Guru Achalam
   படைப்புகள்






Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 

ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

முதல் அத்தியாயம், பாகம் 1

பகவத் கீதா சாரம்

அசலம்



image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com

த்ருதராஷ்ட்ர உவாச:
தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவா:ஸ்சைவ கிமகுர்வத ஸஞ்சய

ஸாரம்:

த்ருதராஷ்டிரர் சொன்னதாவது:

ஓ ஸ்ஞ்சய! யுத்தம் செய்ய இச்சை கொண்டு தர்ம பூமியாகிய குருக்ஷேத்ரத்தில் கூடியிருக்கும் என் ஜெனங்களும் பாண்டுவின் பிள்ளைகளும் என்ன செய்தார்கள்?

விளக்கம்:

இந்த ஒரு வினா மட்டும் தான் த்ருதராஷடிரன் தமது காரியதரிசியாகிய ஸஞ்சயனிடம் கேட்டார். பின் வரும் 700 ஸலோகங்களும் ஸ்ஞ்சயன் தரும் யுத்த விவரணமாகும். கண் பார்வையற்ற த்ருதராஷ்டிரன் மஹாபாரத யுத்தத்தைப் பற்றிய விவரங்களளைத் தமக்குக் கூறுமாறு தன் காரியதரிசியாகிய ஸஞ்சயனிடம் கேட்கிறார். ஸஞ்சயன் வியாஸ பகவானின் அருளால் வெகு தொலைவிலுள்ள யுத்த பூமியில் நடக்கும் யத்தக் காட்சியைப் படம் பார்ப்பதுபோல் காண முடிந்தது. (இப்பொழுது நமக்குள்ள TV, Computer போன்ற கருவிகள் செய்யும் காரியத்தை அன்று தப சக்தியினால் செய்ய முடிந்தது). அங்கு நடக்கும் ஒவ்வொரு விவரமும் விடாது த்ருதராஷ்டிரருக்கு விளக்க ஆயத்தமானார் ஸஞ்சயன். இரு தரப்பு சைன்யங்களின் மதிப்பும் அதில் தன்னுடைய கட்சியின் சேனாபலம் பாண்டவர்களுடையதை விட அதிகமென்றும் த்ருதராஷ்டிரருக்குத் தெரியும். ஆனாலும். தம் கட்சி வெற்றி பெறுமா என்ற சந்தேஹம் அவர்க்கு இருந்தது என்று “தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே” என்று சொன்னதிலிருந்து தெரிகிறது. அதாவது, குருக்ஷேத்ரம் தர்ம யுத்தம் நடக்கப்போகும் புண்யபூமி என்றும், அங்கு தர்மம்தான் வெல்லுமென்றும், தாம் பாண்டவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதால் தர்மச்செயல் தங்களிடம் இல்லையென்றும், அதனால் தங்கள் கட்சி வெற்றி பெறுமா என்ற சந்தேஹம் அவர்க்கிருந்தது; ஆனாலும் தன் பிள்ளைகளிடம் அதிகப் பாசம் வைத்திருந்ததால் அவர்கள் வெற்றி பெற வேண்டுமே என்ற கவலை அவரைப் பிடித்தாட்டியது. ஆசை யாரை விட்டது?

ஸஞ்சய உவாச:
த்ருஷ்ட்வாது பாண்டவானீகம் வ்யூதம் துர்யோதனஸ்ததா
ஆசார்யம் உபஸங்கம்ய ராஜா வசனம் அப்ரவீத்

ஸாரம்:

சஞயன் சொன்னதாவது:

யுத்தத்திற்கு ஒருக்கமாக நிற்கும் பாண்டவர்களின் சேனையின் நிலையைப் பார்த்த பின் ராஜா துர்யோதனன் அப்பொழுது தன் குருவை (த்ரோணர்) அணுகி இப்படி உரைக்கலானார்.

விளக்கம்:

இந்த ஸலோகததால் ஸ்ரீ வ்யாச பகவான் மிகத் தெளிவாக துர்யோதனின் மனநிலையைச் சொல்லாமல் சொல்கிறார். தன்னுடடைய சேனை பலம் பாண்டவர்களுடயதைவிட மிகவாக இருந்தாலும், பாண்டவர்களுடைய சேனையைப் பார்த்ததும் மனம் கலங்கி, தைர்யத்தை இழந்து தத்தளிப்பதை இங்கு காண்பித்துள்ளார். ஏனென்றால், குருவிடம் போய்த் தன் சங்கைகளைக் கொட்ட வருகிறார் துர்யோதனன். அதே சமயம், குருவிடம் பணிவுடன் செல்லாமல் தன் ராஜ தோரணையில் போய்ப் பேசுகிறான் என்பதை “ராஜா வசனம் அப்ரவீத்” என்ற ஒரே வார்த்தையில் வ்யாஸர் தெரிவிக்கிறார். இங்கு நாம் கொள்ள வேண்டிய கருத்து என்ன? “எவ்வளவுதான் நாம் நம்மைத் தயார் செய்தாலும், நாம் செய்யப்போகும் காரியம் ஸபலமாக வேண்டுமானால், மனநிலை ஒழுங்காக இருக்க வேண்டும். அதில் சஞ்சலம் இருக்கக் கூடாது. துர்விசாரம் உள்ளவர்களும் மற்றவர்க்குத் தீங்கு நினைப்பவர்களும் மன நிம்மதி இழக்க நேரிடும். ஆகையால் மனோதைர்யம் போய்விடும்..” என்பதாகும்.

பச்யைதாம் பாண்டுபுத்ராணாம் ஆசார்ய மஹதிம் சமும்
வ்யூதாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா

ஸாரம்:

ஹே குரோ! பாண்டுவின் புத்திராகளால் உருவாக்கப்பட்டு தங்கள் சிஷ்யனாகிய த்ருபதபுத்திரனால் நயிக்கப்படும் பாண்டவர்களின் மஹா சேனையைப் பாருங்கள்.

விளக்கம்:

யுத்தத்திற்கு முன் எதிர்க் கட்சியின் பலத்தைத் தன் கட்சியின் பலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். துர்யோதனன் அப்படி செய்கிறார். இதிலிருந்தது இனி வரும் மூன்று ஸ்லோகங்களினால் எதிர்த் தரப்பில் யுத்த களத்தில் குழுமியுள்ள பாண்டவர்க்ளின் யுத்த வீரர்களுடைய பெயர்களைத் தருகிறார். இநத ஒரு ஸ்லோகத்தால் கவி துர்யோதனனின் இளக்காரமான பேச்சை எடுத்துக் காட்டுகிறார். உங்கள் சிஷ்யன் த்ருபத புத்திரன் என்ற சொல்லால், குருவை ஏளனப்படுத்துகிறான். ஏனென்றால் உங்களால் வித்தை கற்றுத்தரப்பட்ட த்ருபதபுத்திரன் உங்களுக்கு எதிராக யுத்தத்திற்கு வந்துள்ளான் என்று ஏளனமாகச் சொல்கிறான். அதே சமயம் தன் சிஷ்யனை அழிப்பதற்கு த்ரோணர் முன்வருவாரா என்ற சந்தேஹமும் இந்த வார்த்தைகளில் தென்படுகிறது. குருவினிடம் பணிவைக் காட்டுவதற்கு பதிலாக ஏளனம் செய்வதாகவும் அவரிடம் அவநம்பிக்கை கொள்வதாகவும் அமைந்துள்ளது. துர்புத்தியின் தன்மையைக் காட்டுகிறது. நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்தாவது: “துர்மதி படைத்தவர்களுக்கு மனநிலை தெற்றுமாகில் அவர்கள பேச்சு அவர்கள் உள்ளக் கொதிப்பைக் காண்பிக்கும். வினயம் இருக்க வேண்டிய இடத்தில் ஏளனமும் அவநம்பிக்கையும் தென்படும்.” என்பதுதான்.

அத்ர சூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுன ஸமா யுதி
யுயுதானோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத:

ஸாரம்:

இங்கு பலசாலிகளும் வில்லம்பு வீரர்களும், பீமன், அர்ஜுனன், யுயுதானன், விராடன், த்ருபதன் போன்றவர்களுக்கு ஸமமானவர்களூமான யுத்தநேதாக்களும் உள்ளனர்.

த்ருஷ்டகேதுஸ்சேகிதான: காசிராஜஸ்ச வீர்யவான்
புருஜித் குந்திபோஜஸ்ச சைப்யஸ்ச நரபுங்கவ:

ஸாரம்:

த்ருஷ்டகேது, சேகிதான், வீர்யவானாகிய காசிராஜா, புருஜித், குந்திபோஜன், சைப்யன் முதலிய நரச்ரேஷடர்களும் உள்ளனர்.

யுதாமன்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவான்
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா:

ஸார்ம்:

பலசாலியாகிய யுதாமன்யுவும், தைரியசாலியாகிய உத்தமௌஜஸ்ஸும், ஸுபத்ரையினுடய புதல்வனும் (அபிமன்யு), பாஞ்சாலியினுடய பிள்ளைகளும், எல்லோரும் மஹாரதர்கள் நிரம்பியிருக்கிறார்கள். மஹாரதன் என்றால் 11,000 வில்லாளிகள் கொண்ட சேனைத் தலைவன் எனப் பொருள். அவர்கள் பலத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

விளக்கம்:

மேலே சொன்ன வீரர்களின் வலிமையையும் வீரத் தன்மைகளையும் பறைசாற்றுகிறார் துர்யோதனன். எதற்காக? த்ரோணாசார்யருக்குத் தெரியாதா என்ன? துர்யோதனனின் மன நிலையை எடுத்துக்காட்டவே இது அமைந்துள்ளது. துர்யோதனனின் சொல்களில் உள்ள கருத்தைப் பார்த்தால் அவர் மனக்கவலை தெரிகிறது. எதிர்க் கட்சியின் பலத்தைப் புகழ்வதால் தன் சேனையில் அவர்க்கிருந்த நம்பிக்கையில்லா அவஸ்தை வெளியாகிறது. எல்லாம் வல்ல குரு த்ரோணாச்சார்யரிடம் இப்படிச் சொல்வதன் நோக்கம் என்ன? தமக்கு மிகவும் பயமாக உள்ளது எதிர்த் தரப்புப் படையமைப்பு என்றும், இதைத் தாங்களே ஸமாளிக்க வேண்டும் என்றும், அதே சமயம் அவருடைய சிஷ்யர்களடங்கிய எதிர் ஸேனையைப் பாசம் காட்டாமல் தமக்காக த்ரோணர் அழிக்க வேண்டும் என்றும் துர்யோதனன் சொல்வதாகக் கருத்து. அவர் சொல்லும் தோரணையிலிருந்து ஒன்று தெளிவாகிறது. அதாவது தரோணாச்சார்யரிடம் துர்யோதனனுக்கிருந்த அவநம்பிக்கையும் வெளியாகிறது.

இதிலிருந்து நாம் கிரஹிக்க வேண்டிய கருத்து: “துர்புத்தி படைத்தவர்களிடம், எவ்வளவு உண்மையாகப் பணிபுரிந்தாலும் அவர்களுடைய அவநம்பிக்கை நம் மேல் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். அவர்களை நம்ப வைப்பது கடினம், காரணம் அவர்கள் மனம் எப்பொழுதும் அலைபாய்ந்துகொண்டிருக்கும். பயமும் அவநம்பிக்கையும் அவர்களை விட்டு அகலாது” என்பதாகும்.

ஹரி ஓம்

தொடரும்...



             

கீதா தியானம் அத்தியாயம் 1, பாகம் 2

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday