ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:
அத்தியாயம் 2 பாகம் 4
பகவத்கீதா சாரம்
அசலம்
கதம் ஸ புருஷ:பார்த்தா கம் காதயதி ஹந்தி கம்
ஸ்லோகம் 21: கேளுங்கள்
ஸாரம்:
யாதொருவன் அவனை (ப்ரம்மத்தை) அழிவில்லாதவன், நித்தியமாய்த் திகழ்பவன், பிறப்பில்லாதவன், முடிவில்லாதவன் என்று அறிகிறானோ, எப்படி அந்த மனிதன் மற்றவரைக் கொல்ல முடியும்? ஓ பார்த்தா! (ப்ருதுவின் மகன்) அல்லது எப்படி மற்றவர் மரணமடைய இயலும்?விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ப்ரஹ்மத்தின் அழிவின்மை, பிறப்பிறப்பில்லாத அவஸ்தை, நித்தியமாய் விளங்குதல் போன்ற தன்மைகளை விளக்குவதோடு அதை ஒரு வினாவாகத் தந்தாலும் அது ஒரு உறுதிமொழியாகத் திகழ்கிறது. இதன்மூலம் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் மனத்திலுள்ள சந்தேகங்களை ஒழிக்க இவ்வண்ணம் உரைக்கிறார். அர்ஜுனன் யுத்தம் செய்தால் மற்றவர்கள் அழிவது அவனால் அல்ல, அவர்கள் கர்ம வினையால்தான் என்றும், அதேபோல் அர்ஜுனனைத் தூண்டிவிடும் கிருஷ்ணனும் இதற்குக் காரணமாக ஆக மாட்டான் என்றும் கருத்து. இந்த சத்திய வஸ்துவின் மேல்கூறிய உண்மையை உணர்ந்தவர் பிறகு தாம் மற்றவர் அழிவிற்குக் காரணமாகிறோம் என்றோ, மற்றவர்கள் நம்மை அழிப்பார்கள் என்றோ உள்ள தப்பான கருத்ததைக் கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக் சொல்கிறார். அதாவது, எல்லோரிலும் உள்ள ஆத்மா ஒன்றேதான். அது தானே இயங்குகிறது. மற்றொருவர் அதை இயக்க முடியாது, அதுவே எல்லோரையும் இயங்க வைக்கிறது எனப் பொருள். இப்படி அர்ஜுனனுக்கு ஞானோதயம் வந்தால் அவன் தானாகவே தன் வீரத்தைக் காண்பிக்க தைரியம் வரும் என்பதற்காகவே இந்த ஸ்வதர்மததை உபதேசிக்கிறார்.
நவானி க்ருஹ்ணாதி நரோSபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி
அன்யானி ஸம்யாதி நவானி தேஹி
ஸ்லோகம் 22: கேளுங்கள்
ஸாரம்:
எப்படி ஒருவன் தன் அழுக்கடைந்த (கிழிந்த) வஸ்திரத்தை மாற்றி, புதிதாக ஒன்றை உடுத்துகிறானோ அதேபோல்தான் இந்த ஜீவன் தன் ஜீர்ணமாகிய (நரையடைந்து சக்தியற்ற) உடலைக் களைந்து, வேறொரு நவீன உடலை அடைகிறது.விளக்கம்:
இந்த நித்தியமாக நாம் அறியும் ஒரு உண்மையை உதாகரணமாகத் தந்து இந்த மஹத்தான தத்துவத்தைப் பறைசாற்றுகிறார் ஸ்ரீ கிருஷ்ணன். ஒரு மனிதன் தன் உடைகளை எப்பொழுது களைவான்? அது அழுக்கடைந்தால், அல்லது நலிந்துபோனால் அல்லவா? அப்படி உடைகளை மாற்றும்பொழுது அது அவனுக்கு வேதனையைத் தருவதில்லை. மாறாக இன்பத்தைத் தருகிறது. அதுபோல் தான் நம் ஜீவன் வயதாகி நலிந்துபோன உடலால் தன் இச்சைகளை சாதிக்க முடியாமல் வரும்போது, நலிந்த உடலை விட்டு வேறொரு புது உடலை எடுக்கிறது. எதற்காக? தன் அனுபவங்களைப் புதிதாக உணர்வதற்கு திடமான உடலும், மனமும், புத்தியும் தேவை. அப்படி ஒரு உடலை விட்டுப் பிறிதொரு உடலை ஏற்கும்பொழுது, ஜீவன் சங்கடப்படுவதில்லை. மாறாக இன்பத்தை அடைகிறது எனப் பொருள்.ஆனாலும் சில விதண்டாவாதிகள் சொல்லலாம்: “வயதாகி உடல் நலம் கெட்டால்தான் மரணம் வருகிறது என்றில்லயே? சிறு வயதிலேயே சிலர் மரணம் அடைகிறார்களே? உடல் நலத்துடன் இருக்கும் போதுகூட மரணம் வரலாமே. அப்படியானால், ஜீவன் உடல் நலியும்போது பிறிதொரு உடலை நாடுகிறது என்பது தவறல்லவா?” என்று. அவர்களுக்குத் தரும் விளக்கமானது: “தனவான்கள் தங்கள் வீடுகளையும் தாங்கள் உபயோகிக்கும் சாதனங்களையும் அவை சீர்கெடும்போதுதான் மாற்றுகிறார்களா? இல்லை. இரண்டு மூன்று வருடத்தில் அவை நல்ல நிலையில் இருக்கும்பொழுதுகூட மாற்றுகிறார்களே? ஏன்? அவர்களைப் பொறுத்தமட்டில் அவை உபயோகமில்லாததாகி விடுகின்றன. காரணம் அவர்களிடம் நிறைய தனம் உள்ளது. அவர்கள் புதிய வஸ்துக்களை உபயோகிப்பதில் இன்பம் காண்கிறார்கள். ஆதலால், ஒரு வஸ்து உபயோகம் உள்ளதா அல்லவா என்ற வினா, அதை உபயோகிப்பவரைப் பொறுத்திருக்கிறது. அல்லாது காலம் அதை மாற்றுவதில்லை. அதேபோல், சிறு வயதில் மரணமடையும் ஜீவன்கள் தங்கள் உடலால் தங்களுக்கு வரும் அனுபவம் இன்பமுள்ளதாக இல்லை என்று உணர்ந்தால் உடனே மாற்றுகின்றன. இதனால் என்ன விளங்குகிறது? ஒரு உடலால் வரும் அனுபவம் அதை உடைய ஜீவனுடையதுதான். மற்றவர்கள் பார்ப்பது அதற்கு பாதகமாகாது. ஜீவன் தன் அனுபவத்தை உணர அந்த சிறு வயதிலுள்ள தன் உடல் போதாது என உணர்வதால் சிறு வயதிலும் மரணம் சம்பவிக்கிறது. எப்படிப் பார்த்தாலும், ஜீவனின் உடமையாகிய உடல் (தேஹம், மனம் புத்தி) நலம் அந்த ஜீவன் உணர்வதைப் பொறுத்திருக்கிறது. இதுதான் உண்மை.
இது உலக வாழ்க்கையில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தக் காலத்திலும் பொதுவாக திகழும் ஜீவித ரகசியத்தை அர்ஜுனனுக்கு விளக்கம் தரும் பகவான் அவன்மூலம் நாம் எல்லோரும் உணர வேண்டும் என்பதற்காகவே இங்கு தந்துள்ளார்.
நசைனம் க்லேதந்த்யாபோ நசோஷயதி மாருத:
ஸ்லோகம் 23: கேளுங்கள்
ஸாரம்:
அதை சஸ்திரங்களால் துண்டிக்க முடியாது, அக்னியால் தஹிப்பிக்க இயலாது, நீரால் நனைக்க முடியாது, காற்றினால் வற்றிக்க இயலாது.விளக்கம்:
நாம் அறியாத ஒரு பொருளுக்கு விளக்கம் தரும்போது, எழுத்தாளர்களும் கவிகளும், எல்லோருக்கும் விளங்கக்கூடிய உலக அனுபவத்திலுள்ள பொருளைக் காட்டி விளக்குவது ஸஹஜம். புதிதாக ஒரு கருத்தைத் தரும்போது, எல்லோருக்கும் புரியக்கூடிய ஒரு அனுபவத்தைக் கையாண்டு அந்தப் புதுக் கருத்தை விளக்குவது நிலவிலுள்ளதே. அதேபோல், இங்கு அவ்யயமான ஒரு வஸ்துவை விளக்க ஸ்ரீ கிருஷணன் உலக நியதிக்குட்ப்பட்ட வஸ்துக்களைக் கையாண்டிருக்கிறார். எல்லோருக்கும் தெரியும் சஸ்திரங்கள் (ஆயுதங்கள்) ஒரு பொருளைத் துண்டிக்க முடியும். அக்னி உலகிலுள்ள பூத பொருட்களை தஹிப்பிக்க முடியும். நீர் (ஜெலம்) பொருட்களை நனைக்க முடிய்ம். வாயு ஒரு பொருளிலுள்ள ஜெலபாகத்தை வற்றிக்க இயலும். இது உலக நியதி. ஆனால், சஸ்திரங்கள் அவைகளைப்போல் ஸ்தூலமானவைகளை மட்டும்தான் துண்டிக்க முடியும். அக்னி மற்ற வஸ்துக்களை தஹிப்பிக்கலாம். ஆனால் தன்னைத்தானே அழித்துக்கொள்ள இயலாது. எல்லா பூத வஸ்துக்களிலும் ஜெலம் உண்டேயானால் அந்த ஜெலத்தை வற்றிக்கக் காற்றால் முடியும். ஆனால் இரும்பு வஸ்துக்களில் ஜெலம் இல்லாததால் அதை வற்றிக்க இயலாது.இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு வஸ்து தன்னிலும் சூட்சுமமாகத் திளங்கும் மற்றொரு வஸ்துவை அழிக்க முடியாது. ஸ்தூலமான வஸ்த்துக்களை மட்டுமே அழிக்க இயலும். ஏனென்றால் அதற்குள்ள இயல்பு, பலம், அந்த பரமார்த்த வஸ்துவான ப்ரஹ்மத்திலுருந்து (சூக்ஷ்ம வஸ்துவிலிருந்து) வருகிறது. இந்த ஸ்தூல வஸ்த்துக்களுக்கு ஆதாரம் ப்ரஹ்மம். ஆதலால் இவை ப்ரஹ்மத்தை அழிக்க இயலாது. ஏனென்றால் அவைக்கு இருக்கும் சக்தியே ப்ரஹ்மத்திடமிருந்து வருகிறது. மின்சாரம் மற்ற வஸ்ததுக்களை அழிக்கலாம். ஆனால் அது தன்னைத்தானே அழித்துக்கொள்ள இயலாதல்லவா? இதுதான் மூலப் பொருள் என்றும் அழிவில்லாதது எனக் கூறுவதின் பொருள்.
இந்த மூலப்பொருளாகிய ப்ரஹ்மம் எப்படி நித்தியவஸ்து எனக் கூறப்படுகிறது? எதனால் அது நித்திய வஸ்துவாகத் திளங்குகிறது என்பதற்குப் பின் வரும் ஸ்லோகம் விளக்கம் தருகிறது.
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோSயம் ஸனாதன
ஸ்லோகம் 24: கேளுங்கள்
ஸாரம்:
அது அறுபடாதது, தஹிக்கபபடாதது, நனையாயது, வற்றாதது (ஆகையால்) அது நித்தியமான, எல்லா இடத்திலும் எப்பொழுதும் சலனமின்றி (மாற்றமின்றி) நிலைத்திருக்கும் ஒரு புராதன வஸ்து.விளக்கம்:
முன் ஸ்லோகத்தில் சொன்ன விளக்கத்தை இப்பொழுது உறுதிப்படுத்தி அதனால் ஏதொரு வஸ்து ஒரு வழியிலும், ஒன்றினாலும் அழிக்கப்படாததாக, மாற்றக்கூடாததாகத் திளங்குகிறதோ அது என்றென்றும் திகழ்வதாகவும், எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் திகழ்வதாகவும், ஸ்திரமானதாகவும் (மாற்றமில்லாததாகவும்), சலனமற்றதாகவும், புராதனமானதாகவும் தான் இருக்க முடியும் என்று வலியுறுத்துகிறார். எப்படி? இது விஞ்ஞானிகள் கையாளும் ஒரு முறை. இப்படி இப்படி இருந்தால் அது இன்னதாக இருக்கலாம் என்ற சூசகமான தீர்மானம் எடுப்பதுபோல. உலக சம்பந்தப்பட்ட எந்தப் பொருளாலும் அழிக்கவோ, துண்டிக்கவோ, தஹிக்கவோ, வற்றிக்கவோ முடியாத வஸ்து, இவை எல்லாத்திற்கும் மூலகாரண வஸ்துவாக இருந்தால்தான் எல்லாவற்றிற்கும் முன் உள்ளதாக (புராதனம்)சொல்ல முடியும். இவை எல்லாவற்றையும் விட பலம் பொருந்தியதாகவும் என்றென்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பதாகவும், எல்லா இடத்திலும் நிறைந்திருப்பதாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அது மூலவஸ்துவாகத் திகழ முடியும். அது நித்தியமானதாகவும் காலநிர்ணயம் செய்ய இயலாது புராதனமாகவும் இருக்க வேண்டும் என்ற நியதியை வலியுறுத்துவதாக உள்ளது இந்த ஸ்லோகம்.உலகமும் அதிலுள்ள வஸ்துக்களும் இந்த ஒரு பரமார்த்த சக்தியை ஒன்றும் செய்ய இயலாது என்று நிரூபணமானால் அதன் பொருள் என்ன? இந்தப் பரமார்த்த வஸ்து உலகத்திலுள்ள எல்லா வஸ்த்துக்களுக்கும், ஏன் உலகம் தோன்றுவதற்கும் முன்னமேயே இருக்க வேண்டும். அதனால் அது புராதனம் (Sanatanam) என நிரூபணமாகிவிட்டது. உலக நியதியைத் தரும் இந்த சக்தி என்றென்றும் திகழ்வதாகவும் (Eternal), எல்லா இடத்திலும் (All pervading), எல்லாக் காலத்திலும் (Stable), திகழ்வதாகவும், சலனமில்லாததும் (Immovable) இருந்தால்தான் உலகமே சலிக்க முடியும். இப்படி சாஸ்த்ரீயமாக நிரூபணம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
தஸ்மாதேவம் விதித்யைனம் நானுசோசிதும் அர்ஹஸி
ஸ்லோகம் 25: கேளுங்கள்
ஸாரம்:
இந்த ப்ரஹ்மம் எனப்படுவது, அகோசரமானது (Unmanifest), அசிந்த்யமானது (Unthinkable), மாற்றமில்லாதது (Unchangeable) எனக் கூறப்படுகிறது. அதனால் இதை உணர்ந்துவிட்டால் பின் நீ எதற்கு வருந்த வேண்டும்?விளக்கம்:
இப்படி எல்லாவாற்றிற்கும் மூலகாரணமாகத் திகழும் சக்தி உலக வடிவுக்கு ஆதாரமான பஞ்சபூத வஸ்துக்களுக்கு சக்தியைத் தருவதாகத் திகழ்கிறது. உலகமும் நம் உடலும் இந்தப் பஞ்சபூதஸ்திதம் என அறிவோம். நம் இந்திரியங்களுக்கு சக்தி இதிலிருந்து கிடைக்கிறது. அப்படியானால் இந்திரியங்களால் உணர முடியாத ஒரு சக்திதான் இது எனத் தெரிகிறது. எதுபோல் என்றால் மின்சாரம் கருவிகளை இயக்குகிறது. அதனால் நாம் ஒளியைப் பர்க்க முடிகிறது, ஒலியைக் கேட்க முடிகிறது. ஆனால் இந்த ஒளியும் ஒலியும் தரும் மின்சாரத்தைக் காணவோ கேட்கவோ முடிகிறதா? ஏன்? மின்சாரம் மூலகாரண வஸ்துவானதால் அதை இந்த உபகரணங்களால் உணர முடியாது. உணரும் சக்தியே அது. அதை உணர முடிவதில்லை. அதேபோல் நம் இந்திரியங்கள் இந்த சக்திக்குட்பட்டதால் அவைகளால் இதை உணர முடியாது (Unmanifest). ஒரு மாமரத்தைப் பார்க்கும்போது அதன் அடிவேர், தடி, கிளைகள், இலைகள், பழம் முதலியவன தெரிகின்றன. ஆனால் ஒரு மாம்பழக் கொட்டையைத் திறந்து பார்த்தால் அதில் இவைகள் தெரிவதில்லை. மாம்பழக் கொட்டையிலிருந்து மரம் இலைகள் பழம் தோன்றினாலும் அந்த மாம்பழக் கொட்டையில் அவை தெரிவதில்லை. அவை முழு உருக்கொண்டால்தான் தெரியும். ஆனால் அந்த மாம்பழக் கொட்டை மாமரத்தின் மூலமேதான். அதேபோல், இந்த உலகத்திற்கும் நமக்கும ஆதாரமாகிய அந்த மஹத் சக்தியை நம்மால் நம் இந்திரியங்காள் மூளம் உணர முடியாது.மூளை இந்திரியங்கள் கொணரும் விஷயங்களைத் தரம் திரித்து சிந்திக்கிறது. இந்த மூளைக்கும் ஆதாரம் இந்த சக்தி. அதனால் சிந்தனையாலும இதை அறிய முடியாது (Unthinkable). மனதின் தன்மை எப்பொழுதும் சஞ்சலமாகத் திகழ்வது. அதாவது விசாரக்கோர்வையால் மாறிக்கொண்டே இருப்பது. இந்த மனதிற்கும ஆதாரமானது இந்த சக்திதான். அதனால் அது (Unchangeable).
இப்படி ஆதாரபூர்வம் தெளிவுபடுத்தும் விதத்தை விஞ்ஞானரீதி கையாளுகிறது. அதைத்தான் பகவானும் இங்கு கையாளுகிறார். ஏனெனில், புரியாத வஸ்துவைப் புரிய வைக்க உதாரணத்தால்தான் முடியும். நமக்குத் தெரிந்த வஸ்துக்களின் தன்மையை வைத்து சுட்டிக்காட்டுவது வழக்கம். ஆனாலும் இதைப் புரிந்துகொள்வது கடினம். அதற்கு விவேகம் (சூக்ஷ்மபுத்தி) தேவை. இப்படித் திகழும் பரமாத்ம தத்துவத்தைப் புரிந்துகொண்ட பின் ஒருவன் நம்மால் அழியப்படுகிறது அல்லது நாம் அழிக்கிறோம் என்ற பாவனை கொள்வானோ? அழிவைப் பற்றிக் கவலைப்படுவானோ? ஏன்? நாமும் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் அழிவில்லாத, மாற்றமில்லாத, நித்தியமான, சலனமில்லாத, புராதனமான, அறிந்துகொள்ள முடியாத, உணர முடியாத, அந்தப் பரம்பொருளின் அம்சம். அதனால் அழிவு என்பது ஏது என்ற ஞானோதயம் வந்துவிட்டால் இதைப்பற்றிக் கவலைக்கிடமில்லையே எனப் பொருள். இப்படி அர்ஜுனன் உணர்ந்தால்தான் அவன் கலக்கம் தீரும். தன் சுயதர்மத்தை உணர்ந்து செயல் புரிவான் என பகவான் கருதினார்.
ஹரி ஓம்
தொடரும்...
அத்தியாயம் 2 பாகம் 3
அத்தியாயம் 2 பாகம் 5
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














