Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

முதல் அத்தியாயம், பாகம் 4

அத வ்யவஸ்திதம் த்ருஷ்ட்வா தார்த்ரராஷ்ட்ரான் கபித்வஜ:
ப்ரவ்ருத்தே சஸ்த்ர ஸம்வாதே தனுர் உத்தம்ய பாண்டவ:
ஹ்ருஷீகேசம் ததா வாக்யம் இதமாஹமஹீபதே

ஸ்லோகம் 20-21: கேளுங்கள்

ஸாரம்:

அப்பொழுது த்ருதராஷ்டிரருடைய ஸேனையிலுள்ளவர்கள் வரிசையாக நின்றுகொண்டு ஆயுதங்களை எந்த நிமிடமும் பிரயோகிக்கத் தயாராக இருப்பதைக் கண்டு, யாருடைய ரதத்தின் கொடியில் ஸ்ரீ ஹனுமானின் ரூபம் விளங்குகிறதோ, அந்தப் பாண்டுவின் புத்திரன் (அர்ஜுனன்) கிருஷ்ணனைப் (ஹ்ருஷீகேசன்) பார்த்து இவ்வண்ணம் உரை சைய்தான்.

விளக்கம்:

இப்பொழுதுபோல் அன்றும் வீரர்களுடைய வாஹனங்களில் அவர்களுடைய திறமைக்கு ஒப்ப, பதக்கங்கள் அல்லது அடயாளச் சின்னங்கள் கொண்ட கொடி பறக்க விடுவது வழக்கம். ஏனென்றால் யுத்த நியதிப்படி சரி ஸமமான் வீரம் படைத்தவர்கள் மோதுவார்களே தவிர, வீரம் குறைந்தவர்களுடன் வீரர்கள் மோதுவதில்லை. இந்தக் கொடி அவ்வீரர்களை அடையாளம் காட்டுவதற்க்காகவே தரப்பட்டுள்ளது. அப்படி அர்ஜுனனின் கொடியில் ஸ்ரீ ஹனுமான் இடம் பெற்றிருக்கிறார். ஒரு சமயம் ஸ்ரீ ஹனுமான், தான் யுத்தத்தில் பங்குகொள்ள இயலாது, ஆனால் அர்ஜுனனின் ரதத்திலிருந்து அவனுக்கு உறுதுணையாக யுத்தக்களத்தில் பிரசன்னமாக இருப்பேன் என்று வாக்களித்திருந்தார்.

இரண்டு தரப்பு ஸேனைகளின் அமைப்பையும், அவைகளில் இருக்கும் தலைவர்கள், வீரர்கள் முதலியொரின் வீரத்தையும், பலத்தையும், ஸேனைகள் நிரப்பின வடிவையும் த்ருதராஷடிரரிடம் எடுத்துரைத்த ஸ்ஞ்சயன, அர்ஜுனன் இந்த ஸேனை அமைப்பைக் கண்ணுற்றுத் தன் ஆயுதமான காண்டீபத்தைக் கையில் எடுத்து, பெகு வீரத்துடன் யுத்தத்திற்கு ஆயத்தமாகத் தன் ரத்த்தில் நின்றுகொண்டு ஹ்ருஷீகேஸனிடம் (கிருஷ்ண்னிடம்) பின்வருமாரு உரை செய்தான் என்று உரைத்தான்.

அர்ஜுன உவாச:

ஸேனயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபயமேSச்சுத
யாவதேதான் நிரீக்ஷேஹம் யோத்துகாமாந் அவஸ்திதான்
கைர்மயா ஸஹ யோத்தவ்யம் அஸ்மின் ரண ஸமுத்யமே

ஸ்லோகம் 21-22: கேளுங்கள்

ஸாரம்:

இரண்டு ஸேனைகளுக்கு மத்தியில் எனது ரதத்தைக் கொண்டு நிறுத்து ஹே அச்யுதா! யுத்தத்திற்கு ஆயத்தமாக (விரும்பி) நிரைந்து நிற்ப்பவர்களை நான் பார்க்க வேண்டும். இந்த யுத்தம் துவங்குவதற்கு முன் அவஸ்தையில் நான் யார் யாருடன் போர் புரிய வேண்டும் எனப் பார்க்க வேண்டும்.

விளக்கம்:

ஒரு மஹாவீரனுக்கு உகந்த கம்பீரத்துடன் அர்ஜுனன் தன் தேரோட்டியான ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்த்துப் போர்வீரனின் அதிகார தோரணையில் சொல்வது தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் தமது ஸகா என்றோ, பகவான் என்றோ தோரணை அர்ஜுனனுக்கு இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை. தான் ஒரு மஹா வீரன், கிருஷ்ணன் தனது தேரோட்டி என்ற பாவம் மட்டும் தான் புலப்படுகிறது. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் தன்னுடன் யுத்தம் செய்ய இச்சை கொண்டு தயாராக நிற்கும் தனது எதிர்க்கட்சியில் உள்ளவர்களை ஆராய்வதற்காகவும், தான் யார் யாருடன் யுத்தம் செய்ய வேண்டும் எனக் கணக்கிடுவதற்காகவும் தன் ரதத்தை இரு சேனகளின் மத்தியில் நிறுத்துமாறு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறான். இந்த அர்ஜுனனின் தோரணையிலிருந்து அவனது வீரமும், தைர்யமும், துணிச்சலும், காம்பீரமும், தன்னம்பிக்கையும் நன்றாக வெளிவந்துள்ளன. சற்றும் பயமில்லாத ஓர் அவஸ்தையைக் காண்பிக்கிறது. இப்பொழுது அர்ஜுனன் தெளிந்த புத்தியுடன் காணப்படுகிறான்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

“ஓர் பிரச்சினை நம்மை நோக்கி நிற்கும்போது நாம் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும், தைர்யம், துணிச்சல், வீராம், கம்பீரம் தன்னம்பிக்’கை, தெளிந்த புத்தி முதலிய குணங்கள் முன் நிற்க வேண்டும்.”

யோத்ஸ்யமானான் அவேக்ஷேSஹம் யஏதேSத்ர ஸமாகதா:
தார்த்த்ராஷ்ரஸ்ய துர்புத்தேர் யுத்தே ப்ரிய சிகீர்ஷவ:

ஸ்லோகம் 23: கேளுங்கள்

ஸாரம்:

நான் பார்க்க வேண்டும் யார் யார் ஸ்வார்த்த புத்திய்டன் சொந்த லாபத்திற்காகவும், துர்யோதனனை சந்தோஷிப்பதற்காகவும், நீச புத்தி கொண்ட த்ருதராஷ்டிரரின் மகனுடன் சேர்ந்து யுத்தம் புரிய வந்துள்ளவர்கள் என.

விளக்கம்:

இச்சொற்களிலிருந்து அர்ஜுனனின் மன நிலையும் விசாரமும் வெளியாகின்றன. துர்யோதநாதிகளின் துர்புத்தி கொண்ட நோக்கம் அவருடன் தங்கள் சொந்த லாப்த்திற்காக, (பாண்டவர்களின் சொத்தில் ஒரு பங்கு தங்களுக்கும் கிடைக்கும் என்ற நீச புத்தியுடன் கூடிய) வீரம் படைக்காத எவ்வளவு ராஜாக்கள் தங்களுக்கு எதிராக யுத்தம் புரிய துர்யோதனன் கட்சியில் சேர்திருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும் என நினைப்பது தெரிகிறது. துர்யோதன்ன் கட்சியில் உள்ளவர்கள் பெரிய வீரர்கள் அல்ல, அவர்கள் தங்கள் க்ரூர நோக்கத்துடனும், சொந்த லாபத்திற்காகவும், துர்யோதனனை சந்தோஷிப்பதற்காகவும் தங்களை எதிர்க்கத் துணிந்துள்ளார்கள் என அர்ஜுனன் கருதுகிறான். இனி சொல்லப்போகும் வாக்கியங்களிலிருந்து அர்ஜுனனின் மன நிலை மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும்.

என்ன புரிகிறது? நம்மை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் மிக எளிதாக எடுத்துக்கோள்ளக் கூடாது. அதன் தராதரத்தையும் அதன் கம்பீரத்தையும் நன்றாக ஆராய வேண்டும். எதற்காக இந்தப் பிரச்சினை வந்தது? யார் யாருக்கு லாபம்? யாரை இது தாக்கும்? இந்தப் பிரச்சினையின் பலம் எவ்வளவு? என்பன போன்ற சிந்தனைகள் எழ வேண்டும். பிறகு இவைகளை நன்றாகப் பரிசீலிக்க வேண்டும்.

ஸஞ்சய உவாச:

ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ குடாகேசேன பாரத
ஸேனயோருபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்

ஸ்லோகம் 24: கேளுங்கள்

ஸாரம்:

ஸ்ஞயன் த்ருதராஷ்டிரரிடம் இவ்வண்ணம் உரை செய்தான்:

இப்படி குடாகேசன் (அர்ஜுனன்) சொல்ல, ஓ பாரதா (த்ருதராஷ்டிரர்), ஹ்ருஷீகேசன் (ஸ்ரீ கிருஷ்ணன்) ரதத்தை இரு ஸேனைகளுக்கு மத்தியில் கொணர்ந்து நிருத்தினான்.

விளக்கம்:

அர்ஜுனனுக்கு குடாகேசன் = குடக்+ஈசன் என்ற ஓர் பேர் உண்டு. அதாவது தூக்கத்தை வென்றவன் எனப் பொருள். ஆனால் இது அவ்வளவாக உசிதமாகப் படவில்லை. பொதுவாக வீரர்கள் எல்லொருமே ஒரு வகைக்கு முழுத் தூக்கம் இல்லாதவர்களே. அவர்களால் சிறுது தூக்கத்தை வெல்ல முடியும். வேறொரு விளக்கம் சொல்லலாம். குடா+கேசம் – சுரூண்ட தலைமுடி. யுத்தத்தில் தலைமயிர் கண்ணை மறைக்கக் கூடாது. கண் க்ஷண நேரம் அடைந்தாலும் பெரிய ஆபத்துக் காத்திருக்கும். ஆகையால் தலைமயிரைச் சுருட்டிக் கட்டி வைத்துள்ளவன் என்ற விளக்கம் மிகப் பொருத்தமானது.

த்ருதராஷ்டிரரிடம் குருக்ஷேத்திரத்தில் நடக்கும் சம்பவங்களைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் ஸ்ஞ்சயன் சொல்லுவதாக இந்த கீதோபதேசம் அமைந்துள்ளது. இது வரை அர்ஜுனன் என்ன செய்கிறான் என்று கூறிக்கொண்டிருந்த ஸஞ்சயன், இப்பொழுது அர்ஜுனனின் ஆணைக்கிணங்கி ஸ்ரீ கிருஷ்ணன் ரதத்தை இரு ஸேனைளுக்கு மத்தியில் கொணர்ந்து நிறுத்தினான் எனக் கூறினான்.

பீஷ்மத்ரோண ப்ரமுகத: ஸர்வேஷாம்ச மஹீக்ஷிதம்
உவாச பார்த்த பச்யைதான் ஸமவேதான் குரூன் இதி

ஸ்லோகம் 25: கேளுங்கள்

ஸாரம்:

பீஷ்ம த்ரோணாதிகளுக்கும் ஓ! பார்த்தா!, மற்ற ராஜாக்களுக்கும் முன் கூடியிருக்கும் கௌரவர்களைப் பார் என (ஸ்ரீ கிருஷ்ணன்) அர்ஜுனனிடம் சொன்னார். இந்த ஒரே வாக்கியம் மட்டும்தான் முதல் அத்தியாயம் முழுவதிலும் ஸ்ரீ கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.

தத்ராபச்ய ஸ்திதான் பார்த்த: பித்ரூநத பிதாமஹான்
ஆசார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் ஸகீம்ஸ்ததா

ஸ்லோகம் 26: கேளுங்கள்

ஸாரம்:

இரு ஸேனையிலும் பார்த்தன் (அர்ஜுனன்) பிதாக்கள், பாட்டனார்கள், குருக்கள், மாமன்மார்கள், ஸஹோதரர்கள், புத்ரர்கள், பௌத்ரர்கள் ஸகாக்கள் முதலியோரைப் பார்த்தான்.

ஸ்வஸுரான் ஸுஹ்ருதச்சைவ ஸேனயோருபயோரபி
தான் ஸமீக்ஷ்ய ஸகௌந்தேய: ஸர்வான் பந்தூன் அவஸ்திதான்
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதன்னிதம் அப்ரவீத்

ஸ்லோகம் 27-28: கேளுங்கள்

ஸாரம்:

(அவன் பார்த்தான்) இரு தரப்பிலும் மாமனார், பந்துக்கள், முதலியொரை. பிறகு இரு தரப்பிலும் இந்த பந்துக்கள் இப்படி (போருக்கு) ஒருங்கி நிறப்பதைப் பார்த்த அர்ஜுனன் பெகு விஷாதத்துடன் (மனக்கஷ்டம்) தயா (Pity) மனப்பான்மையுடன் இவ்வண்ணம் உரைத்தான்.

விளக்கம்:

இது வரை தன் வீரத்தையும், யுத்த்த்தில் தாங்கள் வெல்ல வேண்டும், கௌரவாதிகளை ஒழிக்க வேண்டும், அது தன்னால் முடியும் என்றும் அது தன் கடமை என்றும் வீறாப்புடன் தற்பெருமையும் கலந்து கண்ட அர்ஜுனனின் மன நிலை இப்பொழுது இரு ஸேனைகளிலும் நிரம்பி நிற்கும் மாமனார்கள், குருக்கள், மாமன்மார்கள், பிதாக்கள், பாட்டன்மார்கள், பிள்ளைகள், பௌத்திரர்கள், ஸஹோதரர்கள், சினேகிதர்கள், மற்றும் பல பந்துக்கள் முதலியோரைப் பார்த்ததும் சிறிது கலங்கத் துவங்கியது. யுத்தத்தில் தாங்கள் ஜெயித்தாலும், இவ்வளவு பந்துக்களையும், மற்றும் யுத்த வீரர்களையும் இழப்பது ஒரு ஸமுதாயத்தை அடியோடு வேரறுப்பதாக ஆகும், அப்படிக் கிடைக்கும் வெற்றி ஒரு வீரனின் ஸாஹஸமல்ல என்ற தப்பான மனப்பான்மை வந்தது. தன் சாமர்த்தியத்தில் தனக்கிருந்த நம்பிக்கை இப்பொழுது ஒரு சங்கடமாகத் தீர்ந்து விட்டது. இதை தயை (Pity) என்ற ஓர் வார்த்தையால் சுட்டிக் காடடியிருக்கிறார் எழுத்தாளர். அது சரியல்ல. காரணம்,

இது அர்ஜுனனின் உசிதமில்லாத மனக்கலக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. எந்த ஒரு இக்கடடு நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன உறுதி வேண்டும். தன் மனதை இஹலோக சிந்தனைகளிலும் பந்தபாச நினைப்பிலும் செல்ல விடாமல் அவை தன் சுயநல எண்ணங்களைப் பெருக்கி மனத்தை நிலை குலையச் செய்யும் எனற சொல் இங்கு தகும். இதுதான் அர்ஜுனனின் மன நிலையே தவிர, தயை என்ற சொல்லுக்கு இட்ம் இல்லை. கீதையின் முதல் அத்தியாயத்தின் நோக்கம் இப்பொழுது புலப்படுகிறது. அர்ஜுனன் மன நிலை என்ற ஓர் வியாதி நம் எல்லோரையும ஓர் சமயம் ஆட்கொள்ளும். அதற்கு நிவர்த்தியாக ஸ்ரீ கிருஷ்ணனின் உபதேச மருந்து பிறகு வரும் அத்தியாயங்க்ளில் பார்க்கலாம். பகவத் கீதை அர்ஜுனன் வியாதிக்கு ஓர் உற்ற மருந்தாக அமைந்துள்ளது.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது:

“எந்த சந்தர்ப்பத்திலும், எவ்வளவு சோதனைகள் நம் வாழ்க்கையில் வந்தாலும், அதில் மனம் கலங்காமலும், தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டும், நாம் நம் கடமையிலிருந்து சிறிதும் தவறலாகாது. அவரவர்கள் தங்கள் ஸொந்த பந்தபாச விசாரத்தை ஒழித்து, பொதுநலத்தைக் குறிக்கோளாக வைத்து, தைர்யமாக, (நான் செய்கிறேன் என்ற ஸ்வார்த்த புத்தியில்லலாமல்) நம் கடமைகளை ஒழுங்கே செய்ய வேண்டும்” என்பதாகும்.

இனி வருவது, அர்ஜுனனின் வாயிலுருந்து வரும் வார்த்தைகள், அவனது விஷாத நிலையிலுள்ள பிதற்றல்களாக அமைந்துள்ளன. அவற்றில் சத்தில்லை, தன்னம்பிக்கை இழந்து, பந்தபாசத்தில் சுழன்று திரியும் ஒரு சராசரி மனிதனின் மனோ நிலை அதில் தெரியவரும்.

அர்ஜுன உவாச:

த்ருஷ்டேமாம் ஸ்வஜனம் க்ருஷ்ணா
யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
ஸீதந்தி மம காத்ராணி முகம்ச பரிசுஷ்யதி
வேபதுஸ்ச சரீரேமே ரோமஹர்ஷ்ச ஜாயதே

ஸ்லோகம் 28-29: கேளுங்கள்

ஸாரம்:

அர்ஜுனன் இவ்வண்ணம் உரை செய்தான்:

யுத்தம் செய்ய ஆயத்த்மாக நிரைந்து நிற்கும் எனது பந்துக்களைப் பார்க்கும்போது, ஓ கிருஷ்ணா! எனது அங்கமெல்லாம் தளருகிறது, எனது வாய் வரண்டு போகிறது, உடல் நடுக்கம் கண்டு ரோமாஞ்சம் கொள்கிறது.

விளக்கம்:

யுத்த பூமியின் இரு தரப்பிலும் யுத்தம் செய்யத் தயாராக நிற்கும் தனது பந்து ஜெனங்களைப் பார்த்ததும் அர்ஜுனனின் மனநிலை என்ன என்று அவனே சொல்வதிலிருந்து அறிய முடிகிறது. ஸஞ்சயன் முன்பு சொன்ன "தயை" என்ற சொல் தவறு என்று தெரிகிறது. அர்ஜுனனின் சரியான மனநிலை இப்பொழுது விளங்குகிறது. மன அமைதியில்லாத, பயம் நிறைந்த ஓர் சூழ்நிலையில் ஒரு மனிதன் எந்த மன நிலையில் இருப்பான் எனத் தெள்ளத் தெளியத் தெரிகிறது. நிகழ்கால மனோ சாஸ்திரப்படி இந்த நிலை "பயந்த மனோநிலை" (Fear Psychosis) எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு மனப்ராந்தியே ஒழிய சரியான நிலை அல்ல. இதை கீதை "அர்ஜுன விஷாத நிலை" எனப் பறைசாற்றுகிறது.

காண்டீவம் ஸ்த்ரம்ஸதே ஹஸ்தாத் த்வக்சைவ பரிதஹ்யதே
நச சக்னோமய்வஸ்தாதும் ப்ரமதீவச மே மன:

ஸ்லோகம் 30: கேளுங்கள்

ஸாரம்:

(அர்ஜுனன் தொடருகிறான்): “காண்டீபம் எனும் எனது வில் என் கையிலிருந்து நழுவுகிறது, எனது தோலுருப்புக் கொதிக்கிறது, என்னால் நிற்க முடியவில்லை, எனது மனம் அங்கும் இங்கும் அலைபாய்கிறது.”

விளக்கம்:

அர்ஜுனன் தன் நிலையைப் பற்றி மீண்டும் விவரிக்கிறான். மன அலைச்சல், தேஹ நடுக்கம், பகுத்தறிவு இல்லாத புத்திப் பேதலிப்பு முதலிய லக்ஷணங்களை விளக்குவதாக உள்ளது. இதிலிருந்து இக்கட்டிலிருக்கும் ஓர் சராசரி மனிதனுக்குத் தோன்றும் லக்ஷணங்கள் என்ன எனத் தெரிகிறது. தன் நிலை தன் இயக்கத்துக்கு அடங்காது போகும் விதம் எப்படி எனத் தெரிகிறது. முதலில் வீறாப்பாகப் பேசிய அர்ஜுனன் இப்பொழுது சக்தியற்று, மனோ தைர்யம் இழந்து, யோஜிக்கும் சக்தி அற்றுத் தளர்ந்து போவதை ஸஞ்சயன் வெகு தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். இது தான் அர்ஜுன விஷாத நிலை.

நிமித்தானிச பச்யாமி விபரீதானி கேசவ
நசஸ்ரேயோSனுபச்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே

ஸ்லோகம் 31: கேளுங்கள்

ஸாரம்:

(அர்ஜுனன் தொட்ருகிறான்): எனக்குக் கெட்ட நிமித்தங்கள் புலப்ப்டுகின்றன. ஓ கேசவா! எனது பந்துக்களை யுத்த்த்தில் கொன்று குவிப்பது உசிதமாகப் படவில்லை

விளக்கம்:

மனம் புத்தியின் பிடிவிட்டு, தன் போக்கில் அலையும்போது என்னவாகிறது என அர்ஜுனனின் வாக்கியங்கள் தெரிவிக்கின்றன. மனதில் உதிக்கும் விசாரங்களை வகை திரித்து வழி காட்டும் புத்தியின் பிடி விட்டு மனம் தன்போக்கில் போவது இதிலிருந்து தெரிகிறது. மனோ சாஸ்திரப்படி ஒரு மன நோயாளி வாய்க்கு வந்ததைப் பிதற்றுவதிலிருந்து அவன் நோயின் கடுப்பம் எவ்வளவு எனத் தெரிந்துகொள்ளலாம். இந்த மனோ நிலைக்குக் காரண்ம் என்ன என்று அந்த நோயாளியின் வாயிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அதே நிலைதான் இங்கு அர்ஜுனனுக்கு வந்திருப்பது. இப்படித் தடுமாறும் மனநிலையிலிருக்கும் அர்ஜுனன் என்ன வேண்டுகிறான் என்பதைப் பின் வரும் ஸ்லோகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது:

"சரியாக சிந்திக்காமலும், புத்தியை உபயோகிக்காமலும், மனதுக்குகந்த படிப் போகும் வழி நம்மை ஒரு நிலையிலில்லாமல் செய்துவிடும். எப்பொழுதும் மனோ தைர்யம் இழக்கக் கூடாது, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே நாம் ஓர் காரியத்தில் இறங்க வேண்டும், நம் கடமையிலிருந்து நழுவாது நம் சுயநலம் மட்டும் நாடாது பொது நலத்தில் மனதைச் செலுத்தி, தர்மப்படி நடக்க வேண்டும் என்பதே தான்."

ஹரி ஓம்

தொடரும்...

அத்தியாயம் 1, பாகம் 3 அத்தியாயம் 1, பாகம் 5

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button