Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

    என் படைப்புகள்

 

Bookmark this page



பகவத் கீதை

அறிமுகம்
இறை வணக்கம்
கருத்துரை
கீதா தியானம்

அத்தியாயம் 1

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6

அத்தியாயம் 2

கருத்துரை
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

Grandpa Cheenu
தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock
Vrishin Vigneshwar


Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

மழலைகள்








 

பகவத்கீதா சாரம்
அசலம்


அத்தியாயம் – 2 (பர்கம் 11)

image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனேநம:

து:க்கேஷ்வனுத்விக்ன மனா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராக பய க்ரோத: ஸ்திததீர் முனிருச்யதே

ஸ்லோகம் 56 கேளுங்கள்



ஸாரம்:

யாதொருவன் கஷ்ட நிலையினாலும் ஸம்ருத்தி நிலையினாலும் அசைக்கப்படாமல் திகழ்வதோடு, சுகத்தை நோக்கிச் செல்லாமலும், ஆசாபாசம், பயம், கோபம் என்ற ஸ்திதிகளிலிருந்து விலகியும் நிற்கிறானொ அவன் ஞானயோகி என அறியப்படுகிறான்.

விளக்கம்

ஆத்மானுபூதியில் திகழும் ஒருவன் ஆசையை வென்றுவிடுவான் என்று ஒரு பூர்ண யோகியின் தன்மையைப் பற்றிச் சொன்ன பகவான் அவனுடைய அடுத்த லக்ஷ்ணம் ஸமபாவனை (சுக துக்கத்தில்) என வலியுறுத்துகிறார். எல்லா நிலையினாலும் தாக்கப்படாத ஒருவனின் ம்னநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இங்கு மூன்று தன்மைகளைத் தந்துள்ளார். ராகம் (ஆசை அல்லது ஈடுபாடு), பயம், க்ரோதம் என்பனவே அவை.

அப்ப்டிப்பட்டவனை ஒரு முனி என்று சொல்கிறார். சராசரி மனிதனுக்கு இருக்கும் விகாரக்கோர்வைகள் எல்லாமே ஒரு ஞானியிடம் இருக்காது என நாம் கருதும்போது, ஏன் வியாசர் இந்த மூன்று விகாரங்க்ளை மட்டும் வலியுறுத்துகிறார், மற்றவை பிரதானமல்லவா எனச் சில எழுத்தாளர்கள் கேட்க்கலாம். முன் ஸ்லோகத்தில் ஆசை அற்றவன் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் ஊடுருவிப் பார்க்கும்போது, ஆசாபாசத்தில் மூழ்கியவன் ஆசை வைக்கும்போது அது கிடைக்குமா இல்லயா என்ற ஒரு பயம் இருக்கும். அது கிடைத்தால் அதை நிலை நிறுத்தவேண்டி பயம் வரும். அதனால் இந்த பயம் என்பது ஆசை நிறைவேறுமா இல்லயா என்ற தவிப்பில் அடங்கிவிட்டது. அதேபோல் ஒன்றில் ஆசை வைத்து அது கிடைக்கத் தடங்கலாக வரும் ஸ்திதிகளில் கோபம் எழுகிறது. நாம் அடைய வேண்டிய சுகத்திற்கு பங்கம் விளைவிக்கும் எந்த நிலையும் நம்மைக் கோபம் கொள்ளச் செய்யும்.

ஆதிசங்கரன் சொல்வது: ஒரு ஞானயோகி உடலுறுப்புகளிலிருந்து வரும் உபாதிகளால் (அத்யாத்மீகம்) தாக்கப்படமாடான், புற உலகத்திலிருந்து (ஆதி பௌதிகம்) வரும் துன்பங்களால் (மிருகங்கள் முதலியன்) அவஸ்தைப்பட மாட்டான், ப்ரக்ருதியிலிருந்து வரும் (ஆதி தெய்வீகம) துன்பங்களாலும் (மின்னல், மழை, கொடுங்காற்று, சீதோஷணம் முதலியவை) மனம் தளர மாட்டானெனக் கூறுகிறார். அப்ப்டிப்பட்ட ஞானிக்கு முனி எனப் பெர்யர் சூட்டுகிறார். முனி என்றால் மௌன ஞானி எனப் பொருள்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: “ஆசையை விட்டு, காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யாதி குணங்களுக்கு அடிபணியாமல், ஒன்றிலும் ஒரு சேர்க்கை வைக்காமல் ஆத்மஞாந்த்தில் நிஷ்டையுடன் இருப்பவன் ஞான்யோகி ஆகிறார்ன். அவனுக்கு யாதொரு உபாதியும் இருக்காது. அவன் மௌனமாயிருப்பான”.

ய:ஸர்வத்ரானபிஸ்னேஹ: தத்தத் ப்ராப்ய சுபாசுபம்
நாபி நந்ததி நத்வேஷ்டி தஸ்ய ப்ரஞா ப்ரதிஷ்டிதா

ஸ்லோகம் 57 கேளுங்கள்



ஸாரம்:

யாதொருவன் எங்கும் எப்பொழுதும் சுக துக்கங்களில் ஈடுபடாமலும் அவைகளில் ரமிக்காமலும், வைறுக்காமலும் இருப்பானோ அவனின் புத்தி நிலை ஸ்திரமாக இருக்கும்.

விளக்கம்

எப்படி ஒரு ஓவியன் தான் வரைந்த ஓவிய்த்தைப் பல கோணங்கலிலிருந்து பர்த்துப் பார்த்து அதற்குத் தன் ப்ரஷினால் பல கோடுகள் போட்டு மௌசு கூட்டுவானோ அதேபோல் பகவான் இங்கு அர்ஜுனனின் மனதில் வரைந்த ஸ்தித ப்ரக்ஞனின் உருவ்த்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றுகிறார். வெறும் உலக விஷயங்கலில் ஈடுபாடில்லாமலிருப்பது மட்டும் போதாது. சில புத்திஹீன்ர்கள் ஆர்வத்துடன் தங்கள் கடமைளிலிருந்து விலகி உலக விஷயங்கலில் பற்றுதல் இல்லாமல் இருந்தால் அதுவே ஸ்தித ப்ரக்ஞன் எனத் தவறாகப் புரிந்துகொண்டு செயல் புரிவார்கள். அர்ஜுனனும் அதேபோல் தன் க்ஷ்த்திரியக் கடமைகளிலிருந்து விலகிவிடத் தீருமானித்திருந்தான். இது தவறு என எடுத்துக்காட்ட இங்கு பகவான் அவ்னுக்கு ஸ்தித ப்ரக்ஞனன் யார் என விரிவாக விளக்குகிரார்.

உலக விஷயங்களிலிருந்து விடுபடுவதால் மட்டும் ஒருவன் உயர்ந்த நிலைக்குச் செலலமாடான். அத்துடன், நல்லது கெட்டது (சுபம் அசுபம்) நிகழும்போது அதில் ஸமபாவத்தைக் கொள்ள வேண்டியது அவசியம். சுபம் நிகழும்போது சந்தோஷிப்பதும் அசுபத்தில் துக்கிப்பதும் கூடாது. இந்த இரு நிலைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான் ஸ்திதப்ரக்ஞனுக்கு லக்ஷனம. விஷய ஈடுபாட்டிலிருந்து விலகுவது பேடித்தனத்திற்குச் சமம். அதேபோல் விஷயாஸ்ப்பத்தியுடன் திகழ்வது, அந்த விஷயங்களுககு அடிமையாகி ஜீவிப்பது அதைவிடக் கேவலம். சுபாசுபங்களினால் ஈர்க்கப்படாமல் ஸமநிலையில் இரருப்பவ்னே ஸ்திதப்ரக்ஞன் என வலிய்றுத்துகிறார். வாழ்க்கை என்பது நல்ல்து கெட்டதின் சேர்க்கையே. புத்திமான் கெட்ட வழியிலிருந்து விலகி நல்ல வழியைப் பின்பற்றி அதன் அனுபவத்தை உட்கொள்ளுவான். நல்லது கெட்டது இரு நிலையிலும் அவன் சந்துஷ்டனாகவே திகழ்வான்.

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் “ஒரு ஸ்திதப்ரக்ஞனாகிய பூர்ணத்வம் பெற்றவன் எப்படிப் பேசுவான்” என வினவியதற்கு இந்த ஸ்லோகம் விளக்கம் தருகிறது. சங்கடங்களில் மனம் தளராமலும் சந்தோஷத்தில் மனம் திளைக்காமலும் எவனொருவன் ஸமபுத்திய்டன் திகழ்கிறானோ அவனே பூர்ணத்வம் பெற்றவன். எவன் உலகநியதியை எதிர்க்காமலும் அவைகளில் கிடந்துழலாமலும் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மன அமைதியுடன் இருப்பானோ அவனே முழு மனிதன். சுபாவ வித்தியாசம் இல்லாமல் ஒரேபோல் திகழ்பவனே பூர்ணத்வம் பெற்றவன் என வலியுறுத்துகிறார்.

நாம் கற்க வேண்டிய பாடம், “நல்லது கெட்டது இடை கலந்து வருவதே உலக வாழ்க்கை. சுக துக்கத்தை சமமாக பாவித்து, தன் கடமைகளை ஒழுங்கே செய்து மன அமைதியுடன் திகழ்வதுதான் ஒரு ஞானிக்கு லக்ஷ்ணம்” என்பதே.

யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோSங்கானீவ ஸர்வச:
இந்த்ரியாணி இந்த்ரியார்த்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா

ஸ்லோகம் 58 கேளுங்கள்



ஸாரம்:

ஒரு ஆமை எப்படி அதன் அவயவங்களைத் தன்னுள் இழுத்துக்கொள்கிறதோ அதேபோல் எவனொருவன் உலக விஷயங்களிலிருந்து தன் பஞ்சேந்திரியங்களை உள்ளுக்கு இழுத்துக்கொள்கிறானோ அவன் புத்தி ஸ்திரமானதாக அமையும்.

விளக்கம்

ஸ்திர புத்தி படைத்தவன் ஆத்ம ஸாக்ஷாத்ககாரம் பெற்று, சுக துக்கங்களில் ஸமபாவனை கொண்டு விஷயாஸ்ப்பத்தியில் ஈடுபடாமல் இருப்பான் எனக் கூறியபிறகு இங்கு எப்படி அவன் தன் இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவான் என விளக்குகிறார். அதற்குத் தந்துள்ள உபமானம் மிகப் பொருத்தமாக உள்ளது. ஆமை தனக்கு வெளியிலிருந்து ஆபத்து வருகிறது என உணர்ந்ததும், உடனே தன் உடலுறுப்புக்களைத் தன்னுள் இழுத்து, தம்மைக் காப்பாற்றிக்கொள்கிறதோ அதேபோல் ஒரு ஸ்தித ப்ரக்ஞனன் தன் இந்திரியங்களை உள்நோக்கிச் செலுத்தி, தன்னை உலக விஷயங்கள் தாக்காமல் காப்பாற்றிக்கொள்வான் என விளக்குகிறார்.

உலக விஷயங்களின் அறிவு நமக்குக் கிடைப்பது, நம்முள் உள்ள உணர்வு என்ற சக்தி நம் ஞானேந்திரியங்கள் வழி வெளிச் சென்று உலக விஷயங்களில் பதிந்து அவற்றின் தன்மையை நம் மனதிற்குக் கொணர்வதுவே நாம் பாக்கும் உலக ஞானம். கண் வெளியிலுள்ள உருவங்களைப் பார்க்கிறது. அதேபோல் Xray கருவி நம்முள் உள்ள தொகுப்புக்களைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. அதேபோல் நம் ஐந்து இந்திரியங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு உலகஞானத்தைத் தருகின்றன. இது மனதில் வரும்போது, மனம் தத்தளிக்கிறது. நல்லது கெட்டதில் தன்னை ஆழ்த்தி சுக துக்கங்களை அனுபவிக்கிறது. இதுவே உலக வாழ்க்கை.இதிலிருந்து தப்பி மனதை ஒருநிலைப் படுத்த ஒரே வழி, இந்திரிய தமனம். இதனால் நம் மனம் சாந்தமாகவும் கூர்மையாகவும் திகழ்கிறது. இந்த சக்தியையே நமது சாஸ்த்திரங்கள் ப்ரதாஹாரம் எனப் பறைசாற்றுகிறது. இதை யோகிகள் ப்ராணாயாமம் வழியே பெறுகிறார்கள். ஒரு பக்த்தனுக்கு இந்நிலை தானாகவே வருகிறது. காரணம் அவன் எப்பொழுதும் தன் இஷ்ட தெய்வத்தின் உருவத்திலும் கதைகளிலும் திளைத்திருப்பான். ஒரு ஞானிக்கு இது சுலபம். தன் புத்தியால் விஷயங்களைத் தரம் பிரித்துப் பார்த்து அதில் மனதை ஈடுபடாமல் தடுக்கத் தன் நித்திய உபாஸனைகளால் முடிகிறது.

சுருங்கச் சொன்னால் இந்திரிய தமனம் ஒன்றுதான் ஒரு ஸ்திதப்ரக்ஞன் அடைய வேண்டிய வழி என நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

விஷயா வினிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹின:
ரஸவர்ஜ்யம் ரஸோSப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே

ஸ்லோகம் 59 கேளுங்கள்



ஸாரம்:

ஒரு ஞானிக்கு உலக விஷயங்களிலுள்ள கவனம் (நாட்டம்) நீங்கினாலும் அதன்மேலுள்ள ஆஸக்தி (இச்சை) மாறுவதில்லை. ஆனாலும் ஆத்மஞானம் பெற்ற யோகிக்கு இந்த இச்சை கூட நீங்கிவிடுகிறது.

விளக்கம்

ஒரு நோயாளிக்குத் தன் இந்திரியனகளை உபயோகிக்க சக்தியற்றிருக்கும்போது இந்திரியங்கள் அடங்கிவிடுகின்றனவே. அது இந்திரிய தமனம் அல்லவா என்றால் அல்ல. ஏனென்றால் அந்த இந்திரியாஸ்பதமான சுகதுக்கங்களின் ருசி அவனை விடுவதில்லை. அப்படியானால் அந்த ருசியையும் விட என்ன மார்கம்? ஒரு மளிகைக் கடையில் உள்ள பொருட்கள் எப்படி வாங்குபவரிடம் செல்கின்றன? எல்லாவற்றிலும் எல்லோர்க்கும் இச்சை இல்லை. ஏதேது வஸ்துவில் யாருக்கு இச்சை உள்ளதோ அவை அவர்களிடம் சேர்கின்றன. ஒரு வஸ்துவில் ஒருவர் இச்சை கொள்ளவில்லையானால் அந்த வஸ்து அவரிடம் செல்வதில்லை. அதேபோல் உலக விஷயங்களும் எவர் இச்சை கொள்கிறார்களோ அவர்களிடம் செல்கின்றன. அப்படியானால், நாம் கொள்ளும் இச்சைதான் நமக்கு இந்திரியங்கள் வழி வரும் விஷயங்களும் அவைகளில் நமக்குள்ள ஈடுபாடும். நாம் அவற்றை அடைய ஆசைப்படவில்லயேல் அவை நம்மை வந்தடையா. ஆதலால் இந்த சுகதுக்கங்களிலிருந்து விடுபட ஆசையை விடுவதே வழி என எடுத்துரைக்கிறார். விஷயாஸ்ப்பத்தி நம் மனதில் ஒரு பாடை ஏற்ப்படுத்துகிறது. இப்படி ஜனன்ம் முதல் நம மனதில் நிகழும் இந்த விஷயாஸ்ப்பத்தியின் பாடுகள் இருந்துகொண்டிருக்கும். ஆனாலும் இவைகளையும் வேரறுக்க வழி நம் ஸ்வார்த்த புத்தியை (EGO) வேரறுத்து நம் சுய நிலையாகிய ப்ரஹ்மத்வத்தை உணர்வதே. அப்பொழுது இந்த விஷய சுகதுக்கங்களின் பாடுகள் நம் மனதிலிருந்து அகலுகின்றன எனக் கிருஷ்ணன் உறுதியளிக்கிறார்.

இந்த நிலை அடைவது கடினமில்லை. ஏனென்றால் நமக்கு ஒரு நிலையில் இருக்கும்போது (ஸ்வப்ன நிலை) வரும் அனுபவங்களீன் சுக துக்கங்கள் நாம் அடுத்த நிலைக்கு (உணர்வு) வந்ததும் நம்மைத் தாக்குவதில்லை. அதேபோல், உணர்வு நிலையிலிருந்து ஆத்மானுபூதி நிலைக்கு வந்துவிட்டால், நம் உணர்வு நிலையிலுள்ள அனுபவங்கள் நம்மை அங்கு தாக்காது. இது, சுலபமாகத் தெரியக்கூடியதே. அதாவது, சுக துக்க அனுபவம் நம் ஜாக்ர ஸ்வபன ஸுஷுப்தி என்ற மூன்று நிலைகளிலும் வெவ்வேறாக இருக்கும். ஒன்றிலுள்ள அனுபவம் மற்றொரு நிலையில் நம்மைத் தாகுவதில்லை. அப்படியானால், நம் அஹந்தை நீங்கி ஆத்மானுபூதி கிடைத்தால் அந்த நிலையில் நம் மூன்று நிலையிலுள்ள அனுபவங்கள் நம்மை நிலைகுலயச் செய்யா.

ஆதலால், நாம் தெரிந்து கொள்ளவேண்டிய தத்துவம் என்னவென்றால், “இந்திரியதமனம் வழி அஹங்கார நாசம் ஒன்றே ஸ்தித ப்ரkஞன் நிலை அடைய ஒரே வழி என்பதுவே.

யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸபம் மன:

ஸ்லோகம் 60 கேளுங்கள்



ஸாரம்:

அலைபாயும் இந்திரியங்கள், ஓ குந்தியின் புதல்வனே, மனதை அடக்கப் பாடுபடும் ஒரு புத்திமானைக்கூட நிலைகுலயச் செய்யும்.

விளக்கம்

வெறும் வேதாந்த தத்வம் மட்டும் ஒருவனை அதில் ஈடுபடுத்த இயலாது. அதற்கான வழியைக் காட்டவில்லையேல் நம் வேதாந்த தத்துவத்திற்கு் செவி சாய்க்க மாட்டார் ஜ்னங்கள். இங்கு கிருஷ்ணன் அந்த வழியை விளக்குகிறார். நம்முள் உள்ள தெய்வீக சக்தி (SUPER CONSICOUSESS) மூன்று நிலைகளில் திகழ்கின்றது. ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற நிலைதான் அவை.ஸத்வ நிலையில், நம் ஆத்ம சக்தி அஞ்ஞானம் என்ற ஆவரணத்தால் புத்தி சக்தியிழந்து இருக்கும்பொது, மன நிலை குலைந்துபோகிறது. அப்பொழுது, நம் இந்திரியங்கள் விஷயாஸ்ப்பத்தியினால் உலக விஷயங்களை உய்யத் துடிக்கின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தவில்லயேல், நாம் சுக துக்கங்களில் மூழ்கிவிடுவது திண்ணம். இந்நிலை ஒரு புத்திமானுக்குக் கூட ஏற்படுவதால் நீ மிக ஜாக்கிரதையாகப் பணியாற்ற வேண்டும் என அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார் பகவான். இது ஒரு WARNING (எச்சரிக்கை) ஆக அமைந்துள்ளது. காராணம், யோகிகள் கூட சில சமய்னகளில் தங்கள் யோக நிலையிலிருந்து விடுபட்டு உலகத்தில் திகழும்போதுகூட இந்த இடைவேளைத் தாகுதலுக்கு ஆளாக இயலும். அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் சாதனைகள் புரிந்து உணர்வு நிலைக்கு வந்த பிறகும் இந்த இந்திரிய அடக்கம் தொடர்ந்து இருக்க வழி வகுத்துக்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கிறார். அவ்வளவு கடினம் இந்த் நிலை பெறுதல் எனத் தெரிகிறது.

என்ன புரிகிறது? “இந்திரிய தமனம், மனோ நியந்த்ரணம், ஸமநிலை என்ற மூன்று நிலைகளை எப்பொழுதும் தங்களிடம் வைத்துக்கொள்ள பழகவேண்டும்” என்பதே.

(தொட்ரும்)

என் படைப்புகள்



             



Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday