Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 13
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

ஆலய வழிபாடு - 2

அருமை செல்வங்களே,

குழந்தைகளாகிய உங்களுக்குத் தேவையான சில தர்மங்களைச் சொன்னோம். அதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என ந்ம்புகிறோம். மாதா, பிதா, குரு தெய்வம் என்று நான்கு வழி காட்டிகள் நமக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், அவர்களை எப்படி வழிபட வேண்டும் என்பன பற்றிச் சிந்திக்க வேண்டும். காலைக் கடன்கள், இறைவணக்கம், பித்ருவாக்ய பரிபாலத்தின் கருத்து, இப்படிப் பல நல்ல கருத்துக்களைப் பார்த்தோம். இதன் கருத்து என்ன? அன்னை, தந்தை, குரு நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். அவர்கள் நம் நலனை ஒட்டி நம்மை நேசிக்கிறார்கள். நமக்கு அறிவு புகட்டுகிறார்கள். அவர்கள் சொல்படி நடக்க வேண்டியதுதான். ஏனென்றால் அவர்கள் தன்னலம் கருதாமல் தங்கள் சுயநலத்தை விட்டு நமது நலனுக்காகத் தியாகம் செய்து நம்மை வளர்க்கிறார்கள். தாய் நம்மைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து கஷ்டங்களை எதிர்கொண்டு நாம் பிறந்தபிறகு நமக்கு வேண்டிய உணவு ஊட்டி, சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி வளர்க்கிறார்கள். அதற்காக அவர்கள் எத்துணை கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள்? தகப்பனோ நமக்கு வேண்டிய உணவு, உடுப்பு, களிக்கோப்பைகள் போன்ற அன்றாடப் பொருட்களுக்காகப் பணம் திரட்ட இரவு பகல் உழைத்து நம்மைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார். குருவோ நமக்கு வேண்டிய அறிவைப் புகட்டப் பாடுபடுகிறார். ஆதலால் இவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். அவர்களை நேசித்து, அவர்களுக்குச் சேவை செய்து, அவர்கள் காட்டும் வழியில் நாம் செல்ல வேண்டுமென்பது இயல்பு. அது நம் தருமம். ஆனால் இறைவன் என்பது ஏது? அவர் எங்கிருக்கிறார்? அவர் நமக்கு என்ன செய்தார்? அவரிடம் நமக்கு என்ன கடப்பாடு உள்ளது? ஏன் அவரை வணங்க வேண்டும்? அப்படியே ஆனாலும் அவர் கண்ணூக்குத் தெரிவதில்லையே? எப்படி வணங்குகிறது? எவ்வண்ணம் நம் அன்பைக் காட்டுவது? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன அல்லவா? உங்கள் சந்தேகங்கள் சரியானவைதான். இதற்குத் தகுந்த விளக்கம் தந்தால்தான் நாம் மேற்கொண்டு சொல்லப்போகும் சூக்ஷ்மமான விஷயங்கள் உங்களூக்கு விளங்கும்.

நாம் தாயின் வயிற்றில் பத்து மாதம் கிடக்கும்போது, யார் நம்மைக் காப்பாற்றினார்கள்? தாய் உட்கொண்ட சத்தான உணவு எனச் சொல்லலாம். ஆனால் அங்கு இருக்கும்போது நமக்கு உயிர் இருந்ததே அதெப்படி? தாயின் சுவாஸம் நமக்கு உதவியது எனக் கூறலாம். கண் தெரியாமலும், காது கேட்காமலும் ஒரு சிறைவாஸத்தில் இருந்ததை உணர்கிறோம். அப்பொழுது நம்மைக் காத்தது யார்? போகட்டும், நாம் பிறந்த பிற்பாடு நாம் வளர உதவியது யார்? தாய், தந்தை, உற்றார், உறவினர் எனச் சொல்லலாம். ஆனாலும் யாரும் கூட இல்லாதபோது யார் நம்மைக் காப்பாற்றினார்கள்? இன்னும் விளங்கவில்லயா? வேறு விதத்தில் பார்ப்போம்.

நாம் இயங்குவது நம் உடலால்தானல்லவா? இந்த உடல் என்பது பஞ்சபூதத்தாலானது. அதென்ன ப்ஞ்சபூதம்? வெளியில் தெரிவதை பூதவஸ்து அல்லது ஸ்தூலவஸ்து (Macrocosm) என்றும் உள்ளில் கண்ணுக்குத் தென்படாதிருப்பவை நுட்பவஸ்து அல்லது சூக்ஷ்மவஸ்து (Micrtocosm) என்றும் அழைக்கிறார்கள். இந்த உடலும் உலகிலுள்ள அத்துணை வஸ்துக்களும் ப்ஞ்ச பூதத்தாலானவை. அதாவது ஐந்து கூட்டுகளால ஆனவை. மண் (Earth), அக்னி (Fire) நீர் (Water), வாயு (Air), ஆகாயம் (Space). இவை ஒன்றுக்கொன்று நுட்பமானவை. இப்படி நம் உடல் இந்த ஐந்து வஸ்துக்களால் அமைந்த ஸ்தூலவஸ்து. இவை சர்மம், சதை, எலும்பு, நாடிகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு இயங்க இரத்தம் தேவை. அதைக் கொடுப்பதற்காக ஹிருதயம் என்ற ஒரு உறுப்பு உள்ளே இயங்குகிறது. ஆனால் உள்ளே மனம் என்றும் புத்தி என்றும் இரண்டு உறுப்புகள் கண்ணுக்குப் புலப்படாதவை வேறு உள்ளன. உடலில் கண் (காண்பதற்கு), காது (கேட்பதற்கு), மூக்கு (மணம் அறிவதற்கு), நாக்கு (ருசி அறிவதற்கு) சருமம் (உணர்வதற்கு).என ஐந்து இந்திரியங்கள் (உறுப்புகள்) இருக்கின்றன். இவை வெளி உலகிலிருந்து வரும் விஷயங்களை நம் உள் புகுத்த ஹேதுவாகின்றன். இவற்றை ஞானேந்திரியங்கள் (Senses of Paerception) எனக் கூறுவார்கள். இவை கொணரும் விஷயங்களைத் தரம் திரித்து நல்லது கெட்டது என வேர்திரிக்க, புத்தி (Intellect) எனும் ஒரு உறுப்பு உள்ள்து. அப்படி வகைதிரித்தபின் நம ஆசைகளுக்கிணங்கச் செயல் புரியவைப்பது நமது மனம் என்ற வேறொரு உறுப்பு. இந்த மனம் தரும் வேலைகளைச் செய்யக் கைகள் (Work), கால்கள் (Movement), வாய் (Food intake), சிறுநீர்க் குழாய் (Uninating organ), மலத்வாரம் (to push feaces) என ஐந்து கர்மேந்திரியங்கள் (Senses of Action) உள்ளன. ஆனால் இவை ஜெடம். தானாக சலிக்க இயலாதவை. இவைக்கு சக்தி தருவது உயிர் அல்லது ஆத்மா எனப்படும் ஒரு சூக்ஷ்ம சகதி நம்முள் இருந்து இயங்குகிறது. அதுதான் நம் உடலுறுப்புக்களுக்கு இயங்கும் சக்தியைத் தருகிறது. இந்த சக்தி இவை எல்லாவற்றிற்கும ஆதாரமாக, நித்தியமாக, மாற்றமில்லாததாக, எப்பொழுதும் இயங்குகின்றதாகத் திகழ்கிறது. ஆதலால் இந்த சக்திதான் ஆதாரம். இது இல்லையேல் நம் வாழ்க்கை இல்லை எனப் புரிகிறதா? இதைத்தான் நாம் இறைவன் என அழைக்கிறோம்.

அப்ப்டியானால் இறைவன் நம் எல்லோர் உள்ளத்திலும் இருக்கிறார், எல்லா இடத்தி;லும் நிறைந்திருக்கிறார், எல்லா ஜீவராசிகளிலும், உலகெங்கும் நிறைந்திருக்கிறார். ஆகையால் ஏன் இறைவனை வெளிப்புறமாக வணங்க வேண்டும்? உள்ளூக்குள் வணங்கினால் போதாதா? ஏன் ஆலயங்களில் சென்று வணங்க வேண்டும்? அங்கு சிலை தானே உள்ளது? அதில் உயிர் இல்லயே? பிறகு ஏன் இறைவன் ஆலய்களில் இருக்கிறான் எனச் சொல்கிறோம்? அடடே இப்படி அடுக்கடுக்காக வினாக்களைக் கேட்டு எம்மைத் திக்குமுக்காடச் செய்துவிட்டீர்களே! நாம் என் செய்வது? சிறிது நேரம் எம்மை சிந்திக்க விடுங்கள். அடுத்த மடலில் இதைப்பற்றி விவாதிப்போமா?

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 12 கடிதம் - 14

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button