Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 17
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

தர்மசங்கடம் - முகவுரை

அருமை செல்வங்களே,

எனன, புதிதாக ஏதோ சொல்லப்பொகிறோம் என நினைத்தீர்களா? இது உங்களூக்குத் தெரிந்த விஷயம்தான். சமயத்திற்குத் தகுந்த மாதிரி புத்தியை உபயோகிப்பதற்கு சமயோஜித புத்தி எனப் பொருள் இல்லையா? அதாவது இக்கட்டான (தர்மசங்கமான) நிலையில் சரியான முடிவை எடுக்க உதவிபுரியும் புத்தி எனப் பொருள். அப்படி நம் புத்தி சமயத்திற்குத் தகுந்ததுபோல் இயங்கவேண்டுமானால் நாம் நம் புத்தியைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு எப்பொழுதும் புதுப்புது விஷயங்களில் புகுந்து ஆராய வேண்டும். பெரியோர்களூம் நம் முந்தாதையர்களும், மற்ற நிகழ்கால மேதைகளும் எப்படிச் செயல்பட்டார்க்ள் எனத் தெரிந்துகோண்டு அதற்கொப்ப நாமும் நம் கல்வியை மாற்றிக்கொள்ள வேண்டும். புத்தி சூட்சுமம் வர நல்ல கருத்துக்கள் கொண்ட மடல்கள், கதைகள், புராணங்கள், போன்றவற்றை மிகத் தெளிவாகப் படித்து உணர வேண்டும். ஏதொரு விஷயம் கிடைத்தாலும் அதை மிகக் கூர்மையாக ஆராய்ந்து அதன் நுட்பத்தைத் தெரிந்துகொள்வது மிக அவசியம். அப்படி ஓரோர் விஷயத்திலும் நாம் நம் கவனத்தைத் திருப்பி மிக சூட்சுமமாக ஆராய்ந்துவந்தால் நம் மூளை விருத்தியாகும். நம் புத்தி தெளிவாகவும் கூர்மையாகவும் திகழும். இப்படி புத்தியைத் தீட்டிக் கொண்டால் எந்த நேரமும் அது ந்மக்கு உதவியாகச் சரியான் விடைகளைத் தரும். இனி விஷயத்துக்கு வருவோமா?

Play - image courtesy: panoramio.com

உங்களுக்குமுன் வீதியில் ஒரு மூன்று வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு மோட்டார் வாகனம் அதிவேகமாக வருகிறது. அந்த சிறுவனைக் கடந்துபோக வீதி அகலமாக இல்லை. அவன்மேல் இடித்துக்கொண்டுதான் போக முடியும். நீங்கள் நிற்குமிடத்திற்குப் பக்கத்தில் சாலை ஓரத்தில் ஒரு மரம் முறிந்து கிடக்கிறது. அதன் கிளைகள் முறிந்து பக்கத்தில் கிடக்கின்றன. நீங்கள் நிற்குமிடத்திலிருந்து அந்தக் குழந்தையை எடுத்து மாற்ற இயலாதபடி தூரம் அதிகமாக உள்ளது. கூப்பிட்டால் குழந்தைக்கு தெரிவதில்லை. அது மிக் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. மோட்டார் வாகனம் அதிவேகமாக வருகிறது. குழந்தையின் அருகில் யாரும் இல்லை. என்ன செய்வீர்கள்? இங்குதான் சமயோஜித புத்தி வேலை செய்ய வேண்டும். உங்களால் ஓடி குழந்தையை எடுத்து மாற்ற சமயம் போதாது, தூரமும் அதிகம். மோட்டார் வண்டியை நிறுத்தக் கைகாட்டியும் பிரயோஜன்மில்லை. வண்டியின் ஓட்டுனர் குடிபோதையில் இருக்கிறார், அல்லது வண்டியின் ப்ரேக் செயல்படவில்லை. இதற்குப் பெயர் தர்மசங்கடமான அல்லது இக்கட்டான் நிலை. செயலற்று நிற்க்கக்கூடிய ஒரு நிலை.

மண்டையைப் பிய்த்துக் கொண்டாகிவிட்டதா? பார்ப்போம். உங்களுக்கு அருகில் சாலை ஓரத்தில் கிடக்கும் மரக்கிளையில் “ப” என்ற வடிவில் உள்ள ஒரு கிளையை எடுத்து அதை அந்தக் குழந்தையைச் சுற்றி விழுமாறு வீசி அதன் மறுபக்கத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு அதை உங்கள் பக்கம் வேகமாக இழுத்தீர்களானால் அந்தக் கிளையுடன் குழந்தை உங்கள் பக்கம் சாலை ஓரமாக வந்துவிடும் இல்லையா? கிளை வீழும்பொழுதோ அதை உங்கள் பக்கம் இழுக்கும் பொழுதோ குழந்தைக்கு காயம் ஏற்ப்பட்டால் என்ன செய்வது என்று யோசிப்பீரகளா? மாட்டீர்கள், ஏனனில் முழ்ந்தையின் உயிர் முக்கியமே தவிர அதற்கு உண்டாகும் சிறு கீறல் காயம் பெரிதல்ல. இப்படி நீங்கள் தக்க சமயத்தில் செய்து அந்தக் குழந்தையைப் காப்பாற்றி விட்டீர்களானால் அக்குழந்தையின் பெற்றோர்கள் எப்படி சந்தோஷப்படுவாற்கள்? நீங்களும் மனநிம்மதியுடனும் ஒரு உயிரைக் காப்பாற்றினோம் என்ற பெருமையுடனும் ஆத்மத்ருப்தியுடனும் திகழ்வீற்கள்.

இதைத்தான் சமயோஜித புத்தி எனச் சொல்கிறார்கள். அதாவது இக்கட்டான், தர்மசங்கடமான ஒரு நிலையில் நம் புத்தியை எப்படி சமயத்திற்குத் தகுந்தாற்போல் உபயோகிப்பது எனபதுதான் இதன் பொருள். இப்படி ந்மக்கு சம்யோஜித புத்தி இயங்க வேண்டுமாகில் அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். கண்டும், கேட்டும், சிந்தித்தும் நம்முள் தெளிவான ஒரு சமயத்திற்குத் தகுந்தாற்ப்போல் இயங்கும் சக்தியை உண்டுபண்ண வேண்டும். எப்படி? நம் பெரியோரக்ளும், முனிவர்களும், நேதாக்களும், தெய்வ அம்சம் பொருந்திய முன்னோடிகளும் செய்த தீரச்செயல்களைக் கேட்டும், புராணக் கதைகளில் படித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நமக்கு உதவக்கூடிய புராணக் கதைகளில் வரும் இதுபோன்ற சம்பவங்களை ஆராய்வோமா?

ஓ! சமயம் போனதே தெரியவில்லை. உங்கள் பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். சிண்டுகளே! இன்றுபோய் நாளை வர்ருங்கள். மேற்கொண்டு பார்ப்போம்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

இப்படிக்கு அன்புடன்

உங்கள் அசலம

Play - image: Picasaweb

Achalam.com

கடிதம் - 16 கடிதம் - 18

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button