Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 2, அர்ஜுன விஷாத யோகம் - பாகம் 6

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய நவிகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்யாஸ்ச்ரேயொSன்யத் க்ஷத்ரியஸ்ய நவித்யதே

ஸ்லோகம் 31 கேளுங்கள்

ஸாரம்:

உன்னுடய ஸ்வதர்மத்தைப் பற்றி சிந்திதாலும் நீ பதட்டப்பட வேண்டியதில்லை. காராணம் ஒரு க்ஷத்திரியனுக்கு தர்ம யுத்தத்தைவிடப் பெரிது ஒன்றும் இல்லை (என ஸ்ரீ கிருஷ்ணன் விளக்குகிறார்).

விளக்கம்:

ஒரு க்ஷத்திரியனின் தர்மம் என்னவென்றால் தன் நாட்டிற்காக, தன் ஜெனங்களுக்காக, தன் குலாசாரத்தைக் காப்பதற்காக யுத்தம் செய்வது என்பதுததான். அர்ஜுனன் க்ஷத்திரியன் என்பது பிறப்பால் வந்தது மட்டுமில்லை. அவன் உடல் சுறுசுறுப்பாகவும், விசாரம் தார்மீகமாகவும், அவன் சிந்தனை வெகு தெளிவாகவும் உள்ளதும்கூட அவனை ஒரு வீரன், க்ஷத்திரியன் என ஆக்கிவிட்டது. இந்தத் தன்மையால், ஜெனங்கள் பீடிக்கப்பட்டும், அதர்மம் தலைதூக்கி நின்றாடுவதும் பார்த்து வெறும் ஆத்ம சிந்தனையில் மூழ்க அவனால் இயலவில்லை. அவன் துடிதுடிப்பு அவனைக் கலங்க வைத்தது. ஜெனநாயகத் தலைவர்கள், பொதுநல சேவை செய்வோர், நம் ஸனாதன தர்மத்தைக் காக்கத் துடிக்கும் ஆசார்யர்கள் போன்றவர்கள் இந்த க்ஷத்திரிய குலத்தில் பட்டவர்கள்தாம். ஆகிலும், மெதுவாகக் குலைந்துவரும் நம் கலாசாரத்தினால் நாம் இது (க்ஷத்திரிய குலம்) ஒருவன் பிறப்பில் உள்ள சாதியைப் பொறுத்தது என்ற தப்பான விசாரத்தில் இருக்கிறோம்.

க்ஷத்திரினுடடைய தர்மத்திற்கு சவால் வந்தவுடன் அர்ஜுனன் அதை ஏற்காது குழம்பிவிடுகிறான். க்ஷத்திரிய தர்மம் என்ன என்ற தெளிவு அவனுக்குத் தேவை. அதர்மம் தர்மத்தை அழிக்க முன்வரும்போது ஒரு க்ஷத்திரியன் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அதை எதிர்த்துப் போராடி தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற தத்துவத்தை அவன் உணர வேண்டும். ஜெனங்களின் நேதாக்களுக்கு அதர்மத்தை அழிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. கிடடைத்த சந்தர்ப்பத்தை ஏற்பதுதான் அழகு. இப்படி ஒரு சந்தர்ப்பம் அர்ஜுனனுக்கு வந்தும் அவன் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. அதை அவனுக்குத் தெள்ளத்தெளீய இங்கு எடுத்துரைக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன்.

எத்ருச்யா சொபபன்னம் ஸ்வர்கத்வாரம் அபாம்ருதம்
ஸுகின:க்ஷத்ரிய:பார்த லபந்தே யுத்தமீத்ருசம்

ஸ்லோகம் 32 கேளுங்கள்

ஸாரம்:

ஓ பார்த்தா!, யாருக்கு யுத்தம் செய்ய அவசரம் தானாகவே ஸ்வர்க்கத்திற்குப் போகும் வாயில்போல் வருகிறதோ, அந்த க்ஷத்திரியர்கள் மிகவும் சந்தோஷப்பட வேண்டியவர்கள்.

விளக்கம்:

இன்னும் பல காரணங்களைக் காட்ட முன்வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணன். இங்கு க்ஷத்திரியன் என்று சொனனது ஜாதியைக் குறித்தல்ல. தங்கள் தேச கலாசாரத்தையும் சாதுக்களையும் காக்க தங்கள் மனதில் ஒரு தர்ம சிந்தனை கொண்டவர்களைத்தான் க்ஷ்த்திரியர்கள் எனக் கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்டவர்களை விரோதிகளாகவோ அதர்மிகளாகவோ ஆக்கிப் பார்க்காது நமது ஹிந்து தர்மம். ஆனாலும், பெண்மைத் தன்மையையோ, பயந்தாங்கொள்ளித் தனத்தையோ நமது கலாச்சாரம் புகழாது. எங்கு நம் நாட்டின் கலாச்சாரத்தையும் சுய உரிமையயும் நிலைநாட்டப் போரிட வேண்டுமோ அங்கு நம் நேதாக்களைப் போர் புரியத் துண்டுகிறது நமது கலாச்சாரம். தவிர, இப்படி யாத்ருச்சிகமாகக் கிடைக்கும் தர்மயுத்த சந்தர்ப்பம் தங்களுக்கு ஸ்வர்க்க வாயிலில் நுழைவதுபோல் உள்ள ஆத்ம த்ருப்தியைத் தருகிறதாக கருதுவார்கள்.

இந்த தார்மீகமான நியாயத்தை எப்படி பகவான் வேதாந்த ரீதியிலிருந்து, லௌகீக தளத்திற்கு வந்து, இன்னும் கீழே ஒரு மனிதனின் மனநிலைக்கொப்ப விளக்குகிறார். அதுவும் தர்மயுத்தம் செய்வது ஒரு க்ஷத்திரியனுக்கு அழகு என்றும் பின்வாங்குவது பேடித்தனம் என்றும் அடித்துச் சொலகிறார். எபபடி ஒரு மேதாவி தன் எதிரியிடம் உள்ள பலஹீனத்தைத் தனக்கு சாதகமாக்கி, தன் கருத்தை அவனுள் புகுத்துவாரோ அதேபோல் பகவான் தன் நியாயமான வாதத்தில் மயங்குகிற அர்ஜுனனைக் கண்டு, தன் தர்மோபதேசத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார். இங்கு வேதாந்தபரமல்லாமல் லௌகீக முறையில் சொன்னால், ஒரு ராஜாவிற்க்குத் தன் ராஜ்யத்தையும் கலாச்சாரத்தையும் காக்க ஒரு சந்தர்ப்பம் யுத்தம் வழி வருமானால் அதைவிடப் பெரிய ஒரு சந்தர்ப்பம் கிடையாது என்ற தத்துவம் ஊர்ஜிதமாகிறது. இன்னும் வேறொரு உலக நியதிப்படிப் பார்க்க உதவுவதுபோல் அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்:

அத சேத்வம் இமம் தர்ம்யம் ஸம்க்ராமம் நகரிஷயஸி
தத:ஸ்வதர்மம் கீர்த்திம்ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி

ஸ்லோகம் 33 கேளுங்கள்

ஸாரம்:

ஆனால் இந்த தர்மயுத்தத்தை நீ செய்யவில்லையாகில், உன் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் புறக்கணித்ததற்காக உன்னைப் பாபமே வந்து சேரும்.

விளக்கம்:

தர்மம் என்பது சுய இருப்பு எனத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆத்மஞானம் கிடைத்தவன் தெய்வத்தின் அம்சம். தன் சுய நிலை மறந்திருக்கும் தெய்வம் மனிதனுக்ககுச் சமம். இதுதான் நியதி. தர்மயுத்தம் செய்யத் தவறினால் என்ன ஆகும்? உன் சுயகுணத்திற்கு மாறாக, ஸ்வதர்மத்தை விட்டு விலகினால் கீர்த்தி கிடையாது என்று மட்டுமல்ல, நீ பாபத்தைத் தழுவுவாய் என உலக நியதியை வலியுறுததுகிறார். மனிதர்கள் எதற்காக ஜென்மம் எடுக்கிறார்கள்? தங்கள் வாஸனாசக்திக்கு ஒரு வெளிவாயில் கிடைத்து அதன்மூலம் தங்கள் உள்ளத்திலுள்ள ஆசாபாசங்களை அனுபபவித்து கதி கிடைக்க ஒரு சந்தர்ப்பமாக உபயோகிபபதற்கே. அப்படி இந்த ஜென்மாவில் ஆசைகள் அனுபவித்துத் தீரவில்லையேல் பிறிதொரு ஜென்மா எடுக்க வேண்டும். இப்படிப் பல ஜென்மாக்கள் எடுத்து வாஸனாக்ஷயம் இல்லாமல் வாஸனைகள் கூடிக்கொண்டு வந்து நமக்கு தெய்வஸான்னித்யம் கிடைக்காமல் போவது ஒரு நரக வேதனையல்லவா? அது பாபத்தைத்தானே சுட்டிக் காட்டுகிறது? இந்த உலக நியதியை எடுத்துரைப்பதுபோல் அமைந்தது இந்த ஸ்லோகம். அப்பபடிப் பார்க்கும்போது அர்ஜுனன் ராஜகுலத்தில் பிறந்தவனாதலால் அவன் ஸ்வதர்மம் தர்மயுத்தம் செய்வதுதான் எனத் தெளிவாகிறது.

இது எதை வலியுறுத்துகிறது? தங்கள் சுய ஆற்றல்படி ஒருவர் செயல் புரியவில்லையானால் அவர் செய்யும் எந்தக் காரியமும் பயனுள்ளதாக ஆகாது. ஒரு சிறுவன் விஞ்ஞானக் கலையில் ஈடுபாடு கொண்டவனாகில் அவனை பெற்றோர்கள் சுகாதாரத்திலோ, வியாபாரத்திலோ செல்லத் தூண்டுவார்களேயாகில் அச்சிறுவன் அத்துறையில் முன்னேற மாட்டான். தவிர தன் இஷ்டப்படி விஞ்ஞானத்திலும் செல்ல இயலாமல் தன் ஆற்றலை இழந்து தவிப்பான். இது ஸ்வதர்மத்திற்கு மாறாக அமைந்துவிடுகிறது. இதில் யாருக்கு லாபம்? ஒருவன் ஆத்மஞானத்திற்கு ஆசைப்பட்டு முயலும்போது ஒரு தற்செயலான லௌகீகக் கஷ்டம் வந்து அதைத் தவிர்க்கப் பாடுபட்டுப் பின் ஆத்மீக வழியிலும் செல்லாமல், லௌகீக வாழ்க்கையிலும் மனம் செல்லாமல் தன் வாஸனைகளை அனுபவித்துத் தீர்க்க வழி இல்லாமல் மனம் கலங்கி மீண்டும் புது வாஸனைகளைச் சேர்த்துக்கொள்கிறான். இதுதான் பாபவினை எனப்படுவது. எவன் ஸ்வதர்மத்திற்கு விரோதமாகச் செயல் புரிகிறானோ அவன் பாபி என்று சொல்கிறது நமது ஹிந்து தர்மம். பாபம் என்ற வாக்குக்குச் சரியான விளக்கம் என்ன? ஒருவன் தன் மனநிலை கெடுமாறு ஸ்வதர்மத்தை விட்டு வேறொரு வழியில் ஈடுபட்டால் அவனுக்கு வரும் மனக்கஷ்டமும் அத்ருப்தியும் தன் சுய ஆற்றலைக் காட்ட முடியாத தவிப்பும் அவனுக்கு மன்ச்சக்தியை இழக்குமாறு அமைகிறது. அப்படி மனநிலை குலைந்துபோனால் அவன் படும் துன்பமே அவன் பாபம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி பகவானின் கருத்தின் உள் நோக்கத்தையும் அதன் உள் அர்த்தத்தையும் புரிந்து கொண்டாலேயொழிய இந்த ஸ்லோகத்தில் புதைந்து கிடக்கும் மிக அருமையான உள்கருத்தை உணர முடியாது. இப்படி அர்ஜுனனுக்குச் சொல்வதுபோல் பகவான் உலக மக்களுக்குப் புரியும்படி லௌகிக விஷயங்களை வைத்தே விளக்குகிறார்.

அகீர்த்திம்சாபி பூதானி கதயிஷ்யந்தி தேSவ்யயம்
ஸம்பாவிதஸ்யசாகீர்த்தி: மரணாத் அதிரிச்யதே

ஸ்லோகம் 34 கேளுங்கள்

ஸாரம்:

ஜெனங்களும் திரும்பத் திரும்ப உன்னை இகழ்வார்கள்; அப்படி இகழ்ந்தால், கீர்த்திமானாகிய உனக்கு அந்த இழிவும் மரணத்திற்குச் சமமாகும்.

விளக்கம்:

ஏதொரு வீரனும் தன்னை யாரும் இழிவாகப் பேசினால் அது மரணத்திர்க்குச் சமம் என்ற கருத்துடையவனாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மையைத் தெரிந்து, பகவான் அதே காரணத்தைக் காட்டி அர்ஜுனனைப் போரிலிருந்து பின்வாங்கும் மனப்பான்மையைத் துறக்கத் தூண்டுகிறார். அர்ஜுனனுடைய சுயகீர்த்திக்கு பங்கம் வரும் எனச் சொன்னால் அவனுக்குக் கோபம் வரலாம். ஒரு வீரன் தன் கீர்த்திக்கு பங்கம் வருமேயானால் அதைத் தவிர்க்க எல்லா வழிகளிலும் பாடுபடுவான் என்ற நியதியை ஒத்து இங்கு அவன் உள் கருத்தைத் தூண்டுகிறார். அவன் யுத்தத்திலிருந்து பின்வாங்கினால் அது அவன் பேடித்தனமே அல்லாது வீரனுக்கு அழகு இல்லை என்ற கருத்தை ஊர்ஜிதப்படுத்துமாறு பகவான் மீண்டும் இப்படி வலியுறுத்துகிறார். ஜெனங்கள் உன் பேடித்தனத்தைக் கண்டு தூற்றுவாற்கள், உனது வீரத்தைக் குறை கூறுவார்கள், உன்னை ஏளனமாகப் பார்பார்கள் என்று கூறி அவன் உள்ளத்தைக் குத்துகிறார். ஆனாலும் அர்ஜுனனுக்கு இப்படி ஒரு மன நிலை வந்து விட்டதே என்ற கவலை பகவானுக்கு உள்ளதாக இது காட்டுகிறது. அந்தக் குறையைத் தீர்க்கவேனும் அர்ஜுனன் யுத்த்த்திற்கு ஆயத்தமாக வேண்டும் என்று பகவான் நினைத்திருக்கலாம்.

இந்த மனோ நிலை நாம் நம்மிடையே காண்பதுதான். இக்கட்டான நிலையில் ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் அதன் விளைவுகளைப் பற்றி அனாவச்யமாகத் தவறாகச் சிந்தித்து, அதன் விளைவுகளை நினைத்து, பேடித்தனத்துடன் பின்வாங்குவது நம் நிலை. அப்படி வரும் தருணத்தை நமக்கு சாதகமாக ஆக்கி அதில் வெற்றிபெற நம் ஆற்றலைப் பயன்படுத்துவதுதான் விவேகம். அப்படி நாம் செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்போது அதுவே நமக்குக் கீர்த்தியைத் தருகிறது. இல்லையேல் மற்றவர்கள் நம்மைத் தூற்றுவார்கள், பேடித்தனத்துடன் பின்வாங்குகிறான் என இகழ்வார்கள். இது உலக நியதி. ஆதலால் தர்மத்திற்கு மாறாக அல்லாது எந்தச் செயலும் எவ்வளவு கடினமானாலும் சரி நாம் அதை எதிர்கொண்டு செயல் புரிய வேண்டும். அதுதான் புண்யத்தைத் தரும். இல்லையேல் பாபத்தைத்தான் தரும் என்ற கருத்தை எவ்வளவு சுலபமாகத் தந்துள்ளார். பாபம் என்றால் செயலில் இல்லை. அது நம்முள் உண்டுபண்ணும் சலனத்தை, சங்கடத்தை குறிக்கிறது எனப் பொருள். இப்படி நம் தன்மைக்கு விரோதமாக செயல் புரிந்தால் அது கஷ்டத்தைத் தரும் என்ற உண்மையை உணர வேண்டும்.

பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம்சத்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்

ஸ்லோகம் 35 கேளுங்கள்

ஸாரம்:

பெரிய சேனாதிபதிகளும் (வீரர்களும்) நீ யுத்தத்திலிருந்து பயந்து பின்வங்கிவிட்டாய் என நினைப்பார்கள். தவிர, யாரொருவர் உன் வீரத்தை மெச்சினார்களோ, புகழ்ந்து பேசினார்களோ, அவர்களெல்லாம் உன்னை இழிவாகப் பார்ப்பார்கள்.

விளக்கம்:

அர்ஜுனனின் மனநிலை சாதகமாக மாறுவதைப் பார்த்த ஸ்ரீ கிருஷ்ணன் அதே வேகத்தில் அதே ரீதியில் தன் விவாதத்தைத் தொடர்கிறார். ஜெனங்கள் தூற்றுவது மட்டுமல்லாமல் எதிர் சேனயிலுள்ள யுத்த வீரர்களும் நேதாக்களும் அர்ஜுனனின் இந்த நிலையைப் பார்த்து அவன் பேடித்தனத்தால் யுத்த்திலிருந்து பின்வாங்குகிறான் என ஏளனம் செய்வார்கள். ”என் சுற்றத்தார் என்னால் கொல்லப்படுவார்களே, அவர்களைக் கொன்று கிடைக்கும் லாபம், ராஜ்யம் எமக்கு வேண்டாம், அது அதர்மம” என்ற அர்ஜுனனின் கருத்தை அவன் பேடித்தனத்திற்கு ஒரு வ்யாஜமாகச் சுட்டிக்காட்டி நகைப்பர்கள் என்று பகவான் மீண்டும் அர்ஜுனனின் மனோபாவத்தைச் சிதைக்கிறார். ஏனெனில், ஏதொரு வீரனுக்கும் தன்னைப் பார்த்து தன் சகாக்கள், தனக்கு நிகரான வீரர்கள் ஏளனம் செய்வதைச் சகித்துக்கொள்ள இயலாது. ஆதலால் எதைச் சொன்னால் அர்ஜுனன் சீறி எழுவானோ அந்தக் கருத்தை ஆணித்தரமாகச் சொல்கிறார்.

உலக நியதிப்படி நாம் நம் ஸஹபாடிகள் அல்லது நமக்கு ஈடானவர்கள் நம்மை ஏளனம் செய்தால் பொறுத்துக்கொள்ள் மாட்டோமில்லையா? சுயகௌரவத்திற்குத் தீங்கு வருமானால் அதை நாம் சகித்துக்கொள்ள மாட்டோம். அதை எதிர்த்துப் போராடுவோம். இதுதான் சாதாரண மனிதனின் மனநிலை. இதைக் கருவாகக் கொண்டும் பகவான் அர்ஜுனனைத் தூண்டுகிறார்.

(தொடரும்)

அத்தியாயம் 2 பாகம் 5 அத்தியாயம் 2 பாகம் 7

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button