் தரணும்.”

அதற்கு இராமன், ”பரதா! எனக்கு உன்பால் அன்புள்ளது உனக்குத் தெரியும். நீயும் என்பால் கொண்டுள்ள அன்பை நான் அறீவேன். நீ தவறு செய்ய மாட்டாய் என்று எனக்குத் தெரியும். நான் திரும்பாதபடி ஒரு உபாயம் உண்டென்றால் உன் கோரிக்கையை ஒப்புக்கொள்கிறேன்” என்றார். இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட பரத்ன், “அண்ணா, நான் பட்டாபிஷேகம் செய்துகொள்ள இயலாது. நீங்கள் உங்கள் பாதுகைகளை என்னிடம் தந்தால் அவற்றிற்குப் பட்டாபிஷேகம் செய்து நந்தி கிராமத்திலிருந்து உங்கள் சார்பில் உங்கள் பிரதிநிதியாக இருந்து நீங்கள் திரும்பி வரும் வரை ரஜ்யபாலனம் செய்வேன். ஆனால் 14 வருடம் பூர்த்தியான மறுனாள் நீங்கள் வரவில்லையானால் நான் தீக்குளிப்பேன்:. என்றான். இதைக் கேட்ட இராமன் சொல்வதறியாது, பரதனின் சகோதர ஸ்னேஹத்தை ச்லாகித்துப் பாராட்டினார். பிறகு யோசித்து, “சரி, நீ சொல்வதுபோல் நடக்கட்டும். எல்லாம் க்ஷேமமாக முடியும்” என்று கூறி எல்லோருக்கும் விடை தந்தான். பரதன் எல்லோருடனும் திரும்பி அயோத்தியைக்குப் புறமே உள்ள நந்திக்கிராமத்தில் இராமனின் பாதுகைகளை வைத்து அவற்றிற்குப் பட்டாபிஷேகமும் செய்து, ஸிம்மாஸனத்தில் அமராமல் இராமனின் பிரதினிதியாக ராஜ்ய பாலன்ம் செய்தான்.

இச்சம்பவங்களிலிருந்து என்ன தெரிந்துகொண்டோம்? தர்மசங்கட நிலைகளிலிருந்து தனக்கும் யாருக்கும் பாதகமாகாமல் ஒரு வழியைக் கண்டான் பரதன். எப்ப்டி? ஆழ்ந்த சிந்தனையுடன், தார்மீக புத்தியுடன், தெளிந்த மனதுடன், சாஸ்த்திரத்தை ஒட்டி ஒரு முடிவெடுக்க வேண்டுமானால் சுயநலம் கலக்கக் கூடாது, பொது நலம் மட்டும் பார்க்க வேண்டும், அத்துடன் சாஸ்திரத்திற்கு பங்கம் வரக்கூடாது. இப்படி எல்லா வழியிலும் சிந்தித்து செயல் புரிபவனே ஞானி.”

பிறிதொரு கட்டத்தை இராமாயணத்தில் அடுத்த இதழில் பார்ப்போம்.

மழலைகள் ஆசிரியர் குழு என் படைப்புகள்



             




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday

Designed and maintained by AKR Consultants