-
குண்டூசியும், தக்கையும்!
- காயத்ரி
குண்டூசியும், தக்கையும்!
சீடர் ஒருவர் தன் குருவைப் பார்த்து, "குருவே, வாழ்வில் இன்பம், துன்பம் அனைத்தும் கலந்து வருகின்றன. பெரும் பாலானோர்கள் துன்பத்தைக் கண்டு துவண்டு போகிறார்கள். ஆனால் நீங்கள் எப்படி குருவே அனைத்தையும் சமாளிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
குரு சீடனைப்பார்த்து, "துன்பம் வந்தால் நீ என்ன செய்வாய்?" என்றார்.
"நான் மட்டுமல்ல. அனைவருமே அதில் மூழ்கிவிடுவர்." என்றர் சீடர்.
"அதில் என்னைச் சேர்க்காதே" என்ற குரு "சரி.இன்பம் வந்தால் என்ன செய்வாய்?"
"இது என்ன கேள்வி? சந்தோஷத்தில் மிதப்போம். நீங்கள் எப்படி இன்பத்தையும், துன்பத்தையும் எடுத்துக் கொள்கிறீர்கள் குருவே?"
குரு, "அதோ அந்தப் பிறையில் இரண்டு பொருட்களை வைத்திருக்கிறேன். அதனை எடுத்து வா" என்றார்.
சீடர் இரண்டு பொருட்களை எடுத்து வந்து குருவின் முன்னால் வைத்தார்.
"இது என்ன?" குரு கேட்டார்.
"குண்டூசியும், தக்கையும்" என்றார் சீடர்."
இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது." என்றார் குரு.
சீடர் "புரிய வில்லை" என்றார்.
"சரி. ஒரு கிண்ணம் நிறைய நீரைக் கொண்டு வா" என்றார் குரு.
சீடரும் ஒரு கிண்ணம் நிறைய நீரைக் கொண்டு வந்து வைத்தார்.
"குரு, இது என்ன?" என்றார்.
சீடர் "தண்ணீர் "என்றார்."
இல்லை. இல்லை. இது நம் வாழ்க்கை" என்ற குரு, "குண்டூசியை எடுத்து நீரில் போடு" என்றார்.
சீடர் குண்டூசியைப் போட்டவுடன் அது நீரின் அடியில் சென்று விட்டது.
"குண்டூசி எங்கே?" என்றார் குரு.
"அது நீரின் அடியில் சென்று விட்டது" என்றார் சீடர்.
"ஏன்? என்றார் குரு.
"அது கனமானப் பொருள் அதனால் நீரின் அடியில் சென்று விட்டது." என்றார்.
குரு சீடரிடம், "வாழ்க்கையில் வரும் இன்பங்களும் இது போலத்தான். ஒரு சிறிய இன்பம் வந்து விட்டால் அது கனமாக மாறி மனிதனை எழ விடாமல் கீழே தள்ளி விடுகிறது. எனவே வாழ்வில் இன்பம் வரும் போது குண்டூசியாய் மாறாமலிருக்க வேண்டும். புரிகிறதா?" என்றார்.
"தக்கை'.....'' என்று இழுத்தார் சீடர்.
"அதனையும் தூக்கி நீரில் தூக்கிப் போடு" என்றார்.
தக்கை நீரில் மிதக்க ஆரம்பித்தது. "இது ஏன் மிதக்கிறது?"
"அது லேசான பொருள்" என்றார் சீடர்.
"வாழ்வில் துன்பங்கள் வரும் போது துவண்டு போகாமல் மிதக்கக் கற்றுக் கொள். துன்பத்திலிருந்து மீண்டு மேலே வர வேண்டும் என்ற முயற்சியில் உன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி மேலே வந்து விடுவாய். சரி, நீரில் எது உன் கண்ணுக்குத் தெரிகிறது? குண்டூசியா? தக்கையா?"
"தக்கைதான் குருவே" அடுத்த தடவை இன்பம் வரும் போது குண்டுசீயாய் மாறாதே. துன்பம் வரும் போது தக்கையாக மாறிவிடு." என்றர் குரு.
நாம் குண்டூசியா? தக்கையா?
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















