Guru Achalam
   படைப்புகள்






Favorites

Picture Puzzles

Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
tamilliterature.net

kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com
Mgl Authors



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

Grandpa Cheenu
தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock
Vrishin Vigneshwar

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 



வாழ்க்கைத் தத்துவம் - பாகம் 1

அசலம்




பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்

முகவுரை:

முன் இதழ்களில் வாழ்வின் லக்ஷியம், வாழ்வின் ரகசியம் என்பதை ஆராய்ந்தோம். ஆனால் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் எனத் திடடவட்டமாகப் பார்க்க வேண்டும். அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக்கூடியதாக அமையும். அப்படிப் பார்க்கும்போது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்தை (HINDUISM) உலகிற்குத் தந்து, நான்கு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து, ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் நமக்குத் தொகுத்தளித்த இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை யாது, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்ஙனம் அமைய வேண்டும் எனக்கூடிய தத்துவங்களைத் தெள்ளத் தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரிவர நாம் பின்பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிகச் சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதில் தந்துள்ள ததுவங்கள் எவை எனப் பார்ப்போமா?

காவியம்:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

ஸ்லோகம் 01: கேளுங்கள்

ஸாரம்:

கோவிந்தனை பஜி, கோவிந்தனை பஜி, கோவிந்தனையே பஜி ஹே! தெளிவில்லாத புத்திஹீனனே.. உனது கடைசிக் காலம் (மரணம்) உன்னை நெருங்கும்போது, உனது இலக்கணம், வ்யாகரணம் (முதலிய ஞானம்) உன்னைக் காப்பாற்றாது. அதனால் (நித்திய ஆனந்த நிலையில் இருக்கும்) கோவிந்தனை என்னேரமும் பஜி.

விளக்கம்:

பஜ என்பத்ற்கு பஜிப்பது அல்லது, ஜெபிப்பது அல்லது பாடுவது அல்லது தியானிப்பது என்று பொருள். நித்திய சுத்த ஆனந்த நிலைக்குப் பெயர் கோவிந்தம். எப்பொழுதும் அந்த நிலையில் இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் அவர் கோவிந்தன் எனப்படுவார். மனித ஜென்மம் வேண்டுவது என்ன? நித்திய ஆனந்தம். அந்த நிலைக்கு உடமை யார்? ஸ்ரீ கிருஷ்னன். ஆகையால் எப்பொழுதும் அவனை நினை அல்லது பஜி என்று ஸ்ரீ ஆதி சங்கரர் புத்தி கெட்டு உழலும் மனித ஜாதிக்கு உபதேசம் செய்கிறார். அவர் க்ஷேத்திராடனம் செல்லும்பொழுது ஒரு மஹா வித்வான் சாஸ்த்ர கிரந்தங்களை வைத்துக்கொண்டு அதன் இலக்கணத்தை (வியாகரணம்) வாய்ப்பாடம் செய்வதைக் கண்டார். அதைச் சுட்டிக்காட்டி எழுதினது இந்த ஸ்லோகம். ஏனென்றால், நாம் எல்லோரும் நம் புஸ்தக ஞானத்தில் மிகவும் சமயம் கட்த்துகிறோம். தெய்வ சிந்தனயோ நம் சுய நிலை சிந்தனையோ இல்லாமல் எப்பொழுதும் உலக சம்பந்தப்பட்ட காரியங்களில் நம்து நேரத்தைச் செலவிடுகிறோம். சிறிதளவாவது ஆத்ம சிந்தனை தேவை எனக் கூறுவதாக அமைந்துள்ளது இந்த உபதேசம். நாம் மரணத்தை அணுகும்போது நாம் படித்த விஷயங்கள் (உலக ஞானம்) நம்மைக் காப்பாற்றாது. ஆத்ம ஞானம் ஒன்றுதான் அதற்கு மருந்து எனப் பொருள். அதை அறிய எந்தப் புஸ்தகமும் உதவாது. மஹா ஞானிகள் அவர்கள் தபோ நிலையிலிருந்து தெரிந்துகொண்ட ஆத்ம ஞானத்தை நமக்குப் பல கிரந்தகள் மூலமாகத் தந்துள்ளார்கள். அதன் ஸாரம்தான் பஜ கோவிந்தம்.

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

ஸ்லோகம் 02: கேளுங்கள்

ஸாரம்:

ஹே மூடா! திரவ்யத்தில் உள்ள பேராசையை (பணத்தாசை) விடு. இந்தப் பேராசை ஒழிய மனதில் நல்ல விசாரத்தை உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்ம பலனை மிக சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி.

விளக்கம்:

மனித சுபாவம் ஸுகம் தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்துக் கொண்டது. தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்கக் கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை பிடித்து அதன் மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம். அதனால் நம் மனம் ச்ஞ்சலப்படும். ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம் கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மனம். இந்த தனத்திலுள்ள (ஸுகங்களிலுள்ள) பேராசையை விடு எனக் கூறுகிறார். ஆனால் நமக்கு தனம் இல்லாமல் வாழ முடியாதே. அதெப்படிப் பணத்தாசையை விடுவது என வினவலாம். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனைக் கருதாது கர்மம் பண்ண வேண்டும் எனக் கர்ம யோகத்தில் பார்த்தோம். அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதைச் செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதைப் பழக்கிக்கொள் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

“கர்மன்யேவாSதிகாரஸ்தே மாபலேஷு கதாசன”

என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சொன்னதுபோல் “கர்மம் செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்” எனக் கூறியிருக்கிறார். அதாவது, கர்மம் பண்ண நமக்கு அதிகாரம் உண்டு. என்ன கர்மம் பண்ண வேண்டும், எப்படிப் பண்ண வேண்டும் எனத் தீர்மானிப்பது நம் கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைப்பதில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? கர்ம பலன் நாம் செய்யும் கர்மத்தின் தன்மையைப் பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது என்றோ, பணத்தைத் தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்கக் கூடாது என்றோ அவர் கூறவில்லை. நம் கர்மத்திற்கு ஏற்பக் கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள் எனப் பொருள் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் மனச்சாந்தி ஏற்ப்படும்.

நாரீ ஸ்தனபர நாபி தேசம்
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

ஸ்லோகம் 03: கேளுங்கள்

ஸாரம்:

ஸ்த்ரீகளுடைய மார்பகத்தையும் நாபி தேசத்தையும் பார்த்து அதி மோஹம் கொள்ளாதே. அதெல்லாம் வெறும் மாமிசத்தின் விகாரத்தால் தோன்றும் (அநித்திய) தோற்றம மட்டுமே என்று மனதில் தினம் தினம் (எப்பொழுதும்) சிந்தனை கொள்.

விளக்கம்:

முதல் ஸ்லோகத்தில் “ஆசையை (மோஹம்)” விடு எனக் கூறினார். இதில் “காமத்தை“ (பாசம்) விடு என உபதேசிக்கிறார். ஏன் ஸ்த்ரீகளின் மார்பிடத்தையும் நாபி தேசத்தையும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்? இவைதான் நம் காம உணர்ச்சியைத். தூண்டுகின்றன. வாக்யார்த்தத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் கருத்தை மட்டும் பார்க்க வேண்டும். இது புருஷர்களுக்கு மட்டும் தந்த உபதேசமல்ல. ஸ்த்ரீகளைப் பொறுத்த மட்டில் புருஷர்களுடைய மயிர்கூபத்துடன் கூடின் மார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியவையும் கூட மாமிசத்தின் தோற்றமே தவிர சாச்வதமல்ல எனப் பொருள் கொள்ள வேண்டும். ஆக, ஏதொரு வஸ்து நமக்குக் காமத்தை ஊட்டுகிறதோ அவையெல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்தைக் கொள்ள வேண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்லோகங்களினால் ஆசா பாசத்தைத் துற எனக் கூறுகிறார். அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம். என்ன மனோ நிலயில் நாம் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அடுத்த ஸ்லோகத்தில் தந்துள்ளார்.

தொடரும்...

பாகம் 2



             

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday