Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





அத்தியாயம் – 2 பர்கம் 10

image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனேநம:

கர்மஜம் புத்தியுகதாஹி பலம் த்யக்த்வா மனீஷிண:
ஜென்மபந்த வினிர்முக்தா: பதம் கச்சந்த்யனாமயம்

ஸ்லோகம் 51 கேளுங்கள்



ஸாரம்:

ஞானப்ராப்தி யடைந்த ஸமர்த்தர்கள், தங்கள் கர்மபலனை த்யாகம் செய்து, பிறவியிலிருந்து விடுபட்டு, சங்கடங்களுக்கு அப்பார்ப்பட்ட நிலையைச் சேருகிறார்கள்.

விளக்கம்:

கிருஷ்ணனுடைய வல்லமையில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல், தன் புத்திபூர்வகமாக சிந்திக்கும் அர்ஜுனனின் மனதில் எழும் வினாக்களைக் கண்டுகொண்ட பகவான், ஏன் ஞானப்ராப்தி அடைந்த நல்லோர்கள் கர்மயோகத்தைக் கையாளுகிறார்கள் என விளக்குகிறார். மனத்தில் எழும் சஞ்சலங்களை ஊடுருவிப் பார்காமல் தன் கர்மத்தில் மட்டும் கவனமாகச் செயல் புரியும் நல்லோர்கள் தங்கள் மனதை சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். அதெப்படி மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது? மனச்சஞ்சலத்தை உடையவர்கள் தங்கள் ஸ்வார்த்த புத்தியை (Ego) வளர்த்து அதன் மூலமாக எழும் ஆசாபாசத்தில் உழன்று வாஸனைகளைப் பெருக்கி மீண்டும் மீண்டும் ஜெனனத்தில் உழன்று அந்த வாஸனைகளைக் கரைக்க முயல்கிறார்கள். இப்படி மன சஞ்சலத்துடன் கர்மம் செய்தால் ஆசை நிரம்பி கர்மபலனில் நாட்டம் வருவதால் செய்யும் கர்மா சரிவர அமையாமல் பலன் மாறாக வரும். அதில் சங்கடப்பட்டு உழன்று மன நிம்மதி அற்றுப் போகிறார்கள். இப்படி ஸ்வார்த்த (Ego) புத்தியினால் ஆசை (Desire) வளர்கிறது. அதனால் கர்மபலனில் நாட்டம் செல்கிறது.

ஸ்வார்த்தம் (Ego) இல்லாது பணிபுரியும் ஞானிகள் இதை உணர்ந்துகொண்டு மனதை ஆசாபாசத்திலிருந்து விடுபடுத்தி, செய்யும் கர்மாவில் முழு கவனமும் வைத்து, கர்ம பலனைப் பற்றிச் சிந்திக்காமல் கர்மத்தைத் தங்கள் கடமையாகக் கருதிச் செயல் படுவதால் புது வாஸனைகள் சேருவதில்லை, பழைய வாஸனைகள் கரைந்து போகின்றன. இப்படி மனம் சுத்தமாகித் தெளிந்த மனத்துடன் கர்மத்தில் ஈடுபடுபவர்கள் கர்ம யோகிகள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சங்கடங்கள் இல்லாத ஒரு புது வாழ்வை அடைகிறார்கள். சங்கராச்சாரியர் இங்கு வெகு தெளிவாக சொன்னது: “வெறும் கர்மாவால் ஒருவன் கடைத்தேற மாட்டான். செய்யும் கர்மத்தின் தன்மையை உணர்ந்து அதன் பலனை எதிர்பாராமல் செயல் புரிவது மட்டுமே அவர்களை ஞான நிலைக்கு உயர்த்தக்கூடிய தியான வழியில் செலுத்தி, ஆத்ம ஸ்வரூபத்தை அறிய வழி வகுக்கிறது” என விளக்கியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? “நம் ஸ்வார்த்தத்தைக் (Ego) களைந்து, கர்மபலனைப் பற்றிக் கவலைப்படாது, விசாரங்களிலிருந்து விடுபட்டு, மனதை திடப்படுத்தி, நம் சுய கர்மத்தில் முழு மனதுடன் செயல் பட்டால் (கர்மயோகம்) நாம் சங்கடங்களிலிருந்து விடுபட்டு நம் சுய நிலையை அறிய தியானத்தில் லயித்து நம்மைக் கடைதேற்றிக்கொள்ளலாம்” என்பதே.

யதாதே மோஹ கலிலம் புத்திர்வ்யதி தரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ச்ரோதவ்யஸ்ய ச்ருதஸ்யச

ஸ்லோகம் 52 கேளுங்கள்



ஸாரம்:

எப்பொழுது உனது புத்தி அஞ்ஞானமாகிய மாயயைக் கடக்கிறதோ அப்பொழுது நீ இதுகால் கேட்ட விஷயங்களைப் பற்றியும் இனிக் கேட்கக்கூடிய விஷயங்களைப் பற்றியும் கவலைப்படாமல் (பேதபாவம் இல்லாமல்) இருக்கும் ஒரு நிலையை அடைவாய்.

விளக்கம்:

இங்கு, இது வரை கேட்டதும் இனிக் கேடக் கூடியதும் என்ற பதத்தைச் சரிவர உணர வேண்டும். இது வெறும் கேட்பதைக் குறிக்கவில்லை. நமது ஞானேந்திரியங்கள் வழி வரும் சகல விஷயங்களையும் குறிக்கிறது. அதாவது நாம் காண்பது, கேட்பது, உணர்வது, ஸ்வசிப்பது, ருசிப்பது என்ற ஐந்து வித அனுபவங்களையும் சேர்த்து அர்த்தம் கொள்ள வேண்டும். நம் ஆத்மா (ஸ்புரிப்பு அல்லது சுய நிலையாகிய ப்ரஹ்மத்வம்) அஞ்ஞானத்தால் மூடுபட்டு திகழும் நிலையில் நாம் இருக்கிறோம். இப்படி அஞ்ஞானத்திர்க்கு காரணமானதை மாயை என சொல்கிறோம். மாயயால் மூடுபட்ட நமது சுய நிலை அஞ்ஞானத்தை வளர்க்கிறது. ஆதலால் நாம் நம் சுயனிலையை அறிவதில்லை. அதை அறிவதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு இந்தக் கர்மயோகம் வழி வகுக்கிறது.

இப்படி மாயையின் பரிணாமத்தைக் குறித்துத் தங்கள் உள் ஆராய்ச்சி செய்து அதன் விளைவுகளை அறிந்த ஞானிகள் அது நம்முள் இரண்டு நிலையில் இரண்டு விதமாக நம்மை பாதிக்கிறது எனக் கூறுகிறார்கள். அஞ்ஞானத்தின் காரணமாக நம் புத்தி நிலையில் அது ஒரு திரையாக அமைந்து நம் நிலையை உணற விடாமல் திளங்குகிறது. அப்படிச் சுய நிலை அறியாமல் நம் மனம் ஒரு அஸத்தாகிய (Unreal) உலகத்தை நம்மில் பிரதிபிம்பப் படுத்துகிறது, தவிர, இந்த அஸத்திய உலகப் பிரதிபிம்பம் தான் நான் என நம்மைக் கருத வைக்கிறது. இப்படி இரண்டு நிலையில் இரண்டு விதமான அஸத்தியப் பிரதிபிம்பங்களை உருவாகும் மனத்துடன் கர்மம் செய்தால் கர்மபலனும் அஸத்தாகவே திகழும். நம் புத்தி எப்பொழுது இந்த அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு சுய நிலையை அறிந்துகொள்கிறதோ அப்பொழுது மனம் வெளியுலகிலிருந்து வரும் அனுபவங்களில் ஈடுபடாமல் சுய நிலையில் இருக்கக் கற்றுக்கொள்கிறது.

ஒரு தரம் நமது புத்தி அஞ்ஞானத்தைத் துறந்து தன் சுயநிலையை அறிந்துகொண்டால் பிற்பாடு வெளியிலிருந்து வரும் விஷயக் கோர்வைகளை தனது ஆத்மஞானப் பசியைத் தீரக்க வல்ல விஷயங்களாக ஆக்கித் தன் அறிவைப் பெருக்க உதவுகிறது. இப்படி நாம் கேட்டதும் கேட்க வேண்டியதும் என்ற பதந்திற்கு விரிவாக அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது உலகளவில் ஐந்து வழியில் நாம் அறிந்த, அறியக்கூடிய விஷயங்கள் என அர்த்தம் கொள்ள வேண்டும். இங்கு ஆதி சங்கரர் “அப்படியானால் எப்பொழுது அஞ்ஞானத்தைக் கடந்து, ஸத்து, அஸத்து என்ற பாகுபாட்டை உணர்ந்து எனது சுய நிலையை அடைவேன்” என்ற நம் வினாவிர்க்கு விளக்கம் தருகிறார்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: “அஞ்ஞானமாகிய மாயை என்ற திரையால் மூடப்பட்டு இருக்கும் புத்தி காரணம் உலக விஷயங்களை ஸத்தியம் எனக் கருதி அதுதான் தன் சுய நிலை என்று தவறாக உணரும் மனம் நம்மைச் சரியான கர்மயோகத்தில் செலுத்தாது. இந்தத் திரையை அகற்றி ஞானம் பெற்றால் மனம் தானாக வெளி விஷயங்களில் செல்லாது” என்பதுதான்.

ச்ருதி விப்ரதிபன்னாதே யதாஸ்தஸ்யதி நிச்சலா
ஸமாதாவசலா புத்தி: ததா யோகம் அவாப்ஸ்யஸி

ஸ்லோகம் 53 கேளுங்கள்



ஸாரம்:

எப்பொழுது உன் புத்தி குழம்பியிருந்தாலும், திடமாகவும் ஸ்திரமாகவும் உன் சுய நிலையில் (PURE Consciousness) நிற்க்கின்றதோ அப்பொழுது ஆத்மஞானம் கிடைக்கும்.

விளக்கம்

எப்பொழுது ஒருவனின் புத்தி வெளியுலகிலிருந்து பஞ்சேந்திரியங்கள் வழி வரும் விஷயங்களால் தாக்கப்படாமல் ஸ்திரமான அறிவுடன் இயங்குகிறதோ அப்பொழுது அவன் யோக நிலை அடைந்துவிட்டன் எனக்கொள். இங்கும் கேட்டது, கேட்க்கக்கூடியது என்பதின் விரிவான விளக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். உலக விஷயங்கள் நம் ப்ஞ்சேந்திரியங்கள் வழி நம் மனதிற்குள் புகும் எல்லா விஷயங்களூம் இதில் உள்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அறிவுரையைப் பூர்த்தியாக உணர முடியும். இப்படி வெளியுலகிலிருந்து வரும் விஷயங்கள் நம் மனதில் புகுந்து அதை நிலைகுலயச் செய்யும். அதில் அகப்படாமால் யாதொருவனின் மனம் ஸமபாவத்துடனும் ஆசாபாசப் பிடிக்குள் அகப்படாமலும், தன் சுய நிலையிலிருந்து நழுவாமலும் இயங்குகிறதோ அப்பொழுதுதான் அதை யோகம் எனக் கூறமுடியும். பிறகு வரும் ஸ்லோகங்களில் பகவான் தரும் “ஸ்திதப்ரஞ்னன்” என்ற பதத்திற்கு விரிவுரை இதை இன்னும் தெளிவுபடுத்தும்.

இதுவரை பகவான் தந்த விரிவுரையால் அர்ஜுனனின் நிலை மாறியிருப்பதாத் தெரிகிறது. பகவான் தரும் விளக்கங்களில் கவனம் வைத்து இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் கடந்திருப்பதாகத் தோன்றுகிறது. பின் வரும் அவன் வினா இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதுவரை அவனிடமிருந்த மூடத்தனம் அல்லது தப்பான கருத்துக்கள் (histeria) மாறி அவனுள் இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறது. தன் இப்போதைய மன நிலையிலிருந்து இனி நாம் அடைய வேண்டிய நிலையின் தூரம் எவ்வளவு இருக்கும் என அர்ஜுனன் அளப்பதாகத் தோன்றுகிறது. அவன் மன உளைச்சல் சற்றுக் குறைந்து சிந்திக்கும் சக்தியைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. ஆதிசங்கரர் இந்த ஸ்லோகத்தை அடுத்த ஸ்லோகத்துடன் இணைத்துப் பார்க்கிறபோது அவனின் இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவலே அவனைத் திருத்தியிருக்கிறது எனக் கொள்கிறார். இல்லையேல் அப்படித் தன்னில் உறைத்திருப்பவனின் லக்ஷணம் ஏது என அவன் வினவ இயலாது.

அர்ஜுனௌவாச

ஸ்தித ப்ரஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரசேத கிம்

ஸ்லோகம் 54 கேளுங்கள்



ஸாரம்:

அர்ஜுனன் கேட்கிறான்: புத்திமானாகவும், ஓ கேசவா! ப்ருஹ்ம் நிஷ்டயையில் நிலைத்திருப்பவனுமாகிய ஒருவனைப் பற்றிய விவரணம் என்ன்? எப்படி அப்பேர்ப்பட்ட புத்திசாலி பேசுவான், இருப்பான், ந்டப்பான்?

விளக்கம்

முந்தின இரண்டு ஸ்லோகங்களில், நமது ஜீவித நோக்கம் என்ன, அதை புத்திசாலி ஒருவன் நெடுநாளைய பழக்கத்திற்குப்பின் எப்படி நடைமுறையில் கொணருவான் என்பதை விவரித்திருக்கிறார். அர்ஜுனன் தன் விஷாத நிலையிலிருந்து இப்பொழுது சிறுகச் சிறுக மாறி ஒரு கர்மயோகியின் நிலைக்கு வந்துகொண்டிருப்பது, அவன் மேலே கேடட கேள்வியிலிருந்து புரிகிறது. ஒரு கர்மயோகி எப்படி விசார மார்கத்தில் சிந்திப்பானோ அதுபோல் அவன் இப்பொழுது கேள்விகள் கேட்கத் துவங்குகிறான். அவன் மன நிலை இப்பொழுது தெளிவாகத் துவங்கியுள்ளது புரிகிறது. ஜீவிதக் குறிக்கோளை புத்தியோகத்தால் அடைந்தபின் ஒரு கர்மயோகியால் திரும்ப உலகில் தீவிரமாக வாழ்க்கை நயிக்க இயலுமா என்ற வினா எழுந்திருப்பது தெரிகிறது. வேதாந்த சிந்தனைப்படிப் பார்க்கையில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்த ஒருவன் உலகக் கார்யங்களில் ஈடுபட முடியாது, அவன் அவனுடைய தனி உலகில் இருப்பான் எனத் தவறான எண்ணம் எழுவது சகஜம். உபநிஷத்துக்களின் விவரணப்படி, வேதாந்தப் படிப்பில் முதல் படியில் இருப்பவன் “தன்னை அறிந்துகொண்ட ஞானி உலக் விஷயங்களில் ஈடுபடத் தகுதியில்லாதவன் ஆவான்” என்ற தவறான கருத்தை அடைய ஹேதுவாகிறது. அர்ஜுனனும் இப்போழுது அந்த நிலையில் உள்ளான். அவன் ஒரு ஸ்தித ப்ரஞனன் எப்படிப் பழகுவான், எப்படி இருப்பான், நடப்பான், பேசுவான் போன்ற வினாக்களை எழுப்பித் தன் சந்தேஹத்தைத் தீர்த்துக்கொள்ள ஆவல் கொண்டுள்ளான். குழம்பிய மன்த்துடன் இருந்த அர்ஜுனன் இப்பொழுது இப்படி வினாக்களை எழுப்பியது, அவனுக்கும் ஆத்மீக சிந்தனையில் எழுந்துள்ள ஆர்வத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஸமாதி நிலையிலிருந்து எழுந்தபின் ஒரு ஆத்மஞானி எப்படி இருப்பான், எப்படி உலக சம்பந்தப்பட்ட கார்யங்களில் ஈடுபடுவான் என்ற இரு வினாக்களை அர்ஜுனன் எழுப்பியது நம் போன்ற அஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்களாகவே உள்ளன.

பகவான் ஒரு ஸ்திதப்ரஞ்னனின் லக்ஷ்ணத்தையும் அவன் உலகில் எப்படிப் பழகுவான் என்ற விவரத்தையும் இப்பொழுது அர்ஜுனனுக்குச் சொல்கிறார்.

ஸ்ரீ பகவானுவாச

ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான் பார்த மனோகதான்
ஆதமன்யேவாத்மனா துஷ்ட: ஸ்தித ப்ரஞ:ஸ்ததோச்யதே

ஸ்லோகம் 55 கேளுங்கள்



ஸாரம்:

பகவான் சொலவதாவது: யாதொருவன் மனதிலெழும் ஆசைகளில் ஈர்க்கப்படாமல், ஹே பார்த்தா! தன் சொந்த நிலையில் (ஆதம ஸாக்ஷாத்காரம்) இச்சை கொள்கிறானோ அவனே புத்திசாலி (ஸ்தித ப்ரஞ்னன்) என அழைக்கப்படுகிறான்.

விளக்கம்

இங்கு முதல் இந்த அத்தியாயத்தின் கடைசி வரை, ஒரு ஸ்தித ப்ரஞ்னனில் உள் மனநிலை எப்படி இருக்கும், அவன் புறப் பெருமாற்றம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய விபரம் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் கீதை நமக்கு ஒரு பெரிய இரகசியத்தைத் தருகிறது. அதாவது, யதார்த்த ஆத்மஞானிகளுக்கும் வெளிவேஷம் பூண்ட போலிச் சாமியார்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கீதை நன்றாக எடுத்துரைக்கிறது. இது நமக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது. பகவான் இதுகால் நமக்கு ஒரு ஸ்திதப்ரஞ்னனின் உள்நிலை குறித்தும் புற பெருமாற்றததைக் குறித்தும் சொலவதிலிருந்து ஆத்மஞானம் பெற வழி வகுத்திருக்கிறார். மனதை ஆசாபாச வலைகளிலிருந்து விடுபடுத்தி, புத்திபூர்வகமாகச் செயல்படுத்த வழி காண்பிக்கிறார். மாயா எனப்படும் அஞ்ஞானத் திரையில் இருந்து விலகி ஞானம் என்ற ஒளியில் திகழ என்ன வழி என்பதை இதன் மூலம் சுட்டிக் காண்பித்திருக்கிறார். மனோ நியந்த்ரணம், புத்தியோகம் இவை இரண்டும் அவசியம் எனத் தெரிகிறது. அஞ்ஞானத்தால் மூடுபட்ட புத்தி, ஆசாபாசத்தை வளர்க்கும் தொழில்சாலையாக மாறுகிறது. எவனொருவன் ஞானம் பெற்று அஞ்ஞான வலையிலிருந்து விடுபடுகிறானோ அவன் ஞானம் பெற்று ஆசை அற்றுத் திகழ்கிறான். ஆசை அகன்றால் அஞ்ஞானம் விலகி ஞானம் வருகிறது என்பது திண்ணம். இப்படிக் கூறுவதால் ஒரு சிலர் கேட்கலாம்: “ஆசை இல்லையேல் எப்படி ஒருவனால் கர்மம் செய்ய இயலும்? வாழ்வின் குறிக்கோள் சுகம் அடைவதுதானே? ஆசை அற்ற ஞானி எப்படிச் சுகம் பெறுவான்? இந்தத் தவறான கருத்தை மாற்ற அடுத்த வரிகளில் பகவான் சொன்னது “ஆசை அற்று நித்திய சுகத்தில் திளைத்திருப்பான்” என்றே. அதாவது, ஆத்மஞானம் பெறுவது நித்திய சுகம். உலக சுகங்கள் அநித்தியம் என்பதாய்ச் சொல்லாமல் சொல்கிறார்.

ஒரு சிறுவன் ஆறியாமையால், தன் குழந்தைப் பருவத்தில் விளையாட்டுச் சாமானகளை அடைய ஆசை கொள்கிறான். அவன் வளரும்போது, குழந்தைப் பருவத்திய விளையாட்டுச் சாமான்களிலுள்ள ஆசை போய் மற்று பல யுவஜெனங்கள் ஆசைப்படும் வ்ஸ்துக்களைத் தேடி அலைகிறான். அவன் பௌரனாக ஆகும்போது இவைகளை விடுத்து அந்த நிலைக்கேற்ப வஸ்த்துக்காளை அடைய ஆசை கொள்கிறான். இப்படிப் பருவத்திற்கேற்ப ஆசைகளை மாற்றி, பல பொருட்ககளில் ஆசை வைத்து, அதன்மூலம் சந்தோஷம் அடைகிறான். இது நாம் கண்கூடாகக் காணும் ஒரு இயற்கைக் காட்சி. அதேபோல், ஆத்மஞானத்தில் கருத்துள்ளவன் தன் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான பொருட்களில் ஆசை விடுத்து, நித்திய ஆனந்த சுகத்தை விரும்புகிறார். அதை அடைந்து விட்டால் பிறகு ஆசை முழுவதும் அற்றுப்போகும் என்ற உண்மையை இங்கு உணர வேண்டும். இப்படிப்பட்ட ஞானி உபநிஷத் என்ற பூங்காவனத்தில் புகுந்து நித்தியானுபவ சுகத்தில் திளைக்கிறான் என்று வியாசர் ஸ்ரீ பகவான் வாயிலாக நமக்குத் தந்துள்ள இந்த மஹத் தத்துவம் நம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு கலை.

(தொட்ரும்)

அத்தியாயம் 2 பாகம் 9 அத்தியாயம் பாகம் 11

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button