தாயென்று கும்பிடடி பாப்பா
- பகவத்கீதா சாரம்
அசலம்
அத்தியாயம் 2, அர்ஜுன விஷாத யோகம் - பாகம் 8
பஹு சாகாஹ்யனந்தாச்ச புத்தயோSவ்யவஸாயினாம்
ஸ்லோகம் 41 கேளுங்கள்
ஸாரம்:
இங்கு, ஹே குருவம்சத்தில் பிறந்தவனே! ஒரு ஏகாக்ர சித்தத்துடன் கூடிய தீர்மானம் தேவை. அளவிலாது பல பிரிவுகளுடன் கூடிய விசாரங்களில் உழலுபவர்கள் தவிப்பார்கள்.விளக்கம்:
கர்மயோகத்தைப் பற்றிச் சொல்லத் துவங்கும் பகவான் சொல்வதாவது: ஏகாக்ர சித்தத்டதுடன் கர்மபலத்தில் நாட்டமில்லாமல் செய்யும் கர்மா நிச்சயம் நல்ல விளைவைத் தரும். ஏனென்றால் அவர்கள் மனதை ஒரு நிலையில் நிறுத்தி, பலனைப் பற்றிக் கவலைப்படாமல், கர்மத்தில் மட்டும் சித்தத்தை நிலைநிறுத்திச் செய்வார்கள். ஆனால் பலதரப்படட அளவிலாத கர்மபலத்தில் ஆசை வைப்பவர்கள் ஒருபோதும் அவர்கள் செய்யும் கர்மத்தின் பலனை அனுபவிக்க மாட்டர்கள். அதுவும் பலதரப்பட்ட முடிவில்லாத ஆசைகளைக் கொண்டவர் கர்மத்தில் நாட்டம் செல்லாமல் ஆனால் அதன் பலனில் ஆசை வைத்து, கர்மத்தைச் செய்யவேண்டிய முறையில் (ஏகாக்ர சித்ததுடன் கர்மபல்னில் ஆசை வைக்காமல்) செய்யாததால் அவர்கள் செய்யும் கர்மாவில் தோல்வியே அடைவார்கள்.இதில் நமது ஹிந்து தர்மத்தின் மூல தத்துவம் அடங்கியுள்ளது. யாதொருவன் தான் செய்யப்போகும் கர்மத்தில் முழு மனதுடன் (மற்ற விசார்ங்களைத் தவிர்த்து செய்யப்போகும் கர்மத்தில் மட்டும் மனதை நிலை நிறுத்தி) செய்கிறானோ அவனுக்கு நிச்சயம் நல்ல கர்மபலன் கிடைக்கும். ஏனென்றால் அவன் தன் சுயநலத்தைக் கருதாது கர்மத்தின் பலனை எதிர்பாராது செய்யும் கர்மத்தில் அவன் மனம் முழுதும் ஈடுபடுகின்றது. அங்கே வேறு விசாரங்களுக்கு இடமில்லாமல் போகிறது. இதற்குப் புறம்பாக ஒருவன் மனதிலுள்ள அளவிட முடியாத பலதரப்பட்ட ஆசைகளில் மூழ்கி மனதை ஒரு நிலையில் நிறுத்த முடியாமல் கர்மத்தில் இறங்கினால் அவன் தன் ஆசைகளுக்கே பங்கம் வரும் விதம் ஒன்றுக்கொன்று விருத்தமாக வரும் விசாரக்கோர்வையில் தவித்து, மனம் சீர்குலைந்து, க்ஷீணிதனாய் செய்யும் கர்மாவில் கருத்தில்லாமல் சோர்ந்து போவதால் அதில் தோல்வியே அடைவான்.
கர்மயோகம் என்பதன் பொருளை அர்ஜுனன் அறிவான். அதாவது நமது சாஸ்த்திரத்தில் கர்மகாண்டத்தில் தந்துள்ள பூர்வமீமாஸ தத்துவத்தைச் சாந்தவர்கள் சொலவது, கர்மயோகம் என்பது நமது ஆசாரங்களை ஒரு முறைப்படி பூஜாவிதியாக, பலனை எதிர்பார்த்து செய்யக்கூடிய கர்மங்கள் என்பனவே. அதில் ஒரு தேவதையை அல்லது பல தேவதைகளை நோக்கிச் செய்யும் கோரிக்கைள் அடங்கிய பூஜாவிதிகள் உள்ளன. இந்தத் தப்பான அபிப்ராயத்தை எதிர்த்து நிஜ கர்மயோகிகள் சொல்லும் அர்த்தத்தை இங்கு அர்ஜுனனுக்கு போதிக்கிறார் பகவான். ஒரு கர்மா பண்ணும்போது அதற்கென்று சில விதிமுறைகள், ஸாமக்ரிகைகள் உண்டு. அது நம் ஆசாரத்தை ஒட்டியதாகும். இது கர்மயோகமில்லை. ஏனென்றால் இது ஒரு நோக்கத்துடன், கர்மபலத்தை எதிர்பார்த்து செய்யும் ஒரு விதி (ritual). மனதைக் கட்டுப்படுத்தி, கர்மத்தின் ஜெயத்தில் மட்டும் குறிக்கோளாக, கர்மபலனை சிந்தியாது செய்யும் கர்மத்திற்குப் பெயர் கர்மயோகம் என்ற கருத்தைத் தந்த நிஜ கர்மயோகிகளின் வழியை இங்கு தெளிவுபடுத்துகிறார் பகவான். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தத்துவம், “ஒரு காரிய சித்தியை முன்னிட்டு நாம் செய்யும் பூஜை, ஹோமம் என்ற ஆசாரங்கள் கர்மயோகம் ஆகாது. இதில் நம் சுயநலம் அடங்கியுள்ளது. கர்மம் செய்யும்போது நாம் கர்மபலனில் மட்டும் சிந்தனை வைத்துச் செய்வதால், கர்மம் ஸித்தியாகாது. கர்மத்தில் மட்டும் மனதை நாட்டி அதன் வெற்றிககாக மட்டும் (கர்மபல ஆசையில் நாட்டமிலலாமல்) செய்யும் கர்மம் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும், காரணம் அதில் ஏகாக்ர சித்தம் உள்ளது, ஆசாபசங்கள் இல்லை” என்பதுதான். இதை பகவான் அர்ஜுனனுக்கு போதிக்கிறார். இனி வரும் ச்லோகங்களில் இதை விரிவுபடுத்துகிறார்.
வேதவாதரதா: பார்த்த நான்யதஸ்திதி வாதின:
ஸ்லோகம் 42 கேளுங்கள்
ஸாரம்:
வேதவாக்கியங்களின் அர்த்தத்தை மிக பாண்டித்யத்துடன் விவரிப்பார்கள் அவிவேகள். அதிலுள்ள இலக்கிய சாதுர்யத்தை மட்டும் போற்றுவார்கள் ஓ பர்த்தா. அவ்வளவுதான்.விளக்கம்:
விவேகிகள் வேதஸாரத்தை இலக்கிய சாதுர்யத்துடன் விரிவுபடுத்த முனைவார்கள். அவ்வளவுதான். அதில் ஒரு சாரமும் இல்லை. அதன் நிஜமான கருத்தை வேறபடுத்தி அவர்கள் இலக்கிய சாமர்த்தியத்தைக் காட்ட முயல்வார்கள். அதில் அர்த்தமில்லை.
க்ரியா விசேஷ பஹுலாம் போகைஸ்வர்ய ப்ரதிம் கதி
ஸ்லோகம் 43 கேளுங்கள்
ஸாரம்:
ஸ்வர்க்கம் கிடைப்பதை அவர்கள் குறிக்கோளாகக் கொண்டு புனர்ஜெங்கபலனைப் பற்றி மிகச் சதுர்யமாக விரிவுரை தருவார்கள்.விளக்கம்:
அப்படிப் பறைசாற்றும் அவிவேகிகள் ஸ்வர்கலாபத்தை முன்னிட்டு அதன் விளைவாக வரும் புனர்ஜென்ம பலத்தைப் பற்றி மிகச் சாதுர்யமாக மதுரவாக்கியங்களால் விளக்குவார்கள். இப்படி புனர்ஜென்ம ஆசை போகத்திற்காகவும் நேத்ருத்வத்திற்காகவும் சைய்யும் கர்மா நமக்கு ஞானத்தை தராது என வலியுறுத்துகிறார்.
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ நவிதீயதே
ஸ்லோகம் 44 கேளுங்கள்
ஸாரம்:
இப்படி போக சிந்தனையுடன் செயல் புரிபவர்கள் ஒருபோதும் ஏகாக்ர சித்தத்துடன் காண மாட்டர்கள். அவர்கள் ஒருக்காலும் ஒரு தீர்மானத்தை அடைய மாட்டார்கள். (அதனால்) அவர்களால் ஏகாக்ர சித்த்துடன் பணிபுரியவோ ஸமாதி நிலை அடையவோ இயலாது.விளக்கம்:
வியாசர் தன் காலகட்டத்தில் வேதத்தின் நலிந்த நிலையை எதிர்த்து அதைப் புனருத்தாரணம் செய்ய முன்வதவர்களில் முதல் ஸ்தானம் பெற்றிருக்கிறார். ஆசைகளில் அகப்பட்டு வேதத்தின் ஸாரத்தை அவிவேகமாக வியாக்கானம் செய்தவர்களை பற்றி மிக பகிரங்கமாகவும் இழிவாகவும் நேர்முகத் தாக்குதலில் இறங்கியிருக்கிறார் மேல் சொன்ன மூன்று ஸ்லோகங்களால். மஹாபாரத யுத்த காலத்தில் நிலவிலிருந்த ஆசாரங்களையும் (rituals) அதன் அர்த்த்மற்ற கொள்கைகளையும் வழிமுறைகளையும், எதிர்த்து ஒரு மஹாகாவ்ய ரூபத்தில் பகவத்கீதையைப் படைத்து நமக்கு வழிகாட்டியிருக்கிறார் அவர்.சரித்திரத்தில் நாம் பல வேதாந்த குருக்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவர்கள் நம் ஆசாரம் நிலைகுலயும் தருணங்களில் பிறந்து நமது ஆசார அறிவின்மையைத் தாக்கி நமக்கு போதித்திருக்கிறார்கள். புத்தர் அவர் கால்த்தில் நடைமுறையில் இருந்த தப்பான ஹிந்துமத ஆசாரங்களையும் பூஜைகளையும் எதிர்த்து வேதத்தில் தந்துள்ள ஆசாரங்களின் சரியான கருத்தை போதித்தார். பிறகு ஆதிசங்கர பகவத்பாதாள் உதித்து நமது கர்மகாணடத்தைத் திருத்தி எழுதி அதன் வழியை மாற்றி ஜெனங்களின் அவிவேகத்தைப் போக்கினார். க்ரீக்கர்கள் ஆசாரத்தில் நலிந்து வாழ்பவர்களுக்கு வழிகிடைக்காததால் யேசுக்ரிஸ்து அவதரித்து பொது நல நோக்கத்துடன் பக்தியுடன் செய்யும் வழிகளே மேல் என அறிவுறுத்தினார். இப்படிப் பல ஞானிகள் நம் சமுதாயத்தைக் காப்பாற்ற உதித்தனர். வேதாசார உத்தாரணம் மூன்று நிலையில் உள்ளது. அவை மந்திரங்கள், பிராஹ்மணம், உபநிஷத் என்ற மூன்று பிரிவில் தரப்பட்டுள்ளன. இங்கு இந்த பிராஹ்மணம் என்ற முறையில் உள்ள தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறார். இதில் ஒருவன் தனக்கு ஒரு தனிப்பட்ட பலம் அல்லது சக்தி கிடைப்பதற்காக ஒரு தனிப்பட்ட தெய்வத்தைக் குறித்து செய்யவேண்டிய யாகம் அல்லது தபஸ்ஸைப் பற்றித் தரப்பட்டுள்ளது. அப்படித் தவம் செய்து பெறவேண்டிய சக்திகளைப் பெற முறைகள் தரப்பட்டுள்ளன. இதைத்தான் எதிர்க்கிறார்கள் ஞானிகள். இதில் பொது நலமில்லை. ஒருவன் மற்றொருவனை வெல்ல, அல்லது மற்றொருவனுக்கு அநீதி இழைக்கத் தவம் செய்வது என ஆகிவிட்டது. இது பொதுஜெனங்களுக்கு பாதகமாக ஆகிவிட்டது. இந்த முறையை எதிர்ப்பதுதான் நமது ஞானிகள் கைய்யாண்ட முறை. இந்த் முறைகள் யாவும் ஒருவனை ஆசையில் மூழ்கடித்து மனப்பக்குவம், மனச்சாந்தி, சமாதானம் போன்ற நிலைகளில் அவனைக் கொண்டுசெல்லாது. ஆத்மஸாக்ஷாத்காரம் கிடைக்க இவை உதவாது. வேதாந்த சிந்தனையை வளர்க்க உபயோகமாகாது. ஒருவனை ஆசாபாசத்துடன் கூடின ஸம்ஸார ஸாகரத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடிக்கவே உதவும். இது தவறான முறை என எதிர்க்கிறார் வியாசர். அதைத்தான் கிருஷ்ணன் வாயிலாக “புகழ்ச்சி வார்த்தைகளால் வேதஸாரத்தைப் புகட்டுகிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.
“ஸவ்ர்கலோக வாசம், சக்தி பெறுதல் போன்ற நோக்கத்துடன் செய்யும் கர்மாக்கள் (தபஸ், யாகம் போன்ற ஆசாராதிகள்) ஒருவனை பகவத் சிந்தனைகளிலிருந்து வெகுதூரம் கொண்டு செல்லும். ஆத்ம ஞானத்திற்கு வழிவகுக்காது”. இதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து.
நிர்த்வந்தோ நித்ய ஸத்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவான்
ஸ்லோகம் 45 கேளுங்கள்
ஸாரம்:
வேதத்தில் (பிராஹ்மணத்தில்) மூன்று குணங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. நீ இவை மூன்றுக்கும் அப்பால் இரு ஹே அர்ஜுன! உன்னை த்வந்த்வங்ககளிலிருந்து விடுபடுத்தி, (பொருள்களை) அடைவது, சேர்த்து வைப்பது போன்ற ஆசையிலிருந்து விடுபட்டு எப்பொழுதும் ஸத்வ நிலையில் ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் நிலைத்து இரு.விளக்கம்:
இங்கு நாம் வேதம் என்பதை பிராஹ்மணம் என்று கொள்ள வேண்டும். அதில் சொன்னபடி ஆசாராதிகளில் ஈடுபடுவதால் ஒருவன் இதில் சொன்ன மூன்று குண சேர்க்கையில் இருப்பவன்தான். உபநிஷத்தும் இந்த மூன்று குணங்களைப் பற்றிச் சொல்கிறது. கர்மகாண்டத்தில் சொன்ன மூன்று குணங்களையும், ஆசாரதிகளைப் (யாகம், தபஸ்) பற்றியும் அவைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் விளைவுகளையும் பற்றி மனிதர்களுக்கு பிரதிநிதியாகக் கொண்டு அர்ஜுனனுக்கு பகவான் உரைப்பது, “இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டிரு” என்பதே.மனிதனில் இம்மூன்று குணங்கள் எப்பொழுதும் உள்ளன. ஒவ்வொன்றின் அளவும் ஒவ்வொருவரிலும் வித்தியாசமாக இருக்கும். இது அவர்கள் வாஸனையைப் பொறுத்திருக்கும். இந்த குணங்கள் மனதையும் புத்தியையும் பாதித்திருக்கும். அதை இல்லாமலாக்குவதற்காக என்ன செய்யலாம்? ஒரு பாத்திரம் செம்பு, அலுமினியம், இரும்பு என்ற மூன்று கலவைகளால் உள்ளது. அதிலிருந்து அவைகளை எடுக்க என்ன செய்ய வேண்டும்? அந்தப் பாத்திரத்தை இல்லாதாக்க வேண்டும் இல்லையா? சாயை குடிக்க நாம் சுடுதண்ணீர், சாயப்பொடி, பால் என்று மூன்றையும் கலக்கிறோம். சாயையிலிருந்து இவை மூன்றையும் அகற்ற வேண்டுமானால் என்ன செய்யணும்? அந்த சாயயை கப்பிலிருந்து களையணும் இல்லையா? அதுபோல் இந்த மூன்று குணங்களையும் களைய மனதையும் புத்தியையும் களையணும். இப்படிச் சொன்னால் ஜெனங்கள் வெகுண்டெழுவார்கள் அல்லது பயம் கொள்வார்கள். ஆகையால் நம் சாஸ்திரம் சொல்வது, “இவை மூன்றுக்கும் அப்பால் போய்விடு” அதாவது “மனதையும் புத்தியையும் கடந்து அப்பால் செல்” என்பதுதான். இதைத்தான் பகவான் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். ஆனாலும் ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு ஒரு மருந்தைக் குறித்துத் தந்தால் அந்த மருந்து மருத்துவ உற்ப்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் இல்லை, ஆகையால் எந்த மருத்துவக் கடைகளிலும் கிடையாது என்ற ஒரு நிலை வந்தால் மருத்துவர் தந்த சீட்டிற்கு உபயோகமில்லாமல் போய்விடும். அதேபோல் ஒரு சூரனும், Practical-mind உடையவனும் ஆன ஒரு சீடனிடம் இந்த மூன்று குணங்களை – ஸத்வ (Unactivity), ரஜஸ் (Activity), தமஸ் (Inactivity) – கடந்துசெல் என்று சொல்லி அதன் வழியைச் சொல்லவில்லையானால் எப்படிச் செயல் புரிவான்.
“நிர்த்வந்த்வோ நித்யஸத்வோ” என்ற வரியில் இதை விளக்குகிறார். அதாவது, மனிதனின் எல்லா அனுபவங்களும் த்வந்தவங்களில் அடங்கியுள்ளன. அதாவது, சந்தோஷம், சங்கடம் – ஸுகம், துக்கம் – ஜெயம், தோல்வி எனப்பட்ட அனுபவங்களை த்வந்தவங்கள் என அறிவோம். இவைகள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஒன்றில்லையேல் மற்றதில்லை. இது நமது நேர்முக அனுபவம். அப்படியானால் இவை இரண்டையும் தாண்டுவது என்றால் இவைகள் தரும் அனுபவத்தில் மனம் செல்லாமலும், அதைப் பொருட்ப்படுத்தாமலும் இருப்பது எனப் பொருள். “நித்ய ஸத்வத:” என்றால் “ever pure” என்று பொருள். இது மூன்று குணங்களில் ஏற்றவும் உயர்ந்தது. இது நம் “attachment” (ஆசாபாச சேர்க்கை) காரணம் “agitation” (நிலைதவறுதல்) ஆகி, அது நம் புத்தியைத் தாக்கி (ரஜஸ்) நம் நித்திய ஸத்திய ஆனந்த நிலையை மறைக்கிறது. (delution)/ இதைத்தான் தமஸ் எனக் கூறுகிறோம். இதனால் நமது விவேகம் செயலிழந்து நமது அறிவை பாதிக்கிறது.
“யொகம்”, “க்ஷேமம்” என்ற வார்த்தைகளால் “பெறுதல்”, “காக்கல்” எனத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆசையால் பல சுகம்தரும் வஸ்துக்களைப் பெற சிரமப்படுகிறோம். பெற்றதைக் காப்பாற்ற முயல்கிறோம். இவை இரண்டும் நமது சுயநல புத்தியால் ஏற்ப்படுபவை. இவைகள்தான் நமது த்வந்தவ அனுபங்களுக்கு மூல காரணம். இவைகளைக் களைந்தால் பிறகு த்வந்த்வங்கள் நம்மை அணுகா இல்லயா? இங்கே சொல்லும் “ஸாங்க்ய யோகம்” எனப்படும் தத்துவத்தைப் புரிந்துகொள்ள நாம் முதல் அத்தியாயத்தில் தந்த போர்க்கள விவரணத்தையும் அருஜுனனின் அவல நிலையையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அர்ஜுனனின் அர்த்தமற்ற விஷாத நிலையை அகற்ற பகவான் இந்த வழியை அவனுக்கு யுத்தக்களத்தில் தந்ததால் இதை “reference to the context” வழி புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு குருவால் இப்படி சீடனுக்கு உபதேசம் தருவது மிகச் சுலபம். ஆனால் குழம்பியிருக்கின்ற ஒரு ஸமர்த்தனான சீடனுக்கு இவைகளை எப்படித் தவிர்ப்பது எனச் சொல்லவில்லையானால் உபதேசம் பூர்த்தியாகாது. அதை மிக எளிதாகக் கடைசி வாக்கியத்தில் தெளிவுபடுத்துகிறார். அதாவது :”ஆத்மவான்” (“be established in the self”:). ஏனென்றால் ஆத்மா நம் உடல், மனம், புத்தி என்ற மூன்று உறுப்புகளுடன் சம்பந்தப்பட்டு செயல் புரியும்போது, இந்த த்வந்த்வங்கள் அதைத் தாக்கும் அதனால், மனச்சஞ்சலம், புத்திமறைவு ஏர்ப்படும். இதன் காரணம் நமது சுயநல ஆசாபாசங்கள் “யோகக்ஷேம” வ்ருத்தியில் ஈடுபடுவதுதான். அதை நிறுத்திவிட்டால் இந்த மூன்று குணங்களையும் கடக்கலாம் என அறிந்துகொள் என பகவான் சொன்னார். இதிலிருந்து என்ன தெரிகிறது? “சுய நல நோக்கத்துடன் கூடின ஆசாபாசங்களைத் தவிர்த்தால், மனதில் சஞ்சலம் எழாது, அதனால் புத்திமட்டு ஏற்படாது. இது த்வந்த்வ அனுபவங்களைத் தராது. அப்படி வரும்போது, மன நிம்மதி உணடாகி தெளீந்த விவேகத்துடன் நம் சுய நிலையில் இருக்கலாம். அதாவது ‘ஆத்மவான்’ (attuned to Self) என்ற நிலை” இதுவே ஸத்வகுண பலம்” என்பதே.
இப்படி உரைத்த பகவானை அர்ஜுனன் ஒரு ஸம்சய புத்தியுடன் பார்க்கிறான். அது சகஜம். நம். ஸாஸ்திரங்கள் பறை சாற்றுவது என்ன? இறைவனைத் துதித்து பூஜை செய்தால் நினைத்த காரியம் ஸபலமாகும் என்றல்லவா சொல்கிறது? இப்படி வேதங்களில் சொன்ன கர்மகாண்டத்தைத் தாக்கி அதில் சொன்ன “rituals” மட்டும் செய்தால் ஒருவன் இறைவனை நாட முடியாது என்று முரண்பாடாக எப்படிச் சொல்ல துணிந்தார்? இது சரியா? இதுதான் அவன் ஸம்சயம். இதற்கு விளக்கத்தைப் பின்வரும் ஸ்லோகத்தில் பார்ப்போம்.
(தொடரும்)
அத்தியாயம் 2 பாகம் 7
அத்தியாயம் பாகம் 9
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.
ஆசிரியரின் மின் தளம்:
Achalam.com
Email Addresses of Guru Achalam:
achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com
: ஹரி ஓம் :
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















