Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத்கீதா சாரம்
அசலம்





image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

முதல் அத்தியாயம், பாகம் 3

தத:சங்காஸ்ச பேர்யாஸ்ச பணவானக கோமுகா:
ஸஹஸைவாப்ய ஹன்யந்த ஸசப்தஸ்துமுலோsபவது

ஸ்லோகம் 13: கேளுங்கள்

ஸாரம்:

பிறகு (பீஷமரின் சங்கநாதத்தைத் தொடர்ந்து) மற்றவர்களுடைய சங்கங்களும், பேரிகை, மத்தளம், கொம்பு முதலிய வாத்தியங்களின் நாதங்களும் உடனடியாக முழங்கின. அவைகளின் சப்தம் மிக ஆக்ரோஷமாக இருந்தது.

விளக்கம்:

பீஷ்மரின் சங்கநாதத்தைத் தொடர்ந்து மற்ற தலைவர்கள் உடனடியாகத் தங்கள் வசமுள்ள சங்கங்கள், பேரிகை, மத்தளம், கொம்பு முதலிய பல வாத்தியங்களை முழக்கினார்கள். அந்த சப்தம் ஆக்ரோஷமாக ஒலித்தது. இங்கு ஸஞ்சயன் இந்த நாதத்தை அரை மனதுடன் ஆக்ரோஷமாக இருந்தது எனச் சொன்னார். அடுத்து, பாண்டவர்கள் முழக்கின சப்தத்தை மிக பயங்கரமாக விண்ணைப் பிளக்கும் வண்ணம் என்றெல்லம் சொல்கிறார். இதிலிருந்து அவர் தர்மத்தின் பக்கம் சாய்வதாகத் தெரிகிறது.

தத:ஸ்வேதைர் ஹயைர்யுக்தே மஹதிஸ்யந்தனே ஸ்திதௌ
மாதவ:பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ருதத்மது:

ஸ்லோகம் 14: கேளுங்கள்

ஸாரம்:

அப்பொழுது வெள்ளைக் குதிரைகள் பூட்டின மஹத்தான ரதத்தில் அமர்ந்திருக்கும் மாதவனும் (கிருஷ்ணன்) பாண்டு புத்திரனும் (அர்ஜுனன்) தங்கள் திவ்ய சங்கங்களை எடுத்து (எதிரொலியாக) சங்கநாதம் முழக்கினார்கள்.

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவதத்தம் தனஞ்சய:
பௌண்ட்றம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோததர:

ஸ்லோகம் 15: கேளுங்கள்

ஸாரம்:

ஹ்ருஷீககேசன் (ஸ்ரீகிருஷ்ணன்) பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், தனஞ்சயன் (அர்ஜுனன்) தேவதத்தம் என்ற சங்கையும், வ்ருகோதரன் (பீமன்) பௌண்ட்றம் எனப்படும் சங்கையும் ஒலிக்கச் செய்தார்கள்.

அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:
நகுல:ஸஹதேவஸ்ச ஸுகொஷ மணிபுஷ்பகௌ

ஸ்லோகம் 16: கேளுங்கள்

ஸாரம்:

குந்தீபுத்திரனாகிய ராஜா யுதிஷ்டிரன் “அனந்தவிஜயம்” என்ற தன் சங்கையும், நகுலனும் ஸஹாதேவனும் “ஸுகொஷம்”, “மணிபுஷ்பகம்” என்ற தங்கள் சங்கங்களையும் முழக்கினார்கள்.

காஸ்யஸ்ச பரமேஸ்வாஸ: சிகண்டீச மஹாரத:
த்ருஷ்டத்யும்னோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித:

ஸ்லோகம் 17: கேளுங்கள்

ஸாரம்:

நல்ல வில்வித்தை மெதையாகிய காசி தேசத்து ராஜாவும், பதினோராயிரம் வில்வித்தை வீரர்களடங்கிய ஸைன்யத்திற்கு நேதாவாகிய சிகண்டியும், த்ருஷ்டத்யும்னன், விராட ராஜ்ய மஹாராஜா, சாத்யகி முதலியவர்களும்.

த்ருபதௌ த்ரௌபதேயாஸ்ச ஸர்வச:ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு:சங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக்

ஸ்லோகம் 18: கேளுங்கள்

ஸாரம்:

ஹே பூபதியே! த்ருபதராஜாவும், த்ரௌபதி புத்திரர்களும், சுபத்ரையின் அதிபலசாலியாகிய புத்திரனும் (அபிமன்யு) தங்கள் சங்கங்களை ஒலித்தார்கள்.

விளக்கம்:

இங்கு மேற்கூறிய ஐந்து ஸ்லோகங்களால், ஸஞ்சயன் அர்ஜுனனின் ரதத்தின் மஹிமை, குதிரைகளின் தரம் இவைகளை மிகைப்படுத்தி திவ்ய சங்கம் என எடுத்துரைத்ததிலிருந்தும், ஹ்ருசீகேசன் (அடர்ந்த முடியுடையவன்) எனப்படும் ஸ்ரீ கிருஷ்ண பகவான், தனஞ்சயன் (தனத்தை வென்றவன்) என்ற அர்ஜுனன், வ்ருகோதரன் (பெரிய வயறுடையவன்) என்ற பீமன், யுதிஷ்டிரன், நகுலன், ஸஹாதேவன், காசி ராஜா, சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், ஸாத்யகி, த்ருபத மஹாராஜா, த்ரௌபதி புத்திரர்கள், ஸுபத்ரா புத்திரன் என்றெல்லாம் பாண்டவர்கள் பக்கமுள்ள ஒவ்வொரு நேதாக்களையும் அவர்களுடைய சங்கங்களையும் விவரிக்கிற விதத்திலிருந்து ஸஞ்சயனின் பாண்டவர்கள் பக்கமுள்ள மனநிலை வெளியாகிறது.

ஸகோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயது
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுநாதயன்

ஸ்லோகம் 19: கேளுங்கள்

ஸாரம்:

(பாண்டவர்கள் பக்கமிருந்து வந்த) வானையும் விண்ணையும் அதிர வைக்கும் இந்தப் போர் முழக்கம் த்ருதராஷ்டிரரின் ஸேனைகளில் உள்ளோர் உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது.

விளக்கம்:

ஸஞ்சயன் த்ருதராஷ்டிரரிடம் சொல்லும் இந்த யுத்தக்களத்தின் வர்ணனை, பாண்டவர்களின் சேனயின் பலத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கௌரவ ஸேனையின் விவரண்சம் இவ்வளாவு விரிவாக இல்லை. ஒருகால் ஸஞ்சயன் த்ருதராஷ்டிரரின் உள்ளத்தில் இந்த யுத்தத்தின் விளைவை முன்கூட்டியே தெரிவதுபோல் எடுத்துரைப்பதாகவே உள்ளது. இப்படி விவரித்தாலாவது ஒரு சமயம் த்ருதராஷ்டிரன் தன் ஸேனையைப் பின்வாங்கி யுத்தத்தை நிறுத்துவாராகில் எவ்வளவு க்ஷேமமாக இருக்கும் என்று சஞ்சயன் நினைப்பதாகத் நோன்றுகிறது. அவர் யுத்தத்தைத் தவிர்க்க வழி தேடுவதாக அமைந்துள்ளன இந்த ஸ்லோகங்கள்..

ஸஞ்சயனின் இந்த மனோநிலை நமக்கு என்ன கருத்தைத் தெரிவிக்கிறது? “அதர்மத்தின் பக்கம் நின்று பணிபுரியும்படி நேரிட்டாலும், நாம் தர்ம சிந்தனையைக் கைவிடக்கூடாது. அதர்மக்காரர்களையும் தர்ம வழியில் செல்ல உபதேசிக்க வேண்டும்” என்பதாகும்.

ஹரி ஓம்

தொடரும்...

அத்தியாயம் 1, பாகம் 2 அத்தியாயம் 1, பாகம் 4

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

ஆசிரியரின் மின் தளம்: Achalam.com

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

: ஹரி ஓம் :

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button