Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 14
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

ஆலய வழிபாடு - 3

அருமை செல்வங்களே,

சென்ற இதழில் நீங்கள் வினா எழுப்பி எம்மைத் திக்குமுக்காடச் செய்தீர்கள். ஆனாலும் உங்கள் சந்தேகங்களைத் தீர்ப்பது எமது கடமை. என்ன கேட்டீர்கள்? தெய்வம் என்பது நம்முள் இருக்கும், உலகத்திலுள்ள அத்துணை ஜீவராசிகளிலும், ஏன் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் புராதன, மாற்றமில்லாத, நிரந்தர, அழிவில்லாத, பிறப்பிறப்பில்லாத, உணர முடியாத, பார்க்க முடியாத ஒரு மஹா சக்தி. அதனால் இறைவனை நம்முள் தேடுவதுதானே உசிதம். ஏன் இறைவனை பகிர்முகமாக (வெளியில் வைத்து) வணங்கணும்? இது உங்களது முதல் வினா. அதை முதலில் பார்ப்போம். நாம் சொல்வதை மிக கவனமாகக் கேளூங்கள்.

பகிர்முக இறை வழிபபாடு:

இந்த விஞ்ஞான உலகில ஏதொரு வஸ்துவைப் பற்றிச் சொன்னாலும் அதற்கு நேரடி அனுபவம் இல்லையேல் நாம் அதை ஏற்க மாட்டோம். நம் இந்திரியங்களுக்குப் புலப்படாத, புத்திக்கு எட்டாத, மனதிற்குப் புரியாத ஒன்றை எப்படி ஏற்றுக்கொள்வது? எப்படி உறவாடுவது? இந்த உலகில் இந்திரியங்களுக்கு அப்பார்ப்பட்ட வஸ்துவை நாம் உணர முடியாது. அதற்கு ஒரு உருவம் தந்தால்தான் அதை நம் மனதில் பதித்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய விவரத்தை நாம் உட்கொள்ள முடியும். நம் கண்ணுக்குப் புலப்படுவது அல்லது நம் புத்தியால் உணர முடிவது போன்ற வ்ஸ்துக்களை நாம் ஏற்க முடியும். அதைப் புரியவைக்க நாம் நமக்கு முன்னமேயே தெரிந்த ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி இதுபோல் என்றால் புரிந்துகொள்வோம். அல்லது நேரடியாகப் பரிசோதனைக்கு உட்பட்ட பொருளைப் பரிசோதித்துப் பார்த்து ஒப்புக்கொள்வோம். இல்லயா? அதேபோல், கண்ணுக்குப் புலப்படாத, மூளைக்கு எட்டாத, இதுநாள் வரை யாரும் புறக்கண்ணால் பார்த்தறியாத ஒரு சக்தியை எப்படிப் பார்ப்பது அல்லது எங்ஙனம் சேவிப்பது? நம்முள் இருக்கும் அரூபமான தெய்வத்தை எப்படித் தெரிந்துகொள்வது, இல்லை எப்படி உணருவது? பார்ப்போமா?

மின்சாரத்தைப் பார்க்க முடிகிறதா? அதன் சக்தியால் Bulb, Tape Recorder, Fan முதலிய கருவிகள் வழி வரும் ஒளி, ஓலி, காற்று போன்ற சுகத்தை மட்டும்தான் அனுபவபூர்வமாக உணருகிறோம். ஆனாலும், இவற்றுக்குக் காரண்ம் அல்லது ஆதாரம் என்பது மின்சாரம் என ஒப்புக்கொள்வோம். இது ஏன்? அதுதான் நம்பிக்கை எனப்படுவது. கன்ண்ணுக்குப் புலப்படாத மின்சாரத்தின் தன்மையை அனுபவிக்க் நாம் இக்கருவிகளைப் பயன்படுத்தவில்லையா? அதேபோல் அகோசரமான் இந்த சக்தியை அனுபவிக்க ஓர் கருவி (Media) தேவை. அதுதான் நம் உடல் உறுப்புகள். ஏதொரு உருவம் மனதில் சென்றாலும் அது அதைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும். அடுத்த தடவை அதைப்பற்றி நினைக்கும்போது அந்த உருவத்ததை நம் மனக்கண்முன் கொணர்ந்து நிறுத்தும். இதுதான் மனதின் தன்மை. உருவமில்லையேல் மனம் அதில் செல்லாது. மனம் செல்லாவிட்டால் நாம் நினைக்கவோ உணரவோ இயலாது என்பது எல்லோறுக்கும தெரிந்த விஷ்யம்தானே?

ஏன் இறைவனுககு உருவம் தருகிறோம்:

எப்படி அரூபமான் மின்சாரத்தின் தன்மையை அனுபவிக்க நாம் கண்ணுக்குப் புலப்படும் இந்த உபகரணங்களை நாம் கையாளுகிறோமோ அதேபோல் ரூபமாக விளங்கும் வஸ்துவுக்கு ஒரு உருவம் தந்தால்த்தான் நம்மால் அதைப் பர்க்கவும், உறவுகொள்ளவும் இயலும். அதனால்தான் ந்ம்முள் உள்ள தெய்வத்ததைப் புற உலகில் சித்திரமாகவும், சிலையாகவும் படைத்து அனுபவிக்கின்றோம். இன்னும் புரியவில்லையா? எப்படியென்றால் விமானத்தைக் காணாத, கேட்டறியாத உங்கள் நண்பனுக்கு நீங்கள் அதைப்பற்றி எப்படி உணர்த்துவீர்கள்? எப்படி விவரித்தாலும் அவனால் அதை உணர முடியாது. ஏனெனில் அதன் உருவமோ, நிறமோ, அதனால் உள்ள பயனோ அவனுக்குத் தெரியாது. என்ன செய்வீர்கள்? ஒரு காகிதத்தில் விமானத்தின் உருவை வரைந்து காண்பிப்பீர்கள் இல்லையா? அப்படி அவன் அதைப் பார்த்தால் அந்த உருவம் அவன் மனதில் பதிந்து, நீங்கள் பிறகு சொல்லும் செய்திகள் புரியவரும் இல்லயா? இதற்கு நேர்முக அனுபவம் எனக் கூறலாம். ஆக, நம் கண்ணுக்குப் புலப்படும்படி ஒர் உருவம் தந்து அதை நம் பூஜா முறையில் வைத்து மாலை போட்டு, பொட்டிட்டு, பூக்களால் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் படைத்து, ஹாரத்தி செய்து வணங்கி வழிபடுகிறோம். அப்படிச் செய்யும்போது அந்த உருவம் நம் மனதில் பதிந்துவிடுகிறது. பிறகு நாம் கண்மூடி ஜெபிக்கும்போது அந்த உருவம் நம் கவனத்தை அதனிடம் திருப்ப உதவுகிறது. மனதுதான் நம் கவனத்தைத் திருப்பும், அல்லது நிலைநிறுத்த உதவும் கருவி. அதற்கு உருவம் தேவை. இப்போது தெரிந்ததா ஏன் இறைவனைப் புறக்கண்ணால் பார்க்கிறோமென்று?

புரிந்தது, ஆனால் இறைவன் எத்துனை உருவில் உள்ளார்? அந்த சக்தி மனிதர்களைப்போல் பல உருவில் உள்ளதா? இறைவன் ஒன்றே என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நாம் இறைவனைப் பல உருவங்களில் ஏன் வழிபடுகிறோம்? அடடா இன்னும் என்னைத் தூண்டுகிறீர்களே. ஆகட்டும், அடுத்த மடலில் இதைப்பற்றி சிந்திப்போம்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 13 கடிதம் - 15

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button