Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 20
அசலம்





தர்மசங்கடம் - பாகம் 3

அருமை செல்வங்களே,

என்ன சௌக்கியமா? சென்ற இதழில் பார்த்த தர்மசங்கடநிலை எப்படி இருந்தது? இராமாயணத்திலுள்ள வேறொரு தர்மசங்கட நிலையைப் பார்ப்போமா? பிள்ளைகள் பெரியவர்களாகி ராஜ்யபாரத்தை ஏற்கத் தகுதி உள்ளவர்களாக ஆனதால் தசரதன் தன் மூத்த மகன் இராமனுக்கு இளைய ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்ய சபையைக் கூட்டி எல்லோரிடமும் கலந்தாலோசிக்கலானார். அப்படி அந்த சபையில் இராமன் இளய ராஜாவாக ஆவதில் சபையோர் எல்லோரும் ஏக மனதுடன் ஆதரித்தார்கள். அதற்கு ஒரு நல்ல முஹூர்த்த நாளையும் தேந்தெடுத்தார்கள். தசரதன் மிக சந்தோஷத்துடன் இச்செய்தியை மக்களுக்குத் தெரியப்படுத்த உத்தரவிட்டார். மக்களும் மிக சந்தோஷப்பட்டார்கள். அந்தப்புரத்தில் ராணிமார்களில் ஏற்றவும் அதிகம் சந்தோஷப்பட்டது கைகேயிதான். ஏனென்றால் இராமன் அவளது பெற்ற பிள்ளை இல்லாவிடினும் அவனிடம் அவளுக்கு அளவுகடந்த பிரியம், பாசம். தன் சொந்தப் பிள்ளையைவிட அவனிடம் பாசம் வைத்திருந்தாள். அவள் பிள்ளைகள் பரதனும் சத்ருக்னனும் இராமனிடம் அளவுகடந்த அன்பும் பாசமும் காட்டினார்கள். இப்படி இராமன், இலக்ஷுமணன், பரதன், சத்ருக்னன் என்ற நான்கு பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் அன்புடனும் இருந்தார்கள். பட்டாபிஷேக ஏற்பபாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன.

அச்சமயம் கைகாயி தன் அந்தப்புரத்தில் மிக சந்தோஷத்துடன் களிப்பில் இருந்தாள். அப்பொழுது அவளது தோழி மந்தரை அங்கு வந்து இங்கனம் கடிந்தாள்: “அடி அச்டே! நீ ஏன் இவவளவு சந்தோஷப்படுகிறாய்? உனக்கும் உன் மக்களுக்கும் வந்துள்ள கஷ்டகாலத்தைக் குறித்து சிந்தித்துப்பார். சங்கடப்படவேண்டிய இத்தருணத்தில் சந்தோஷத்தில் மிதக்கிறயே.” என ஏளனம் செய்தாள். இதைக் கேட்ட கைகேயி சந்தோஷத்தில் அவளைப் பிடித்து உலுக்கி இவ்வண்ணம் உரைத்தாள்: “எனது கஷ்டகாலமா! அதுவும் என் இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்பது எனது நல்ல காலமல்லவா? அவன் பட்டத்துக்கு வந்தால் இந்த நாடே நலம் பெறுமே, பின் எனது சந்தோஷத்தைக் கேடகவும் வேண்டுமா?” என்றாள். இதைக்கேட்ட மந்தரை மீண்டும் சீறினாள். “ஹே மந்தபுத்தி படைத்த்வளே! இராமனுக்குப் பட்டாபிஷேகம் ஆவதுதான் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் வரும் கஷ்டகாலம் என்றேன். எப்படி என்றால் அவன் பட்டத்துக்கு வந்தால் முதலில் அவன் தாய் கௌஸல்யைக்குத்தான் சௌக்கியம். ஸுமித்ராவுக்கும், உனக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஆபத்து. ஏனென்றால் இராமன் பட்டத்துக்கு வந்தால் உங்கள் பிள்ளைகள் அவனுக்கு எடுபிடி ஆட்களாக வேண்டும். நீயும் சுமித்ரையும் கௌஸல்யைக்குப் பணிப்பெண்களாவீரகள். நீங்கள் அவர்கள் கையை எதிர்பார்த்தே அவர்கள் அடிமைகளாக வாழ நேரிடும். அதை சிந்தித்துப்பார். இராஜ்யத்தின் முழு அதிகாரமும் இராமனுக்குப் போய் சென்றால் உங்கள் பிள்ளைகள் என்ன கிளிப் பிள்ளைகளா? அவர்கள் சுதந்திரம் என்ன ஆவாது. எல்லாவற்றிற்கும் நீங்கள் அனைவரும் இராமனுடையவும் கௌஸல்யாவினுடையவும் தயவில் வாழ வேண்டிவரும். உங்கள் சுதந்திரம் பறிபோகும்.”. இதைக்கேட்ட கைகேயி, “எனது இராமனும் கௌஸல்யயும் நல்லவர்கள். அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். இதுவரை எவ்வளவு அன்புடன் இருக்கிறார்கள்? நான்களெல்லோரும் ஒற்றுமையாக உள்ளோமே. இதுநாள் வரை ஒரு தீங்கும் எங்களுக்கு வரவில்லையே. நீ சொல்வது தவறு.” என எதிர்த்தாள். மந்தரை மீண்டும் துருபதேசத்தில் இறங்கினாள். “பேதையாக இருக்கிறாயே! இதுவரை நீங்கள் எல்லோரும் உங்கள் ஸ்தானத்தில் சரிசமமாக உள்ளீர்கள். ஆனால் இராமன் பட்டத்திற்கு வந்தால், அவனும் கௌஸல்யையும் ராஜாவும் ராஜமாதாவாகவும் ஆவார்கள். நீயும் பிள்ளைகளும் ஒரு அதிகாரமும், ஸ்தானமும் இல்லாமலாவீர்கள். உனகளூக்கு வேண்டியவற்றைப் பெற அவர்கள் சிபாரிசு வேண்டும். அதிகாரம் கைக்கு வந்தால் எல்லோருமே எகிறுவார்கள். அப்பொழுது அழுது பிரயோசன்மில்லை. இப்பொழுதே அதற்கு ஒரு வழி தேடவேண்டும். இல்லையேல் நீயும் உனது பிள்ளைகளும் அவஸ்தைப் படுங்கள். எனக்கென்ன, நான் போகிறேன்” என்று போக ஆயத்தமானாள்.

இதைச் செவியுற்ற கைகேயி திகிலுடன் மந்தரையைத் தடுத்து நிறுத்தி, “சற்று சிந்திக்க சமயம் கொடு” என வேண்டினாள். இதைத் தனக்கு சாதக்மாக்கிக்கொண்ட ஊர்வசி புன்சிரிப்புடன் அமர்ந்தாள். சிறிது நேரம் கைகேயியைத் தனியே விட்டாள். அவள் கொடுத்த சாட்டையடி வேலை செய்யத் துவங்கியது. கைகேயி சிந்திக்கலானாள். மந்தரை சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது. இப்பொழுது அதிகாரம் யாருக்கும் இல்லை. எல்லோரும் சரிசமம். ஆனால் இராமனுக்குப் பட்டாபிஷேகம் ஆனால் அதிகாரம் அவன் குடும்பத்தைச் சாருமே. அப்பொழுது நானும் என் பிள்ளைகளும் அவர்க்ள் சொற்படி நடக்க நேரிட்டால் நம் கதி? இப்படி மனம் குலைந்து புத்தி பேதலித்து செயவதறியாது ஒரு பொம்மையைப்போல் ஊர்வசியிடம் மண்டியிட்டுக் கோரினாள்: “மந்தரே! நீ சொல்வதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. அது சரி என்றே எனக்குப் படுகிறது. ஆனாலும் இப்பொழுது என்ன செய்ய? என் கணவர் இராம பட்ட்டாபிஷேகத்தைப் பறை சாற்றியாகிவிட்டதே? இப்பொழுது எப்படித் தடுப்பது?” என சங்கடத்துடன் கேட்டாள். இதைத் தனக்கு சாதகமாக்கி மந்தரை அவளுக்கு துருபதேசம் செய்தாள். ”என்னை நீ முழுதும் நம்புவதால் உன் நலனை உத்தேசித்துச் சொல்கிறேன் கேள். முன்பு தேவாசுர யுத்தத்தில் தசரதனுடைய தேர்ச்சக்கர ஆணி கழன்று சக்கரம் தடம் புரளப்போன சமயம் நீ உன் சமயோசித புத்தியால் உன் விரலை சக்கரத்திர்க்கு ஆணியாகத் தந்து தேரை நிலைக்கு நிறுத்தி தசரதனை யுத்த்தில் ஜெயிக்க உதவினாயே. அப்பொழுது சந்தோஷப்பட்டு தசரதன் உனக்கு இரண்டு வரம் தருவதாகச் சொன்னபோது நீ, “எனக்கு உங்கள் உயிரும் ஜெயமும் தான் முக்கியம், அதற்காகத்தான் இப்படிச் செய்தேன். வரமொன்றும் வேண்டாம்” என்று பரந்த மன்ப்பான்மயுடன் சொன்னபொழுது தசரதன் “அது கூடாது, நீ இரண்டு வரம் கேட்டே ஆகவேண்டும், அதில்தான் எனக்கு சந்தோஷம்” எனக்கூற நீயும் அவர் த்ருப்திக்காக் “இப்பொழுது வரம் தேவையில்லை, தேவைப்படும்போது கேட்கிறேன், அப்பொழுது தந்தால் போதும்” எனச் சொன்னது ஞாபகம் இருக்கா? அந்த இரண்டு வரங்களை இப்பொழுது கேள்” என்றாள். அதற்குக் கைகேயி “அதென்ன இரண்டு வரம். இராமனின் பட்டாபிஷேகத்தை நிறுத்துவதற்கு ஒரு வரம் பொதுமே” என்றாள். அதற்கு மந்தரை “அடி அசடே! ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்குமானால் நஷ்டமுண்டா?” என்றாள். உடனே கைகேயி “அதென்ன இரண்டு மாங்காய்?” என வினவ மந்தரை தொடர்ந்து சொன்னாள். “ஒரு வரத்தால் பட்டாபிஷேகம் உன் மூத்த மகன் பரத்னுக்குக் கேள். இரண்டாவது வரத்தால் இராமன் 14 வருடம் வனவாஸம் போகணும் எனக் கேள்” என்றாள். உடனே பதறிப்போய் கைகேயி வினவினாள்: “முதல் கோரிக்கை சரி. இரண்டாவது கோரிக்கை எதர்க்கு? அதனால் என் இராமன் கஷ்ட்டபடுவானே? அவனை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். என் பிள்ளை ராஜாவானால் அதிகாரம் எங்களுக்கே கிடைக்குமே? எதற்கு இராமனுக்குத் தீங்கிழைக்கணும்?” என்று அங்கலாய்த்தாள். உடனே மந்தரை “நீ சுத்த மந்தபுத்திதான். இராமன் இங்கிருந்தால் பரதனை ராஜ்யம் ஆள விடாமல் தொந்தரவு செய்வான். இழந்த ராஜ்யத்தைக் கைப்பற்ற யுத்த்ம்கூடச் செய்வான். ஜெனங்களும், ராஜசபை ஆட்களும் இராமன் பக்கம் தானே? கிடைத்த லாபத்தைக் காப்பாற்ற வேண்டாமா? அப்பொழுது என்ன செய்வீர்கள்? உங்களால் போராட முடியாதே?” என்றாள். இதுதான் கலைப்பார் கலைத்தால் கைப்பிள்ளையும் கலைவார்கள் எனச் சொல்வது. இப்பொழுது கைகேயி முழுதும் மனம் கலங்கி, மந்தரையின் வாக்கில் மதிமயங்கி, தன் சுய நிலையை இழந்து செய்வதறியாது தவித்தாள். அவளுக்கு இராமன் என்றால் உயிர். அவன் பட்டத்திற்கு வந்தால் தங்களுக்குத் தீங்கு இழைக்கவியலும். அப்போது தாங்கள் த்விக்க நேரிடும். தசரதனும் இராமனிடம்தான் முழு அன்பையும் வைத்திருக்கிறார். ஆனாலும் இராமனைக் காட்டுக்கு அனுப்பினால் அவன் அவதிப்படுவானே என்ற மனத்தங்கல். இப்படி தர்மசங்கட நிலையில் இருந்தாள் கைகேயி.

இந்தக் கைகேயின் குழம்பிய நிலையைத் தனக்கு சாதகமாக்கி மந்தரை அவளுக்கு ஊக்கமளித்துத் தன் உபதேசத்தை வலியுறுத்தினாள். முடிவில் கைகேயி செய்வதறியாது மந்தரையின் துருபதேசத்தில் மயங்கி அதற்கு வேண்டிய உபாயத்தை மந்தரையிடம் கேட்டறிந்து அதுபோல் தலையை விரித்து, ஆடைகளைக் கசக்கி, சங்கட நிலை வருத்தித் தன் அந்தப்புரத்தில் படுக்கையில் புரண்டாள். பிற மனைவிகளைக்காட்டிலும் கைகேயியிடம்தான் தசரதனுக்கு ஆசை அதிகம். அவர் அவள் அந்தப்புரத்திற்கு வந்த பொழுது அவள் அவல நிலையைக் கண்டு துடித்தார். “ஏன் இப்படித் தவிக்கிறாய், உனக்கு என்ன ஆச்சு? அரண்மனை மருத்துவரை வரவழிக்கிறேன்” என்றார். அதற்குக் கைகேயி “எனக்கு அசுகம் ஒன்றுமில்லை. நீங்கள் எனக்கு முன்பு இரண்டு வரம் தருவதாகச் சொன்னபோது அவை வேண்டும்போது கேட்கிறேன் என்றேனே ஞாபகமிருக்கா?” என வினவ ராஜனும், “ஓ நன்றாக ஞாபகமிருக்கு. அதற்கென்ன இப்போ?:” என்றார். அவள், “அதைப் பெற இப்பொழுது எனக்குத் தருணம் வந்து விட்டது. தருவீர்களா?” எனக் கேட்டாள். அவரும் “அதற்கென்ன கேளேன்” என்றார். அவளும் இப்படிக் கேட்டாள் “ஒன்றும் பெரிதில்லை. என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யணும், இது ஒரு வரம். இன்னொன்று இராமன் 14 வருடம் வனவாஸம் செல்லணும் அவ்வளவுதான்” என்றாள். இதைக் கேட்ட தசரதன் ஆடிப்போய் வீழ்ந்துவிட்டார். “அடிப்பாவி! இராமனை உன் பிள்ளையைக் காட்டிலும் பாசத்துடன் வளர்த்த நீயா இப்படிக் கேட்டாய்? உன பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யணும் என்றாய், ஆனால் இராமன் எதற்கு 14 வருடம் வனவாஸம் செய்யணும் என்கிறாய்” எனக் கேட்டார். அதற்கு அவள் “அவன் வனவஸம் செய்தால்த்தான் பர்தன் சௌக்கியமாக இராஜ்ய பரிபாலனம் செய்ய முடியும். இல்லையேல் இராமன் தொந்தரவு ஏற்ப்படும்.” என்றாள். வாக்களித்த வரம் தரவில்லையேல் தமக்கு இழுக்கு. தந்தால் இராமன் அவஸ்தைப்படுவான். என்ன செய்ய? எப்படி இந்தக் கட்டத்தை சமாளிப்பது? தசரதன் தன் தர்மசங்கடமான நிலையைப் பற்றி நினைத்து செயலிழந்து மூர்ச்சையானார்.

அங்கு வந்த இராமன் தந்தைக்கு என்ன எனக் கைகேகியை வினவ அவள் நடந்தவற்றைச் சொன்னாள். அப்பொழுது சற்றும் கலங்காமலும் தயங்காமலும் இராமன் இப்படி உரைத்தான்: “இவ்வளவு தானா? இதற்குப்போய்க் கவலைக் படுவானேன்? இதோ இப்பொழுதே நான் வன்வாசத்திற்குக் கிளம்புகிறேன். தம்பி பரதனுக்குப் பட்டாபிஷேகம் என்றால் எனக்கு சந்தோஷமே. நீங்கள் தந்தையைப் பார்த்துக்கோள்ளுங்கள் எனக் கிளம்பிவிட்டான். உடன் ஸீதையும் இலக்ஷுமணனும் கிளம்பினார்கள். எல்லோரும் மரவுரியும் ஜெடையும் தரித்து சன்யாஸ வேஷதாரிகளாகக் கிளம்ப ராஜதானியிலுள்ளவர்களும், தாய்மார்களும், குருக்களும், மந்திரிகளும், ஜெனங்களும் கண்ணீருடன் அவ்ர்களை வழியனுப்பிவைத்தார்கள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை எனக் கேட்டிருக்கிறோம். இங்கு தந்தை சொல்லாமலேயே அவர் கடமையைத் தன் சிரமேற்கொண்டு பணிபுரியும் உத்தம புத்திரனாக இராமனைக் காண்கிறோம். இதுதான் பித்ருவாக்ய பரிபாலன்ம். தந்தை சொல்லாவிடினும் அவர் கருத்தறிந்து அவர் கடனைத் தானே ஏற்றெடுப்பதுதான் உத்தமபுத்திரனுக்கு இலக்ஷணம் என்பதை இராமன் நமக்குச் செய்து காட்டடியுள்ளார்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்: “இப்படி தர்மசங்கட நிலை வரும்போது சுயேச்சையில்லாது எல்லோருக்கும் நல்லது நிகழவேண்டி செயலாற்றினால் அதுவே நல்லதாக முடியும் என்று ஊர்ஜிதமாகிறது. அத்தருணம் நமது மனதைத் திடப்படுத்தி புத்தியை தார்மீகமாக சிந்தனையில் ஈடுபடுத்தி விடை தேடினால் சரியான வழி துலங்க்கும்”என்பதே.

(தொடரும்)

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

இப்படிக்கு அன்புடன்
உங்க்ள் அசலம

Achalam.com

கடிதம் - 19 கடிதம் - 21

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button