தாயென்று கும்பிடடி பாப்பா
- தேடுங்கள்!
ஜோதிடர் காயத்ரி
ஆன்மீகம் என்பது நம் அனைவராலும் அறியப்பட்ட சொல். ஆனாலும் புரிந்து கொள்ளப்பட்ட சொல்லா? அதற்கு நம் அனுபவங்கள் தான் விடை சொல்ல வேண்டும். நாள் தோறும் வாழ்வில் நாம் பல அனுபவங்களைப் பெறுகிறோம். இன்பம், துன்பம் இரண்டும் கலந்திருக்கிறது நம் அனுபவங்களில். சரி. அனுபவத்திற்கும், ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. இன்பம் என்று வருகையில் மனிதன் அதனை அனுபவித்து மகிழ்கிறான். துன்பம் அல்லது பிரச்னை என்று வருகையில், அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை வைத்தே அவனின் ஆன்மீக நிலை என்ன என்பதை நாம் கண்டு கொள்ளலாம்.
பிரச்னை என்று வரும் போது மனிதன் மூன்று விதமாக நடந்து கொள்கிறான்.
முதல் நிலை: தன்னுடைய பிரச்னைக்கு அடுத்தவரும், சூழ்நிலைகளும் தான் காரணம் என்று சொல்பவர்கள். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த நிலையில்தான் இருகிறார்கள். தன்னிடம் உள்ள அறியாமை அல்லது பலவீனம்தான் தன் துயரத்துக்கு காரணம் என்பதை உணராதவர்கள் அல்லது அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள், வெளியே உள்ள குறைகளை மட்டும் காண்பவர்கள், ஆன்மீகப் பயிற்சி என்ற எல்லைக்குள் நுழையாதவர்கள்.
இரண்டாவது நிலை: தன்னுடைய பிரச்னைக்கு தானும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள். அதாவது தான் துயரப்பட காரணம் தன் மனம்தான் என்பதை உணர்ந்ததால், தன் மனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அதாவது உள்ளே உள்ள குறைகளை உணர்ந்தவர்களான இவர்கள் ஆன்மீகப் பயிற்சி என்ற எல்லைக்குள் நுழைந்து பயிற்சிகளைத் துவக்க ஆரம்பித்தவர்கள்.
மூன்றாம் நிலை: தாம் அனுபவிக்கும் துயரங்களுக்கு தன்னையும், மற்றவரையும் குறை கூறாது இருப்பவர்கள். அதாவது ஒரு சாட்சியாக நின்று அதனை பார்க்கும் மன நிலை உடைவர்கள். மேலும் வாழ்வில் வரும் இன்பம், துன்பம் இரண்டும் நிலையில்லாதது என்பதை உணர்ந்ததால், இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் நிலை. இவர்கள் ஆன்மீகப் பயிற்சியை முடித்தவர்கள்.
பல ஞானிகளும், முனிவர்களும் இந்தப் பட்டறையில் தன் பயிற்சியை முடித்தவர்கள்.இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? தேடுங்கள். விடை கிடைக்கும்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















