தாயென்று கும்பிடடி பாப்பா
- வாழும் முறைமை - கடிதம் 4
அசலம்
அருமை செல்வங்களே,
நித்திய கர்மாக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். கல்வி கற்பவர்களாகிய நீங்கள் இனிச் செய்ய வேண்டியது என்ன?
எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.
அன்புடன்
உங்கள் அசலம
ஓம்
அருள் வாக்கு
Date: 11 February 2007
கடிதம்
From
அசலம்
கல்வி கற்றல்:
உங்கள் பாடங்களை ஒழுங்கே கற்க வேண்டும். முதல் நாள் சொல்லிக்கொடுத்த பாடங்களையும் வீட்டுப் பாடங்களையும் (HOME WORK) சரிவரச் செய்ய வேண்டும். பள்ளித் தேர்வில் முதல் ஸ்தானம் பெற வேண்டும் எனும் குறிக்கோள் வேண்டும். அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் படிப்பதோடு நில்லாமல் ஸஹபாடிகளுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும். நாம் படித்ததை மற்றவர்க்குக் கற்றுக்கொடுத்தால் நமக்கு இரட்டிப்புப் பலன் கிடைக்கும். ஏனெனில் அதுவே ஒரு Revision ஆக அமையும்.
பள்ளிக்கூட வாழ்வு:
பிறகு உங்கள் பள்ளிக்கு ஒழுங்காகப் போய்வர வேண்டும். உங்கள் வகுப்பில் அத்யாபகந்மார் சொல்லித்தரும் பாடங்களை மிகக் கவனமாக, உன்னிப்பாகக் கேட்க வேண்டும். புரியாத பாடங்களுக்கு அத்யாபகந்மார்களை விள்க்கம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு “கவனிக்கும் மனம்” (attentive mind) அவசியம். அதாவது “கவனம்” (Concentration) மிக அவசியம். அது நீங்கள் காலையில் செய்யும் இறை வணக்கம் மூலமாகத் தானே இயல்பாக வரும். அத்துடன் மாதா பிதாக்களிடம் காட்டும் அடக்கமும், குருவினிடம் கொண்டுள்ள விநயமும், இறைவனிடம் வைத்துள்ள நம்பிக்கையும் இதற்கு உதவியாக அமையும். பிறகு சாயங்கால வேளையில் உடல் வியாயாமம் செய்ய வேண்டும். அதற்கு உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். இப்படி வித்யார்த்திகளாகிய நீங்கள் படிப்பிலும், வியாயமத்திலும் இறை வணக்கத்திலும் உங்களைப் பழக்கிக் கொண்டீர்களானால், உடல், மனம், புத்தி என்கின்ற மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெற்று முன்னேற உதவியாக இருக்கும்.
சுபாவ வளர்ச்சி: (Personality Development)
“சுட்டயிலே சீலம் சுடலைவரை” என்ற பழமொழி கவனத்திற்கு வருகிறது. அதாவது சிறு வயதில் கற்கும் சீலம் (பாடங்கள்) நம் மரணம் வரை நம்மைப் பின்தொடரும் எனப் பொருள். சிறு வயதில் நாம் எனன பழக்க வழக்கங்களைக் கையாளுகிறோமோ அவை நாம் இருக்கும் வரை நம்மை நயிப்பவையாக அமைந்துவிடும். இதிலிருந்து என்ன விளங்குகிறது? சிறு வயதிலிருந்தே நம் சுபாவம் (character) உருவாகிறது. ஒரு தரம் சுபாவம் நம்மைப் பற்றிக்கொண்டால் அதை வயதான பிறகு மாற்றுவது மிகக் கடினம். ந்ம்மை உருவாக்குவது நமது சுபாவ குணங்களே. ஆகையால் சிறு வயதில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியது நம் சுபாவ குண வளர்ச்சியிலேதான். சிறு வயதில் நல்லவர்களுடன் கூட்டுறவு, கெட்ட பழக்கங்களில் ந்ம்மை ஈடுபடாமல் தடுத்துக் கொள்வது, அன்பு, பாசம், பக்தி, விநயம், கருணை முதலிய நற்குணங்களைக் கற்று அதன்படி ந்ம்மை நயித்துக்கோள்வதில் ஊக்கம் காட்ட வேண்டும். அப்படியானால் நாம் முதிர்ச்சியடையும்போது இந்த நற்குணங்கள் நம்மை ஒட்டியே இருக்கும். முதிர்ந்த பிறகு நம் மனிதத்தன்மை (Personality) நம்மை உலகிற்க்கு அறிமுகப்படுத்துகிறது. மனித குண வளர்ச்சி (Personality Development) சிறு வயதிலிருந்தே உருவாக்கப்படுகிறது எனப் பார்த்தோம். ஆகையால் சிறு வயதின் வளர்ச்சியில் நாம் மிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.
சிறுவர் வளர்ச்சி
இப்பொழுது தெரிந்ததா ஏன் சிறுவதில் நாம் மிகக் கவனமாக நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று? இன்றைய சிறுவர்கள் தான் நாளைய பௌரர்கள் (Today’s children are tomorrow’s elders). ஒரு வித்திலிருந்து எப்படி மரம் உருவாகிறதோ அதுபோல் சிறுவர்களிலிருந்து முதியவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒரு செடியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் எப்படி நமக்கு ஒரு மரம் உருவாகிறதோ, அதுபோல் சிறுவர்கள் வளர்ச்சி முதியவர்கள் உருவாவதற்கு அடிப்படையாக உள்ளது. ஆதலால் தான் சிறு வயதிற்கு இவ்வளவு பிராதான்யம் தந்துள்ளார்கள. எனவே செல்வங்களே! நீங்கள் உங்கள் சிறு வயது வளர்ச்சியில் கவனம் செலுத்துவீரகளாக.
Achalam.com
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















