Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

    என் படைப்புகள்

 

Bookmark this page



பகவத் கீதை

அறிமுகம்
இறை வணக்கம்
கருத்துரை
கீதா தியானம்

அத்தியாயம் 1

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6

அத்தியாயம் 2

கருத்துரை
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

Grandpa Cheenu
தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock
Vrishin Vigneshwar


Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

மழலைகள்








 

பகவத்கீதா சாரம்
அசலம்


அத்தியாயம் – 2 (பர்கம் 12)

image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனேநம:

தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்தா ஆஸீன மத்பர:
வசேஹி யஸ்யேன்த்ரியாணி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா

ஸ்லோகம் 61 கேளுங்கள்



ஸாரம்:

அவைகளை (இந்திரியங்களை) அடக்கிய பிறகு அவன் என்னில் தியானத்தை நிலை நிருத்த வேண்டும். யாதொருவனுடைய இந்திரியங்கள் அடங்கி விட்டனவோ அவன் புத்தி ஸ்திரமாக இருக்கும்.

விளக்கம்

இந்திரியங்கள் ஆத்ம ஞானத்திற்கு விரோதிகளாக உள்ளன. அவை நம் ஆத்ம ஸாக்ஷாத்க்காரத்தைத் தடை செய்ய வல்லமை பெற்றவை. அவை நம் ஆத்மீக வாழ்வின் வீழ்ச்சிக்கு ஹேதுவாகின்றன. ஆர்ஜுனன் தான் செய்யும் காரியங்களின் வெற்றியை கவனிப்பதால் அவன் தன் இந்திரியங்களை முதலில் அடக்கி, அவைகளை அவைகள் வழியிலிருந்து திருப்ப முயல வேண்டும் என பகவான் வலியுறுத்துகிறார். இப்போதைய விஞ்ஞானிகள் இந்தக் கருத்தை ஏற்க மாட்டர்கள். ஏனெனில், உணர்ச்சிகளை அடக்கினால் அது ஒருவன் சுறுசுறுப்பை நாசம் செய்து அவன் செயலில் இந்திரிய அடக்கம் காரணம் மானசீக தமனத்திற்கு வழி கோலும் என்க் கருதுவார்கள். ஆனால் ஆத்ம ஞானிகள் இந்திரிய அடக்கத்தால் ஒருவன் தன் மன நிலையை சீர்படுத்த முடியும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். இதனால் மனம் பேதலிக்காமல் ஒரு நிலைப்பட்டு உள்ளே ஒரு சமாதானமான நிலை ஏற்படும் எனக் கூறுகிறார்கள். அப்பேர்ப்பட்டவன் புத்தி திடமாக அமையும் எனக் கருத்து. நாம் தெரரிந்து கொள்ள வேண்டிய கருத்தாவது: “இந்திரியங்ளை உலக விஷயங்களிலிருந்து விடுவித்து நம் வசப்படுத்தி, செய்யும் காரியத்தில் ஈடுபடுத்தினால் காரியம் சித்தியாகும், கூடவே அவன் புத்தியும் ஸ்திரமான நிலையில் இயங்கும்” என்பதே.

த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் க்ரொதோSபிஜாயதே

ஸ்லோகம் 62 கேளுங்கள்



ஸாரம்:

உலக விஷயங்களில் மனிதர்கள் கவனம் வைத்தால் அவைகளில் ஒரு ஈடடுபாடு (Attachment) ஏற்ப்படும். அப்படி ஈடுபாடு ஏற்பட்டால் அவைகளில் ஆசை (Desire) எழும், ஆசை எழுந்தால் (அவை கிடைக்கவிலலையானால்) க்ரோதம் (Anger) உண்டாகும்.

கரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரமா:
ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி

ஸ்லோகம் 63 கேளுங்கள்



ஸாரம்:

அப்படி கோபம் (Anger) வந்தால் மோஹம் (Delusion) உண்டாகும். மோஹம் புத்தினாசத்தை (Loss of discriminating ability) உண்டுபண்ணும். பிறகு அந்த மனிதன் அழிந்து போகிறான்.

விளக்கம்

இந்த ஐந்து ஸ்லோகங்களால் ஸ்ரீக்ருஷ்ணன் மனிதனின் மானஸிக வீழ்சிசிக்குக் காரணம் காட்டி, அவன் தன் தெய்வீக நிலையிலிருந்து எப்படிக் கீழ்த்தளத்தில் ஒரு சாதாரண மனிதனாக மாறி விடுகிறான் எனக் காண்பிககிறார். 62 முதல் ஐந்து ஸ்லோகங்களில் எப்படி அர்ஜுனன் தன் இந்திரியங்களைத் தன்வசப் படுத்தி புத்திக்கூர்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ஒருவன் முன் ஜென்மங்களில் மலினமான ஆசைகளில் அகப்பட்டு, துராக்ரஹத்தில் மூழ்கி, தப்பான பாதைகளில் சென்று, மனம் நிலைகுலைந்து வாழ்ந்த வாழ்க்கையின் பலனாக இந்த ஜென்மத்தில் தானாகவே இந்தக் கட்டுக்கோப்பிலிருந்து விடுபடுவது எனபது இயலாத காரியம். ஆகிலும் இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட மனதை ஒரு நிலைப்படுத்தி, தன் தெய்வீக நிலையில் நிலை நிறுத்த தியானம் ஒன்றே வல்லமை பெற்றது என வலியுறுத்துகிறார்கள் ருஷிகள். அவர்கள் இந்த உண்மையைத் தங்கள் தபஸ்ஸின்போது உணர்ந்து தெரிந்துகொண்டார்கள். மன உளைச்சல்களுக்குக் காரணம் கண்டு அவைகளைக் களைய மனதின் இந்த வ்ருணங்களை ஆற்றுவது ஒன்றே வழி என வலியுறுத்துகிறாகள் ஆத்மஞானிகள்.

நம் கவனம் இந்திரியங்கள் கொணரும் விஷயங்களில் ஈடுபட சிந்தனைகள் (Thoughts) காரனமாகின்றன. அப்படி ஒரு விஷயத்தில் சிந்தனை நிலை நிறுத்தப்பட்டால் அந்த விஷயத்தை அடைய ஆசை (Desire) ஏற்படுகிறது. அந்த விஷயம் கிடைத்தால் சந்தோஷத்தில் மன்ம் துள்ளுகிறது. அது கிடைக்கா விடில் அல்லது அதை அடைய நாம் செய்யும் கர்மத்திற்கு முடடுக்கட்டையாக வரும் விஷயங்களில் கோபம் எழுகிறது. இந்தக் கோபம் அல்லது சந்தோஷம் புத்தியைப் பேதலிக்க வைக்கிறது. இப்படி புத்தி பேதலித்தால், ஒருவனின் சம நிலை குலைகிறது.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: “ஒரு மனிதன் தன் தவறான எண்ணங்களால் (Thoughts) உந்தப்பட்டு, இந்திரிய விஷயங்களில் (Sense Objects) மனதைச் செலுத்தி, அதன் மூலம் வரும் அனுபவங்களில் (experiences) மனதைப் பறிகொடுத்து, அது நிறைவேறாவிடில் கோபத்திற்க்கு ஆளாகி, பிறகு புத்தி பேதலிப்பிற்கு அடிமையாகி, அதனால் தன் புத்திநாசத்தை (loss of discriminative ability) அடைந்து, செய்யும் காரியத்தில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறான். நம் புத்தி (Conscience) தன் வகை திரித்தறியும் தன்மையை இழக்கிறது. அப்போது அவன் வாழ்க்கையில் தோற்றவனாகிறான்” என்பதே.

இந்திரிய விஷயாஸ்ப்பத்தி ஒருவனின் புத்தி நாசத்திற்குக் காரணம் என்பதை அறிந்தொம். இனி மோக்ஷத்திற்கு (இதிலிருந்து தப்பிக்க) என்ன வழி என்பதை அடுத்த ஸ்லோகத்தில் காண்போமாக.

ராகத்வேஷ வியுக்தைஸ்து விஷயான் இந்த்ரியைச்சரன்
ஆத்மவஸ்யைர் விதேயாத்ம ப்ரஸாதம் அதிகச்சதி

ஸ்லோகம் 64 கேளுங்கள்



ஸாரம்:

எவனொருவன் ஆசாபாசம், எதிர்ப்பு இவைகளை வென்று இந்திரியங்களை உபயோகித்து, ஆனால் இந்திரியங்களை தன்வசப்படுத்தி, தன்னடக்கம் பெற்று இயங்குகிறானோ அவன் சாந்த நிலையை அடைகிறான் (peace of mind).

விளக்கம்

யாதொருவன் சஞ்சலமுண்டாக்கும் எண்ணற்ற இந்திரிய விஷயங்களை, அவைகளில் ஈடுபாடு வைக்காமலும் ஆனால் அவைகளை வெறுக்ககாமலும் எதிற்பட்டு இயங்குகிறானோ அவன் சமாதானமான் ஒரு நிலையில் திகழ்கிறான். நல்லது கெட்டது என்பது இந்திரியங்களில் அல்ல. மாறாக அவை ஒருவன் மனோ நிலையினால் ஏற்ப்படக்கூடிய காம க்ரோத லோப கோஹ மத மாத்ஸர்யங்களினால் உண்டாகும் மனச்சஞ்சலமே என அறிந்துகொள். ஒரு சித்தப் பிரமை பிடித்தவன் தன்னைத்தானே சாடடைகொண்டு அடித்துக்கொண்டு அதன் மூலம் எழும் வேதனையில் தவிக்கும்போது அவனிடம் சென்று சாட்டையை இப்படிச் சுழற்றாதே என்று சொல்லித்தருவது போல். மனம் விஷயாஸ்பதமாகி அவைகளால் உண்டாகும் பாதிப்பில் தவிக்கும்போது, அதனிடம் சென்று விஷயங்களில் ஈடுபடாமல் ஆனால் அவைகளை வெறுக்காமல் ஒரு நிலைப்பட்டு இரு என்று சொல்லித் திருத்தினால் மனம் சாந்தமடையும். இந்த நிலைக்குப் பெயர் ப்ரசாதம் (Prasaad). இதுதான் ஸமபாவனை நிலையின் பலன்.

நம் ஹிந்து தர்மத்தில் பூஜைக்குப் பிறகு மதுரபலஹாரம் ப்ரசாதமாகத் தருவார்கள். பூஜையில் மனதை ஒருமைப்படுத்தி பகவத் சிந்தனையில் இருப்பவனுக்குக் கிடைக்கும் பகவத் ப்ரசாதமாக இதைத் தருகிறார்கள். இதேபோல்தான் மனம் ஒரு நிலைப்பட்டு விஷயானுபவங்களில் உழலாமல் சாந்தமாக இருக்கும் நிலையை ப்ரசாதம் எனக் கூறுகிறோம். ஞானிகளின் கூற்றுப்படி, ப்ரசாதம் எனப்படுவது மனச்சாந்தியே. யாதொருவனின் மனம் விஷயங்களில் ஈடுபடாமலும் அவைகளை வெறுககாமலும், அவைகளுடன் திகழ்கிறதோ, அதுவும் தன்னடக்கத்துடனும் இந்திரியங்களை வசப்படுத்தியும் ஒரு நிலைப்பட்டு இருக்கிறதோ அந்த மனது ப்ரசாதம் பெற்றது, அதாவது ஒருநிலைப்பட்டு ஸமபாவத்துடன் இயயங்குகிறது. இதுவே ப்ரசாதம் என அறிந்துகொள்.

ப்ரஸாதே ஸர்வது:க்கானாம் ஹானிர் அஸ்யோப ஜாயதே
ப்ரஸன்ன சேதஸோஹ்யாசு புத்தி: பர்யவதிஷ்டதே

ஸ்லோகம் 65 கேளுங்கள்



ஸாரம்:

இந்த சாந்தமான நிலையில் எல்லா துக்கங்களும் விலகுகின்றன. காரணம் சமபாவத்துடன் திகழ்பவனின் புத்தி ஒருநிலைப்படு இயங்குகிறது.

விளக்கம்

பிறகு என்ன என்ற வினா எழுவது இங்கு சகஜம். மன ஒருமைப்பாடு (Tranquility of Mind) சாந்த நிலைக்கு ஆதாரம். அப்படி சாந்த நிலை கிடைத்தால் துக்கங்கள் அங்கு எழா. சாந்தி சந்தோஷத்தை (Happiness) ஏற்ப்படுத்துகிறது. சாந்தி (PEACE) என்றால் சந்தோஷம் (Happiness). அசாந்தமான மனதில் சங்கடங்க்ளே நிகழும் என்பது நாம் அறிந்த உண்மை. முன்பு நாம் பார்த்தோம். வாசனைகள் நமது இந்த வருத்த நிலைக்குக் காரணம். அவை அழிய வேண்டும் என்று. ஆனால் இங்கு பகவான் சொல்வது என்ன? சாந்தமான மனதில் சங்கடங்கள் அகன்றுபோகும். ஆனால் இந்த சங்கடங்களுக்கு ஆதாரமான் வாசனைகள் அகலும் என்று நாம் அறிய வேண்டும். காரணம் வாசனைகள் அகலவில்லையேல் சங்கடங்கள் ஒழியாது. அப்படி சங்கடங்கள் ஒழியும் என்றால் அதன் உள்ளர்த்தமாகிய வாசனைகள் நாசம் என்ற கருத்தை இங்கு பகவான் சொல்லாமல் சொல்கிறார்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து: “மனதை ஒரு நிலைப்படுத்தி, சமபாவத்தில் நிறுத்தி (Tranquility) தன்னடக்கத்துடன் (self-control) செயல் புரிந்தால் எல்லா வாசனைகளும் அகலும். அதனால் நமக்கு மனச்சாந்தி (Peace of Mind) கிடைக்கும். அப்படி சாந்தமான மனதில் புத்தி சீக்கிரம் ஒரு நிலைப்பட்டு செயல் புரியும். இதுவே பகவத் ப்ரசாதம்.”.

நாஸ்தி புத்தி:அயுக்த்யஸ்ய நசாயுக்தஸ்ய பாவனா
நசாபாவயத: சாந்தி: அசாந்தஸ்ய குத:ஸுகம்

ஸ்லோகம் 66 கேளுங்கள்



ஸாரம்:

ஸ்திர புத்தி படைக்காதவனுக்கு ஞானம் கிடையாது, அவனுக்கு தியானம் நிலையாகாது, தியானம் நிலையாகாவிட்டால் சாந்தி கிடையாது, சாந்தி கிடைக்காதவனுக்கு எப்படி சுகம் கிடைக்கும்?

விளக்கம்

இங்கு நமது ஹிந்து சாஸ்திரப்படி மனச்சாந்தியில்லையேல் எப்படி ஒருவன் புத்தி சரியான வழி செயல்படாது, அதன் விளைவு என்ன என விளக்குகிறார். மனச்சாந்தி இல்லையேல் புத்தி ஒருநிலைப்படாது. அப்படி ஒருநிலைப்படாத புத்தி அதன் தீஷ்ணத்தை இழக்கிறது. அதனால் நல்லது கெட்டது வேறுபாடு செய்யும் மூளை வேலை செய்யாது. அப்படி இருக்கையில் நம் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை எப்படித் தராதரம் திரித்து நல்லது கெட்டது எனப் பிரித்து அதன்படி செயல்பட புத்தி இயங்கும்? அப்படி புத்தி பேதலித்தால் நாம் செய்யும் கர்மாக்களின் பலன் சரிவர அமையாது. அதனால் நம் மனது சஞசலப்படும். அதனால் சாந்தி கிடைக்காது. அப்படியானால் நம் வாழ்க்கை சமுத்திரத்தில் ஒரு குறிக்கோள் இல்லாமலும், சரியான மாலுமி இல்லாமலும் செல்லும் கப்பல் எங்கு செல்கிறது, எப்படிச் செல்கிறது எனப் புரியாமல் ஒரு பெரும் பாறையில் பொய் மோதி உடைவதுபோல் நம் வாழ்வும் ஒரு குறிக்கோள் இல்லாமல், எங்கு செல்கிறோம் எப்படிச் செல்கிறோம் என்ற நிர்ணயமில்லாமல் வாழ்க்கை எனும் ஓடம் ஸம்ஸாரம் எனும் சமுத்திரத்தில் தத்தளித்துக்கோண்டிருக்கும்.

வாழ்க்கையில் ஒரு ஆத்மீகக் குறிக்கோள் இல்லாமல் வாழும் ஒருவனுக்கு மனச்சாந்தி என்பது என்ன எனப் புரியாது அப்படிப் புரியாதவனுக்கு சந்தோஷம் எங்கிருந்து வரும்? ஸம்ஸாரம் எனும் கடலில் வாழ்க்கை எனும் ஓடத்தில் ஞானம் எனும் சக்கரத்தை இயக்கி ஆத்மீகம் எனும் குறிக்கோளான கலங்கரை விளக்கத்தை நோக்கிப் பயணம் செய்ய ஒரு ந்ல்ல மாலுமி தேவை. அதுவே தீக்ஷணமான ஸ்திரமான ஒருநிலைப்பட்ட புத்தி

இதிலிருந்து என்ன தெரிகிறது: “வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம் (நித்திய) சுகம். மனச்சாந்தியில்லையேல் சுகம் கிடையாது. ஸ்திர புத்தியில்லயேல் மனச்சாந்தி கிடையாது. ஸ்திரபுத்தி வேண்டுமானால் விஷயாஸ்பத்தி நீங்கி ஆசாபாசம் ஒழிய வேண்டும். இதற்கெல்லாம் தர்மசிந்தனை தேவை. அதனால் நாம் ந்யிக்கும் வாழ்க்கையில் தர்மசிந்தனையுடன் ஒரு ஆத்மீகக் குறிக்கோள் வைத்து, ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டு ஸ்திரபுத்தியுடன் மனதை ஒருநிலைப்படுத்தி மனச்சாந்தி அடைய வேண்டும். அப்பொழுது நமக்குத் தானே சுகானுபூதி ஏற்ப்படும்.” என்பதுதான்.

(தொட்ரும்)

என் படைப்புகள்



             






Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday