Guru Achalam
   படைப்புகள்






Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 



வாழ்வின் ரகசியம் - பாகம் 1

அசலம்




Philosophy of life - image courtesy: Answers.com

வாழ்வு என்பது என்ன?

முன் தொடரில் "வாழ்வின் நோக்கம்" என்ன என்று பார்த்தோம். அதில் நம் பூர்வ நிலைக்குத் திரும்பப் போவது எப்படி என்ற கருத்தைப் பார்த்தீர்கள். ஆனால் உலகில் நாம் உயிருடன் வாழும் வரை வாழ்க்கை எப்படி வாழ்வது என்ற வினா எழலாம். வாழ்வு என்றால் என்ன? இதுகூடத் தெரியாதா? உலகில் உயிருடன் நாட்களைக் கழிப்பதற்குப் பெயர் வாழ்வு என்று கூறலாம். ஆனால் வாழ்வுக்கு என்னென்ன தேவைப்படுகின்றன? நாம் உலகில் இயங்குவது எதனால்? எதற்காக? எப்படி? எதைக்கொண்டு வாழ்வது? எப்படி வேண்டுமானாலும் வாழலாமா? ஏதாவது நியமங்கள் உள்ளனவா? அதற்கு சான்றுகள் உண்டா? உலகம் எப்படித் தோன்றியது? அதை யார் படைத்தார்கள்? முன் சொன்ன ஜீவித குறிக்கோளை அடைய எப்படி வாழ வேண்டும்? அதற்கு உபாயம் என்ன? என்றெல்லாம் வினாக்கள் எழலாம். ஸஹஜம் தான். பார்ப்போம்.

உலகத்தின் தோற்றம்:

ஒரு நாடகம் நடத்த எப்படி ஒரு மேடை தேவைப்படுகிறதோ அதேபோல் வாழ்க்கை எனும் நாடகத்தை நடத்த நமக்கு ஒரு மேடை தேவைப்படுகிறது. அதுதான் உலகம். உலகத்தை மேடையாகக்கொண்டு நாம் வாழ்க்கை எனும் நாடகத்தை நடத்துகிறோம். உலகம் எங்கிருந்து வந்தது? பரம்பொருளினிடமிருந்து வந்தது. படைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என்ற மூன்று இயக்கங்களுக்கும் அதிபதிதான் பரம்பொருள். அது ஏகமாக புறக்கண்களுக்குப் புலப்படாத, நம் புத்திக்கு எட்டாத ஒரு அளவிட முடியாத சக்தி. பரம்பொருளின் படைப்பு சக்தியைத் தான் பிரஹ்மதேவன் என அழைக்கிறோம். காக்கும் சக்திக்கு விஷ்ணு எனக் குறிக்கிறோம். அழிக்கும் சக்தியை சிவன் என அழைக்கிறோம். உருவமில்லாததோ, பெயர் இல்லாததோ ஆன் பொருளை நம்மால் உணர முடியாது. ஆகையால் நம் அறிவுக்குப் புலப்படும்படி உருவங்களும் பெயர்களும் இறைவனுக்குத் தந்துள்ளார்கள் நம் பெரியோர்கள். இந்தப் பரம்பொருள் தன் சக்தியால் தானே உலகமாகவும், இயற்கையாகவும், ஜீவஜாலங்களாகவும் மாறி செயல் படுகிறது. உலகத்தின் உருப்புகள் எவை? ப்ருதிவ்யப் தேஜோ வாயுவாகாச்: எனப்படும் பஞ்சபூத வடிவம் தான் உலகம். ப்ருத்வி என்றால் பூமி (Earth), அப் என்றால் தண்ணீர் (Water) தேஜஸ்என்றால் ஒளி (Fire), வாயு என்பது காற்று (Air), ஆகாச: என்பது வெட்டவெளி (Space). பூதம் என்றால் அங்கம் அல்லது உறுப்பு அல்லது வஸ்து எனக் கொள்ள வேண்டும். பரம்பொருள் இந்த ஐந்து வஸ்துக்களாகப் பரிணமித்து இயற்கையாகத் (Nature) தோற்றமளிக்கிறார். இயற்கையில் 14 உலகங்கள் கோளங்களாக இருக்கின்றன. அவை பூ:., புவ:, ஸுவ:, மஹ:, ஜென:, தப:, ஸத்ய: என்ற ஏழு மேல் லோகங்களும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் என்ற 7 கீழ் லோகங்களும் ஆவன. இவற்றுடன் கிரஹங்களாகிய ஸூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனியும் உப கிரஹங்காளாகிய ராஹு, கேது, மாந்தி எனப்படும் கோளங்களும் இந்த இயற்கையில் பரந்து கிடக்கின்றன. இவைகளைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு அவசியமில்லை. ஏனெனில் நாம் வாழும் இந்த பூலோகத்தைப் பற்றி முதலில் அறிய வேண்டும். இந்த பூமி எனப்படும் உலகம் நமக்கு இருக்க இடம், ஸ்வாசிக்கக் காற்று, உண்ண உணவுப் பொருட்கள், குடிக்கக் குடிநீர், பார்வைக்கு இனிய காட்சிகள், பரந்த வெட்டவெளி, ஸூரியனின் கதிரொளி, சந்திரனின் ஒளி இத்தனையையும் மலிவாகத் தந்துள்ளது. இயற்கை வளத்திற்காகக் காலங்கள் மாறி மாறி வருகின்றன. இயற்கையில் எல்லாமே தானாக ஒரு நியதிக்கு உட்பட்டதுபோல் நடக்கிறதே. அப்படியானால் இயற்கைக்கு ஒரு நீதி இருக்க வேண்டுமே? அந்த நீதி யார் தந்தது? இப்படி எவ்வளவோ வினாக்கள் எழுகின்றன. இதற்கு விடை காண வேன்டும்.

இயற்கை ஒழுக்கம்:

உலகின் இயக்கத்தில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. ஸூரியன் உதிப்பதிலிருந்து, நதிகள் ஓடுவதிலிருந்து, காற்று வீசுவதிலிருந்து, காலங்கள் மாறுவதிலிருந்து, இரவு பகல் வந்து போவதிலிருந்து எல்லாக் காரியங்களிலும் ஓர் ஒழுங்கைப் பார்க்கிறோம். அதாவது சமயத்தில் ஒழுங்காக எல்லாம் முறைப்படி நடந்து வருகின்றன. யாரால் இந்த ஒழுக்கம் தரப்பட்டுள்ளது? பரம்பொருளின் கிரியா சக்திதான் இந்த ஒழுக்கத்தைத் தந்திருக்கிறது. இந்த ஒழுக்கத்தில் மாற்றம் எற்பட்டால் என்னவாகும்? ஒழுக்கம் கெட்ட, நிலையில்லாத மாற்றங்கள் நிகழும் அல்லவா? ஆக, இயற்கையின் இயக்கத்தில் ஓர் ஒழுக்கம், நியதி, கட்டுப்பாடு தென்படுகிறது. இப்படி இயற்கைக்கே ஓர் ஒழுக்கம் உண்டு என்றால் நம் வாழ்விலும் ஓர் ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டாமா? இப்படி ஆராயுமுன் நம் இயக்கத்தின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அது என்ன? நாம் வாழ்வது எதைக்கொண்டு? வாழ்வுக்கு வேண்டிய உருப்புகள் ஏவை? அவை எங்கிருந்து வந்தன? அவை எப்படி செயல் படுகின்றன? சுருக்கமாகச் சொன்னால் வாழ்வதற்கு என்னென்ன தேவை?

நம் உடலமைப்பு:

வாழ்க்கை நாடகம் நடத்த ஓர் நல்ல மேடை கிடைத்துவிட்டது. இனி வாழ்க்கை வாழ்வதற்கு என்ன வேண்டும்? உண்ண உணவு, உடுக்க உடை, ஸ்வாஸிக்கக் காற்று, இயற்கை வளம், சுற்றத்தார், தோழர்கள், பந்துக்கள், ஸமுதாயம், ஓர் அரசுக்கூடம் இவ்வளவுதானே? எல்லாம் நமக்கு இருக்கின்றனவே? வேறென்ன வேண்டும்? என வினவலாம். மோட்டார் கார் இயங்குவதற்கு அதன் Body எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நம் வாழ்விற்கு நலமுடன் கூடிய உடல். உடல் வழியாகத்தான் நாம் இயங்குகிறோம். உடல் இல்லையேல் வாழ்வு இல்லை. இந்த உடல் என்பது எதைக்கொண்டு உருவாக்கப்பட்டது? அதன் உருப்புகள் ஏவை? அதன் உபயோகம் என்ன? அதன் அமைப்பு என்ன? இதைத் தந்தது யார்? இதை நலமுடன் வைப்பது எப்படி? பார்ப்போமா?

எல்லா ஜீவராசிகளும் பரம்பொருளின் அம்சம் எனப் பார்த்தோம். பரம்பொருள் தன் இச்சைப்படி பஞ்சபூத வடிவில் உலகமாகவும், இயற்கையாகவும், ஜீவராசிகளாகவும் பரிணமித்தார் எனக்கண்டோம். அதாவது இந்த உடலும் பஞ்சபூதத்தால் ஆனது எனத் தெரிகிறது. ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது மாமிசம், எலும்பு, நாடிகள், தோல் முதலியவற்றால் உருவானது. இவைகளை ஒன்றாகச் சேர்த்து மண் (Eartj) எனக் கூறப்படுகிறது. ஏன்? உயிர் பிரிந்தபின் இந்த உடல் மண்ணோடு மண்ணாகக் கலக்கிறது. அப்பொழுது இது மண் தானே? உடலில் இரத்தம் ஓடுவது தண்ணீராலேதான். உயிர் பிரிந்தபின் இந்த உடல் ஜெடம் எனப்படுகிறது. அது கொஞ்ச நேரத்தில் தண்ணீர் விடத் துவங்குகிறது. உடலில் தண்ணீர் இல்லையேல் எங்கிருந்து இந்தத் தண்ணீர் வரும்? உடல் உயிருடன் உள்ளது. அதற்கு நம்முள் உள்ள ஜீவசக்தி காரணம். இதுதான் தேஜஸ் என அழைக்கப்படுகிறது. உடலில் காற்று உண்டு. Gas Trouble எப்படி வருகிறது? நாம் வாயுவை ஸ்வாசிக்கிறோமே. அது காற்றல்லவா? உடலில் இடைவெளி உண்டு. கண், காது, மூக்கு, வாய், வயிறு, ஸ்வாசகோசம் இவைகளில் இடைவெளி தெரிகிறதல்லவா? இதுதான் ஆகாயம். (Space) ஆம், நம் உடலும் இந்த பஞ்சபூதத்தால் ஆனதுதான் எனப் புலப்படுகிறது இல்லையா? ஆனாலும் எலும்பு, சதை, தோல்களாக இந்த உடல் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? என்ற வினா எழலாம். விஞ்ஞானிகளால் கூட சரிவர இதற்குக் காரணம் தர இயலவில்லை. அதுதான் தேவ ரகசியம். நம் ரிஷிகள் அவர்கள் தப சக்தியினால் அறிந்த உண்மை என்னவெனில், பரம்பொருள் தன் இச்சா சக்தியினால் இதை உருவாக்கினார் எனவாகும். நம் புத்திக்கு எட்டாத விஷயங்களை உணர நாம் தெய்வ நம்பிக்கை, குருவின் வாய்மொழியில் த்றுட விச்வாஸம் வைக்க வேண்டும்.

உடலை நாம் அறிந்துகொண்டோம். ஆனால் இந்த உடலமைப்பு நம்மை இந்த உலகில் வாழ எப்படி உதவுகிறது எனப் பார்ப்பொம். சதை, நாடிகள், தோல், எலும்பு இவவைகளால் உண்டான இந்த உடலில் கண், மூக்கு, த்வக்கு (சர்மம்), காது, நாக்கு, வாய், கை, கால், சிறுநீர் மலம் போவதற்குக் கழிவு த்வாரங்கள் என அமைந்துள்ளன. இவை எல்லாமாக சேர்ந்து உடல் என அறியப்படும் வெளி உறுப்புக்கள் (Macrocosm). இது தவிர, மனம், சித்தம், புத்தி என்ற மூன்று உருப்புக்களும் உள்ளே உள்ளன. அவைகளை நம் புறக் கண்களால் பார்க்க முடியாது. இதையெல்லாம் உடமையாகக் கொள்ள "நான்" என்ற அஹங்காரம் (EGO) உள்ளது. இது உள் உறுப்பு (Microcosm) என அழைக்கப்படுகிறது. இந்த அஹங்காரம் இந்த உடலை உடமை கொண்டுள்ளது. இந்த உடலமைப்புடன் அஹங்காரம் வாழுகிறது. அஹங்காரம் எப்படி வாழ்கிறது? இது என் உடல், என் மனம், என் புத்தி போன்ற நினைவுடன் வாழ்கிறது. உடலில் செல்லும் உணவுப்பொருட்கள் சத்தாக மாறி ரத்தமாகப் பரிணமித்து உடலுக்கு ஊக்கத்தைத் தருகின்றன. நாம் ஸ்வாஸிக்கும் வாயு நமக்கு உடலுக்குத் தேவையான் பிராண வாயுவைத் (Oxygen) தருகிறது. ஆனால் உடல் எப்படி இயங்குகிறது? அதனை யார் எப்படி இயங்க வைக்கிறார்கள்? அடுத்த இதழில் ஆராய்ந்து பார்ப்போமா?

தொடரும்...

அத்தியாயம் 2



             

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday