Guru Achalam
   படைப்புகள்






Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 

ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அத்தியாயம் 1, பாகம் 2

பகவத் கீதா சாரம்

அசலம்



image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com

அஸ்மாகம் து விசிஷ்டாயே தான்னிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைன்யஸ்ய ஸ்ம்ஞார்தம் தான் ப்ரவீமி தே

ஸ்லோகம் 7: கேளுங்கள்

ஸாரம்:

ஹே! பிராஹ்ம்மணர்களில் ஸ்ரேஷ்டராகியவரே! நம் ஸேனையில் உள்ள ஸ்ரேஷ்டர்களாகிய தலைவர்களின் பெயர்களை நீங்கள் அறிய உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் கேளுங்கள்,

விளக்கம்:

பாண்டவர்கள் ஸேனையில் உள்ள தலைவர்களின் பெயரைச் சொன்ன பிறகு, தன் ஸேனையிலுள்ள தலைவர்களின் பெயரை த்ரோணருக்கு எடுத்துரைக்கிறார் துர்யோதனன். இதில் அவர் அஹங்காரம் முழுதும் தெரிகிறது. எப்படி? த்ரோணருக்குத் தலைவர்களைத் தெரியாதா என்ன? ஆனாலும் தன் ராஜ தோரணையில் தன் கீழ் வேலை பார்க்கும் ஒருவருக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இதிலிருந்து அவர் கர்வம் வெளிப்படுகிறது. த்ரோணர் ஒரு ஸேனாதிபதி என்ற விசாரம் இல்லாமல் நம் பக்கமும் ஸ்ரேஷடமான தலைவர்கள் இருக்கிறார்க்ள் எனப் பறை சாற்றுவதாகத் தெரிகிறது. இல்லை அவருக்குப் பாண்டவ ஸேனைத்தலைவர்களின் வீரம் தன் தலைவர்களுக்கும் இல்லையே என்ற கவலையாகவும் எடுத்துக்கொள்ளலாம். எதுவானாலும் துர்யோதனனின் மனம் சஞசலப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தாவது: “பலஹீனத்தில் தற்பெருமைப்படுவது உசிதமல்ல. ஏனென்றால் பெரியோர்களிடம் பழகும்போது கூட வினயம் இராது. நாம் நம்மையே புகழக்கூடாது. அது நம் பலவீனத்திற்கு அறிகுறி.”

பவான் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்சய:
அச்வத்தாமா விகர்ணஸ்ச ஸௌமதத்திஸ்ததைவச

ஸ்லோகம் 8: கேளுங்கள்

ஸாரம்:

தாங்களும், பீஷ்மரும், கர்ணனும், யுத்தத்தில் ஜெயமே கண்ட க்ருபரும், அச்வத்தாமாவும் (த்ரோண புத்திரன்), விகர்ணனும், ஸோமதத்தனின் புத்திரனும்

விளக்கம்:

முந்தின ஸ்லோகத்தில் பிராஹ்மணரில் ச்ரேஷ்டரே என்று பரிஹாஸமாகத் தான் சொல்லிவிட்டோமே என்று வருந்தி, இப்பொழுது த்ரோணருக்குப் பெருமை தரும் வண்ணம், தன் பக்கம் உள்ள ச்ரேஷர்களின் பட்டியலில் முதலாவதாக “தாங்களும்” எனத் துவங்குகிறார். பிறகு ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லும்பொழுது, த்ரோணர், அவர் மைத்துனனாகிய க்ருபர், த்ரோண புத்திரனாகிய அச்வத்தாமா என்று அழுத்திச் சொல்வதிலிருந்து, மறைமுகமாக த்ரோணருடைய பந்துக்கள் அடங்கிய இந்த ஸேனை தோல்வி பெற்றால் த்ரோணருக்கு அபமானம் என்று குத்திக்காட்டுவது போல் உள்ளது. இப்படி ஏழு வீரர்களின் பட்டியலைச் சொல்லி அவரை ஊக்குவிக்கப் பார்ககிறார் துர்யோதனன். இதிலிருந்து என்ன தெரிகிறது? “தன்னம்பிக்கை இல்லையேல் நமக்கு வேண்டியவர்களைக் கூட சந்தேஹிப்போம். இது தவறு.”

அன்யேச பஹவ: சூரா மதர்த்தே த்யக்த ஜீவிதா:
நானா சஸ்த்ர ப்ரஹரணா: ஸர்வே யுத்த விசாரதா:

ஸ்லோகம் 9: கேளுங்கள்

ஸார்ம்:

இன்னும் அனேகம் வீரர்கள் எனக்காகத் தங்கள் ஜீவனைத் தியாகம் செய்யத் துணிந்தவராகவும், அஸ்த்ர வித்தையில் நிபுணர்களாவும். பலவாறான அஸ்த்ரங்களை உடையவர்களாகவும (உள்ளனர்).

விளக்கம்:

பாண்டவர்கள் பக்கமுள்ள வீரர்களின் பட்டியலில் தலைவர்களும், மற்றும் சில வீரார்களும் இடம் பெற்றார்கள். கௌரவ ஸேனைப் பட்டியலில், கைவிட்டு எண்ணக்கூடிய சிலவர்களே சொல்லப் பட்டார்கள். ஏனென்றால் துர்யோதனன் தனக்கு முன் பார்ப்பவர்களை மட்டுமே சொன்னார். மற்ற வீரர்கள் ஞாபகத்திற்கு வரவில்லை. இந்தத் தப்பை உணராது மொத்தமாக மற்று அனேகம் வீரர்களும் என்று மழுப்பிவிட்டார். எனக்காக உயிர் துறக்கச் சித்தமானவர்கள் என்பதை இரண்டு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று, தன்னிடம் அவர்களுக்குள்ள மதிப்பைப் பறைசாற்றுவது போல் தெரிகிறது. மற்றொன்று, ஜீவ சடங்களாகிய வீரர்கள் என ஏளனமாகச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவர்கள் வீரம் பாண்டவ சேனைக்கு முன் செல்லாது என சந்தேஹிப்பதாகத் தெரிகிறது. இது எதனால்? துர்யோதனனின் மன நிலையைக் காட்டுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? “மனம் குழம்பிவிட்டால் செய்யும் காரியத்தில் கவனம் செல்லாது. அவநம்பிக்கை ஏற்படக்கூடும் என்பதே”.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்

ஸ்லோகம் 10: கேளுங்கள்

ஸாரம்:

பீஷ்மரால் நயிக்கப்பட்ட நம் ஸேனாபலம் போதுமானது. ஆனால் பீமனால் நயிக்கப்படும் அவர்கள் ஸேனை பலஹீனமானது. அல்லது பீஷ்மர் ஸேனாதிபதியாகி நடத்தும் நம் ஸேனை மிகப் பெரியது. ஆனால் பீமன் தலமையில் உள்ள அவர்கள் ஸேனை சிறியது. (என்று இரண்டு அர்த்தம் தரலாம்.)

விளக்கம்:

பெரிய யுத்த வீரராகிய பீஷ்மர் தலைமை தாங்கும் கௌரவ ஸேனை பெரிதானாலும் பலஹீனமானது. ஆனால் யுத்தக்தில் அனுபவம் போதாத பீமனால் நடத்தப்படும் அவர்கள் ஸேனை மிகவும் பலமானது என்ற கருத்தை எடுத்துக்கொண்டால் துர்யோதனனின் அவநம்பிக்கை மிகத் தெளிவாகத் தெரிகிறது. துர்யோதனனின் மனதில் தான் அதர்மம் இழைக்கிறோமென்றும், அதனால் மிகச் சாதாரணமான அவர்கள் ஸேனை தர்மத்திற்காகப் போர் புரிவதால் மிக உஊக்கத்துடன் செய்வார்கள், அதனால் அவர்கள் ஸேனையின் மனோபலம் மிகப் பெரிது. தான் அதர்மத்தை ஒட்டிச் செய்யும் யுத்தத்தில் தன் வீரர்களூக்கு மனச்சாட்சி உறுத்தல் இருக்குமாதலால் தன் கட்சி பலஹீனமானது என்று துர்யோதனன் நினைப்பதுபோல் தெரிகிறது. மற்ற விளக்கத்தைப் பார்த்தால், பீஷமர் நடத்தும் ஸேனை அவர் வீரத்தில் நம்பிக்கை வைத்து மனமுவந்து போரிடுவார்கள். அதனால் தன் ஸேனை மிக பலம் பொருந்தியது ஆனால் யுத்தத்தில் பரிச்சயமில்லாத பீமனைச் சார்ந்த வீரர்கள் மனோபலம் இல்லாமல் இருப்பார்கள். இதுதான் ஸம்ஸ்க்ருத பாஷையின் மஹத்துவம். ஒரு வார்த்தைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விளக்கங்கள் தரலாம். எப்படிப் பார்த்தாலும், துர்யோதனனின் அதைர்யமும் பயமும் இந்த ஸ்லோகத்தில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? “தார்மீகமாகச் செய்யும் காரியம் வெற்றி பெறுவது நிச்சயம். அதர்மமாகச் செய்யும் காரியங்கள் தோல்வியைத் தரும். நல்ல நோக்கத்துடன் பிறருக்குச் சாதகமாகச் செய்யும் காரியங்கள் நினைத்தபடி நடக்கும். கெட்ட நோக்கத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனைத் தரா.”

அயனேஷுச ஸர்வெஷு யதாபாகம் அவஸ்திதா:
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவஹி

ஸ்லோகம் 11: கேளுங்கள்

ஸாரம்:

ஆகையால், பல பாகமாகப் பிரிந்து அமைந்துள்ள ஸேனையின் வ்யூஹத்தில் உங்களுடைய ஸ்தானத்திலிருந்து எல்லோரும் பீஷ்மரையே காக்க வேண்டும்.

விளக்கம்:

தன் பக்கம் போரிடக் குழுமியுள்ள பல தேசத்து ராஜாக்களும், காட்டு ராஜாக்களும் தன் பக்கம் பீஷ்மர் இருப்பதால் தனக்கு உதவ முன்வந்துள்ளர்கள் என்றும், பீஷமர் இல்லையேல் அவர்கள் தனக்கு உதவி தர மாட்டார்கள் என்றும் அறிவார். பீஷ்மருடைய கீர்த்தி அவ்வளவு பெரிதானது என்று விளங்குகிறது. அவரின் போர்த் திறமையும், ஸூக்ஷ்ம புத்தியும், தர்ம விசாரமும் அதற்குக் காரணம். ஆகையால் பீஷமர் தம் பக்கம் உள்ளது ஒரு பெரிய பக்க பலம் என்று துர்யோதனனுக்குத் தெரியும். ஆகையால் பீஷ்மரைக் காக்க வேண்டியது அவசியம். யுத்தம் முடியும் வரை அவரைக் காக்க வேண்டும் எனத் தன் ஸேனையில் எல்லோரையும் பார்த்து துர்யோதனன் இப்படி உரைத்ததில் அதிசயமில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது: “தர்மபுத்தியுடனும், நேர்மையுடனும், யஜமான விச்வாஸ்முடனும் பணிபுரிபவர் எப்பொழுதும், எங்கும், எல்லோராலும் போற்றப்படுவர்”.

தஸ்ய ஸஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
ஸிம்ஹநாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான்

ஸ்லோகம் 12: கேளுங்கள்

ஸாரம்:

துர்யோதனனைக் குஷிப்படுத்த அவர் பிதாமஹனும் கௌரவர்களீல் ஏற்றவும் முதியவரும் ஆகிய பீஷ்மர் ஸிம்ம கர்ஜனம் செய்து தன்னிடம் உள்ள சங்கை ஊதினார்.

விளக்கம்:

கௌரவர்களில் ஏற்றவும் முதியவரும், பிதாமஹன் என்று எல்லோராலும் போற்றப்படுபவருமான பீஷ்மர் துர்யோதனனுக்குப் பக்கத்தில் இருந்து, துயோதனன் குருவாகிய த்ரோணரிடம் பேசும் புத்திஹீனமான வார்த்தைகளையும் அவர் மனக்கஷ்டத்தையும் உணர்ந்து, அதே சமயம் துர்யோதனனின் பைத்தியக்கரத்தனமான உளரகளைக் கேட்ட த்ரோணரின் சினம் கலந்த மனோபாவத்தையும், மற்ற கௌரவ ஸேனாதிபதிகளும், வீரர்களும் துர்யோதனனிடம் வைத்துள்ள அவநம்பிக்கையையும் உணர்ந்து, இனித் தாமதித்தால் எல்லோருடடைய மனோபாவமும் மாறி, தங்களுக்குக் குந்தகமாக ஆகலாம் என்று கருதி, எல்லோரையும் உஷார்ப் படுத்துவதற்காகவும், துயோதனனுக்கு தைர்யம் தருவதற்காகவும், யுத்தத்தை ஆரம்பிக்கும் பொருட்டும் ஒரு கர்ஜனை செய்து தன்னிடமுள்ள சங்கை ஊதினார். தர்மயுத்தம் துவங்குவதற்கு முன் இரண்டு பக்கங்களும் தாங்கள் தயார் என்றும் யுத்தம் துவங்கலாம் என்றும் தெரிவிப்பதற்காக சங்கநாதம் முழக்குவது என்ற நியதிக்கேற்ப பீஷ்மர் சங்கை ஊதினார். ஆனால் இது முதலில் போருக்கழைப்பு கௌரவர்கள் பக்கமிருந்து வந்ததால் கௌரவர்கள் முதலில் பாரதப்போரைத் துவங்கினார்கள் என்ற சொல்லுக்கு ஹேதுவாகியது. இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய நியதியானது: “பெரியோர்களின் பக்கபலம் நமக்கிருந்தால், நாம் நம் செய்கையில் தவறும்போது நமக்கு உதவி புரிந்து நம்மை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவார்கள்” என்பதே.”.

ஹரி ஓம்

தொடரும்...



             

அத்தியாயம் 1, பாகம் 1 அத்தியாயம் 1, பாகம் 3

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday