தாயென்று கும்பிடடி பாப்பா
- வாழும் முறைமை - கடிதம் 10
அசலம்
ராமாயணத்தில் ராமன் வனவாஸாம் போக, பரதன் நாடாள வேண்டும் எனக் கைகேயி சொல்ல, தசரதன் ஒன்றும் சொல்லாமல் மூர்ச்சையாகி விழுந்தார். தசரதன் சொல்லவில்லையானாலும், பிதா தாய்க்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தாய் சொற்படி வனவாஸம் சென்றார் ராமன். இது கைகேயியின் புத்திரன் பரதனுக்குத் தெரியாது. அவன் அவனுடைய தாய்மாமன் வீட்டில் இருந்தான் அப்பொழுது. அவனை வரவழைக்க ஆளை அனுப்பினாள் கைகேயி. அவனும் வந்து நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு, தாயிடம் சினம் கொண்டான். என்னையும் சத்ருக்னனையும் விட கண்ணிலுண்ணியாக ராமனை வளர்த்த நீயா இப்படி துர்புத்தியளாகிவிட்டாய்? ராமன் முதல் பிள்ளை, அவனுக்குத்தான் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். அதுவே முறை, தர்மம். அதை விடுத்து ஏன் இப்படி ஸ்வார்த்த புத்தியைக் காண்பித்தாய்? நீயும் ஒரு தாயா? என்று சினம் கொண்டான். அவனுக்கு ராமனிடம் அவ்வளவு பிரேமை.
தசரதன் இறந்துவிட்டார். பிதாவுக்கு ஈமக் கடன்கள் செய்து, அயோத்தியா ஜெனங்களுடன் காட்டிற்குச் சென்று, ராமனைத் திரும்ப அழைத்து வரக் கிளம்பினான். சித்ரகூடத்தில் இருந்த ராமனைக் கண்டு, தந்தையின் மறைவைப் பற்றிச் சொல்ல ராமனும், ஸீதையும், லக்ஷுமணனும் மிக வருந்தி, தந்தைக்கு ஈமக் கடன்களைச் செய்தனர். பரதன் தன் தாயாரின் தவறை மன்னித்து, திரும்ப அயோத்தியை வந்து பட்டாபிஷேகம் செய்துகொள்ள வேண்டுமெனக் கோரினான். ராமன் அவனை சமாதானப்படுத்தி, பித்ருவாக்ய பரிபாலனத்தின் தர்மத்தைப் பற்றி ஓதி, 14 வருடம் ராஜ்யத்தை ஆளுமாறு கூற, பரதன் அதை மனமாற ஏற்காவிட்டலும், தமையன் பேச்சைத் தட்ட மனமில்லாமல், அவர் பாதுகையைத் தரக் கோரினான். ராமனின் பாதுகையை (மிதியடிகள்) எடுத்து வந்து, நந்தி கிராமத்தில் இருந்து, அந்தப் பாதுகையை ஸிம்மாசனத்தில் வைத்து பூஜித்து, ராமனின் பிரதிநிதியாக ராஜ்யம ஆண்டுவந்தான்.
மற்றொன்று: பரதன் செய்தது பித்ருவாக்ய பரிபாலன்ம் தான் என மற்றொரு ரீதியில் சொல்லலாம். தந்தை மறைந்த பின் தமையன் பித்ருதுல்யம் என ஒரு நியதி உண்டு. அப்படித் தந்தை மறைவிற்குப்பின் ராமன் பித்ரு துல்யம். அவரை அழைக்கச் சென்ற பரதன் ராமன் சொற்படி நடப்பதே பித்ருவாக்ய பரிபாலன்ம் தான். ஆனாலும், தான் ஸ்வயம் ராஜ்ய பரிபாலன்ம் செய்யாது, ராமனின் பிரதிநிதியாகச் செய்ய அவர் பாதுகையை ராமன் ஸ்தானத்தில் வைத்து, ராஜ்ய பரிபாலன்ம் செய்தான். எப்படிப் பார்த்தாலும் பித்ருவாக்ய பரிபாலனம் என்ற நியதியை பரதன் செய்தான், அவன் பித்ருவாக்ய லங்கணம் செய்யவில்லை என்றே புரிகிறது.
எப்படிப் பார்த்தாலும், தார்மீகமாக உள்ள பித்ருவாக்யத்தை நாம் சிரமேற்கொண்டு பணிபுரிய வேண்டும். அதர்மமாக இருந்தால் அதைத் தள்ளிக் களைய வேண்டும். இப்படி அதர்மமாக உள்ள பித்ருவாக்யம் ஏது என அடுத்த மடலில் பார்ப்போம்.
எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.
அன்புடன்
உங்கள் அசலம
ஓம்
அருள் வாக்கு
Date: 11 February 2007
கடிதம்
From
அசலம்
பித்ரு வாக்ய பரிபாலனம் - 3
அருமை செல்வங்களே,
Achalam.com
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















