Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: kumudham Bakthi special
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 2, அர்ஜுன விஷாத யோகம் - பாகம் 1

அத த்விதீயோத்யாய:

ஸஞ்யௌவாச

தம் ததா க்ருபயாவிஷ்டம அச்ருபூர்ணா குலேக்ஷணம்
விஷீதந்தமிதம் வாக்யம் உவாச மதுஸூதன:

ஸ்லோகம் 1: கேளுங்கள்

ஸாரம்:

யாரொருவன், ரொம்பவும் மனமுடைந்து, தயனீயமாக, கண்களில் நீர்மல்கி, மன்ம் பேதலித்து நிற்கிறானோ, அவனைப் பார்த்து மதுஸூதனன் இவ்வண்ணம் உரை செய்தார் என ஸ்ஞ்சயன் சொன்னார்.

விளக்கம்:

ஸஞ்சயன் மிக அர்த்தம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டு இரண்டு வாக்கியங்களில் முன் அத்தியாயத்தில் விவரிதத அர்ஜுனனின் விஷாத நிலையின் தன்மையை மூலமாகக் கொண்டு மேலே என்ன நடக்கிறது என விளக்குகிறார். ஆசாபாசத்தில் கட்டுண்டு, மனம் உடைந்து, புத்தி பேதலித்து தயனீயமாக, கண்களில் நீர் நிறைந்து செய்வதறியாது, நிற்கும் அர்ஜுனனைச் சித்திரீகரித்திருக்கிறார். எவனொருவன் மனதை அடக்க முடியாமல், தன்னை மனதிற்கு அடிமையாக்கி, குழம்பிப்போய் விடுகிறானோ அவன் செயல் இழந்து, புத்திப்பிரமை பிடித்து குழந்தைபோல செயலற்றுப் போய்விடுவான் என்ற உண்மையை இங்கு காட்டுகிறார் எழுத்தாளர். மனோவிசாரம் ஒருவனை எப்படி நிலைகுலயச் செய்கிறது என்று தெள்ளத் தெளியக் காட்டுகிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

“நாம் எல்லோரும் இந்த உலக வாழ்க்கையில ஆசாபாச பந்தத்தில் கட்டுண்டு நம் சுய நிலை மறந்து, நம் தர்ம வழி தெரியாமல் தத்தளிக்கிறோம். ஏன்? பிரசசினனயை எதிர்கொள்ள பயந்து, அதன் விளைவுகளை நினைத்து வருந்தி, செயல்பட இயலாமல் நம் மனம் நம்மை ஆட்க்கொண்டு அதன் போக்கில் சென்று உழ்லுகிறோம் என்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்.”

ஸ்ரீ பகவான் உவாச

குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அனார்யஜுஷ்டம் அஸ்வர்கயம் அகீர்த்திகரம் அர்ஜன

ஸ்லோகம் 2: கேளுங்கள்

ஸாரம்:

பகவான் உரை செய்கிறார்:

எங்கிருந்து இந்த மனவிரக்தி வந்தது, ஆபத்கரமான, அகீர்த்திகரமான,லஜ்ஜாவஹமான ஸொர்கம் லபிக்காத இந்த நிலை எப்படி வந்தது ஓ அர்ஜுனா!

விளக்கம்:

காலம் காலமாக மித்திரமாக உள்ள அர்ஜுனனின் இந்நிலையைக் கண்டு மிகவும் அதிசயத்துடன் பகவான் அர்ஜுனனைப் பார்த்துக் கேட்கிறார். எங்கிருந்து உனக்கு இந்த ஆபத்திற்கு அறிகுறியான, கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும், லஜ்ஜாவஹமான ஸொர்கம் லபிக்காத மனோ விரக்தி வந்தது? க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர்கள் யுத்த பூமியில் தைர்யததுடன் போர் புரிந்து மரணம் அடைந்தால் ஸொர்கம் கிடைக்கும் என நம்பியுள்ளார்கள். ஒரு ஆர்யன் (வீரன்) எப்பொழுதும் உத்வேகததுடடன் தன் வீரச்செயல்களைச் செய்து கீர்த்தி பெற முன்வருவானே தவிர, மன்ம் உடைந்து செயல்ற்றுப் போகமாட்டான். அப்படி ராஜகுலத்தில் பிறந்து மஹாவீரன் எனப் பேர் எடுத்த அர்ஜுனன் இப்படி நிலைகுலைந்து காணப்படுவது மிக அதிசயமாக உள்ளது என பகவான் கருதுகிறார். மனிதர்கள், மனோ நிலை தெற்றி, விசன்ப்பாட்டு, செய்வதறியாது கலங்கினார்கள் என்றால் அவர்கள் எடுத்துக்கொண்ட காரியம் ஸபலமாகாது என்று பொருள். வீரததைக் கைவிடாது, த்ருட மனத்துடன் எவனொருவன் செயல் புரிகிறானோ அவனுக்கு வெற்றி நிச்சயம். இந்தத் தததுவத்தை நன்கு அறிந்த் அர்ஜுனன் இப்படித் தடுமாறுவதைக் காண வியப்பாக இருக்கிறது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

பிரச்சினைகள் வரும்போது, மனோதைர்யம் அற்று, மனக்கலக்கம் கொண்டு அவைகளை எதிர்கொள்ளாமல் பேடியாயிருப்பது ஸ்ரேயஸ்க்கரம் அல்ல, அது லஜ்ஜாவஹமான நிலை, மிக ஆபத்க்கரமானதும் ஆர்யனுக்குச் சேராததுமான இழிகரமான ஒரு நிலை என்பதுதான்.

க்ளைப்யம் மாஸ்மகம: பார்த்த நைதத்வைய்யுப பத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப

ஸ்லோகம் 3: கேளுங்கள்

ஸாரம்:

அசக்ததைக்கு அடிபணியாதே (ஒரு வீரனான உனக்கு இது உசிதமல்ல. இந்த நீசமான ஹ்ருதய தௌர்பல்யத்தைக் களைந்துவிடு. ஓ பரம்தப (சத்ருக்களை ஒழிப்பவனெ)!

விளக்கம்:

மனிதன் மனோபலம் அற்று, ஹ்ருதயம் துர்பலமாகும்போது, பகவத் சிந்தனை உதித்து, தன்னை பகவானிடம் அர்ப்பணிக்கும்போது பகவத் அருள் பெர்றுகிறான். அப்பொழுது வரும் அருள் மின்னல்போல் அவனைத் தாக்குகிறது. முதலில் நிலைகுலைந்து பிற்கு தெளிவு பெறுவான். அதேபொல், மனம் குழம்பி, புத்தி பேதலித்து, ஆசாபாச பந்தத்தில் உழலும் அர்ஜுனனை ஊக்குவிக்க பகவான் சாட்டையடி தருவதுபோல் அவனை எழச் செய்கிறார். இங்கு கனிவான வார்த்தைகளால் சமாதானம் செய்ய இயலாது. மனோபலம் வர வேண்டுமானால் அவனிடம் உள்ள க்ஷத்திரிய குணத்தை உலுக்கி எழுப்ப வேண்டும். அதற்கு அவன் தௌர்பல்யத்தை எடுத்துக்காட்டிப் பரிகஸிக்க வேண்டும். முதலில் அவன் மன அளவில் தெளிவு பட்டு, புத்தியினால் சிந்திக்கத் துவங்க வேண்டும். ரூபத்தில் ஆணாகவும், மன அளவில் பெண்ணாகவும் உள்ள அவன் நிலையைச் சுட்டிக்காட்டி அவர் தௌர்பல்யத்தைக் களைய வேண்டும். மனிதர்கள் இக்கட்டான நிலையில் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் (Eunech) ஒரு கலவை குணத்துடன் காக்ஷி தருவார்கள். அதுதான் இப்பொழுதைய அர்ஜுனனின் நிலை. ஒரு க்ஷத்திரியனுக்கு வீரம் தான் கவசம். பேடியாகச் செயல் இழந்து நிற்பது அழகல்ல. மனோபலம் மிக அவசியம். ஏனென்றால் பின் வரும் உபதெசத்தைக் கேட்டறிய உகந்த மன நிலை வர வேண்டும். அவனிடம் உள்ள ஆணவத்தை முதலில் எழுப்ப வேண்டும். தன்னை எதிரிடும் சத்ருக்களை ஒழிக்க வீரம் வேண்டும். த்ருடமான் மனநிலை பெற வேண்டும். சிந்தனா சக்தியைத் தூண்டிவிட வேண்டும். அதற்காகத்தான் பகவான் இங்கு வார்த்தைகளால் தாக்குகிறார்.

இதிலுள்ள கருத்து என்ன?

“இக்கட்டான பிரச்சினைகள் நம்மைத் தாக்கும்போது, மனோபலத்துடனும், முழு சிந்தனா சக்திய்டனும் நாம் ஒரு வீரனாக, பிரச்சினைகளுக்கு உகந்த தீருமானங்கள் காண வேண்டுமே தவிர, பயந்து செயலற்று இருக்கக்கூடாது” என்பதுதான்.

அர்ஜுனௌவாச

கதம் பீஷ்மம் அஹம் ஸாம்க்யே த்ரோணம்ச மதுஸூதன
இஷுபி ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹா வரிஸூதன

ஸ்லோகம் 4: கேளுங்கள்

ஸாரம்:

அர்ஜுனன் உரைக்கிறன்:

இப்படி, ஓ மதுஸூதன!, நான் யுத்த்த்தில் அம்பினால், பூஜிப்பத்ற்குத் தகுதியுள்ள பீஷ்மரையும் தரோணரையும் தாக்குவது, ஓ சத்துருக்களை ஒழிப்பவனே!

விளக்கம்:

பகவானின் வார்த்தைகளில் உள்ள பரிஹாசத்தை உணராது, தன் பலவீனத்தைக் காட்டும் வண்ணம் அர்ஜுனன் மீண்டும் வாதிக்கிறான். பூஜாரஹர்களாகிய பிதாமஹன் பீஷமரையும், குரு த்ரோணரையும் எப்படி அம்பால் யுத்த்தில் தாக்கலாம்? இதைக் கேட்ட சராசரி மனிதர்கள் அர்ஜுனன் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது எனக் கருதலாம். மதிர்ப்பிற்குரிய தாத்தாவும், பஹுமானத்திற்குரிய குருவும் பூஜை செய்யப்பட வேண்டியவர்களல்லவா? அவர்களை எதிர்ப்பது உசிதமல்லவே? ஆனால் இந்த யுத்தக்களத்தில் அவர்கள் பிதாமஹனாகவும் குருவாகவும் நிற்கவில்லை. அதர்மத்திற்காக எதிரிடும் கௌரவ ஸேனையில் ஒருவராகப் பார்க்க வேண்டும். ஞானிகளாகிய அவர்களே பாண்டவர்களை எதிர் ஸேனைத் தலைவர்களாகப் பார்த்துத்தானே போரிட ஆயத்தமாகியுள்ளார்கள்? அவர்கள் சுயநலத்தைக் கருதவில்லயே? பாண்டவர்கள் தர்மத்தை நிலைனாட்டப் போர் புரிகிரார்கள். ஆகையால் இதில் பந்தபாசத்திற்கு இடம் தரக்கூடாது என்ற மஹத்துவத்தை உணரவில்லை அர்ஜுனன். “நான்” “எனது” போன்ற அஹம்கார மமாகாரத்தில் (Egoism) தன்னை மூழ்கடித்து, மிகச் சாதாரண மனித சுபாவத்தைப் பிரதிபலிக்கிறான் அர்ஜுனன். ஒரு தர்ம காரியத்திற்காக, பொதுநலத்திற்காகப் போரிடும்போது அங்கு இரண்டு கக்ஷிகளைப் பார்க்க வேண்டுமெ தவிர, ஆசாபாச பந்தத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. அதை ஒரு தத்துவார்த்த சாதனைப் போராகக் கருத வேண்டுமே அல்லாது வ்யக்திபரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற தத்துவத்தை ந்மக்கு எடுத்துக்காட்டவே ஸ்ரீ வியாச பகவான் இந்த வார்த்தைகளை பகவான் வாய்மொழியாகத் தந்துள்ளார் போலும்.

இதிலுள்ள கருத்து,

“தர்மத்தை நிலைநாடடச் செய்யும் காரியங்களில் நம் சொந்த பந்தபாசத்திற்கு (சுயநலத்திற்கு) இடம் கொடாமல், பொது நலத்திற்காகச் செய்யும் போராட்டமாகக் கருத வேண்டும்” என்பதுதான்.

குரூனஹத்வாஹி மஹானுபாவான்
ச்ரேயோ பொக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
ஹத்வார்த்த காமாம்ஸ்து குரூன் இஹைவ
புஞ்சீய போகான் ருதிரப்ரதித்வம்

ஸ்லோகம் 5: கேளுங்கள்

ஸாரம்:

இந்த மஹான்களை வதைப்பதைவிட, கையேந்திப் பிச்சையெடுத்துச் சாப்பிடுவது இந்த உலகில் மிக ச்லாக்கியம. அப்படியின்றி இவர்களைக் கொன்று நான் இந்த உலகில் அனுபவிக்கப்போகும் சுகம், தனம், ஆசைகள் எல்லாம் (அவர்கள்து) இரத்தம் தோய்ந்ததாகத்தான் இருக்கும்.

விளக்கம்:

அர்ஜுனன் மீண்டும் தன் சந்தேஹத்தைக் கொட்டுகிறான். குருக்களாகிய, பீஷ்மரும், த்ரோணரும், பெரிய மஹான்கள். பல தியாகங்களையும் மனிதகுல முன்னேற்றத்திற்காகச் செய்த வீரர்கள். அவர்களை ஒழிப்பது, மனித குலத்திற்கே ஒரு பெரும் நாசமாகும். இப்படி மனித குலம் ஒரு பெரிய போக்கிஷத்தை இழக்க நேரிடும். இவர்களை அழித்துக் கிடைக்கும் ராஜ்ய போகங்களைப் பாண்டவர்கள் அனுபவிக்கும்போது இவர்கள் சிந்திய இரத்த வெள்ளம் தான் தங்கள் சிந்தனையின் முன் வருமே தவிர, அந்த சுகத்தை அனுபவிக்க முடியாது. அதைவிடக் கையேந்திப் பிச்சையெடுத்து உண்ணுவது ஒரு ஈனச்செயல் ஆகாது. அதுவே மேல்.

இது என்ன கருத்தைக் காட்டுகிறது?

“ஒரு தரம் நம் முன் நிற்கும் சந்தர்ப்பத்தை நாம் தப்பாக எடை போட்டோமானால், துர்பலர்களாகி சிந்தனா சக்தியற்று, நாமும் இந்த உலகில் அர்ஜுனனைப்போல் (பலஹீனர்களாக) ஆகிவிடுவோம்” என்பதுதான்.

நசைதத்வித்ம: கதரன்னோ கரீயோ
எத்வா ஜயேம யதிவான்னோ ஜயேயு:
யானேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தேSவஸ்திதா: ப்ரமுகே தார்த்தராஷ்ட்ரா:

ஸ்லோகம் 6: கேளுங்கள்

ஸாரம்:

எது உசிதம் என எனக்குச் சொல்ல முடியாது. அதாவது நாங்கள் அவர்களை ஜெயிப்பதா, அல்லது அவர்கள் எங்களை ஜெயிப்பதா என்று. எங்களை எதிர்கொண்டு நிற்கும் த்ருதராஷ்டிரரின் புத்திரர்களைக் கொன்று நாங்கள் உயிர் வாழ விரும்பவில்லை.

விளக்கம்:

முந்தின ஸ்லோகத்தில் அர்ஜுனனின் மனம் படும் பாட்டைப் பார்த்தோம். எதிர் ஸெனையை நோட்டம் விட்ட அர்ஜுனன் தன் மனம் குழம்பி, புத்தியிலிருந்து விலகி, தனிப்பட்டு சிந்தித்து உழலுவதைப் பார்த்தோம். புத்தி பணியாற்றுவதை விட்டு எல்லாம் மனத்தளவில் விவாதிப்பதாலும், மனதிற்கும் புத்திக்கும் ஒற்றுமையிலலாததாலும் எது உசிதம் என்று புரியாமல் தத்தளிக்கிறான் அர்ஜுனன். தன் சுயநல சிந்தனையால், ஆசாபாச பந்தத்தில் சிக்குண்டு மன்ம் போன போக்கில் சென்று புத்தியின் துணையில்லாமல் எடுக்கும் தீர்மானங்கள் அவனை மிகக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதால் எது சரி எனத் தீர்மானிக்க இயலவில்லை. தாங்கள் வெற்றி பெறுவது உசிதமா அல்லது கௌரவர்களை வெற்றிபெறச் செய்வது உசிதமா என்று தெரியாமல் குழம்பி நின்றான். அதாவது போராட்டத்திலிருந்து பின்வாங்குவதா, போராடி விஜயம் காண்பதா ஏது உசிதம் எனத் தெரியாமல் தத்தளிக்கிறான். இதற்கும் காரணம் அவன் மனமும் புத்தியும் ஒன்றாகச் சேர்ந்து இயங்காததுதான்.

வெளி உலகிலிருந்து பஞ்சேந்திரியங்கள் வழி வரும் விஷயங்களை மனம் வேர்திரித்து, அவைகளை புத்தியிடம் தந்து புத்தி தன்னிடம் வைத்திருக்கும் பழையகால அனுபங்களை வைத்து அந்த விஷயங்களைத் தரம் திரித்து, சரியான தீர்மானத்தை மனதிற்குத் தந்து, மனம் பஞ்சேந்திரியங்களுக்கு ஆணை பிறப்பித்து அவைகளைச் செயல் படத் தூண்டுகிறது. இப்படி மனமும் புத்தியும் ஒருங்கே ஒன்றாகக் கூட்டுறவுடன் செயல்பட்டால்தான் நம் சரிவரச் செயல்பட இயலும். இதுதான் உலக நியதி. இப்படி மனமும் புத்தியும் ஒன்றுபட்டு இயங்கவில்லையாகில், அந்த மனிதனின் தன்மை சிதறடிக்கப்பட்டு அவன் செயல்ற்றுப் போகிரான். அவனைப் புதுப்பிக்க ஒரே வழி அவன் உள் மனத்தைச் சீர்செய்து, புத்திக்கு மெருகு தீட்டும் வண்ணம் சாஸ்திர நூல்கள் சொல்லும் தத்துவங்களை உபதேசம் செய்து, மனித தர்மத்தை எடுத்துரைத்து, உலக நீதியை புகட்டி, அவன் மனிதத் தன்மையைப் புது உருவாக்குவதே.

வெளியில் காணும் காட்சிகளில் மனம் பதறாமல், தன் உள் மனதிற்கும் புத்திக்கும் உண்டான வேறுபாடு காரணம், மனோதைர்யம் இழந்து, புத்தி பேதலித்து, செய்வதறியாது நிலை குலைந்து நிற்கும் மனிதத் தன்மையுடய அர்ஜுனனை வழி திருப்ப அவன் ஸ்வாபிமானத்தை உலுக்கும் வார்த்தைகளை பகவான் இங்கு உதிர்த்து விடுகிறார். இது அவன் மனதை உலுக்கிப் புதுச் சிந்தனையை ஏற்க உதவும்.

கார்ப்பன்யதோஷோ பஹத ஸ்வபாவ:
ப்ருச்சாமித்வம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய:ஸ்யான்னிச்சிதம் ப்ரூஹிதன்மே
சிஷ்யஸ்தேsஹம் சாதிமாம் த்வாம் ப்ரபன்னம்

ஸ்லோகம் 7: கேளுங்கள்

ஸாரம்:

எனது ஹ்ருதயம் “தயை”யில் சிக்குண்டு, எனது தர்மம் (duty) என்ன என்று தெரியாமல் எனது மனம் குழபிப்போய்விட்டது. எனக்கு எது ச்ரேயஸ்ஸைத் தரும் என்று நிச்சயமாகக் கூறவும். நான் உனது சீடன், உன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டேன். என்னை உபதேசிக்கவும்.

விளக்கம்:

இங்கு அர்ஜுனனில் ஒரு மனோவியாதியில் அகப்பட்ட நோயாளியை பார்க்கிறோம். ஆனாலும், அர்ஜுனன் தன் நோயை உணர்ந்து விட்டதையும் காண்கிறோம். தனது மன நிலைக்குக் காரணம் தன் இளகிய மனம், ஆசாபாச பந்தம் இத்யாதிகள் எனத் தெரிந்துகொண்டதாகக் காணப்படுகிறான். ஆனாலும் இதிலிருந்து விடுபட என்ன உபாயம் என்பதை உணரவில்லை. ஆகையால், தன்னம்பிக்கை இழந்து பகவானிடம் பூர்ண சரணாகதி அடைந்துவிட்டான். தமக்குச் சரியான மார்கத்தைக் காண்பிக்கக் கிருஷ்ணனால் தான் இயலும் என்ற த்ருட நம்பிக்கை கொண்டுள்ளது தெரிகிறது.

தர்மம் எனபது சுயநிலையை உணர்ந்து பணிபுரிவது. ஒருவனின் சுபாவம் எப்படி அமைந்திருக்கிறதோ அதன்படி செயல் படுவதுதான் தர்மம். அதற்கு மாறாகச் செயல்பட்டால் குழப்பம் தான் நிகழும். இது உலக நியதி. மனித தர்மம் ஒவ்வொருவருக்கும் தங்கள் சூழ்நிலையிலிருந்தும், அவர்கள் கற்கும் அறிவிலிருந்தும் உருவாகிறது. ஒருவரின் இயல்பு மற்றவருக்கு இராது. தங்கள் இயல்புக்கு மாறாகச் செயல் பட்டால் காரியம் கெட்டுவிடும். மனமும் குழப்ப்த்தில் சிக்கித் தவிக்கும். இது உலக நியதி. இங்கு அர்ஜுனன் பூர்ண சரணாகதியடைந்து ஸ்ரீ கிருஷ்ணனின் உபதேசத்தைத் தலைமேல் ஏற்று வழிபட ஆயத்மானதைப் பார்க்கிறோம்.

ஒரு சீடன் தன் குருவை தெய்வமாகக் கருதி அவர் சொற்படி இயங்கப் பரிபூர்ணமாகச் சம்மதிக்கணும். அதே போல் அப்படிச் சரணடைந்த் சீடனை, ஒரு பிதாவைக் காட்டிலும் அன்பு செலுத்தி, அவனுக்கு உகந்த உபதேசம் தரவும், அவன் எப்பேர்ப்பட்ட வினாக்களை எழுப்பினாலும், சினமடயாது, பொறுமையுடன் அவனுக்குப் புரியுமட்டும் சொல்லித்தரவும் ஒரு குரு முன்வர வேண்டும். இதுதான் குரு சிஷ்ய பந்தம் என்பது. இதை இங்கு நாம் தெளிவாகக் காண்கிறோம்.

என்ன புரிகிறது?

“தன்னிலை இழந்த ஒருவன், பூரண நம்பிக்கயுடன் குருவை அடைந்து அவரிடம் பூர்ண சரணாகதி அடைந்தால், அவனை நல்வழி ந்டத்த குரு முன்வருவார்” எனபதே.

நஹி ப்ரபச்யாமி மமாபனுத்யாத்
யச்சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம்
அவாப்ய பூமௌ அஸபத்னம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்

ஸ்லோகம் 8: கேளுங்கள்

ஸாரம்:

ச்ரேயஸ்க்கமான ராஜ்யாதிபத்யம் கிடைத்தாலும், அல்லது தேவர்களுக்குத் தலைவனாகப் பட்டம் பெற்றாலும் கூட எனக்குத் தோனறவில்லை இந்த இந்திரியங்களைத் தஹிப்பிக்கும் எனது துக்கம் அடங்குமென்று.

விளக்கம்:

தன்னிலையை உணர்ந்து புகலிடம் தேடும் ஒரு சரசரி மனிதனை அர்ஜுனனில் காண்கிறோம். உலக பந்தத்திலிருந்து விடுபட்டு, தெய்வீக, வேதாந்த வழி ந்டக்க ஆவல்கொண்டுள்ள ர்ஜுனனைப் பார்க்கிறோம். அதாவது உலக வாழ்க்கை கடினம், அதிலிருந்து கடைத்தேற வேதாந்த ஞானம் அவசியம். அதை அடையத் துடிக்கும் ஒரு சீடனின் நிலைதான் அர்ஜுனனுடையது. அர்ஜுனன் உலக ஸுகத்திற்கு ஆசைப்படவில்லை எனபது அவன் சொல்லிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், சக்கரவர்த்தி பதவியும் சகல உலக ஸுகமும் கிடைத்தாலும், அல்லது, தேவர்கள் தலைவன் பதவி லபித்தாலும் தமக்குள் ஜ்வலிக்கும் உஷ்ணம், இந்திரியங்களைத் தஹிக்கக்கூடிய சூடு அட்ங்காது. ஞானம் ஒனறுதான் இதற்கு வழி என அவன் கூறியதலிருந்து தெரிகிறது.

இங்கு வேதாந்தத்தின் பிதாவாகிய வியாஸ பகவான், தன்முன் ஒரு பக்குவமான, தர்மவழி நடக்க, தெய்வீகஸ்ரேயஸ் அடைய ஆவல் கொண்டுள்ள ஒரு மாத்ருகா சீடனைக் காண்பிக்கீறார். அவன் மனநிலை எப்படி இருக்க வேண்டும், அவன் மனோபாவம் எவ்வண்ணம் அமைய வேண்டும், அவன் குணங்கள் ஏவை என்றன போன்ற விஷயங்களைத் தெளிவாகக் காட்டுகிறார். தன்னலமற்று, உலகப் புகழ், உலக சுகம் தேடாது, ஆத்ம ஞாந்த்திற்கு வழிகோரும் ஒரு பரமார்த்த சீடனின் தன்மையை மாண்பிக்கிறார்.

நாம் அறிந்துகொள்ள வேண்டுயது:

“உலக சுகம் அநித்தியம், அவை இந்திரியங்களைச் சுட்டெரிக்கும், மனோபலம் அற்றுவிடும், குழப்பம் ஏற்ப்படும். வேதாந்த வழி காட்டும் ஆத்ம ஞானம் ஒன்றுதான் இதிலிருந்து விடுபட ஒரே மருந்து”: என்பதாகும்.

ஸ்ஞ்சயௌவாசா

யேவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச:பரம்தப:
நயோத்ஸ்ய இதி கோவிந்தம் யுக்த்வா துஷ்ணீம் பபூவஹ

ஸ்லோகம் 9: கேளுங்கள்

ஸாரம:

ஸஞ்சயன் சொல்கிறார்:

இவ்வண்ணம் ஹ்ருஷீகேசனிடம் (ஸ்ரீ கிருஷ்ணன்) உரை செய்த சத்த்ருக்களை முறியடிக்கும் குடாகேசன் (அர்ஜுனன்) “நான் போர் புரியப் போவதில்லை” என் சொல்லி மௌன்மானான்.

விளக்கம்:

ஸஞ்சயன் ஒரு உண்மையான ஊழியனாய் இந்த இரண்டு ஸ்லோகங்களால் தன்னால் இயன்றமட்டும் த்ருதராஷ்டிரருக்கு எச்சரிக்கை விடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால் அர்ஜுனன் தன் வசம் இழந்து பூர்ண்மாக (உலகை திரும்பக் கொண்ர்ந்த) கொவிந்தனிடம் சரணாகதி அடைந்து விட்டான் எனச் சொல்கிறார். கிருஷ்ணனின் சாதனைகளையும் அவர் சக்தியைப் பறை சாற்றும் வண்ணம் பல கோணங்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். இப்பொழுதாவது, போரின் விளைவு தமக்குச் சாதகமாகாது என த்ருத்ராஷ்டிரருக்குப் புரிந்தால் போரை நிறுத்தச் சொல்லலாம். ஆனால் பிறவிக் குருடராகிய த்ருதராஷ்டிரர் தன் புத்திரர்கள்மேல் வைத்துள்ள அளவு கடந்த புத்திரபாசத்தால் கட்டுண்டு இந்த உண்மையை உணரவில்லை. போரை நிறுத்த அவர் ஒருவருக்கு மட்டுமே இயலும். ஆனாலும் அதைப்பற்றி நினைத்துக்கூட அவர் பார்க்கவில்லை என்பதால் ஸ்ஞ்சயன் அவருக்குக் கிருஷ்ணனின் பலத்தை வலியுருத்தி, சரணாகதி அடைந்தவருக்குக் கிருஷ்ணன் என்ன வேண்டுமானாலும் தருவார் என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்கிறார்.

தம் உவாச ஹ்ருஷீகேச:ப்ரஹஸன்னிவ பாரத
ஸேனயோர் உபயோர் மத்யே விஷீதம்தமிதம் வச:

ஸ்லோகம் 10: கேளுங்கள்

ஸாரம்:

எவனொருவன் இரண்டு சேனைகளுக்கு மத்தியில், மனமுடைந்து, பலஹீனனாக தோற்றமளிக்கிறானோ, அவனிடம் ஹ்ருஷீகேசன் ஓ பாரதா இவ்வண்ணம் உரை செய்தான்.

விளக்கம்:

இங்கு ஸ்ரீ வியாசர் கதோபனிஷத்திலிருந்து சில ஸ்லோகங்களை எடுத்துத் தந்திருப்பது தெரிகிறது. காரணம், இப்படி ஒரு படம் காட்டுவது போலுள்ள வார்த்தைக் கோர்வை கதோபநிஷத்தில் தான் உள்ளது. இரு தரப்புச் சேனைகளை தர்மாதர்மம் (ந்ல்லது கெட்டது) ஆன உலக விஷயங்களாகவும், சுயநலத்தை (Ego) அர்ஜுனனாகவும், ரதத்தை உடலாகவும், ஐந்து வெள்ளைக் குதிரைகளை இந்திரியங்களாகவும், கடிஞாண் பிடித்துள்ள கிருஷ்ணனை புத்தியாகவும இந்திரியங்கள் முழுதும் புத்தியின் வசத்தில் இருப்பதாக சித்திரீகரித்திருக்கிறார். சுயநலம் (EGO) ஒடுங்கி, புத்திக்குச் சரணடைந்துவிட்ட இந்நிலையில், ஒருவன் வெற்றி வழி செல்ல புத்தி அவனை இயக்கும் எனற தத்துவத்தை இங்கு தெளிவுபடுத்துகிறார் ஸ்ரீ வியாசர். இதில் எழுத்தாளரின் திறமையை நன்கு தெரிகிறது.

வேதாந்தத்தின் பிதாவாகிய ஸ்ரீ வியாசர், இங்கு குலாசார நிபுணத்வம் தெய்வ சகாயத்துடன்தான் கிடைக்கும் என்ற உண்மையைக் காட்ட அர்ஜுனன் வழி முனைந்திருப்பது நன்கு தெரிகிறது. இந்திரியதமனம் தெய்வத்திடம் சரணாகதி இவைதான் வெற்றிக்கு வழி எனத் தந்திருக்கிறார். இதுதான் வேதாந்தத்தின் உண்மைத் தத்துவம்.

ஹரி ஓம்

தொடரும்...

அர்ஜுன விஷாத யோகம் அத்தியாயம் 2 பாகம் 2

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button