தாயென்று கும்பிடடி பாப்பா
- வாழும் முறைமை - கடிதம் 1
அசலம்
ஓம்
அருள் வாக்கு
Date: 14 January 2007
கடிதம்
From
அசலம்
அருமை செல்வங்களே,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துககள்
நீங்கள் எல்லோரும் நலமுடனும், புகழுடனும், வளமுடனும், அறிவுடனும், பலமுடனும் நீண்ட காலம் வாழ எமது ஆசிகள். வெறும் ஆசிகள் மட்டும் போதாது. அதைப் பெற நீங்கள் உங்களைத் தகுதியுள்ளவர்களாக அமைத்துக்கொள்ள வேண்டும். எப்படி? உங்கள் வாழ்க்கை முறையை ஒழுங்குடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக சில கருத்துக்களைப் பார்ப்போமா?
காலையில் கண்விழிக்கும் பொழுது, நீங்கள் உங்கள் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அவற்றை முதலில் பார்க்க வேண்டும்.
கரமூலேது கோவிந்தா ப்ரபாதே கர தர்சனம்.
ஸ்லோகம் 01:
கேளுங்கள்
நம் உள்ளங்கைகளில் பல ரேகைகளூம் நவக்கிரஹ தேவதைகள் வசிக்கும் சில மேடுகளும் உள்ளன. அவைகள் நாம் செய்யும் காரியங்களுக்கொப்ப அமைகின்றன; அதன்படியே நமக்குப் பலனும் வருகிறது. அதிகாலையில் முதலில் பார்க்கும் வஸ்து நமக்கு அந்நாளின் பலனைத் தரும். அது நம்முடைய செயல்களைப் பொறுத்திருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களின் இயக்கத்தால் அமையக்கூடாது. நம்மை நாமே நயிக்க வேண்டும். நமக்கு ஏது விதித்திருக்கிறதோ அதுவே கிடைக்கட்டும் என்ற கருத்தைக் கொண்டது. தினப்பொழுது நன்றாக அமைய, கடவுளின் அருள் வேண்டும். அதுவும் நம் உள்ளங்கைகளில் உள்ளன. நம் உள்ளங்கை முடிவில் லக்ஷ்மி தேவியும், மத்தியில் ஸரஸ்வதி தேவியும், அடிபாகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் இருப்பதாக இந்த ஸ்லோகம் தெளிவாகச் சொல்கிறது. அப்படி, காலை முதலில் இந்த மூன்று தெய்வங்களின் தரிசனம் நமக்கு வளமான வாழ்வையும், தெளிவான ஞானத்தையும், மகிழ்ச்சிகரமான பொழுதையும் தர வல்லது எனப் பொருள். இவர்களின் அருள் கிடைத்தால் நம் கை ரேகைகள் நல்லபடி அமையும். நாம் செய்யப்போகும் காரியங்கள் நல்லவைகளாக அமையும்.
கண்விழிக்கும் பொழுது எப்படி ஞாபகமாகக் கைகளைப் பார்க்க முடியும்? கண்விழிக்கும் பொழுது நமக்குத் தெரியாதே எனக் கருதலாம். முதலில் இது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இதை தினம் விடாது செய்து வந்தீர்களானால் கொஞ்ச நாளில் கண்விழித்துக் கொள்ளும்பொழது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் முகத்திற்குமுன் தானாகவே வரும். இதை எமது சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறோம். செய்து பாருங்கள். வேற்றி கிடைத்தால் எமது மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்பவும். யார் முதலில் வெற்றி பெறுகிறீர்கள் எனப் பார்ப்போம்.
உங்கள் அசலம்
எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.
இப்படிக்கு அன்புடன்
உங்கள் அசலம
Achalam.com
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















