Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 15
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

ஆலய வழிபாடு - 4

அருமை செல்வங்களே,

சென்ற இதழில் “தெய்வம் அரூபமான, காண முடியாத, எங்கும் நிறைந்த, எல்லோரிலும், எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் ஒரு மஹா சக்தி, ஆனால் நாம் அதை நம்முள் பார்க்காமல் புற உலகில் காண முயல்கிறோம். அதுவும் இந்த ஏக சக்தியை ஏன் பல உருவில் வழிபடுகிறோம்?” இதுதான் உங்கள் வினா அல்லவா? பார்ப்போம்.

ஒருவர் வாழ்வில் சிறுவனாக, இளைஞனாக, முதிர்ந்தவனாக திகழ்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் அவர் நடை, உடை, பாவனைகள் மாறுகின்றன. ஆனாலும் அவருடைய அடிப்படை சுபாவம் மாறுவதில்லை. அதேபோல், உலகில் மகனாக, தந்தையாக, மாமனாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக என்று பல விதத்தில் உறவுகொள்கிறார். அவர் பலரிடம் பழகும்போது அவரவருக்குத் தகுந்த உறவுடன் பழகுகிறார். அப்பொழுது அவருடைய ந்டை உடை பாவனைகள் அந்தந்த உறவிர்க்குத் தகுந்தபடி மாறுகின்றன. ஆனாலும் அவருடைய அடிப்படை உருவோ, சுபாவமோ, நடை உடை பாவனையோ மாறுவதில்லை. நாடகத்தில் ஒருவர் தம்மை இராஜாவாக, கள்வனாக, குருடனாக என்று பல வேடங்களில் ந்டிக்கிறார். அப்பொழுது அந்தந்த வேடத்திருக்குத் தகுந்த நடை உடை பாவனைகள் மாறுகின்றன. ஆனாலும் அவருடைய அடிப்படை உருவமோ, சுபாவமோ, சைகையோ மாறுகிறதா? இப்பொழுது சொல்லுங்கள், ஒருவர் எததுனை விதத்தில் அல்லது வேடத்தில் அல்லது உறவில் திகழ்ந்தாலும் அவர் அடிப்படை உரு, ந்டை உடை பாவனை மாறுவதில்லை. அவர் எப்பொழுதும் தானாகவே திகழ்கிறார். இல்லயா? இப்படி உலகில் வாழும் நாம் ஏன் பல விதத்தில் அல்லது வேடத்தில் திகழ வேண்டும். அது நம் ருசி. அதை நாம் விரும்புகிறோம். பலவிதத்தில் நம்மை உருவாக்கிக் களிக்கிறோம். அதேபோல் இந்த ஏக சக்தி தம்மைப் பல உருவில் காண்பிப்பதில் என்ன தவறு?

இன்னும் வேறொரு விதத்தில் சிந்தித்தால் இன்னும் நன்றாகப் புரியும். நம் குழந்தையை நாம் எவ்வளவு விதமாக அல்ங்கரித்துப் பார்க்கிறோம்? பிள்ளையைப் பெண்ணாக, கண்ணனாக, மீசை வைத்த கள்வனாக என்று பல விதத்தில் அலங்கரித்துப் பார்த்து மகிழ்கிறோம். அப்படியானால் அவன் யார்? பெண்ணா?, கள்வனா? கண்ணனா? இல்லயே. அவன் எப்பொழுதும் நம் குழந்தையாகத்தானே திகழ்கிறான். அதில் மாற்றமில்லயே? அதேபோல் நாம் நமக்குப் பிடித்த உருவில் அல்லது வேடத்தில் இறைவனை வழிபடுவதில் தவறென்ன? இறைவன் தன் தன்மையை இழந்துவிடுகிறாரா? இல்லயே? அவர் என்றும், எங்கும் நிறைந்து ஒன்றாகத் திகழ்ந்தாலும் பல உருவில் நாம் கொண்டாடுவதால் தன் தன்மையை இழப்பதில்லை. நாம் அவரைப் பல உருவில் படம் வரைந்து அல்லது சிலை வைத்து அலங்கரித்து மகிழ்கிறோமே தவிர அவர் எப்பொழுதும் ஒன்றாகவே எல்லா இடத்திலும் எப்பொழுதும் எல்லோரிலும் நிறைந்திருக்கிறார். இந்த உலகம் முழுதம் பரவி நிற்கும் ஒரு மஹாசக்தியாகத்தானே திகழ்கிறார். இதுதான் உண்மை. இன்னும் விளக்கம் வேண்டுமா?

ஒரு குயவன் எவ்வளவு விதமாக, பல அளவில், பல உருவில் சட்டி பானைகள் பண்ணுகிறான்? குடமாகவும், அடுக்காகவும், அண்டாவாகவும், கெட்டிலாகவும், பெரிய பானையாகவும், சித்திர வேலைப்பாட்டுடன் கூடின கூஜாவாகவும் செய்கிறான். இதற்கு எல்லாம் அடிப்படையாக உதவுவது மண் தானே? இவை எல்லற்றிலும் மண் இருக்கிறத்ல்லவா? அந்த மண் இவை எல்லாவற்றிலும் ஒன்றேதானே. உருவும் அளவும் மாறாகத் திகழ்ந்தாலும், அதன் தன்மை மாறுவதில்லையே? மண் ஏக ஆதாரம், செய்யும் பானைகள் பல. இப்படி மண் பல உருவில் திகழ முடியுமானால் எல்லாம் வல்ல இறைவன் ஏன் பல உருவில் திகழக்கூடாது?

இதற்கெல்லாம் பொருள் என்ன? இறைவன் என்பது ஏகமாக, மாற்றமில்லாத, எல்லா இடத்திலும் எப்பொழுதும், எல்லோரிலும் நிறைந்திருக்கும் அழிவில்லாத, நிரந்தரமான, ஒரு சத்திய வஸ்து. அதுதான் எல்லாவற்றிலும், எல்லோரிலும் இருந்து உலகை இயங்கக வைக்கிறது. வேறொரு விதமாகச் சொன்னால், இந்த உலகமும் அதிலுள்ள எல்லா சராசர வஸ்த்துக்களும் இறைவன் தோற்றமே. ஆகையால் நாம் உலகம் முழுவதும், எல்லாவற்றிலும் இறைவனை (வடிவாக்கி) பார்க்க வேண்டும் எனப் பொருள். ஆக, நாம் மறக்கக்கூடாத ஒரு தத்துவம்: “இறைவன் ஒன்றேயானாலும் பல உருவில் திகழ்கிறார்” என்பதே. இப்பொழுது புரிந்ததா ஏன் நாம் இறைவனை பல உருவில் பார்க்கிறோம் என்று?

ந்ன்றாகப் புரிந்தது. ஆனாலும், ஏன் இறைவனை ஆலயத்தில் வழிபட வேண்டும்? அதுவும் சிலை உருவில்? எல்லோரிலும், எல்லாவற்றிலும் இறைவனை பார்க்க வேண்டுமென்று இருந்தால் மாறாக ஏன் ஆலயத்தில், அதுவும் உயிரில்லாத சிலை உருவில் மட்டும் வழிபட வேண்டும்? அடடா! கேள்விமேல் கேள்வியாகத் தொடுக்கிறீர்களே! சரி, சற்று விரிவாக அடுத்த மடலில் காண்போம். இப்போதைக்கு விடை பெறுகிறோம்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

இப்படிக்கு அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 14 கடிதம் - 16

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button