Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழ்க்கைத் தத்துவம் - பாகம் 3
அசலம்





பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்

வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:

ஸ்லோகம் 10: கேளுங்கள்

ஸாரம்:

முதிர்ச்சி அடையும்போது (அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?

விளக்கம்:

உலக பந்தம் பலனில் அடங்கியது. நமக்குப் பலன் இல்லையேல் நாம் யாருடனும் கூட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது நமக்குக் காம விசாரங்கள் அடங்கிவிடுகின்றன. முதியோர்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை. ஒரு தடாகத்தில் (ஏரி) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதற்குத் தடாகம் என்ற பேர் போய்விடுகிறது. அதேபோல் நம்மிடம் தனமில்லையேல் நம உறவினர்கள் நம்மை நாடி வரமாட்டார்கள். அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டால் சுற்றத்தார் விலகிவிடுவார்கள். ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை சுக தூக்கங்கள் ந்ம்மை பாதிக்காது. ஞானம் வந்தபிறகு ஸம்ஸார பந்தம் நம்மை அண்டாது எனப்பொருள். முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியைக் காண்பித்தார். எதற்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.

மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

ஸ்லோகம் 11: கேளுங்கள்

ஸாரம்:

தனத்திலோ (ஸுகம்), குழந்தை பருவத்திலோ, யௌவ்வன் பருவத்திலோ அபிமானம் கொள்ளாதே, ஏனென்றால் காலம் இப்பருவங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது. மாயையால் உண்டான இந்த உலகவாழ்வை விட்டு (என்றென்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்தை முறையே அறிந்து அதில் மூழ்குவாயாக.

விளக்கம்:

உலகஸுகம் தனத்தால் கிடைப்பது. தனம் சாச்வதமல்ல. அதேபோல் குழந்தை/யௌவனப் பருவவங்கள் சாச்வதமல்ல. ஏனெனில் அவை காலப்போக்கில் மாறக்கூடியவை, அழியக் கூடியவை.. ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன. அவை இரண்டும் அநித்தியம். பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என நாலு நிலைகள் நம் ஜீவித்தத்தில் மாறி மாறி வருகின்றன. ஆகையால், இந்த ஒரு நிலையும் சாச்வதமல்ல். எனத் தெளிவாகிறது. ஆதலால் இதன்மேல் அபிமானம் அல்லது நாட்டம் கொள்வது மூடத்தனம். அதேபோல் இந்த உலகத்திலுள்ள எல்லா வஸ்துக்களும் மாறக்கூடியவை, கிரமேண அழியக்கூடியவை. எது சாச்வதமல்லவோ அது மாயாஸ்வரூபம் என அறிந்துகொள்ள வேண்டும். இந்த மாயா வடிவான உலகைத் துறந்து (விட்டு) நித்திய வஸ்துவான ப்ரஹம்த்தை உணர்ந்து அதாகவே பரிணமிக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஜீவன்முக்தர்களாவோம் எனக் கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு “ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா” (ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யநிலை, நித்தியம், சாஸ்வதம், உலகம் அநித்தியம் அல்லது மாயை) என்ற தத்தவத்தை நிலை நாட்டுகிறார். அப்படி ப்ரஹ்மநிலை ஏயதி விட்டால் அதில்தானே திடமாக இருக்க வேண்டும். இதைத்தான் “ஆதம ஸாக்ஷாத்க்காரரம்” எனக் குறிப்பிடுகிறார்கள் பெரியோர்கள். ப்ரஹ்மத்தை அறிவது என்பதற்குப் பதிலாக ப்ரஹ்ம நிலையில் திகழ்வது என்பது மிகப் பொருத்தமான விளக்மாகும்.

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு:
ததபின முஞ்சதி ஆசாவாயு:

ஸ்லோகம் 12: கேளுங்கள்

ஸாரம்:

இரவும் பகலும், உதயாஸ்தமனங்களும், காற்றுக்காலமும் வஸந்த காலமும் மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்கை நலிந்துகொண்டு வருகிறது, ஆனாலும் யாரும் ஆசையை விடுவதில்லை.

விளக்கம்:

நாம் உலகில் வாழ்ந்து வந்தாலும் உலகநீதிக்குட்ப்பட்டு நடப்பதில்லை என்பதைத் தெளிவாகத் தந்துள்ளார். பார்ப்போம். இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம், வஸந்தகாலம் முதலியவை மாறுகின்றன. இப்படிக் காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் நமது வாழ்க்கையும் மாறி மாறி வருகிறது (அதாவது பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம்) இது உலம நியதி (Natural Law). சுருங்கச் சொன்னால் உலகிலுள்ள எல்லாமே மாறக்கூடியவை. இது நம் கையில் இல்லை, அது உலக நியதி. அப்படி உலகமே மாறினாலும், அஹோ! நம் ஆசை மட்டும் ஏன் மாறுவதில்லை? எப்பொழுதும் நாம் ஆசாபாசத்தில் உழன்றவண்ணம் இருக்கிறோம். இது மதியீனமல்லவா எனச் சொல்லாமல் சொல்கிறார்.

காதேகாந்தா தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ருஜகதி ஸஜ்ஜன ஸங்க்திரேகா
பவதி பவார்ணவ தரணே நௌகா

ஸ்லோகம் 13: கேளுங்கள்

ஸாரம்:

எதற்காக மனைவி (கணவன்), தனம் இத்யாதிகளில் விசாரம் கொள்கிறாய்? ஹே மதிஹீனனே! உன்னைப் பரிபாலிப்பவன் உனக்கு இல்லையா? இந்த மூன்று உலகத்திலும் ஸஜ்ஜனங்களுடைய கூட்டுறவு மட்டும்தான் உனக்கு இந்தப் பிறப்பிறப்புடன் கூடின ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்கத் தோணியாக அமைய முடியும்.

விளக்கம்:

ஸத்ஸங்கத்தின் மஹிமையை இங்கு விளக்குகிறார். உலகில் நாம் உழல்வது, மனைவி, மக்கள், பந்துக்கள், தன ஸம்பாத்தியம், ஸுகலோலுபம் போன்ற ஆசாபாச பந்தத்தில் கிடந்து உழலுகிறோம். இந்த பந்தங்கள் சரிவர அமையவில்லையானால், நாம் கலங்குகிறோம். நான், எனது என்ற அஹம்காரம் மமாகாரத்தில் உழல்வதால் நம்மைக் காக்கும் ஒருவன் (கடவுள்) இருக்கிறான் என்ற பாவம் நமக்கு வருவதே இல்லை. எல்லாம் நம்மால் இயங்குகிறது என்ற விசாரம் நமக்கு மேல் ஒருவன் நம்மை நடத்துகிறான் என்ற விசாரமே இல்லாமல் செய்துவிடுகிறது. மூன்று உலகம் எனப்படுவது, ஜாகர, ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தை. நாம் சில சமய்ம் விழித்திருக்கிறோம், சில சமயம் ஸ்வப்ன உலகில் இருக்கிறோம், இன்னும் சில சமயம் உறக்கத்தில் போய்விடுகிறோம். இப்படி இந்த மூன்றும் மூன்று உலக வாழ்க்கை எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று நிலையிலிருந்தும் கடைத்தேற (அதாவது பிறப்பு இறப்பு என்ற நிலை இல்லாமலாக) நமக்கு உதவி புரிவது ஸத்ஸ்ஸங்கம் ஒன்றுமட்டும்தான் என அறிய வேண்டும். அதாவது ஞானிகளின் கூட்டுறவு. இது முன்பே சொன்னதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. உலகமே மாயம் என்று கூறும்போது, ஸத்ஸ்ஸங்கம் மாயை அல்லவா என்ற வினா எழலாம். இருட்டு அகல வேண்டுமானால், ஒளியைக் கொணர வேண்டும். ஒளி அநித்தியபாகுமா? ஆகாது. ஏன்? ஓளியில்லயேல் இருட்டு. அப்பொழுது ஒளி நிரந்தரமாக இருந்தால் இருட்டு என்பது வராதே. ஆதலால் அநித்திய அவஸ்தை மாற நித்திய அவஸ்தையை நாட வேண்டும். இருட்டு அஞ்ஞானம். ஒளி ஞானம். ஞானம் வந்தால் அஞ்ஞானம் அகலும் என்பது நமக்குப் புரிந்ததே. ஒளியில் எல்லாம் விளங்கும். அதுபோல் ஸத்துக்களுடைய கூட்டுறவு நமக்கு ஞானத்தைத் தரும். அப்பொழுதுதான் நமக்கு ஞானம் வரும். இதுதான் இதன் தாத்பர்யம்.

ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பச்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

ஸ்லோகம் 14: கேளுங்கள்

ஸாரம்:

தாடி மீசை வைத்து, தலயில் ஜெடைகள் நிறைந்து, அல்லது தலையைக் முண்டனம் செய்து, காஷாய வஸ்த்திரத்தைத் தரித்து, இப்படிப் பல வேஷங்கள் போடுபவன் மூடனேயாவான். அவன் பார்வை இருந்தும் குருடனாவான். ஏனென்றால் இவையெல்லாம் அவன் வயற்றுப் பாட்டிற்கே.

விளக்கம்:

சன்யாசம் என்ற ஓர் உன்னத நிலையைக் களங்கப்படுத்தும் வகையில் தாடி மீசை வைத்து, தலையை முண்டனம் செய்து, அல்லது தலையில் ஜெடையை வளர்த்தி, காஷாய வஸ்திரம் தரித்து, தம்மை சன்யாசி என்று கூறிக்கொள்பவர் மூடர்கள ஆவார்கள். அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காகப் போடப்பட்டவை இந்த வேஷம். இவர்களைக் கண்ணிருந்தும் குரூடர்கள் எனக் கூறலாம். சிந்திக்கத் திராணி இருந்தும் ஞானமில்லாதவர் எனப் பொருள். வெறும் வேஷம் போட்டதால் ஒருவன் சன்யாசி ஆகிவிட முடியாது. சன்யாசி வேஷம் போடவேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை இதுமூலம் தெளிவுபடுத்துகிறார். சன்யாசம் என்பது மனத்தளவில். ஆசாபாசத்தைத் துறந்து, உலக சிந்தனையற்று மௌனமாக தியான நிலையில் பிரஹ்மமானுபூதியில் எப்பொழுதும் நிலைத்திருப்பதுதான் ஒரு சன்யாசியின் லக்ஷணம் அல்லாது வேஷம் போடுவதல்ல எனப் பொருள். சன்யாசிக்கே இப்படியானால் நம் நிலை என்ன? உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் அதில் வேஷதாரிகள் எனச் சொல்லலாமல் சொல்வதுபோல் இருக்கிறது.

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆசாபிண்டம்

ஸ்லோகம் 15: கேளுங்கள்

ஸாரம்:

உடல் நலிந்து (சோர்வடைந்து), வாயில் பல்கள் வீழ்ந்துபோய், தலைமுடி நரைத்துப்போய், கையில் ஊன்றுகோலுடன் இருக்கும் விருத்தன் (கிழவன்) அந்த நிலையிலும் ஆசைகள் எனும் மூட்டையை விடுவதில்லை.

விளக்கம்:

ஆசை யாரை விட்டது எனக் கேட்பதுண்டு. ஆசை யாரையும் பிடிகூடுவதில்லை. நாம் தான் அதைப் பிடிகூடுகிறோம் என்று மாத்திரமல்ல, உடல் தள்ளாடி, வாயில் பல்களெல்லாம் உதிர்ந்து, தலைமுடி முழுவதும் நரைத்து, நடப்பதற்கு ஊன்றுகோல் வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு கிழவன்கூடத் தன ஆசையெனும் மூட்டையை விடுவதில்லை. இதிலிருந்து நாம் உலக ஸுகத்தில் எவ்வளவு ஆசை வைக்கிறோம் என்று தெரிகிறது. நாம் தள்ளாத நிலையிலும ஆசையை விடுவதில்லை. எவ்வளவு மூடத்தனம்! இது நம் அறிவீனம் என்றே சொல்லவேண்டும். மன உடல் நிலை மாறி வர்த்தக்யம் வந்தாலும் நாம் ஆசை எனூம் மூட்டையை ஏன் சுமக்கிறோம்? இதுதான் அஞ்ஞானம் என்பது.

அக்ரே வஹ்ன்னி: ப்ருஷ்டே பானூ:
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ:
ததபின முஞ்சதி ஆசாபாச:

ஸ்லோகம் 16: கேளுங்கள்

ஸாரம்:

முன்னால் அக்னியும் (தீயும்), பின்னால் ஸூர்யனும், இரவு நேரம் தன் கால்முட்டுகள் தாடியைத் தொடும்விதம் மரச்சுவட்டில் சுருங்கி உட்கார்ந்து, தன் இரு கரங்களையும் ஏந்தி பிக்ஷை வாங்கிச் சாப்பிடும் நிலையிலும் (அவன்) ஆசாபாசங்களை விடுவதில்லை.

விளக்கம்:

தள்ளாடித் தத்தளிக்கும் முதியவரைப் பற்றிச் சொன்னார். ஆனால் முதியவர் மட்டுமல்லாமல், எவரும் தன் அனாத நிலையிலும் வெய்யிலில் அலைந்து, இரவு குளிரால் தாக்குண்டு தன் உடம்பை மூடக் கம்பிளி இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும், மரச்சுவட்டில் உடலைக் குறுக்கி உட்கார்ந்து இரு கைகளையும் ஏந்திப் பிச்சை எடுக்கும் ஒரு மனிதனும் தன ஆசாபாசங்களை விடுவதில்லை. அதாவது மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தங்கள் உலக ஆசாபாசங்களை விட முயலுவதில்லை எனப் பொருள். ஆசை யாரை விட்டது?

தொடரும்...

பாகம் 2 பாகம் 4

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button