Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 11
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

பித்ரு வாக்ய பரிபாலனம் - 4

Narasimha - image: Wikipedia

அருமை செல்வங்களே,

பித்ருவாக்ய பரிபாலனம் பற்றி நான்கு கட்டுரைகளை பார்த்தீர்கள். அதில் பிள்ளைகள் தாய் தந்தை சொல் தட்டாமல் நடப்பதின் பலனைக் கண்டீர்கள். 4-வது கட்டுரையில் பித்ருவாக்ய ப்ரிபாலனமா அல்லது பித்ருவாகுய லங்கனமா என ஆராயக்கூடிய ஒரு கருத்தையும் பார்த்தோம். அதில் எப்படிப் பார்த்தாலும் அது பித்ருவாக்ய பரிபாலன்ம்தான் எனக் கண்டோம். ஆனால் இதற்கு விதிவிலக்கு ஒன்றைப் பார்க்க வேண்டும். பித்ருவாக்யம் தார்மீகமாக இருந்தால் அதை ஏற்றுச் செய்ய வேண்டும். ஆனால் அது அதர்மமாக அல்லது சாஸ்த்திர விரோதமாக இருந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும் எனபதுதான் அந்த விதிவிலக்கு. அதென்ன என்று பார்ப்போமா?

ஹிரண்யகசிபு என்ற ஒரு அரக்கன் அசுர குல ராஜாவாக இருந்தான். அவன் சகோதரனான ஹிரண்யாக்ஷன் என்பவனின் அட்டகாசம் தாளாமல் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணு அவனை சமஹாரம் செய்தார். அன்று முதல் ஹிராண்யகசிபு விஷ்ணுவைத் தன் சத்ருவாகக் கருதி அவரை துஷிக்கத் துவங்கினான். அவன் பிரஹ்மனை நோக்கிக் கடின் தவம் செய்து தனக்கு இறவா வரம் வேண்டும் எனக் கோர பிரமா சொன்னார். அதைத் தரத் தமக்கு இயலாது. ஏனெனில் தாமே இறப்பவர்தான். ஆதலால் இதைத் தவிர வேரெதுவும் கேள் எனச் சொல்ல, அவனும் பெகு சாமர்த்தியமாகக் கேட்பதாக நினைத்து இப்படிக் கேட்டான்:

என்னை மனிதரோ மிருகமோ கொல்லக்கூடாது.
எனக்கு இரவிலோ பகலிலோ சாவு வரக்கூடாது.
உள்ளிலோ புறமோ சாவு நேரக்கூடாது.
பூமியிலோ ஆகாயத்திலோ சாவு நிகழக்கூடாது.
எந்தவித ஆயுதத்தாலும் எனக்கு சாவு வரக்கூடாது.

இபபடிக் கேட்டதில் தான் நினைத்தபடி ஒருபோதும் சாவு வராது என நினைத்தான். பிரஹ்மனும் அப்படியே என வரம் தந்தார். அன்று முதல் எல்லா உலகிலும் அவன் ஆட்சி புகுந்துவிட்டது. தேவர்கள் விரட்டப் பட்டார்கள். தெய்வம் ஒன்று இல்லை என நாஸ்திகவாதம் புரிந்து ஆலயங்களை அழித்தான். எல்லோரும் தன்னைப் போற்ற வேண்டும், யாரும் இறைவனை, அதுவும் விஷ்ணுவை வணங்கக் கூடாது என அட்டகாசம் செய்தான்.

அவனுக்கு ஒரு ம்கன் பிறந்தான். அவன் தாய் வயிற்றில் இருக்கும்போது, நாரத மஹரிஷி அவளுக்கு விஷ்ணு புராணக் கதைகள் சொல்லிவந்தார். அதை கர்ப்பாத்திலுள்ள சிசு கேட்டு அதில் மூழ்கிவிட்டது. குழந்தை பிறந்ததும் அதர்க்கு பிரஹ்லாதன் என நாமதேயம் இட்டனர். அது வளர்ந்து குருகுலம் சென்று வித்தை கற்கத் துவங்கியது. அங்கு எல்லோரும் இறைவணக்கத்திற்கு ஹிரண்யகசிபுவே நம: எனச் சொல்ல வேண்டும். அப்பொழுது பிரஹ்லாதன் நாராயணாய நம: எனச் சொல்வான். இதை குரு ஹிரண்யனிடம் சொல்ல அவர் குழந்தையை அறிவுரை சொல்லித் திருத்தப் பார்த்தார். அவனோ எல்லோருள்ளும் இருப்பது நாராயணன்தான், அவனில்லையேல் ஒரு அணுவும் அசையாது என அப்பனுக்கே உப்தேசம் செய்ய ஆரம்பித்தான். இதைக் கேட்ட ஹிரண்யககசிபு பிரஹ்லாதனை ஹிம்சிக்கத் துவங்கினான். ஒரு சமயம் குருகுலத்தில் குரு இல்லாதபோது, குழந்தைகளை அழைத்து நாராயண மந்திரத்தை சொல்லச் சொல்லி அவர் கதைகளைப் புகட்டினான். இதில் சினம் கொண்ட குரு ஹிரணயகசிபுவிடம் முறையிட, அவன் பிரஹ்லாதனை பல விதத்தில் ஹிம்சை செய்தான். விஷம் தந்தான், பாம்பை ஏவி விட்டர்ன், யானையால் மிதிக்கச் செய்தான், மலை உச்சியிலிருந்து எறியச் செய்தான், அக்கினியில் இட்டுப் பார்த்தான். எப்பொழுதும் சிறிதும் கலங்காமல் சிறுவன் நாராயண நாமத்தைச் சொலலிவந்தான். ஸ்ரீமன் நாராயணன் அவனை எல்லா சோதனைகளிலுமிருந்தும் காப்பாற்றினார்.

இப்படி ஒன்றிலும் பிரஹ்லாதனை திருத்தவோ கொல்லவோ முடியாமல் சினம் கொண்டு ஒரு நாள் பிரஹ்லாதனை அழைத்து “நாராயணன் எனச் சொல்கிறாயே. அவன் எங்கிருக்கிறான்?” என வினவ, பிரஹ்லாதனும் “அவர் எங்கும் இருப்பார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” எனக் கூறினான். இதைக்கேட்டு சினம் கொண்ட ஹிரண்யகசிபு, “இந்தத் தூணில் இருப்பானா” எனன வினவ, பிரஹ்லாதனும் தயங்காமல் த்ருடமாக, “ஓ, இருப்பார்” என கூறினான். அப்படியானால் அவனை நான் வதம் செய்கிறேன் என ஹிரண்யகசிபு, தன் கதாயுதத்தை எடுத்து அந்தத் தூணை வெட்டினான்.

அப்பொழுது, எல்லோரும் பயப்படும்படி ஓர் உறுமல் சப்தத்துடன் அந்தத் தூணைப் பிளந்து ஒரு சிம்ஹ முகத்துடனும், மனித உடலுடனும் கூடின உருவம் நாலு கைகளுடன் குதித்து ஹிரண்யகசிபுவை இழுத்து மடிமேல் வைத்து வாச்ல்படியில் அமர்ந்து, தன் நகங்களால் வயிற்றைக் கீறி அவனை வதைத்தது. அப்பொழுது சந்தியா சமயம். அந்த உருவம்தான் நரசிமஹ அவதாரம். இப்படி ஹிரண்யகசிபு கேட்டபடி, மனிதனோ, மிருகமோ அல்லாமல் (இரண்டுமாய்), உள்ளோ புறமோ இல்லாமல் (வாசல்ப்டியில்), பகலோ இரவோ இல்லாமல் (சந்தியா சமயம்), பூமியிலோ ஆகாயத்திலோ இல்லாமல் (தன் மடியில்) ஆயுதமில்லாமல் (நகங்கள்) அவன் வதிக்கப்பட்டான். பிறகு நரசிம்மனின் சினம் தீர தேவர்கள் பிரஹ்லாதனை அனுப்பி அவரை சாந்தப்படுத்தினார்கள். பகவான் விஷ்ணுவின் அவதாரமான் நரசிமஹன் பிரஹ்லாதனை அணைத்து உச்சி முகர்ந்து அவனுக்குப் பாட்டாபிஷேகம் செய்தார்.

Narasimha - image: Epic India

இது பித்ருவாக்யத்தை லங்கனம் செய்வதாகாதா? ஆம். பிரஹ்லாதன் பித்ருவாக்ய லங்கனம் செய்தான். ஏன்? தந்தை அதர்மத்தை கையாண்டான். தன்னையும் அவ்வழி செல்லத் தூண்டினான். சாஸ்த்திர விரோதமான தந்தையின் கட்டளையைக்கூடப் பின்பற்ற வேண்டாம் என சாஸ்த்திரம் பறை சாற்றுகிறது. தெய்வ நிந்தனை சாஸ்திர விரோதம். இதுதான் பித்ருவாக்ய பரிபாலந்த்தின் விதி விலக்கான தத்துவம்.

குழந்தைகளே, தெய்வத்தையோ, குருவையோ இழிவுபடுத்தும் செயலில் இறங்கக் கூடாது. அது தந்தை சொல்லானாலும் தவிர்க்க வேண்டும் என்ற நீதியைக் கடைபிடிக்க வேண்டும்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 10 கடிதம் - 12

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button