Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 2, அர்ஜுன விஷாத யோகம் - பாகம் 3

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோSந்தஸ்த்வ்ன்யோ:ததவதர்சிபி:

ஸ்லோகம் 16: கேளுங்கள்

ஸாரம்:

அஸத்திற்கு இருப்பு என்றொன்று இல்லை. ஸத்திற்கு இருப்பில்லாமலில்லை (அதாவது ஸத்தியம் நித்திய வஸ்து, அஸத்தியம் அனித்திய வஸ்து). இதைப் பற்றிய அறிவு ஞானிகளுக்கு (ஸத்தியத்தை உணர்ந்தோர்க்கு இருக்கிறது)

விளக்கம்:

இந்த ஸ்லோகம் வாழ்வில் வரும் கஷ்ட நஷ்டங்களையும், பலதரப்பட்ட அனுபவங்களையும் கண்டு மனம் தளராக்கூடாது, அதை தைர்யமாக எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கிறது. மன நிம்மதியின் காரணம் நம் அனுபவங்களை சிந்தனாசக்தியினால் (புத்திகூர்மை) பகுத்தறிவதுதான் என வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. வேதாந்தத்தில் நித்திய அனித்திய வஸ்துக்களைப் பற்றி மிக எளிதாக தரம் திரித்துத் தந்திருக்கிறார்கள் நம் யோகிகள். அவர்கள் இவைகளின் வித்தியாசத்தை நன்கு உணர்தவர்கள்.

நித்திய வஸ்து எனபது ஏது? பிற்காலத்திலும், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் ஏதொரு வஸ்து நிலைத்திருக்கிறதோ (மாறுதலில்லாமல் இருக்கிறதோ) அது தான் நித்திய வஸ்து. ஏதொன்று காலப்போக்கில் மாறுகிறதோ அது அனித்தியம். இருட்டினில் நாம் ஒரு பேயைப் பார்க்கிறோம். அதைக் கண்டு பயம் கொள்கிறோம். ஆனால் வெளிச்சத்தில் அதைப் பார்க்கும்போது அது ஒரு கம்பம்தான், பேயில்லை என உண்ர்கிறோம். அப்பொது, பேய் நித்தியமா, கம்பம் நித்தியமா? புத்தியால் உணர்ந்தால் கம்பம்தான் இருக்கிறது. அதுதான் உண்மை. பேய் என்பது நம் மனப்பிராந்தியால் உருவான ஒரு காட்சி. அது மனப்பிரந்தியே ஒழிய, நிஜமல்ல என விளங்குகிறது. அதேபோல் ஸ்வப்பனத்தில் நாம் மலை உச்சியிலிருந்து குதித்து மரணமடைவதாகக் காண்கிறோம். நினைவுலகத்திற்கு வந்தபொழுது, அது வெறும் ஸ்வப்பனம்தான், நிஜமில்லை என புத்திபூர்வமாக அறிகிறோம். இதிலிருந்து என்ன விளங்குகிறது? ஸ்வப்பன அனுபவம் அநித்தியம் (பொய்), சுயநினைவுடன் இருப்பது நித்தியம் (நிஜம்) அல்லவா? இப்படி நித்திய அனித்திய வ்ஸ்துக்களைத் தரம் திடித்து அறிபவர்கள் ஞானிகள்.

இப்பொழுது புரிகிறதா, “அநித்தியம் ஒருகாலமும் இராது, நித்தியம் எப்பொழுதும் உள்ளது” என்று? புறமுகமாகப் பார்க்கும்போது, ஒரு சராசரி மனிதனுக்கு வேதாந்த தத்துவங்கள் ஒரு விரிவான ஒன்றுமில்லாதவை எனத் தோன்றும். ஆனால் அதை நம் வாழ்ககையில் கடைபிடித்துப் பார்த்தால் புத்திபூர்வமாக சிந்தித்தால் அதன் சத்தியம் புலப்படும். நம் வாழ்ககையில் நிகழும் ஒவ்வொரு அனுபவங்களும் மாறக்கூடியவை. நம் மூன்று நிலைகளிலும் (ஜாக்ர, ஸ்பன, ஸுஷுப்தி) வரும் அனுபவங்கள் மாறக்கூடியவை. நம் உடல், மனம், புத்தி இவைகளும் மாற்றத்திற்குட்பட்டவைதான். ஆகையால் இவைகள் அநித்தியம் தான் என புத்தி பூர்வகமாகவேனும் அறியலாம்.

ஆனாலும், இப்படி மாறும் தன்மையுடைய வஸ்துக்களுக்கு ஆதாரமாக, அடிஸ்தானமாக ஒன்று என்றும் மாறாமல் இருக்க வேண்டும். இல்லையேல் இந்த மாற்றங்கள் எங்கு நிகழும்? ஒரு நதியில் ஜெலம் ஒழுகுகிறது. அதற்கு நதியின் அடித்தளத்தில் மாற்றமில்லாமல் இருக்கும் நிலம் இல்லையேல் ஒழுக்கு எங்கிருந்து வரும்? ஒழுக்கிற்கு ஆதாரமாக நதியில் அடித்தளம் மாறாமல் இருப்பதால்தான் வெள்ளத்தில் ஒழுக்கு நமக்கு மேலே தெரிகிறது. ஆனால் அடித்தளம் தெரிவதில்லை. அதேபோல், நமது வாழ்க்கையில் வந்து போகும் அனுபவங்களின் மாற்றம் அதற்கு ஒரு அடிஸ்த்தானம் இல்லையேல் நிகழாது. அந்த அடிஸ்த்தானம் ஏது? வாழ்க்கை என்பது அநித்தியமாக என்றும் மாறக்கூடிய அனுபவத் தொடர்கள் ஒன்று திரண்டு ஒரு முழு நிகழ்சிசியாகத் தெரிவதுதான். இதற்கு ஒரு ஆதாரம் தேவை. மாற்றங்கள் நிகழ மாற்றமில்லாத ஒரு அடித்தளம் தேவை. இதை புத்திபூர்வமாகப் பார்க்கும்பொழுது, நம் வாழ்வின் ரகசியம் நம்முள் உள்ள ஒரு சக்தி தான் எனப் புரிகிறது. அது என்றும் எக்காலத்திலும் மாறாமல் இருப்பதால் தான் நம் மாறும் அனுபவங்களாகிய வாழ்க்கை நம்க்கு விளங்குகிறது. அதுதான் நித்தியம். அது ஏது? இதைத்தான் ஞானிகள் ஆத்மா எனக் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு ஸ்திரமான ஒளி (Consicousness), ஜீவன் (Life), ஆத்மா (Self) எனச் சொல்கிறார்கள்.

இந்தத் தத்துவத்தை யோகிகள், ஞானிகள் நன்கு உணர்ந்தவர்கள். நித்திய அனித்திய வஸ்த்துக்கள் அவைகளுடைய புதிரான நிலைகளால் உலகம் என்ற ஒரு நிலையில் நமக்குத் தெரிகின்றன. இப்படி உலகில் உள்ள நித்திய அநித்திய வ்ஸ்த்துக்களை வகைதிரித்து அறிவதுதான் விவேகம் எனப்படுவது.

அவினாசிது தத்வித்தி:யேன ஸர்வமிதம் ததம்
வினாசமவ்யயஸ்யாஸ்ய நகஸ்சித் கர்த்துமர்ஹதி

ஸ்லோகம் 17: கேளுங்கள்

ஸாரம்:

ஏதொன்றினால் இந்த மிகப் பரந்து கிடக்கும் அழியக்கூடிய வஸ்த்துக்கள் உள்ளனவோ அதை அழிவில்லா வ்ஸ்து என ஆரிந்துகொள். ஒன்றினாலும் இதை (அழிவில்லா வஸ்துவை) அழிக்க முடியாது.

விளக்கம்:

முன் ஸ்லோகத்தில் நித்திய அநித்திய வ்ஸ்த்துக்களைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணன் அருஜுனனுக்குச் சொன்னார். அப்படியானால் புத்திமான்களுக்கு, இந்த உலகம், மாறக்கூடிய வ்ஸ்துக்களால் நிறைந்தது, அவை நாசம் உடையவை என்று புரியும். அப்படியானால், அழிவில்லாத, நித்தியமாக உள்ள வஸ்து ஏது என பகவான் வலியுறுத்துகிறார். இங்கு.

ஏதொன்று உலகில் எல்லாவற்றையும் தாங்கிக்கோண்டிருக்கிறதோ, எதனால் இந்த அநித்திய வஸ்துக்கள் திகழ்கின்றனவோ அதுதான் நித்திய வஸ்து எனக் கூறுகிறார். மண்பானைகள் பல இருக்கிண்றன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு உருவில், ஒவ்வொரு பிரத்தியேக உபயோகத்திற்காக அமைந்தவை. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான பொருள்களாக இருந்தாலும் அவை எல்லாவாற்றிம் இருப்பது மண்தானே? அவைக்கு அடிஸ்த்தானம் மண் தானே. அவை உடைந்து போகும்போது, மீண்டும் மண்ணோடு மண்ணாகத் தானே சேர்கிறது. அவை உருவாகும் முன்னும், உருவாகியிருக்கும் பொழுதும், உடைந்து போன பொழுதும் அவை எப்பொழுதும் மண்ணாகத்தானே திகழ்கின்றன. மண் நாசமாகிறதோ? அவைகளிலுள்ள இந்த மண் நித்தியம். அவைகளின் தோற்றம், உரு, நிறம், வடிவம், பேர்கள் எல்லாம் அழியக்கூடியவைதானே? அதுபோல் தான் நம் ஜீவிதமும். அதில் வரும் அனுபவங்கள் எல்லாம் அழியக்கூடியவை, மாறக்கூடியவை. கௌமாரம் இறந்து யௌவனம் வருகிறது, யௌவனம் அழிந்து வார்த்தக்யம் நிகழ்கிறது. ஆனால் இந்த எல்லா நிலைகளிலும் சாஸ்வதமாக இருப்பது உயிர் அல்லது ஆத்ம. அதனால் இந்த மாற்றமில்லாத உயிர் (ஆத்மா) இந்த மாற்றங்களுக்கு ஸாக்ஷியாக எல்லா நிலைகளிலும், எல்லாக் கால்ங்களிலும் இருப்பதால் இது அழியா வ்ஸ்து, நித்தியம். மற்றெல்லாம் அநித்தியம். ஆதலால் இதை யாராலும் அழிக்க முடியாது. சங்கர பகவத்பாதாள் இதை ஈஸ்வரனாலும் அழிக்க இயலாது எனக் கூறுகிறார்.

அப்ப்டியானால் இந்த நித்தியமல்லாத அழிவு நிலையில் இருக்கும் அஸத்தியம் என்பது ஏது? பார்ப்போம்.

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண:
அனாசினோSப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத

ஸ்லோகம் 18: கேளுங்கள்

ஸாரம்:

இந்த உடலுக்குடையோனுடய உடல்கள் அழியக்கூடியவை எனச் சொல்கிறார்கள். (ஆனால்) இந்த உடலுக்குடயவன் (ஆத்ம) அழிவில்லாதது, (புத்தியால்) அறிய இயலாதது, நித்தியம். ஆதலால் ஓ பரத! ஏதிர்கொள் (யுத்தம்செய்)

விளக்கம்:

பஞ்சபூதங்களாலான வெளியில் தெரியும் உடல், மனம், புத்தியாகியவை அதன் அழிவில்லாத, மாறாத, அறிய இயலாத உள்ளிருப்பவனின் அழியக்கூடிய, மாறக்கூடிய, எந்திரங்களே. இது அந்த அழியா வஸ்துவின் நித்திய, சத்தியத் தன்மையை உணர்த்துகிறது. அழிக்க முடியாத, மாறாத என்று ஏன் இரண்டு பதங்கள் தந்துள்ளார்கள்? இரண்டும் ஒரே அர்த்தம்தானே என வினவலாம். இதற்கு ஆதிசங்கரர் சொன்னது: “மாறுவது என்றால் முழுதாக மாறுவது அல்லது ஒரு பாகம் மாறுவது அல்லது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது எனப் பொருள். நம் நிலை பால்யம் நசித்து யௌவனம், அதுபோய் வார்த்தக்யம் என மாறுகிறது. இது முழு மாற்றமில்லை. ஆனால் தேகம் இறப்பிற்குப் பிறகு முழுமையாக மாறுகிறது (சாம்பல்) என்ற இரண்டையும் குறிக்கும்படி அமைந்துள்ளது.

அதேபோல் அறிய முடியாதது என்றால், நமக்கு அறிவிற்கு உதவுவது இந்த ஆத்ம ஓளி. அது நம் கிரஹண யந்திரங்களில் புகுந்து அறிவைப் புகட்ட உதவுகிறது. ஆதலால், இந்த அறியும் கருவிகளான, பஞ்சபூதங்களால் உண்டான உடல், மனம், புத்தி இவையால் இந்த அறிவின் இருப்பிடமான ஆத்மா ஆறிவை உணர முடியாது எனப் பொருள். நித்திய வஸ்துவை அனித்திய வஸ்துக்களால் அறிய முடியாது. அதை அறிவது தன் நிலையில் தானாகவே இருப்பதுதான் எனப் பொருள்.

அழிக்க முடியாதது என்றால், பஞ்சபூத நிர்மிதமான இந்த உடல், மனம், புத்தியால் ஆன நம்மால் அதை அழிக்க முடியாது. ஒன்றுக்கும் கட்டுப்பட்டதல்ல இந்த ஆத்மா. அது தானாகவே விளங்கும் ஒரு பரமாத்ம தத்துவம். அதற்கு மாற்றமோ,அழிவோ, இல்லை எனப் பொருள்.

வெதாந்த தத்துவப்படி ஒருவருக்கும் தீங்கு இழைக்கலாகாது, ஒன்றையும் நாசம் செய்ய கூடாது என இருக்கும்போது, எப்படி அர்ஜுனனை கிருஷ்ணன் யுத்தம் செய் என்பார்? அதில் அழிவு இல்லயா? இப்படி அர்த்தம் கொள்ளக்கூடாது. பஞ்சபூதங்களாலான உடல் அழிவது நிச்சயம். அந்த அழியும் வஸ்து அதர்மத்திற்கு உதவுவதால் அதை அழிப்பது பாபமில்லை. தார்மீகமாக ஒன்றை அழிக்கக்கூடாது. ஆனால் இங்கு பாரத யுத்தத்தில் கௌரவர்கள் அதர்ம வழியில் செல்கிறார்கள். ஆதலால் தர்மத்தை நிலைநாட்டுவதே ஒரு க்ஷத்திரியனின் கடமை. அதைச் செய் என்கிறார் கிருஷ்ணன். அதர்மத்தை அழிப்பது தர்மத்தின் கொள்கை. அது பாபமாகாது. பகவானே பல காலத்தில் பல உருவில் வந்து தர்ம பரிபாலனத்திற்காக அசுரர்களை அழிக்கவில்லயா? கூடாது, ஒரு க்ஷத்திரியனின் தர்மம் யுத்தம் செய்து தர்மத்தை நிலை நாட்டுவதே. அந்த ஸ்வதர்மத்திலிருந்து நழுவாதே எனப் பொருள்.

இந்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: “அநித்தியமான இந்தப் பிரபஞ்சத்தை, உடலை, நித்தியமாகக் கருதாதே, தர்மத்தை நிலைநாட்ட இந்த அநித்திய வ்ஸ்துக்களை நாசம் செய்வதில் தளராதே. தர்மத்தை நிலை நாட்டச் செய்யும் போர் அதர்மம் ஆகாது. தர்மவழி செல்” என்பதுதான்.

யஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம்
உபௌதௌ நவிஜானீதோ நாயம் ஹந்தின ஹன்யதே

ஸ்லோகம் 19: கேளுங்கள்

ஸாரம்:

அழிப்பவனும், அழிக்கபபடுபவனும் இந்த ஆத்ம என கருதும் இரண்டுதரத் தாரும் அறிவதில்லை “ஆத்ம அழிக்கிறதில்லை அழியப்படுவதில்லை” என்.

விளக்கம்:

முற்காலத்திலும ஏதொரு தத்துவம் சொன்னாலும் அதை நிரூபிப்பது அவசியம்தான். இன்றைய இளைஞர்கள் புத்திபூர்வகமாக அலசிப்பார்ப்பதற்கு உகந்தபடி வேதாந்த தத்துவங்களைச் சொன்னால்தான் ந்ம்புவார்கள். பகவான் கிருஷணனை ஒரு அவதாரம் எனக் கருதும் நாம் அவர் சொல்வதில் நமபிக்கை வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஸ்லோகத்தில் கதோபநிஷத்திலிருந்து ஒரு மந்திரத்தை எடுத்துரைக்கிறார் கிருஷ்ணன். அது சொல்வது என்ன வென்றால்: "நம் ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் எனப்படும் 10 அவயவங்களையும், மனதையும் புத்தியையும் பிரகாசிக்கச் செய்யும் சக்தியான ஓளி (Consicousness) என்றும் நிலை நிற்பதாகும். அதற்கு அழிவில்லை. அது யாராலும் அழிக்கப்பட மாட்டா, அது யாரையும் அழிக்காது" என்ற தத்துவத்தை இங்கு கதோபநிஷத்திலிருந்து எடுத்துத் தந்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். சுருங்கச் சொன்னால் "ஆத்மா அழிவில்லாதது, யாராலும் அழிக்க முடியாதது, அது யாரையும் அழிக்காது. அது ஸ்வயம் பிரகாசித்து உலகுக்கு உயிர் தருகிறது." என்று கொள்ள வேண்டும்.

நஜாயதே ம்ரியதேவா கதாசின்னாயம் பூத்வா பவிதா வா நபூய:
அஜோ நித்ய:சாச்வதோSயம் புராணோ நஹந்த்யதே ஹன்யமானே சரீரே

ஸ்லோகம் 20: கேளுங்கள்

ஸாரம்:

அது பிறப்பதில்லை, அது அழிவதில்லை, அதன் இருப்பு நிலையிலிருந்து அது இல்லை என்றாவதில்லை. பிறப்பற்ற, இறப்பற்ற, மாற்றமில்லாத, புராதனமான நித்திய வஸ்து. உடல் அழியும்போதும் அழியாது நிறபது. (அதுதான் ஓளி - Consicousness).

விளக்கம்:

இங்கு அழியக்கூடிய வஸ்த்துக்களின் தன்மையை விளக்கி அது ஒன்றும் ஆத்மாவை பாதிக்காது. ஆத்மா அதற்கெல்லாம் விதிவிலக்கு என உறுதிப்படுத்துகிறார். உடல் வாழ்க்கை, பிறப்பு, இருத்தல், வளர்தல், அழுகுதல், வியாதி, மரித்தல் போன்ற பாதைகளுக்குடப்பட்டது. காரணம் அவை நித்திய வ்ஸ்துக்களல்ல. மாறிக்கொண்டே இருப்பவை. ஏதொன்று உதிக்கிறதோ அது மறைய வேண்டும், ஏது மாறுகிறதோ அது அனித்தியம் என்று நியதி. ஆனால ஆத்மாவுக்கு மாற்றமோ அழிவோ, இல்லை. அது என்றென்றும் ஒரே நிலையில் நிற்பதுதான். சமுத்திரத்தில் அலைகள் எழுகின்றன. அவை மறைகின்றன. ஆனாலும் சமுத்திரம் எழுவதில்லை, மறைவதில்லை. அதில் ஓடும் ஜெலம் தான் அலைகளால் அலக்கழிக்கப்படுகிறது. அதுபோல், இந்த உடல் உலக சம்பந்தப்பட்டு இயல்பதால் உலகிலுள்ளா தொல்லைகள் அதை பாதிக்கிறது. ஆத்மாவுக்கு இவை பாதகமல்ல.

ஆத்மா சமுத்திரம். அதிலுள்ள அலைகள் ஜீவாத்மாக்களாகிய நாம். சாஸ்வதம் என்ற ஒரு வார்த்தையில் மற்ற உபாதிகள் இல்லை எனப் பொருள் பொதிந்து கிடக்கிறது. உடலுக்குச் சொன்ன ஆறு உபாதிகளும் இல்லை என சாஸ்வதம் என்ற பதத்திற்கு அர்த்தம். சுருங்கச் சொன்னால் "அது (ஆத்மா) பிறப்பதில்லை, அது அழிவதில்லை, அதன் இருப்பு நிலையிலிருந்து அது இல்லை என்றாவதில்லை. பிறப்பற்ற இறப்பற்ற, மாற்றமில்லாத, புராதனமான நித்திய வஸ்து. உடல் அழியும்போதும் அழியாது நிறபது. (அதுதான் ஓளி -Consicousness)". இதிலிருந்து என்ன தெரிகிறது. ஆத்மா அழிவில்லாதது, நித்தியமானது, துவக்கம், அவஸானம் என்ற நிலை இல்லாதது, எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது, எல்லாக் காலங்களிலும் இருப்பது, எல்லாம் வல்ல சக்தி படைத்தது, அது அழிவற்றது, அது ஒன்றையும் அழிக்காதது, ஆனால் அதுவின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பெரும் தத்துவமே.

ஹரி ஓம்

தொடரும்...

அத்தியாயம் 2 பாகம் 2 அத்தியாயம் 2 பாகம் 4

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button