Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 12
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

ஆலய வழிபாடு - 1

அருமை செல்வங்களே,

பித்ருவாக்ய பரிபாலனம் என்ற தொடரில், மாதா, பிதா இருவரும் பித்ரு என்ற சொல்லில் உட்பட்டவராவார் எனப் பார்த்தோம். பித்ருவாக்ய பரிபாலனத்தின் பலன் எப்பொழுதும் நமக்கு சாதகமாகவே நல்லதைக் கொடுப்பதாகவே அமைந்ததையும் பார்த்தோம். அத்துடன், தர்மத்திற்கு எதிராக, பகவானை நிந்திக்கும்படி உள்ள பித்ருவாக்யத்தைப் பரிபாலனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நமது சாஸ்திரங்கள சொல்வதையும் பார்த்தோம். அதற்குத் தகுந்த கதையையும் படித்தோம். தெய்வ நிந்தனை யார் செய்தாலும் செய்யச் சொன்னாலும் அதைப் புறக்கணிக்க வேண்டும், ஏனெனில் அது நமக்கு ஒருபொழுதும் நல்லதைச் செய்யாது. அப்படியானால் ஏன் பித்ருவாக்ய பரிபாலந்த்திற்கு இவ்வளவு மேன்மை தந்திருக்கிறார்கள் என யோசிக்க வேண்டும். பார்ப்போமா?

நம்மை 10 மாதம் தன் வயிற்றில் சுமந்து, நம் நலனுக்காக தனக்கு ருசியான ஆஹாரம் உட்கொள்ளாமல், நம் வளர்ச்சிக்குச் சாதகமான உணவை உட்கொண்டு, நம் வளர்ச்சியில் கவனம் வைத்து, பல துன்பங்களைச் சகித்து வந்தது நம் தாய். பிறந்த பிறகு நமக்கு வேண்டிய போஷகமான தாய்ப்பால், மற்றும் உணவுப்பொருள்களைத் தந்து, பசி தெரியாமல், நம் உடல் நலம் குன்றாமல் பாதுகாத்தவர் நம் தாய். நம்மைக் குளிப்பாட்டி, புது உடைகள் தரித்து, ஆபரணங்களைப் பூட்டி அழகு பார்த்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தவர் நம் தாய். சிறு வயதில் நமக்கு வரும் வியாதிகளுக்குத் தக்க மருத்துவம் செய்து நம்மை குணப்படுத்தப் பாடுபாட்டது நம் தாய். தன் நலம் காருதாமல் நமது வளர்ச்சியில் ஊக்கம் கொண்டு பொருளாதாரத்தை வ்ருத்திசெய்து, நமக்கு வேண்டிய உடை, ஆஹாராதிகள், விளையாட்டுப் பொருள்கள், படிப்பதற்குப் புத்தகங்கள் முதலியன தந்து, நமக்கு நல்லபடி கல்வி கற்க உதவியது நம் தந்தை. தான் கஷ்டப்பட்டாலும், குழந்தை கஷடப்படக் கூடாது என நாள்தோறும் பல துன்பங்களைச் சகித்து, நம் வளர்ச்சியில் ஊக்கம் கொண்டவர் நம் தாய் தந்தை. அவர்கள் நமக்காக சாஸ்திரங்கள் சொல்லும் நியதியை ஓதி நம்மை நல்வழி ந்டத்தியவர்கள். இப்படி நமக்காகத் தங்கள் சுய நலத்தைப் பாராமல், தங்கள ஆசைகளை அடக்கி நமக்காகப் பாடுபட்டுழைத்தவர்கள் நம் தாய் தந்தை.

இப்படி தன்னலமற்ற வாழ்வை நமக்காக வாழ்ந்த நம் தாய் தந்தயரைப் புறக்கணிக்கலாமா? அவர்களின் முதிய காலத்தில் நாம் இதற்கு இரண்டு மடங்கு சேவை செய்ய வேண்டாமா? இதைத்தான் பித்ரு கடன் என்பார்கள். உலகில் நாம் நல்வாழ்வு வாழ தேவர்கடன், குருகடன், பித்ருகடன் என்ற மூன்று வகை தர்மங்களை நாம் பாலிக்க வேண்டும். அதில் ஒன்றான பித்ருகடன் அடைக்கத்தான் அவர்கள் முதிய காலத்தில் நாம் அவர்களுக்குச் செய்யும் தொண்டு. நிகழ்காலத்தில், நாம் அவர்கள் சொல்படி நடப்பது, நம் செயல்கள் அவர்களூக்கு பாதகமாக இல்லாமல் அவர்கள் சொல்லிக்கொடுத்த சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பது, முதிர்காலத்தில் அவர்களை வைத்துப் பரிபாலிப்பது, நம் பாசத்தை அவர்களிடம் காண்பிப்பது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். இதனால்தான் “மாதா, பிதா முன்னறி தெய்வம்” என்று சொல்கிறார்கள். அவர்கள் தானே நமக்குக் கண்கூடாகக் காணும் தெய்வம். அவர்கள் சொல்படி நடப்பது நமது கடமை. அவர்கள் சொல்லாமலே அவர்கள் மனமறிந்து நாம் சேவை புரிய வேண்டும். இதைத்தான் பித்ருவாக்ய பரிபாலனம் சுட்டிக்காட்டுகிறது.

குழந்தைகளே, நீங்களும் இதுபோல் தாய் தந்தை சொல்படி, அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு வேண்டிய சேவை செய்து, அவர்கள் ஆசிகளைப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வீரகளாக.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 11 கடிதம் - 13

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button