Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழ்க்கைத் தத்துவம் - பாகம் 2
அசலம்





பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்

நளினீதள கத ஜலமதிதரளம்
தத்வஜ்ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம்ச ஸமஸ்தம்

ஸ்லோகம் 04: கேளுங்கள்

ஸாரம்:

தாமரை இலையில் தத்தளிக்கும் ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை உடையதாகவும் அமைந்துள்ளது என அறிவாய்.

விள்க்கம்:

நமது ஜீவதம் அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளைக் கொண்டதுமாக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை ஒரு உவமையுடன் சுட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர். தடாகத்தில் மிதக்கும் தாமரை இலையில் தங்கி நிற்க்கும் ஜெலபிந்துக்கள் எப்படி அந்தத் தாமரை இலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கின்றனவோ அதுபோல்தான் நம் ஜீவிதமும். எந்த நேரமும் அந்த ஜெல பிந்துக்கள் தடாகத்தில் விழ நேரிடலாம். அதுபோல் நம் ஜீவிதம் எந்த நேரத்திலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம். சாச்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே எனப் பொருள். இதைவிட வேறு உகந்த உவமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிகப் பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார்!

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோSபின ப்ருச்சதி கேஹே

ஸ்லோகம் 05: கேளுங்கள்

ஸாரம்:

நம்மால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுமோ, அந்நாள் வரை நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் நெருங்கிப் பழகுவார்கள். எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்து போகிறதோ அப்பொழுது யாரும், நம் குடும்பத்தார் கூட நம்மிடம் பேசக்கூட மாட்டார்கள்.

விளக்கம்:

நாம் கண்கூடாகப் பார்க்கும் ஓர் சத்திய நிலையை எவ்வளவு சுலபமாகச் சித்தரித்திருக்கிறார்! நம்மால் எவ்வளவு நாள் சம்பாதித்து, பண உதவி பண்ண இயலுகிறதோ, அதாவது மற்றவருக்கு எவ்வளவு காலம் நம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள். உலக நியதிப்படிப் பார்த்தால், எல்லோரும் மற்றவரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள். நமக்கு வயதாகி வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி நம்மால் மற்றவருக்கு உபயோகமில்லாமல ஆகிவிடும் பொழுது, நம் சொந்தக் குடும்பத்தினரும் கூட நம்மிடம் ஒட்டி உறவாடத் தயங்குவார்கள். பேசுவதற்குக் கூட அருகில் வர மாட்டார்கள். இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற தத்துவத்தை மிக எளிதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாSபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே

ஸ்லோகம் 06: கேளுங்கள்

ஸாரம்:

(நம்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை நமது குடும்பத்தினர் நம் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டால், நமது மனைவிகூட நமது (உயிரற்ற) சடலத்தைக் கண்டு நடுங்குவாள்.

விளக்கம்:

பந்தம், பாசம் என்பது உடலில் உயிர் உள்ள வரை தான். உயிர் போய் தேஹம் சடலமாகி விட்டால், அதற்குப் பெயர் பிணம். பிணத்தைப் பார்த்து யார்தான் பயப்பட மாட்டார்கள்? அப்பொழுது மனைவிகூட அந்தச் சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று குறிப்பாகச் சொல்லணும்? ஏற்றவும் பாசத்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி தானே. ஸ்த்ரீகளைக் கருதும்போது, இங்கு மனைவி என்பதைக் கணவன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பொதுவான தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்! வாழும்போது, இந்த உடலை நாம் போற்றிக் கொண்டாடுகிறோம். அதற்கு எல்லா சௌகரியங்களையும் செய்து கொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற உண்மை நமக்குத் தெரிவதில்லை. மரணத்திற்குப் பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது என்ற உண்மையை விளக்குகிறார்.

பாலஸ்தாவத் க்ரீடாSஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாSஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோSபினஸக்த:

ஸ்லோகம் 07: கேளுங்கள்

ஸாரம்:

பால்ய வயது விளையாட்டில் செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லாபத்தில் மூழ்கிவிடுகிறது,, முதிர்ச்சிக் காலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்) ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை.

விளக்கம்:

வாழ்க்கை எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிகத் தெளிவாகச் சித்தரித்திருக்கிறார். குழந்தைப் பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம். அப்பொழுது சிந்தித்து வேலை செய்ய இயலாது. குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகி விடுகிறது. பௌரனானால் ஸ்த்ரீ சுகத்தில் காலம் ஓட்டுகிறோம். ஸ்த்ரீ சுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா வித சுகங்களையும் அது குறிக்கிறது; இப்படி உலகத்திலுள்ள ஸகல சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது. அப்பொழுதும் நம் சத்திய நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை. முதிர்ச்சியடைந்தால் நாம் தனித்து விடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில ஆழ்ந்து விடுகிறோம். நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேத்தி முதலியவர்கள் நலனுக்காகக் கவலைப்படுதல், நம்மை யாரும் கவனிக்க வில்லையே என்ற ஆதங்கம், நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வ நேரமும் கவலைப்படுவதிலேயே நம் சமயத்தைக் கழிக்கிறோம். அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை (நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை. ஆத்மஞானம் பெறப் பாடுபடுவதில்லை. இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாகக் கழித்து விடுகிறோம். பகவத் சிந்தனை (ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை. பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது? எப்படி ஜீவன்முக்தன் நிலையை எய்துவது?

காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:

ஸ்லோகம் 08: கேளுங்கள்

ஸாரம்:

நம்முடைய ப்ரியதமன் (அல்லது ப்ரியதமை) யார்? யார் நம்முடைய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகரம் (குடும்ப ஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது. நாம் யாருடையவன்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? இப்படி (வாழ்க்கை) தத்துவத்தைப் பற்றி சிந்தனை செய் சகோதரா!

விளக்கம்:

இந்த ஸ்லோகம் மூலம் நம்மை ஆத்ம சிந்தனையில் ஈடுபடச் சொல்கிறார். யார் மனைவி அல்லது பர்த்தா? யார் புத்திரன்? நான் யாருடையவன்? நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்று தத்வார்த்தமாகச் சிந்தனை செய் எனப் பொருள். ஸ்ரீ ரமண மஹர்ஷியின் “நான் யார்” என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது. உலகத்தை அறிவதற்கு முன் யார் அறிகிறார்கள் எனப் பார்க்க வேண்டும். (Know the Knower). அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பார்ப்பதை (Object) அறிய இயலாது. அந்த ஞான்ம் பூர்த்தியாகாது. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்கச் சொல்கிறார்.

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

ஸ்லோகம் 09: கேளுங்கள்

ஸாரம்:

ஸத்துக்களுடைய (புண்ணியாத்மாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபடச் செய்யும். மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும். ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.

விளக்கம்:

ஆத்ம விசாரம் செய்ய நமக்கு வ்ழிகாட்டி வேண்டும். அதுதான் ஸத்துக்களுடைய சங்கம். அதாவது நல் வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு. அப்படி அவர்களிடம் உறவு கொண்டால் அவர்கள் நமக்கு வழி காட்டுவார்கள். அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். எப்படி? மேலே சொன்ன ஆத்ம விசாரப் பாதையில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள். அப்படி ஆத்ம விசாரம் செய்தால் மோஹம் (Deluision) அகலும். அதாவது மாயை அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF) நமக்குப் புலப்படும். அப்படிப் புலப்பட்டால் அதுவே நமக்கு மன அமைதியைத் தந்து இந்த உடலில் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையைத் தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி “Self Realization” எனக் கூறியிருக்கிறார். திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர் “ஸ்வானுபூதி” எனக் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் “ஆத்ம ஸாக்ஷாத்காரம்” என்று கூறுகிறார்கள். அதாவது தன்னைத் தானே அறிந்துகொள்வது. இதுதான் நம் வாழ்க்கை லக்ஷியம்.

தொடரும்...

பாகம் 1 பாகம் 3

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button