Guru Achalam
   படைப்புகள்






Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 

ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 1, பாகம் 5

பகவத் கீதா சாரம்

அசலம்



image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com

நகாம்க்ஷே விஜயம் க்ருஷ்ண நசராஜ்யம் ஸுகானிச
கிம்னோ ராஜ்யேன கோவிந்த கிம்போகைர் ஜீவிதேனச

ஸ்லோகம் 32: கேளுங்கள்

ஸாரம்:

விஜயத்தில் எனக்கு ஆசை இல்லை, கிருஷ்னா:! அல்லது ராஜ்யத்திலோ ஸுகத்திலோ இல்லை.. எதர்க்கு ராஜ பதவி ஓ கோவிந்தா! ஸுகத்திலும் ஜீவிதத்திலும் என்ன இருக்கிறது?

ஏஷாம் அர்த்தே காம்ஷிதம் நோ ராஜ்யம் போகா:ஸுகானிச
தே இமேSவஸ்திதா யுத்தே ப்ராணாம் ஸத்யக்த்வா தனானிச

ஸ்லோகம் 33: கேளுங்கள்

ஸாரம்:

யாருக்காக ராஜ்யம், சுகம், தனம் முதலியவைகளில் ஆசை கொள்கிறோமோ அவர்கள் பிராணனையும், தனத்தையும் தியாகம் செய்ய தூனிந்து யுத்தக் களத்தில் இருக்கிறார்கள்

ஆசார்யா: பிதர: புத்ரான் ததைவச பிதாமஹா:
மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ச்யாலா: ஸம்பதினஸ்ததா

ஸ்லோகம் 34: கேளுங்கள்

ஸாரம்:

ஆசார்யர்கள், பிதாக்கள், புத்திரர்கள், தாத்தாக்கள், மாமன்மார்கள், மாமனார்கள், பௌத்திரர்கள், மைத்துனர்கள், ஸ்மபந்திகள் முதலியோர் (யுத்தத்தில் பங்கு கொள்கிறார்கள்)

விளக்கம்:

யுத்தம் செய்து என்ன பலன், யாருக்காக ராஜ்யம், சுகம், தனம் இத்யாதிகளில் ஆசை வைத்து யுத்தம் செய்ய வேண்டுமோ அவர்கள் யுத்த களத்தில் தங்கள் சுகத்தைய்ம் ஜீவனையும் தியாகம் செய்யத் தூணிந்து குழுமியிருக்கும் பந்துக்களின் விபரத்தைக் கூறி, இத்துனை பந்துக்கள் கொண்ட ஸேனையில் எவ்வளவு பேர் மடிவார்கள், பிறகு கிடைக்கும் ஜயத்தில், ராஜ்யத்தில், ஸுகத்தில் என்ன பலன் என்று வாதாடுகிறான். மனோதைரியம் போய், பிரமை பிடித்த அர்ஜுனன் தன் கடமையிலிருந்து நழுவப் பார்க்கிறான். தன் பலவீனத்தின் காரணமாக, தன் தர்மத்திலிருந்து விலகி பாசத்தில் கட்டுண்டு யுத்த்த்திலிருந்து பின்வாங்க நினைக்கிறான். கிருஷ்ணனின் மௌனம் அவனை மிகக் கலங்க வைக்கிறது. உதட்டில் புன்சிரிப்புடன் அர்ஜுனனையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன்.

ஏதான் ந ஹந்தும் இச்சாமி க்னதோபி மதுஸூதன
அபி த்ரைலொக்ய ராஜ்யஸ்ய ஹ்யேதோ: கிம்னு மஹீக்ருதே

ஸ்லோகம் 35: கேளுங்கள்

ஸாரம்:

இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை, அவர்கள் என்னைக் கொன்றாலும் ஓ மதுஸுதனா! மூன்று உலகத்தின் ஆதிபத்யம் கிடைத்தாலும். பிறகு இந்த பூமிக்காக எதற்கு?

விளக்கம்:

இவ்வளாவு விவாதித்தும் கிருஷ்ணனிடமிருந்து அது சரி என்ற ஒரு ஸம்மதம் வரவில்லை, அவர் ஒன்றும் பேசாமல் இருப்பதைப் பார்த்த அர்ஜுனன், நாம் சொன்னது பொதாது. நம் மனதிலுள்ள தயையைக் காட்ட வேண்டும் என்று கருதி, இவர்கள் என்னைக் கொல்ல வந்தாலும், நான் மூனறு உலகத்தையும் ஜயிக்கும்படி ஆனாலும் இவர்களை நான் கொல்ல மாட்டேன், பிறகு இந்த வெறும் பூமிக்காக ஏன் கொல்ல வேண்டும்? யுத்தத்திலிருந்து பின்வாங்க நினைக்கும் அர்ஜுனன் காரணங்காளைக் காட்டித் தன் தயாள குணத்தை வெளிக்காட்டுவதாகத் தோண்றுகிறது. ஸ்ரீ கிறுஷ்ணன் கண்ணாலேயே அர்ஜுனனின் பேடித்தனத்தை இகழ்வதாகத் தெரிகிரது. மேற்கூறிய ஸ்லோகங்களிலிருந்து என்ன தெரிகிறது? “ஒரு இக்கட்டான நிலையில் மனம் தளர்ந்து நம் பலவீனத்தை மறைக்கப் பல காரணங்களையும் சுட்டிக்காட்டி ந்ம கடமையிலிருந்து விலக நம் மனம் நம்மைத் தூண்டும். அப்பொழுது புத்தியை உபயோகம் பண்ணத் தோண்றாது. இது பேடித்தனமே தவிர தயாளகுணம் அல்ல. இது மனித இயல்பு.”

நிஹத்ய தார்த்தராஷ்ட்ரான்ன: கா ப்ரீதி: ஸ்யா: ஜனார்த்தன:
பாபம் ஏவாச்ரயேதஸ்மான் ஹத்வைதான ஆததாயின:

ஸ்லோகம் 36: கேளுங்கள்

ஸாரம்:

த்ருதராஷிரருடைய பிள்ளைகளைக் கொல்வதில் என்ன புண்ணியம் இருக்கிறது? ஓ ஜனார்த்தனா! இந்தத த்ரோகிகளைக் கொல்வதில் நமக்குப் பாபம் தான் கிடைக்கும்.

விளக்கம்:

தான் இதுவரை சொன்ன காரணங்கள் கிருஷ்ணனுக்குச் சரியாகப் படவில்லை போலும் என்று கருதி அர்ஜுனன் தன் சர்ச்சையைத் திசை மாற்றி வேதாந்த ரூபத்தில் தருகிறான். வேத சாஸ்த்திரங்களில் கொலை ஒரு பாபம் என்று சொல்கிறார்கள். இந்த என் ஸ்வஜனமாகிய த்ருதராஷ்டிரருடைய பிள்ளைகள் த்ரோகிகளானாலும் அவர்களைக் கொல்வதில் பாபம் தான் எமைச் சேரும் என்று முரணாகச் சொல்கிறான். ஏன்? ஸனாதன தர்மத்தில் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது? ஆறு துஷ்டத்தனங்கள் செய்பவன் கொல்லப்பட வேண்டியவன் என்று. அவை எவை? (1) பிறர் வீட்டிர்க்குத் தீ வைப்பவன், (2) பிறருக்கு விஷம் தருபவன், (3) வாளும் கையுமாகக் கொல்வதற்காக மற்றவரைத் தாக்குபவன், (4) பிறர் சொத்தை, (5) நிலத்தை (6) மனைவியைக் களவாடுபவன், துர்யோதனாதிகள் இந்த ஆறு செயலிலும் ஈடுபட்டவரே. அப்படி இருக்க இவர்கள் துஷ்டர்கள் அல்லவா? கொல்லப்பட வேண்டியவர்களல்லவா? இது தெரிந்தும் வேதத்தை சரிவரப் படித்தறிந்த் அர்ஜுனன் அதற்கு முரணாக வாதாடுவது அவன் பலவீனத்தை அல்லாமல் தார்மீக புத்தியைப் ப்ரதிபலிக்கவில்லை. இதுதான் முரண்பாடான வாதம். இப்படி தர்மத்தைத் தப்பாகப் புரிந்திருப்பவன் மனோநிலை முன்னுக்குப் பின் முரண்பாடாகத்தான் இருக்கு.ம். அவர்களைப் பேசவிட்டு அவ்ர்கள் மனதிலூள்ள தப்பான அபிப்பிராயங்களை வெளிக்கொணர வேண்டும். இல்லயேல் அவர்களுக்குத் தரும் உபதேசம் அவர்களுக்கு உறைக்காது என்ற தத்துவத்தை உணர்ந்த கிருஷ்ணன் இப்பொழுதும் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்து அர்ஜுனனைத் தன் பலவினத்தைக் கக்க வைக்கிறார். ஜனார்த்தனன் என்றால் ஜனா என்ற அஸுரனைக் கொன்றவன் எனப் பொருள். அதுதான் ஸ்ரீ கிருஷ்ணன். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: “வேதத்தைப் பிசிறரக் கற்று அதற்கு முரணாக அர்த்தம் கொள்ளக் கூடாது. தர்மத்தைச் சரிவரப் புரிந்து அதன்படி கர்ம வினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஸத் கார்யம் செய்ய வேண்டும். வேத வாக்கியங்களை நமக்குச் சாதகமாகப் பயன் படுத்தி தர்ம நிலையை விடக் கூடாது, நம் க்டமையிலிருந்து நழுவக் கூடாது”.

தஸ்மான்னார்ஹா வயம் ஹந்தும் தார்த்தராஷ்ட்ரான் ஸ்வபாந்தவான்
ஸ்வஜனம்ஹி கதம் ஹத்வா ஸுகின: ஸ்யாம மாதவ

ஸ்லோகம் 37: கேளுங்கள்

ஸாரம்:

ஆதலால் எங்களுடைய பந்துக்களாகிய த்ருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்லக் கூடாது, எங்களுடையவர்களைக் கொன்று என்ன சுகம் கிடைக்கும் ஓ மாதவா!

விளக்கம்:

அர்ஜுனன் தன் வாதத்தின் கடைசிக் கட்டமாகத் தன் பந்துக்களாகிய த்ருத்ராஸ்டிர புத்திரர்களைக் கொல்லக் கூடாது, காரணம் அவ்ர்களைக் கொன்று என்ன சுகம் எனக் கிருஷ்ணனை அன்புடன் மாத்வா என்ற செல்லப் பெயரில் அழைக்கிறான். கிருஷ்ணனின் மௌனம் அர்ஜுனனைத் தாக்குகிறது. தான் நினைப்பது சரிதான் என்று தன் உற்ற ந்ண்பனிடமிருந்து வரவழைக்கப் பாடுபடுவதுபோல் தெரிகிறது. கிருஷ்ணன் இனியும் தன் மௌன நிலையைக் கலைக்கவில்லை. அர்ஜுனனின் அறியாமை எவ்வளவு தூரம் இருக்கிறது எனப் பார்க்கவோ என்னவோ அவர் இன்னும் மௌனமாகவே இருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: “மூடர்கள் வேதத்தைச் சரிவர உணராமல் அதைத் தங்கள் மனோநிலைக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக்கொள்வார்கள். இப்படியே வேதங்களின் ஸாரம், கருத்துக்கள் நாளடைவில் துர்புத்தி படைத்த, பண்டிதர்களல்லாத நேதாக்களால் மாசுபடுத்தப்பட்டு நலிந்து போகிறது. பேடிகளுக்கும் அதர்மிகளுக்கும் ஒரு சான்றாக உபயோகப்படுத்தப் படுகிறது”.

யத்யப்யேதே ந பச்யந்தி லோபோ பஹத சேதஸ:
குலக்ஷய க்ருதம் தோஷம் மித்ர த்ரோஹேச பாதகம்

ஸ்லோகம் 38: கேளுங்கள்

ஸாரம்:

களங்க்ம் நிறைந்த மனம் படைத்தவர்கள் ஸமுதாயத்திலுள்ள குடும்பங்களுக்கும் தன்னைச் சார்ந்த சகாக்களுக்கும் நாசம் வருத்துவதில் தவறு காணவில்லை என்றாலும் அதிலுள்ள பாபத்தை அறியவில்லை என்றாலும்,

கதம் நஞேயம் அஸ்மாபி: பாபாதஸ்மான்னிவர்த்திதும்
குலக்ஷய க்ருதம் தோஷம் ப்ரபச்யாப்தி: ஜனார்தன

ஸ்லோகம் 39: கேளுங்கள்

ஸாரம்:

ஏன் இந்தக் குலக்ஷயத்தில் (குடும்பங்களின் நாசத்தில்) பாபத்தைப் பார்க்கும் நாம் இதிலிருந்து பின்வாங்கிப் பாபம் செய்யாமல் இருக்கக் கூடாது ஓ ஜனார்தனா!

விளக்கம்:

தன் வாதம் கிருஷ்னனின் மௌனத்தைக் கலைக்கவில்லை என்று பார்த்த அர்ஜுனன் தன் வாதத்தைத் திசை திருப்பி தயை, கருணை என்ற வார்த்தைக்கிணங்கத் தன் காரணத்தைத் திருப்பிக் கூறுகிறான். தங்கள் மடத்தனத்தால் பாபத்தைப் பார்க்காது கண்களை மூடி, தங்கள் சகோதர்களுக்கும், ஸமுதாயத்திற்கும் தாங்கள் செய்யும் தீங்கிலும் இந்த யுத்தத்தில் மடியப்போகும் குடும்பங்களின் அவஸ்தையில் கருணையில்லாது யுத்தம் செய்யத் துடிக்கும் துர்யோதனாதிகள் இதில் குலநாசம், குடும்பநாசம் வரும், அது தங்களுக்குப் பாபத்தைக் கொடுக்கும் எனப் பார்க்க மறுத்தாலும், ஏன் இதில் வரும் நாசத்தையும் பாபத்தையும் உணரும் நாம் இதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று ஜனார்தனனிடம் (கிருஷ்ணன்) அர்ஜுனன் கேட்கிறான். அதாவது கௌரவர்கள் பாபிகள், குலநாசத்தில் வருத்தம் இல்லாதவர்கள், தங்கள் ஸ்வந்த லாபத்திற்காக ஒரு ஸமுதாயத்தையே அழிக்க முன்வந்து அதில் பாபத்தை நினைக்காதவர் என்று சொல்லி அவர்கள் துஷ்டத்தனத்தைப் பறைசாற்றினாலும், தங்களை தர்மிஷ்டர்கள், இந்தப் பாபம் செய்யத் துணியாதவர்கள், ந்ல்லவர்கள் எனப் பறை சாற்றுகிறான். ஆனால் தர்மத்தின் கொள்கை என்ன? “துஷ்டர்களை வதம் செய், அநீதியை எதிர்த்து ஜயம் காண். இது பாபமில்லை” என்ற கீதையின் அடிப்படைத் தத்துவமும் வேதத்தின் அம்சமுமாகிய தர்ம கோஷத்தை கவனிக்கவில்லை அர்ஜுனன். காரணம் அவன் மனது சஞ்சலமடைதிருக்கிறது. புத்தி பேடித்தனத்தால் பேதலித்திருக்கிறது. அதனால் இந்த தர்ம வாக்கியத்தைச் சரிவர உணர முடியவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தத்துவம்: “அநீதியைக் கண்டு பயப்படக்கூடாது, தர்மத்தை நிலை நாட்ட அநீதிக்கு நேராக தைர்யமாகப் போராட வேண்டும். அத்தருணம் நம் மனதைக் கலங்க விடாமலும் புத்தியைக் கூர்மையாகவும் வைத்து இந்த வேதவாக்கைத் துணையாக கொண்டு போராட வேண்டும்” என்பதே.

குலக்ஷயே ப்ரணசயந்தி குலதர்மா: ஸனாதனா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னம் அதர்மோSபி பவத்யுத

ஸ்லோகம் 40: கேளுங்கள்

ஸாரம்:

குடும்ப நாசத்தால் அந்த குடும்பத்திலுள்ள (வைதீக) தர்மம் நாசமடையும், அத்துடன் அதரமம் தலைதுக்கி ஆடும்,.

விளக்கம்:

ஒரு பொய் விளம்பி எப்படித் தன் வாக்குமூலத்தில் ஒவ்வொரு தரமும் புதிதாக விஷய்ங்களைக் கொணருவானோ, அதேபோல் அர்ஜுனன் தனது வாதத்தில் தன் மூடத்தனத்தால் புதிய விஷயங்களை எடுத்துரைக்கிறான். ஒரு வாதம் ஜயிக்கவில்லை என்றால் புதிய வாதத்தைக் கையாளுகிறான். இப்பொழுது குலக்ஷயம ஆனால் ஸமுதாயத்தில் எந்த நிலை வரும் எனக் கூறுகிறான். குடும்ப அங்கங்கள் மரணமடைனந்தால் அந்தக் குடும்பங்களில் தர்ம சிந்தனை அற்றுப்போகும், பிறகு அதில் பக்தி ச்ரத்தை குறையும். அதாவது குடும்பக் கட்டுப்பாடு குலையும். காரணம் அதிலுள்ள தலைவர்கள் யுத்தத்தில் மடிந்தால் அந்தக் குடும்பங்கள் நாதியற்றவராவார். ஆகையால் குடும்பக் கூட்டுறவு நிலை குலையும். இப்பொழுதைய சாஸ்த்திர ஞானிகள் இதை ஒரு சாக்காகக் கொள்வார். ஏனெனில் முன்பு குடும்பத்தில் மாதா, பிதா, தாத்தா, பாட்டீ, மாமன்மார்கள், பிள்ளைகள், பேரன்மார்கள், மற்ற நெருங்கிய பந்துக்கள் எல்லோரும் குடும்ப நாதனின் சொல்லில், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தார்கள். ஓரோ குடும்பமும் ஸமுதாயத்தின் அங்கங்கள் எனக் கருதினார்கள். இப்பொழுதைய ஸமுதாயத்தில் கணவன் மனைவி என்றது ஒரு குடும்பமாகி விடுகிறது. கூட்டுக் குடும்பம் இப்பொழுது இல்லை. ஆகையால் இந்த வாதத்தில் அவர்கள் சேர மாட்டார்கள். கூடாது, இப்பொழுதைய அரசாங்கமும் பழைய ஸனாதன தர்மத்தைக் குலைத்துத் தங்கள் நலனை உத்தேசித்துப் புதுப்புது நியமங்களைக் கொணர்ந்து அதை அனுசரிக்க ஜனங்களைத் தூண்டுவதோடல்லாமல் அதை எதிர்ப்போர்க்கு தண்டனயும் தங்கள் நியதி புஸ்தகத்தில் சேர்ப்பர்ர்கள். ஆகையால் முன்பிருந்த குடும்ப கட்டுப்பாடும், குடும்ப ஆசாரங்களும் இப்பொழுது மலிந்து போய்விட்டன. ஆகையால் இப்பொழுதைய இளைஞர்கள் அர்ஜுனனின் குடும்பம் நிலை குலையும் என்ற வாதத்தில் தவறு காண்பார். ஒரு யுத்தத்தில் எவ்வளவு குடும்பங்கள் நாசமாகி நாதியில்லாமல் தவிக்கின்றன, அதனால் தர்மம் க்ஷயிக்கிறது என்று அர்ஜுனன் அன்றைய நியதிப்படி குடுப்பத்தின் முக்கியத்துவத்தைச் சரணடைந்து வாதிக்கிறான். ஆனால் யுத்தம் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நடக்கவிருப்பதை அர்ஜுனன் மறந்து இந்த வாதத்தைத் தவறாகக் கைய்யாளுகிறான். “தர்மோ ரக்ஷ்தி ரக்ஷித:” என்ற வேத வாக்கின்படி, தர்மத்தை எவனொருவன் ரக்ஷிக்கிறானோ அவனை தர்மம் காக்கும்.” என்ற வாதததை அர்ஜுனன பார்க்கவில்லை. இது தர்மயுத்தம் என அவன் நினைத்த்தாகத் தெரியவில்லை. இப்படிக் குடும்பங்கள் நாசம், தர்மம் க்ஷயிக்க ஹேதுவாக அமையும் என்ற வாதம் அன்றைய குடும்ப நிலையின்படி சரியானாலும், இந்த யுத்தம், அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக ந்டக்கவிருப்பதால் தான் தன் க்ஷ்த்திரிய தர்மத்தைக் கையாளவேண்டும் என்ற கொள்கையை ஏற்க்கவில்லை. அது தவறு.

ஹரி ஓம்

தொடரும்...



             

அத்தியாயம் 1, பாகம் 4 அத்தியாயம் 1, பாகம் 6

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday