வாழ்வின் லட்சியம் - பாகம் 2
அசலம்
உணவு வகைகள்
முதல் பாகத்தில் "ஸாத்வீக உணவு", "ராஜஸீக உண்வு", "தாமஸீக உண்வு" எனக் குறிப்பிட்டதை இங்கு விரிவு படுத்த விரும்புகிறேன்:
ஸாத்வீக உணவு:
நல்ல நினைவுகள், நல்ல விசாரங்கள் இவைகளைத் தூண்டிவிட உதவியாக உள்ள உணவு வகைகள் பால், பழ வகைகள், அரிசி, கோதுமை, ஊக்க சத்துடைய காய்கறிகள், தென்னை இளநீர், வாயுவை அதிகரிக்காத தான்ய வகைகள், தேன், நெய், தயிர் முதலியவை. உப்பு காரம் மிதமாக சேர்க்க வேண்டும், அதாவது உணவு உட்கொள்ளத் தேவையான அளவு. நம் ஆசைகளை, முக்கியமாகக் காம விசாரத்தைத் தூண்டிவிடக்கூடிய உணவு வகைகள் சேர்க்கக் கூடாது. இது நம் மனதை நல்வழிக்குப் போக உதவாது. நாம் எப்பொழுதும் சாந்தமாகவும், ஸுமுகமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் தேவையான, உயிர் வாழ்வதற்குத் தேவையான, உணவு வகைகள், அதுவும் தேவையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். நம் நலல எண்ணங்களைத் தூண்டிவிடக் கூடிய உணவாக உட்கொள்ள வேண்டும். அவை நம்மை நல்ல வழியில் செல்ல உதவும் வகையில் இருக்க வேண்டும்.
ராஜஸீக உணவு:
அதி காரம், உப்பு, வெங்காயம், உள்ளிப்பூண்டு, அசைவ உணவு, அதிகமாகப் பருப்பு வகைகள், மைதா, எண்ணெயில் பண்ணக் கூடிய பலஹாரங்கள், பூமிக்கடியிலிருந்து வரும் கிழங்கு வகைகள், பிராந்தி (சாராயம் வகைகள்), இவை நம் காம விகாரத்தைத் தூண்டிவிடும், வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கிளப்பும். இரத்தக் கொதிப்பு வர ஹேதுவாகும். சினத்தைத் தூண்டிவிடும். நம் மனதை ஒரு நிலையில் நிறுத்த உதவாது. காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யாதி துர்குணங்களைத் தூண்டிவிடுபவை இவைகள். தேக, மானஸீக, ஹிருதய சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கிளரும். நற்புத்தி நலியும். சண்டை சச்சரவுகளில் மனம் செல்லும், நிம்மதி கெடும்.
தாமஸீக உணவு:
உப்பு, காரம் இல்லாமல் சாப்பிடுவது, வேகாத காய்கனியைத் தினபது, சாராய வகைகள் அருந்துவது, ஊக்க சத்துடைய உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, அமிதமாக உணவு உட்கொள்ளுவது, இவை நம் தாமஸ குணத்தைத் தூண்டிவிடும். எப்பொழுதும் சோர்வாக இருப்பது, ஸதா உறங்குவது, சுய சக்தியை இழப்பது போன்ற நிலை ஏற்படும். நம்மை சோம்பலலாக இருக்கச் செய்யும்.
எல்லோரும் நலமுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













