Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 16
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

ஆலய வழிபாடு - 5

அருமை செல்வங்களே,

நீங்கள் என்ன கேட்டீர்கள்? “ஏன் இறைவனை ஆலயத்தில் வழிபட வேண்டும்? அதுவும் சிலை உருவில்? எல்லோரிலும், எல்லாவற்றிலும் இறைவனைப் பார்க்கவேண்டுமென்று இருந்தால் மாறாக ஏன் ஆலயத்தில் அதுவும் உயிரில்லாத சிலை உருவில் மட்டும் வழிபட வேண்டும்?”

மிக அருமையாக வினா எழுப்பினீர்கள். ஆலயம் என்பது பல ப்ராகாரங்கள் (சுற்றுவழிகள் அல்லது பல உள்வாசல்கள் கொண்ட விசாலமான உள்ளறைகள்) கொண்டது.. ஒரு வாயிலில் நுழைந்தால் ஒரு சுற்றுவழி இருக்கும், பிறகு பிறிதொரு உள்வாயில் வழி, பிறிதொரு சுற்றுவழி, இப்படிப் பல ப்ராகாரங்கள் கொண்டது. இறைவன் முன் நிற்ப்பது கர்ப்பக்கிரகத்துக்கு முன். அதாவது நாம் நின்று இறைவனை வணங்குவது கடைசி உள் ப்ராகாரம். அங்கிருந்து இன்னுமொரு நுழைவாயில் உண்டு. அதற்குள்த்தான் இறைவன் சிலை இருக்கிறது. இதைத்தான் கர்ப்ப கிரகம் என அழைக்கிறாகள். இப்படி ஒன்பது நுழைவாயில்கள் இருக்கும். எப்படி என்றால், நம்முள் ஒன்பது த்வாரங்கள் இருக்கின்றன. கண் 2, காது 2, மூக்குத்வாரம் 2, வாய் 1, மலத்வாரம் 1, சிறுநீர்த்வாரம் 1. இப்படி ஒன்பது தவாரங்கள் கொண்டது நம் உடல். இதற்குள் ஹ்ருதயம் என்று கர்ப்ப கிரஹம் உள்ளது. அதைக் காண இயலாது. ஏனெனில் அது ந்ம்முள் உள்ள்து. அதற்குள் இறைவன் இருக்கிறான். அதுதான் நம் ஜீவன் அல்லது உயிர். இப்படி நம்முள் இருக்கும் ஒன்பது சுற்று வழிகளூக்குள் இருக்கும் இறைவனைக் காண் முடியுமா? சேவிக்க இயலுமா? முடியாது இல்லையா? கண்ணுக்குப் புலப்படும் வஸ்துவைத்தான் நம்மால் போற்றமுடியும். இல்லையேல் தியானம் செய்து உள்பொருளை அறிந்துகொள்ள் வேண்டும். எத்துணை பேரால் இப்படித் தன்னை மற்ந்து தியானம் செய்ய முடியும்?

ஆதலால் நம் உடல்நிலைக்கொப்ப ஆலயம் அமைத்து அதற்குள் நம் ஜீவன் உள்ளதுபோல் இறைவனை சிலைவடிவில் (நமக்குப் பிடித்த உருவத்தில்) ப்ரதிஷ்டை செய்து, அங்கு நம் நம்பிக்கையைத் தந்து அச்சிலை வடிவிலுள்ள இறைனைச் சேவிக்கிறோம். இப்படி நம் உடலையே ஓர் ஆலயமாக்கி, நம் உயிரை சிலையாக்கி, இறைவன் என வணங்குகிறோம். ஆனால் ஏன் சிலை உருவில்? என்று கேட்டீர்கள். ஒரு உருவத்தைத்தான் நம்மால் பார்க்க முடியும். அது கால்லினாலோ, அல்லது செம்பு, பித்தளை, வெள்ளி, ஸ்வர்ணம் என்ற உலோகங்களாலோ செய்த சிலை ஆகலாம். அந்தச் சிலைக்கு உயிர் அல்லது சக்தி எங்கிருந்து வந்தது என வினவலாம். உங்ககளுக்கு ஒரு பெயர் இட்டு அப்பெயரால் அழைக்கும்போது நீங்கள் ஏன் எனக் கேட்பீர்கள். பெயர் இல்லையேல் உங்களால் மற்றவருடன் உரையாட, அல்லது சொந்தம் கொண்டாட இயலாது. அதுவும், மற்றவர் உங்களிடம் உறவு அல்லது சினேகிதம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு உங்களீடம் ந்மபிக்கை அல்லது விருப்பம் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் உங்களிடம் வைத்துள்ள அன்பு, நம்பிக்கை அல்லது விருப்பம் தான் உங்களுக்கும் அவர்களூக்கும் உள்ள உறவு. அதுபோல், இப்படிச் சிலை உருவில் இருக்கும் இறைவனிடம் நமக்கு ந்மபிக்கை, அல்லது அன்பு (அதுதான் பக்தி எனப்படும் உறவு) ஏறப்பட வேண்டும். அதெப்படி முடியும்?.

பெரியோர்கள் சொல்லும் புராணக் கதைகளில் எப்படி நிங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்? அவர்கள் சொன்னபடி ஒவ்வொரு இறைவனின் வடிவத்திற்கும் ஒவ்வொரு வாழ்க்கைத் தத்துவம் உள்ளது. ராமன் பித்ருவாக்ய பரிபாலனம், துஷட நிக்ஹம், சிஷ்ட பரிபாலன்ம் என்று திகழ்ந்தார். கிருஷ்ணன், தர்மயுத்தம் செய், உனது கடமையைச் சரிவரச் செய், எல்லோரையும் அன்பாக நடத்து என்று வாழந்து காண்பித்தார். இப்படி ஒவ்வொரு உருவில் உள்ள தெய்வங்களின் விசேஷ் குணங்களை வைத்து அவர்களீடம் நாம் நம்பிக்கை, பக்தி வைதது வணங்குகிறோம். அப்படி அவர்கள் சிலையை வடித்து நாம் தரும் இந்த உறவு தான் அச்சிலைகளில் சக்தியாகத் திகழ்கிறது. அத்துடன், சிலையை ஆலயத்தில் நிறுவும் தருணம் பல மந்திரங்களாலும் பல த்ரவயங்களாலும் (பால், பஞசாமிருதம், பஞ்சகவ்ய்ம், தேன், பன்னீர், இளனீர் போன்ற) அபிஷேகம் செய்து, அவைகளால் அதற்கு சக்தி தருகிறொம். நம் ஆசாரப்படி இப்படி மந்திரத்துடனும் த்ரவயங்களுடனும் செய்யும் ப்ரதிஷ்டை அச்சிலலைக்கு சக்தியைக் கொடுக்கிறது.

இன்னும் விளக்கவேண்டமா? நீங்கள் உங்கள் வ்ங்கியில் ஒரு அக்கௌவுண்டு திறந்து அதில் உங்கள் சேமிப்பைப் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொண்டு வந்தால் அதில் நிறைய பொருள் சேரும். பிறகு உங்களூக்கு வேண்டிய பொழுது அதிலிருந்து பொருளை எடுக்க முடிய்ம். இப்படி உங்களுடைய நல்ல காலத்ததில் சேமித்ததைக் கஷ்டகாத்தில் எடுக்க இயலலுகிறது இல்லையா? அதேபோல் உங்கள் ந்ம்பிக்கை அல்லது விச்வாசம் என்ற பருளை இச்சிலைகளில் முதலீடு செய்தீர்களானால், கஷ்டகாலத்தில் அங்கு சென்று பிரார்த்தித்தால் உங்களுடைய இந்த நம்பிக்கை என்ற சக்தி அந்தச் சிலையிலிருந்து திரும்பக் கிடைக்கும். இதைத்தான் இறைவன் அருள் எனச் சொல்கிறார்கள். இப்பொழுதது என்ன தெரிகிரது? நம்முள் உள்ள தெய்வ சக்தியை் சிலை வடிவில் வைத்து வண்ங்குகிறோம். ஏனெனில் அருவத்தை ந்ம்மால் காண்வோ, போற்றவோ முடியாதது. ஆககையால் நம்முள் உள்ள இறைவனின் சக்திக்கு உருத்தந்து வணங்குவதைத்தான் ஆலய வழிபாடு எனச் சொல்கிறோம். புரிந்ததா?

புரிந்தது. இறைவன் எல்லா இடந்த்திலும் எல்லா ஜீவராசிகளீலும் உள்ளான். அப்ப்டி இருக்க ஏன் சிலை வடிவில் அல்லது பட வடிவில் ம்ட்டும் வணங்க வேண்டும்? சிலை வடிவில் வணங்குவது பொதுவாக எல்லோரும் கூட்டுறவுகொண்டு செய்ய உதவுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன் ஆதலால் எல்லாற்றிலும் நாம் அவனை காண வேண்டும். அதாவது, எல்லாம் இறைவன் வடிவம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் சிலையிலும் ஏன் தெய்வத்தைப் பார்க்கக் கூடாது? எங்கும் எல்லாற்றிலும் உள்ளதைச் சிலையிலும் காணலாமே? அதற்கு நம் அஹ்ந்ததையை (நான், எனது, போன்ற நினைப்பை) அடியே ஒழிக்க வேண்டும். எல்லாம் அவன் உருவம் எனக் கொள்ள வேண்டும். அப்படிப் பார்ப்துதான் ஸமபாவனை என்ப்படுவது.

ஆக ஆலய வழிபாடு நமக்குக் கடவுளிடம் ந்மபிக்கை வளர்க்கவும், கூட்டுறவு சேவை செய்யவும் உதவகிறது. ஆலய்த்தில் எல்லோரும் செய்யும் வழிபாடு எல்லோருக்கும் உதவுகிறது. அது நம் அஹந்தையை அடக்க உதவுகிறது. மனிதாபிமானம், சினேகம், அன்பு, அடக்கம், ச்கிப்புத்தன்மை, ப்ரோபகார சிந்தனை, இரக்கம் போன்ற நற்குணங்களை வளர்க்க உதவுகிறது. சுருங்கச்சொன்னால், அது நம் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது. அபபடி நமக்கு மன நிம்மதியும், சுக வாழ்வும், மனோபலமும், அறிவு வளர்ச்சியும் பெற உதவுகிறது. எல்லோருக்கும் ந்ன்றாகப் புதிந்திருக்கும் என ந்ம்புகிறோம்.

முற்றும்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

இப்படிக்கு அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 15 கடிதம் - 17

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button