Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 19
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 14/01/2009

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

தர்மசங்கடம் - பாகம் 2

அருமை செல்வங்களே,

என்ன, தர்மசங்கடம் பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தை இராமாயணத்தில் பார்ப்போமா? இராமனும் இலக்ஷுமணனும் ருஷி விச்வாமித்திரருடன் அவர் யாகசாலை நோக்கி அவருடன் சென்றார்கள். வழியில் அவர்களுக்கு க்ஷீணம் தெரியாமலிருக்கப் பல தர்மசாஸ்த்திர வாக்கியங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். குழ்ந்தைகளானதால் பசிக்குமே. என்ன ஆஹாரம் தரலாம்? காட்டில் வெரும் பழங்களும் கனிகளும் தானே கிடைக்கும். ஆனால் விச்வாமித்திரர் அவர்களை அழைத்து எப்பொழுதும் பசி தெரியாமலிருக்க “பலா அதிபலா” என்ற மந்திரத்தை உப்தேசம் செய்தார். வெகு நாள் பிரயாணம் ஆனதால் காட்டில் அங்கங்கு தங்க் வேண்டி வந்தது. அவர்கள் நித்திரை கொள்ளும்போது அவர்கள் அழகை ரசித்தார். கௌஸல்யாதான் என்ன பாக்கியம் செய்திருக்கிறாள்? இப்படி ஸ்வர்ண விக்ரஹம் போல், யரும் பார்த்தால் மதிமயங்கும் அழகு பொருந்தியவர்களைப் பிள்ளைகளாகப் பெற என்ன பாக்கியம் செய்திருக்கிறார்கள் இவர்கள் தாய்மார்கள் என வியந்தார். அவர்களுக்கு சுச்ரூஷை செய்து உறக்கத்தைக் கலைக்காமல் பார்த்துக்கொள்வார். கலை நேரம் வந்ததும் “கௌஸல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்த்தூலா கர்த்தவ்யம் தைய்வமாஹ்னிஹம்” என்று அன்புடன் துயில் எழுப்பினார். அவர்கள் காலைக் கடங்களை முடித்து யாத்திரை துவங்கினார்கள்.

அப்பொழுது காட்டில் ஒரு பயங்கரமான சப்தம் கேட்டது. கறுத்திருண்டு கையில் மரங்களைத் தாங்கி விகாரமாகவும் பயங்கரமாகவும் தோற்றமளிக்கும் ஒரு உருவம், உற்றுப் பார்த்ததில் அது ஒரு பெண் உருவம் கொண்ட இராக்ஷஸி எனத் தெரிந்தது. அவ்ள் தன் பூத உடலை ஆட்டி ஆட்டி, பெரும் மிருகம் வருவது போல் ஆக்ரோஷஷத்துடன் வந்துகொண்டிருந்தாள். அதைக்கண்டு பயந்த இராமனையும் இலக்ஷுமணனையும் பார்த்து விச்வாமிதந்திரா சொன்னர்ர், “குழந்தைகளா! இதுதான் தாடகை எனப்படும் கொடிய இராக்ஷஸி. இவள் அங்கும் இங்கும் அலைந்து மிருகங்களைக் கொன்று திங்கிறாள். வழிப்போக்கர்களை உபத்திரவிக்கிறாள். எங்களைப் போன்ற ருஷிகள் யாகத்தைக் குலைக்கிறாள். இப்போது அவள் நம்மைத் தாக்க வருகிறாள். அவளை அம்பெய்து கொன்றுவிடுங்கள்” எனக் கூறினார். இராமன் கொஞ்சம் தயங்கினார். “எப்படி ஒரு ஸ்த்ரீயை வதிப்பது? அது சாஸ்த்திர விரோதமாயிற்றே” எனக் கேட்டார். அதற்கு விச்வாமித்திரா சொன்னார்: “குழந்தாய், ஸ்த்ரீயானாலும் மற்றவருக்குத் தீங்கு செய்பவளாயிருந்தால் வதிக்கலாம். இப்படி சாஸ்திரத்தில் ஒரு விதி இலக்கு இருக்கு. சாதுக்களை சும்மா ஹிம்ஸிப்பதால் அவள் அர்க்கியாவாள். செய்த தப்பான கர்மாவுக்கு சிக்ஷிப்பது தவறில்லை. இச்சமயம் அவள் அவர்களூக்கு பெகு அருகில் வந்து விட்டாள்.

ஆனாலும் ப்ரஜைகளை ரக்ஷிப்பது இராஜாவின் கடமை. தவறு இழைப்பவரை முதலில் திருதத முயல வேண்டும். அல்லாது அவர்களை நேரடியாக சிக்ஷிக்கக் கூடாது. இதுதான் ராஜநீதி என் இராமன் நினைத்தார். ஆனாலும் அவள் வெகு அருகில் வந்து தங்களைத் தாக்க முன்வந்தாள். நம் சாஸ்த்திரம் சொல்வது, “உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீ எதிரியை அடிக்கலாம். ஆனால் நீயாக ஒருவருக்குத் துன்பம் இழைக்கக் கூடாது”. இதைப் பார்க்கும்போது, விச்வாமித்திரா சொல்வது சரிதானே? இப்படிக் குழம்பி செய்வதறியாது இராமன் ஒரு தர்மாசங்கட நிலையில் இருந்தார். அரக்கி அருகில் வரவும் விச்வாமித்டதிரர், “இரமா! உடனெ அவள் மர்பைத் துளைக்குமாறு அம்பை எய்துவிடு” எனக் கட்டளையிட்டர். இனி தாமதித்தால் அவள் அவ்களைக் கொன்றுவிடுவாள் என்ற நிலை வந்தது விச்வாமித்திரரின் கட்டளையை சிரமேற்கொண்டு அம்பை எய்தார். அது தாடகையின் மார்பைத் துளைத்து அப்புறம் சென்றது. அவளும் கம்பீரமான ஒலி கிளப்பி தடால் எனக் கீழே விழுந்து மடினந்தாள். குரு சொல்லைத் தட்டக்கூடாது. அவ்ர் எல்லாம் தெரிந்த ஞானி. இப்படி தர்மசங்கட நிலை வரும்போது, தர்மசிந்தனையுடன் த்னக்குத்தானே விவாதித்து சாஸ்திரப்படி சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்குக் கூர்மையான புத்தியை உபயோகிக்க வேண்டும்.

அவர்கள் யாகசாலையில் நுழைந்து அங்கு நடக்க வேண்டிய யாகத்திற்கான ஒருக்கங்கள் செய்தார்கள். ஒரு நாள் யாகம் துவங்கியது. இராமனும் இலக்ஷுமனும் அயராது நாலா பக்கமும் சென்று அரக்கர்கள் வருகிறார்களா என்று விழிப்பாகக் கையில் அம்பு வில்லுடன் உலாவினார்கள். யாகம் முடியும் தருவயில், ஆகாயத்தில் காரிருள் வருவதைக் கண்டார்கள். உற்றுப் பார்த்ததில் அது மழைக்கு லக்ஷணமல்ல, அது அசுரர்கள் புடை சூழ ஆகாயமார்க்க்த்தில் வருவதின் தோற்றமே எனக் கண்டார்கள். அசுரர்கள் மேலிருந்தே யாக குண்டத்தில் இரத்தம், மாமிசம் முதலிய வஸ்த்துக்களை வீச யத்தனித்தார்கள். இராமனும் இலக்ஷுமணனும் அவர்களைத் துரத்தி அடிக்க பாணங்களை சரமாரியாக எய்தார்கள். அவை அவர்களை பின்முதுகிட்டு ஓடச் செய்தது. இராம பாணம் ஒருதரம் வில்லிலிருந்து புறப்பட்டால் கரியத்தை முடிககாமல் விடாது. முடித்து திரும்ப இராமனிடமே வரும். இதை அறிந்த அசுரர்கள் ஓடத் துவனிகினார்கள். எல்லா அசுரர்களையும் வதித்த பாணங்கள் மாரீசனை மட்டும் வதிக்காமல் துரத்தி சமுத்திரத்தில் ஆழ்த்தியது. பிற்பாடு அவன் மனாகத் தோன்றி இராமனை ஸீதையிடமிருந்து அகற்ற, இராவணன் ஸீதையை அபஹரிக்க வேண்டுமே கதைப்படி. அடதற்காக் தானோ என்னவோ அவனைக் கொல்லவில்லை.

இப்படிய யாகம் பூர்த்தியாகி விசவாமித்திரர் இவர்களுக்கு ஒரு நல்ல கரியம் செய்வோம் எனக் கருதி அவர்களை மிதிலா பட்டணத்தில் நடக்கவிருககும் ஸீதா ஸுயம்வரத்திர்க்கு இட்டுச்சென்றார். போகும் வழியில் இராமனின் கால் ஒரு கல்லில் பட்டு அதிலிருந்து அஹல்யை எழுந்தாள். அவளுக்கு சாப விம்சனம் கௌதமர் சொன்னது போல் இராகவனின் பாதஸ்பர்சத்தால் கிடைத்தது. யாகசாலையில் விச்வாமமித்திரர் இராமனின் கைவண்ணம் பார்த்தார். இங்கு அவன் கால் வண்ணம் பார்த்தார். என்னே பாக்கயம்! பிறகு மிதிலை சென்று, யாராலும் வளைக்க (ஏன் எடுக்கவே) முடியாத சிவ தனுஸை உயர்த்தி ஞாணிடும்போது அது படார் என்று உடைந்தது. யராலும் எடுக்க முடியாத அந்த சிவதனுஸை ஞாணுட்டுபவர்க்குத் தன் மகள் ஸீதையை பாணிக்ரஹணம் செய்து தருவதாக ஜெனக மஹாராஜா பறைசாற்றியிருந்தார். இப்பொழுது ஸீதை ஓடிவந்து இராமன் கழுத்தில் வரமாலையைச் சாற்றினாள். பிரகு தசரதன் குடும்பத்துடன் வந்து ஸீதையை இராமனுக்கும அவள் தங்கை ஊற்மிளையை இலக்ஷுமணனுக்கும் மணம் முடித்தார்கள்.

இப்படி இராமனையும் இலக்ஷுமணனனையும் யாகம் கார்க்க என்று வ்யாஜமாக விச்வாமித்திரர் கொண்டு சென்றாலும் அது நல்ல காரியத்தில் முடிந்தது. பெரியோர்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு கருத்து நமக்கு சாதக்மாகவே இருக்கும். அவ்ர்கள் எப்பொழுதும் நமக்கு நன்மை வரும்படடியே செயல் புரிவார்கள் எனத் தெரிகிறது. ஆதலால் சில சாஸ்திர விரோதமாகத் தொன்றும் செயல்கள்கூட தர்மசங்கட நிலலையில் பெரியோர்கள் சொல்ப்படி நடந்தால் நல்லதிலேயே போய் முடியும் என்பதைக் கண்கூடாகவே கண்டோம்.

இராமாயணத்திலிருந்து இன்னுமொரு தர்மசங்கடமான நிலையை அடுத்த இதழில் பார்ப்போம்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

இப்படிக்கு அன்புடன்
உங்க்ள் அசலம

Achalam.com

கடிதம் - 18 கடிதம் - 20

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button