Guru Achalam
   படைப்புகள்






Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 



வாழ்வின் ரகசியம் - பாகம் 5

அசலம்




Philosophy of life - image courtesy: NASA Center for Mars Exploration

கர்மயோகம்:

கர்மம் செய்வது வாழ்வின் அடிப்படையாகும். ஆனால் சுயநலமில்லாமல் கர்மம் செய்வது, கர்மபலனை எதிர்பார்க்காது செயல்படுவது வாஸனா க்ஷயத்திற்கு வழிவகுக்கும். அதாவது புது வாஸனா சக்தி எழாமல் இருக்கவும் மிஞ்சியிருக்கும் வாஸனா சக்தி அழிந்து விட உதவியாக அமையவும் ஹேதுவாக இருப்பது இந்தத் தன்னலமற்ற, பல்னை எதிர்பார்க்காது செய்யும் கர்மாதான் எனப் பார்த்தோம். இதுதான் கர்மயோகம். எந்தக் கர்மாவாகிலும் ஒரு குறிக்கோள் இல்லாமல் செயய இயலாது. அப்பொழுது என்ன குறிக்கோள் நமக்கு இருக்க வேண்டும்? அதற்குத்தான் நம் சாஸ்திரம் பறைசாற்றுகிறது:

"லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து"

உலகில் எல்லோரும் ஸுகமாக இருக்க வேண்டும் எனப் பொருள். இப்படி எல்லோர் நலனையும் முன்னிட்டுச் செய்யும் காரியம் நமக்கு ஒரு உபாதியாக ஆகாது. அதாவது பாப புண்ணியத்தைத் தராது. அதனால் வாஸனா சக்தி உருவாகாது. இப்படியே செய்துவந்தால் முடிவில் பிறப்பு இறப்பு என்ற நிலை மாறி மாறி வராது. அதுவே ஜீவன் முக்திக்கு ஹேதுவாக அமையும். ஆனாலும், வெறும் கர்மயோகம் மட்டும் போதாது. அதில் பக்தியும் கலக்க வேண்டும். அதென்ன பக்தி எனப்படுவது?

பக்தியோகம்:

நம் இயக்கத்திற்கு நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு சக்தி உதவுகிறது எனப் பார்த்தோம். அதாவது எப்படி மின்சார இயந்திரங்கள் இயங்க மின்சாரம் என்ற சக்தி உதவுகிறதோ அதேபோல் நம் தேஹமாகிய இயந்திரத்தை ஒரு சக்தி இயங்க உதவுகிறது. அது நம் வசம் இல்லை. அது ஒரு தனிப்பட்ட அற்புதமான கண்ணுக்குப் புலப்படாத சக்தி. அது ஏது? அதுதான் நம்முள் இயங்கும் "ஆத்மா" எனப்படும் ஜீவசக்தி. இந்த ஆத்மா நமக்குப் புலப்படுவதில்லை. அது உலகெல்லாம் இயங்க உதவும் ஒரு மஹாசக்தியின் ஒரு பாகம் மட்டுமே. இதை "ஜீவாத்மா" என அறிகிறோம். எப்படி மின்சார இயந்திரங்களில் உள்ள மின்சார சக்தியின் உற்பபத்தி ஒரு பெரிய "Generator" ஆகுமோ அதேபோல் இந்த ஜீவசக்தியின் உற்பத்தி "Generator", "Ordainer", "Destroyer" எனப்படும் உலகம் முழுவதும் இயங்கவைக்கும் உலக மஹா சக்திகளாகும். இந்த மூன்று வாக்கின் முதல் எழுத்துக்களை மட்டும் கூட்டி எழுதிப் பாருங்கள். "GOD" என அமைகிறது இல்லயா? இதைத்தான் "இறைவன்" எனக் கூறுகிறோம். இப்படி உலக மஹாசக்தியிலிருந்து வரும் ஜீவசக்தி அதற்கு வேறாக ஆகிவிட முடியுமா? இரண்டும் ஒன்றேதானல்லவா? அப்படியானால் நமக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம் என வினவலாம். இரண்டு பேர்க்கும் இயக்கம் உண்டு. ஆனால் இறைவன் உலக நலத்திற்க்கு உதவுகிறான். நாம் நம் சுயநலத்திற்க்காக வாழ்கிறோம்.

இறைவன் ஏன் உலக நலத்தை நாடுகிறான்? அதற்குக் காரணம் அவனே உலகமாக உரு எடுத்துத் திகழ்கிறான். அவன் அன்பின் உருவம், அருளின் வடிவம், பிரேமையின் ஓளி, கருணையின் இருப்பிடம். அப்ப்டியிருக்க, உலகம் நலமாக இருந்தால்தான் தன் ஸத்திய நிலை ஒளிரும். ஒரு தாய் தன் சேயிடம் கொள்வது என்ன? அன்பு. ஒரு கணவன் மனைவி ஒன்றுபடுவது எதனால்? பிரேமை. பந்துக்கள் எதனால் கட்டுண்டுவிடுகிறார்கள்? பாசம். அதேபோல் ந்மக்கு இறைவனிடம் தோன்ற வேண்டியது பக்தி. இவை எல்லாமே ஒரு பந்தனமல்லவா எனக் கேள்வி எழலாம். ஆம். ஆனாலும் இவை சுயநலம் கலக்காமல் "லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து" என்ற பாவத்துடன் செயல்பட்டால் பந்தனமில்லாமல் ஆகிவிடும். இறைவனிடம் தோன்றும் அன்புக்கு "பக்தி" எனக் கூறுகிறோம். அதில் சுயநலம் இல்லை. நான் என்ற அஹங்காரம் இல்லை. எனது என்ற மமகாரம் இல்லை. நம்மை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவனே நம் வாழ்வின் இயக்கம், அவனை அறிந்துகொள்வதே நமது வாழ்வின் நோக்கம் என்ற பாவனை உள்ளடங்கியிருக்கிறது. அவனிலிருந்து உதித்த ஓர் அம்சம்தான் நாம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். இப்படிச் செயல்படப் பல வழிகள் வகுத்திருக்கிறார்கள் நம் முனிவர்கள். அதிலொன்றுதான் பக்தியோகம். நாம் வேறு இறைவன் வேறு என்ற பாவம் இல்லாமல், நாம் இறைவனின் அம்சம் என்ற ஸ்திர நம்பிக்கையுடன் செயல்படுவதே பக்தியோகம். நம் செயல்கள் எல்லாமே அவனுக்காக, அவனால் இயற்றப்படுவதே, இதன் பலன் அவனைச் சேர்ந்ததே அல்லாமல் நம்முடையது இல்லை என்ற பாவம் வர வேண்டும். இதுதான் சுத்த பக்தி.

"அவனன்றி ஓர் அணுவும் அசையாது"

என்ற பழமொழி தெரிந்ததே. எல்லாம் அவன் செயல் என்ற உயர்ந்த பாவம் வேண்டும். அப்படிச் செயல் படுவதுதான் பக்தியோகம். இதற்கு ஓர் மார்கம் வேண்டுமே? அதுதான் பூஜை, நாமஜெபம், நாம ஸங்கீர்த்தனம், தியானம் எனப்படும் வழிகள். இதை நாம் நிரந்தரமாக - நித்தியான்னிகமாகச் செய்துவந்தோமானால் நம் மனம் ஓர் நிலைக்கு வரும், இறைவன் நினைவும் ந்ம்மை விட்டு அகலாது. அதனால் நாம் வேறு இறைவன் வேறு என்ற கருத்து இராது. இப்படி இறைவனுடன் ஒன்றறக் கலப்பதுதான் பக்தியோகத்தின் உச்சநிலை. இப்படி இயங்குவோமானால் முடிவில் நாம் யோகநிலையை அடைந்துவிடுவோம்.

ஞானயோகம்:

அப்ப்டி யோகநிலை அடைந்துவிட்டால், நமக்குப் புலப்படுவது என்ன? நம் சுய நிலை. நம் சத்திய வடிவம். இதை வாக்கினாலோ, மனத்தாலோ, புத்தியாலோ உணர முடியாது. அதற்கு ஞானம் ஒன்றேதான் மார்க்கம். நமக்கு நம்மைப்பற்றிய சுய அறிவு உதிபபதுதான் "ஞானயோகம்". இது நம் புத்தியினால் அறியப்படும் அறிவல்ல. நம்முள் இருக்கும் அந்த தெய்வ சக்தியின் ஓளி நம்முள் ஒளிர்வதை உணரக்கூடிய ஓர் அற்புத சக்தி நமக்குள் இருக்கிறது. அது உதயமாகும். அதுதான் ஞானயோகத்தின் அடிப்படைத் தத்துவம். இப்படியாக, கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் எனப்படும் மார்க்கங்களைப் பின்பற்றுவோமானால் நாம் இப்பொழுது இருக்கும் த்வைத நிலையிலிருந்து அத்வைத நிலைக்கு உயர்ந்து விடுவோம். அப்பொழுது

"ஒன்று பலவாக இயங்குவது உலக வாழ்க்கை
பல ஒன்றாகத் திகழ்வது அத்வைத நிலை"

என்ற உணர்வு பிறக்கும். இதுதான் ஞானயோகத்தின் அடிப்படைத் தத்துவம். ஆங்கிலத்தில் "Unity in Diversity" (பலவாறாகத் தோன்றினாலும் இருப்பது ஒன்றே) என்று கூறுவதின் தாத்பர்யம் இதுவேதான் நம் "வழ்வின் ரகசியம்".

நம் சாஸ்திரங்களின் உபயோகம்:

இப்படி நம் வாழ்வின் ரகசியத்தை நமக்கு எடுத்துரைக்கும் ஒரு பெரும் சுவடி நம் சாஸ்த்திரங்கள். அவை "வேதம்", "வேதாந்தம்", "உபநிஷத்", "புராணம்", "இதிஹாசம் பொன்ற கிரந்தங்களாக நம்து முன்னோர்கள் அவர்கள் ஸமாதி நிலையிலிருந்து உணர்ந்ததை நமக்குத் தந்திருக்கிறார்கள். இவை கிரந்தாக்ஷரத்திலும் சம்ஸ்க்ருத பாஷையிலும் உள்ளன. இவைகளுக்கு விளக்கம் தந்து பாஷ்யங்களாக அமைத்துத் தந்துள்ளார்கள் நம் முன்னோர்களாகிய வியாஸ மஹரிஷி, ஆதி சங்கர பகவத்பாதாள், மத்வாசார்யாள் முதலிய ஆசார்யர்கள். இப்படி நமக்கு வழிகாட்டிகளாகத் திகழும் இந்த சாஸ்திரங்களை (அவைகளின் பாஷ்யங்களின் உதவியால்) நன்று படித்தறிந்து அதன்படி வாழ்க்கையை அமைக்க வேண்டியது ஒவ்வொருவருடைய வாழ்க்கை லட்சியமாகத் திகழ வேண்டும் என்பது எமது பிரார்த்தனை.

அருள்வாக்கு:

"அஸதோமா ஸத்கமய,
தமஸோமா ஜ்யோதிர் கமய,
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய.
ஹரி: ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:"

ஸாரம்:

அஸத்திய நிலையிலிருந்து ஸத்திய நிலை பெறுவோமாக,
அஞ்ஞான நிலையிலிருந்து ஞான நிலை பெறுவோமாக,
(ஜெனன) மரண நிலையிலிருந்து அமர நிலை பெறூவோமாக, (பிறகு)
ஓம் என்ற சாந்தி நிலையில் (என்றென்றும்) திகழ்வோமாக.

முற்றும்

பாகம் 4



             

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday