Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 2, அர்ஜுன விஷாத யோகம் - பாகம் 7

அவாச்ய வாதாம்ச பஹூன் வதிஷ்யந்தி தவாஹிதா:
விந்தந்தத்ஸவ ஸாமர்த்யம் ததோ துக்கதரம் நுகிம்

ஸ்லோகம் 36 கேளுங்கள்

ஸாரம்:

உனது விரோதிகள் உன் வீரத்தைக் குறை கூறுமாறு சொல்லத்தகாத வார்த்தைகளால் உன்னை இழ்ந்து பேசலாம். (உனது இந்த பேடித்தனத்தைக் கண்டு இப்படி இகழலாம்). இதை விடுத்து துக்கப்ரதமான நிலை வேறு உண்டோ?

விளக்கம்:

தன் வாதத்திருக்கு செவி சாய்க்கும் அர்ஜுனனைப் பார்த்து பகவான் சொல்கிறார். இப்படி பேடியாக யுத்தத்திலிருந்து பின்முதுகு காண்பித்து ஓடுவாயாகில் உனது எதிர் கட்சியிலுள்ள வீரர்கள் உன்னைப் பார்த்து, உன் பேடித்தனத்த்தைச் சுட்டிக்காட்டி, சொல்லத்தகாத வார்த்தைகளால் உன்னை இகழுவார்கள். உனக்குப் பிறகு சரித்திரம் உன் பேடித்தனத்தைச் சுட்டிக்காட்டி உன்னை இகழந்து பேசலாம். ஏன் நீ இருக்கும் பொழுதுகூட ஜெனங்கள் உன்னை இகழ்வார்கள். இதை செவிமடுக்கும் உனக்கு இதைவிட துக்கம் தரககூடடிய விஷயம் வேறுண்டோ? அவன் ஸ்வாபிமானத்தைத் தூண்டும் வண்ணம் பகவான் பேசுகிறார்.

ஹதோவா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வாவா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிச்சய:

ஸ்லோகம் 37 கேளுங்கள்

ஸாரம்:

யுத்தத்தில் ஒருகால் நீ இறக்க நேரிட்டால் உனக்கு வீரசுவர்க்கம் கிடைப்பது திண்ணம். அல்லது ஒருகால் நீ யுத்தத்தில் ஜெயித்தால் ஒரு வீரனைப்போல் எல்லா சுகங்களையும் இந்தப் புவியல் அனுபவிப்பாய். அதனால் ஹே குந்தீபுத்திரா! யுத்தத்திற்கு ஆயத்தமாக எழுந்திரு.

விளக்கம்:

யுத்தம் செய்வதினால் உண்டாகும் லாபத்தை வலியுறுத்துவதாக உள்ளது இங்கு சொல்லப்படுவது. யுத்தம் செய்து எதிரிகளால் ஒருகால் நீ அழிவதானால் உனக்கு வீரசுவர்க்கம் கிடைக்கும், ஏனென்றால் தர்மத்தை நிலை நாட்ட நீ நியாயமாக ஒரு வீரனுக்கு உகந்தபடி யுத்தம் செய்து இறந்தால் சுவர்கம் கிடைக்கும். ஒருகால் யுத்தத்தில் நீ விஜயித்தால் ஒரு வீர சாகஸ்யம் செய்த உத்தம வீரனுக்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பும் இராஜ்ய போகமும் கிடைக்கும். எப்படியானாலும் யுத்த்த்தின் பல்ன் நல்லதே ஆகும். ஏனென்றால் நீ செய்வது தர்ம யுத்தம். தர்மத்தை நிலை நாட்டுவதற்கான யுத்தம். அதனால் ஹே குந்தீபுத்திரா! உனது இந்த அவல நிலையை விட்டு வீரனாக யுத்தம் செய்ய ஆயத்தமாக எழுந்திரு. அர்ஜுனன் மனம் ஒடிந்து அஸ்த்திரங்களைக் களைந்து செயலிழந்து உட்க்கார்ந்திருந்ததால் அவனை ஊக்குவித்து எழுமாறு பகவான் தூண்டுகிறார்.

இதில் நமக்கு ஒரு உபதேசம் பொதிந்திருக்கிறதைப் பார்க்க வேண்டும். “உலகில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தடங்கலையும் தைரியமாக எதிர்கொண்டு பொருதி தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். நமது அன்றாட ஜீவிதத்திலும் நமக்கு வேண்டியதைத் திரட்டப் பாடு பட வேண்டும். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சக்கூடாது. ஜீவிதமே ஒரு போர்க்களம். அதில் வெற்றி கிடைக்க தர்ம நியதிப்படிப் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். மனம் தளரக்கூடாது. ஒரு வீரனைப்போல் பொருத வேண்டும் என்பதுதான்”.

ஸுகது:க்க ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுஜ்யாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸஸி

ஸ்லோகம் 38 கேளுங்கள்

ஸாரம்:

சுகத்தையும் துக்கத்தையும், லாபத்தையும் நஷ்டத்தையும், ஜெயத்தையும் தோல்வியையும் ஒன்றாக பாவித்து நீ யுத்த்த்தை யுத்தத்திற்காகச் செய். அப்படிச் செய்தால் உன்னைப் பாபம் அணுகாது.

விளக்கம்:

கீதை தனியே படித்துணர வேண்டிய மிகச் சுலபமான ஆனால் உலக நியதிக்குட்பட்ட பல ரகசியங்களைத் தருகிறது. வியாசர் வேதத்தின் சாரத்தை ந்மக்கு மிகவும் சுலபமான வாக்யங்களில் தந்திருக்கிறார். நாம் நம் ஜீவிதத்தில் கடைபிடிக்க வேண்டிய தர்ம சிந்தனைகளைத் தெள்ள தெளியத் தந்திருக்கிறார். இதில் சொல்லிய ஒவ்வொரு வியாக்கியானமும் வேதாந்தத்தில் தந்துள்ள, நாம் கடைபிடிக்க வேண்டிய ஜீவித வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஏதொரு விஞ்ஞான காவ்யமும் அதில் தந்துள்ள வாக்கியங்களின் ஸாரத்தை விளக்குமாறு விவரங்கள் தருகின்றன. ஆனால் வியாசர் அப்படித் தந்துள்ள வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொளள நாம் ஒருவருக்கும் விட்டுத் தந்திருக்கிறார். உதாரணத்திற்காகப் பார்த்தால், பின்வரும் அத்தியாயங்களீல் கர்மயோகத்தைப் பற்றிச் சொல்லும்போது, மனதை சுத்தப்படுத்த உதவும் பூஜை, தியானம் முதலிய வழிகள் எனச் சொல்வதை இங்கு பகவான் விரிவு படுத்துகிறார். அதாவது உலகில் நாம் ஈடுபடும் எல்லா விதக் கர்மங்களையும் பொது நலத்தை உத்தேசித்துச் செய்வது எனச் சொல்கிறார். இப்படி கீதையில் சொல்லும் ஒவ்வொரு வியாக்யானமும் ஒரு புது அர்த்தத்தைத் தருவதாக அமைந்துள்ளது.

இந்த இரண்டாவது அத்தியாயத்தில் கர்மயோகத்தை ஒரு கோடுபோட்டுக் காண்பித்திருக்கிறார் பகவான். கடைசியில் பக்தி யோகத்தையும் ஒரு நிழல்போல் காண்பித்திருக்கிறார். யோகம் என்ற சொல்லைக் கண்டு பயம் கொண்டிருந்தார்கள் அந்தக் காலத்து மனிதர்கள். கீதையின் 8-10 யோகங்களைப் பற்றிச் சொல்கிறார் வியாசர். நம்மைத் திருத்திக்கொள்வதைத்தான் யோகம் எனக் குறிக்கிறார். ஒரு குழந்தை பூனையைக் கண்டு பயம் கொள்கிறது. ஆனால் அந்தக் குழந்தை வளரும்போது தைர்யம் பெற்றுப் பூனைக்கு பயம் காட்டுகிறது. அதேபோல் வேதாந்தத்தில் சொல்லிய வாக்கியங்களைக் கேட்டு பயம் கொண்டவர்கள் அதன் விளக்கத்தை உணர்ந்து விழித்துக்கொள்ளும் முறையில் இங்கு கையாண்டிருக்கிறார் வியாசர். இதில் கூறிய த்வந்தங்களின் அர்த்தத்தை உணர வேண்டும். சுகம், துக்கம் என்பது நம் புத்திபூர்வமாகக் கொண்ட அனுபவங்கள். லாபம் நஷ்டம் என்பன நமது மனதை பாதிக்கும் அனுபவங்கள். ஜெயம், தொல்வி என்பது நமது உடலை ஒட்டிய அனுபவங்கள். இப்படி உடல், மனம், புததி என்ற மூன்று நிலைகளீலும் நாம் சமத்வத்தை அடைவதுதான் ஆத்ம சுத்தி (Self Purification) என ஸ்ரீ கிருஷ்ணன் விளக்குகிறார். ஒருவன் சமுத்திர ஸ்னான்ம் செய்ய வேண்டுமானால் அவனுக்கு நீந்தல் தெரிய வேண்டும். அல்லாமல், அலை என்னை ஒன்றும் செய்யாது என குதித்தால் சமுத்திரமே அவனுக்கு ஸ்மசானமாகிவிடும். “உலகில் நாம் செய்யும் பணிகளின் தன்மையை உணர்ந்து அதை சாஸ்த்திரப்படி ஸமபாவத்துடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு நாம் வேதத்தில் சொன்ன நியதிகளைக் கையாள வேண்டும் என வலியுறுத்துகிறார். உலக அனுபவங்களில் நாம் இருக்கும்போது ஸமபாவனை முக்கியம். அதேபோல் தர்மத்திற்குட்ப்பட்டு பயமில்லாமல் சத்தியத்திற்காக உழைக்க வேண்டும்”. இதுதான் நாம் இந்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய தத்துவம்.

ஏஷாதேSபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ச்ருணு
யுத்யா யுக்தோ யயா பார்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி

ஸ்லோகம் 39 கேளுங்கள்

ஸாரம்:

உனக்கு இதுவரை சொல்லித்தந்த தத்துவம் புத்தியை ஒட்டின “ஸாங்கயை” என அறிந்துகொள். இனி புத்திபூர்வகமான யோகத்தைப் பற்றிச் சொல்கிறேன கேள். அதைப் புரிந்துகொண்ட் பிறகு ஓ பார்த்தா!, நீ கர்ம பந்தங்களை அறுத்தெறிவாய்.

விளக்கம்:

அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு அவர் மனைவி வழி உறவானதால் தான் சொல்வதை நம்பாமலிருக்க ஹேதுவாகாத வண்ணம் (familiarity breeds, if not contempt, at least non-acceptance) தான் சொல்வதற்குக் காரணத்தைக் காட்டி விளக்குகிறார். இதுவரை சொன்னது புத்திபூர்வகமான ஸாங்க்யை எனப்படும் தத்துவமாகும். உலக வாழ்க்கையில் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தரும் இந்த நாளில் ஒருவன் ஏன் யோகத்தைக் கையாள வேண்டும் என்று ஒரு சந்தேகம் எழலாம். அதைப் புரிந்துகொண்ட பகவான் அதனால் உண்டாகும் பலனைப் பற்றி கூறுவதாகச் சொல்கிறார். சந்தேகத்துடன் உள்ள ஒருவனை நம்ப வைக்க அவனுக்கு அதனால் உள்ள பலனைச் சுட்டி காட்டுவது சகஜம். அர்ஜுனனின் மனதில் “நாம் ஈடுபடும் இந்த யுத்தத்தில் பல பந்துக்களையும், குருக்களையும்,. உற்றார் உறவினர்களையும் அழிக்க நேரிடுவ்தால் நமக்குப் பாபமே வரும்” என்ற தப்பான விசாரம் உள்ள்து. அது தவறு. இதனால் பாபம் இல்லை என்று மட்டுமல்ல, ந்ன்மையே என வலியுறுத்தவேண்டும். அதற்காக்த்தான் இந்தக் கர்ம யோகத்தைக் கையாளுகிறார் பகவான்.

“ஒவ்வொரு கர்மாவும் அதற்கேர்பப் பலனைத் தருகிறது”. இந்த வேத ஸாரத்தைத் தவறாகப் புரிந்துகொள்வது ஸஹஜம்.. பகவான் விளக்குவதாவது: “செய்யும் ப்ரவர்த்தியினால் கர்ம வினை அல்லது பலன் ஏர்ப்படுவதில்லை. எந்த மனப்பான்மையுடன் செய்கிறாயோ, எந்த உள்நோக்கத்துடன் செய்கிறாயோ அதை ஒட்டிப் பலன் வருகிறது. உடலளவில் செய்யும் கர்மா மனத்தளவில் சரியாக இருந்தால் கர்ம பலன் நம்மை நாடாது. அதற்காக நாம் கர்மயோக நியதியைப் புரிந்துகொள்ள வேண்டும்”. இப்படி நம் யாவர்க்கும் உதவக்கூடிய பாடத்தை பகவான் நமக்கு அர்ஜுனன் மூலம் தந்துள்ளார். எப்படி ஒரு ஒலிக்கருவியிலிருந்து பாட்டு அதன் ஊசித் தட்டில் உரைந்து வெளிவருகிறதோ அதே போல் நம் உள் மனத்திலுள்ள விசாரங்கள் இந்திரியங்கள் வழி நம் அஹங்கார (ஊசி) நிலையுடன் வெளிவருமானால் அதன் பலன் நம்மைத் தாக்கும். மன நிலை சாத்வீகமாக இருந்து கர்மம் செய்தால் அதன் பலன் நம்மை அண்டாது என்ற தத்துவத்தை நாம் உணரட் செய்கிறார் பகவான். சுருங்கட் சொன்னால், நாம் செய்யும் கர்மாவில் நம் மனமும் புத்தியும் கலக்காமல் அதைப் பொது நலனுக்காகச் செய்வதனால் அதன் பலாபலன் ந்ம்மை அண்டாது என்ற சத்தியத்தை மிக எளிதாக நமக்குத் தந்திருக்கிறார் பகவான்.

நேஹாபி க்ரமனாசோSஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

ஸ்லோகம் 40 கேளுங்கள்

ஸாரம்:

இந்தச் செய்கையில் நஷ்டமோ அல்லது விரோதமான பலனோ கிடையாது. இதைக் கொஞ்சம் புரிந்து கோணடாலும் இந்த யோகம் வ்ழி கர்மா செய்தாலும் அது ஒருவனைப் பயத்திலிருந்து விடுபடச் செய்கிறது.

விளக்கம்:

புராதன கால்த்தில் கர்மயோகம் என்பது ஒரு பரிதிக்குள் மட்டுமே அட்ங்கியதாக விளக்கம் தந்தார்கள். ஆனால் வியாசர் இங்கு அதற்கு ஒரு விரிவான விளக்கம் தருகிறார். உலக சம்பந்தப்பட்ட எந்தக் கர்மாவிலும் உள்நோக்கம் தார்மிகமாக இருந்தால், செய்யும் முறை சாஸ்திரத்தை ஒட்டியிருந்தால் அதன் பலன் நல்லதாகவே அமையும். செய்யும் பணியினால் நல்லதோ கெட்டதோ வர்ரது. எந்த நோக்கத்துடன் செய்கிறொமோ, எந்த வழியைப் பின்பற்றுகிறோமோ அதை ஒட்டி பலாபலன் நிகழும். இது உலகக் கர்மங்கள் யாவற்றுக்கும் பாதகமான் ஸனாதன தர்ம நியதி என வலியுறுத்துகிறார் வியாசர். நாம் செய்யும் கர்மாவில் நமது அஹங்காரத்தை (EGO) அகற்றி மனதாலும் புத்தியாலும் பொது நலனைக் கருதிச் செய்யும் கர்மாக்களின் பலன் நல்லதாகவே, நமக்குச் சாதகமாகவே அமையும். இதுதான் இந்த யோகத்தின் பொருள். இதை நன்றாக விளக்குகிறார் பகவான். கர்மயோகத்தின் அடிப்படைத் தத்துவத்தைத் துவங்கி வைக்கிறார்.

அர்ஜுனனின் மன நிலையில் கண்ட சலனம், பயம், நம்பிக்கையின்மை போன்ற கருத்துக்களை அகற்ற அவனுக்குக் கர்மயோகத்தின் தன்மையையும் அதன் பலனையும் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்ட பகவான் இந்த வேத நியதியை நன்றாகவும் தெளிவாகவும் சொல்லி அவன் மனதில் நம்பிக்கையை உண்டு செய்கிறார்.

(தொடரும்)

அத்தியாயம் 2 பாகம் 6 அத்தியாயம் பாகம் 8

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button