தாயென்று கும்பிடடி பாப்பா
- வாழும் முறைமை - கடிதம் 9
அசலம்
பித்ருவாக்ய பரிபாலனம் என்பதின் கருத்தை சென்ற இதழில் பார்த்தோம். இராமாயணத்தில் ஸ்ரீ இராமன் கடைப்பிடித்த தர்மத்தில் இதுவும் ஒன்று எனப் பார்த்தோம். இதேபோல், இராமாவதாரத்திற்கு முன் பரசுராமாவதாரம் எடுத்தார் மஹாவிஷ்ணு. அவர் தசாவதாரத்தில், ம்த்ஸ்ய, கூர்ம, வராஹ, ந்ரஸிம்ஹம், வாமனன், பரசுராமன், ஸ்ரீஇராமன், பலராமன், க்ருஷ்ணன், கல்கி என்ப் பத்து அவதாரங்கள் எடுத்து துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம் செய்தார். இப்படி ஆறாவதாக எடுத்த அவதாரம் பரசுராமன்.
ரேணுகா தேவி தன் கணவருக்கு உகந்து, அவரை தெய்வமாக மதித்து, அவருக்கு ஏக பத்னியாக இருந்து சேவை செய்துவந்தாள். அவளுக்கு சக்திகள் இருந்தன. அவள் ஆற்றங்கரை மணலை எடுத்துக் குடமாக உருக்கொடுத்து அந்த வேகாத பானையில் ஜலம் கொணர்ந்து ஜமதக்னியின் பூஜைக்குத் தருவது வழக்கம். அப்படி ஒரு நாள் மண் குடம் பண்ணி ஜலம் எடுக்கும் பொழுது, அந்த ஜலத்தில் ஒரு கந்தர்வனின் ரூபம் பிரதிபலித்ததைக் கண்டு மனம் கவரப்பட்டு உற்று நோக்கினாள். அவள் கந்தர்வனை நேரில் பார்க்கவில்லை. அவன் பிரதிபிம்பத்தை தன் கைஜலத்தில் கண்டாள். அவ்வள்வுதான். இதை ஞானத்ருஷ்டியில் பார்த்த ஜமதக்னி அவள் பாதிவ்ருத்தியம் போய்விட்டது, அவளை வதம் செய்யுங்கள் என தன் பிள்ளைகளிடம் கூற, பரசுரமனைத் தவிர மற்ற பிள்ளைகள் தாய்க்குச் சமம் ஒன்றும் இல்லை, அதனால் தாங்கள் வதம் செய்ய மறுத்தார்கள்.
தன் பாபத்தைப் போக்கப் பரசுராமன் தபமிருந்து மழுவை சமுத்திரத்தில் வீசி எறிய, அங்கிருந்து ஒரு நகரம் எழுந்தது. அதுதான் இன்றைய கேரள மாகாணம். இப்படி, பித்ருவாக்ய பரிபாலந்த்தின் மஹத்துவத்தை நிலை நிறுத்தினார் பரசுராம்ன். ஆனாலும் அவருக்குத் தீங்கு வரவில்லை. ஏனெனில் உடனெ வரம் கேட்டு மாதாவை மறுபிறவி கிடைக்கச் செய்தான். பித்ருவாக்ய பரிபாலனத்தில் தீங்கிருந்தாலும் அதற்கு மாற்று கிடைத்துவிட்டது. இதிலிருந்து தெரிகிறதா பித்ருவாகிய பரிபாலன்ம் எவ்வளவு முக்கியம் என்று? இதைத்தான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனக் கூறுகிறார்கள் பெரியோர்கள்.
எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.
அன்புடன்
உங்கள் அசலம
ஓம்
அருள் வாக்கு
Date: 11 February 2007
கடிதம்
From
அசலம்
பித்ரு வாக்ய பரிபாலனம் - 2
அருமை செல்வங்களே,
Achalam.com
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















