தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- வாழ்க்கைத் தத்துவம்
அசலம்
அத்தியாயம் 13
பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
குருதே கங்கா ஸாகர கமனம்
வ்ருத பரிபாலனம் அதவா தானம்
ஞானவிஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மசதேன
வ்ருத பரிபாலனம் அதவா தானம்
ஞானவிஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மசதேன
கேளுங்கள்
ஸாரம்:
(ஓருவன்) கங்கா நதியில் ஸ்நானம் செய்யலாம், வ்ருதங்கள் இருக்கலாம், நோம்புகள் நோக்கலாம் அல்லது நிறைய தானதர்மங்கள் பண்ணலாம், ஆனாலும் ஞான்ம் (ஆத்மஞானம்) வரவில்லையேல், நூறு வருடங்கள் சென்றாலும் (அவனுக்கு) முக்தி (ஜீவன்முக்தி) கிடைக்காது.விளக்கம்:
ஆத்மஞானம் பெற வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். முதலில ஆசாபாசத்தை விட வேண்டும் என்று பார்த்தோம். பிறகு ஆத்மஞானம் பெற வேண்டும். ஒருவன் எவ்வளவுதான் கங்காஸ்னானம் செய்தாலும், வ்ருதங்கள் இருந்தாலும், நோம்புகள் நோற்றாலும், நிறைய தானதர்மங்கள் சைய்தாலும், ஆத்மஞானம் கிடைக்கவில்லையானால் நூறு வருடங்களானாலும் (அதாவது நூறு என்பது ஒரு கணக்கிற்குச் சொன்னது. இதன் பொருள் நீண்ட காலம் என எடுத்துக்கொள்ள வேணடும்) அவனுக்கு முக்தி கிடையாது எனப் பொருள். பூஜைகள், ஜெபங்கள், ஆசாரம் முதலியவைகள் நம் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம சிந்தனையில் புகுத்த உதவுமே தவிர நம்மைக் கடைத்தேற்றாது. ஸ்வானுபவத்துடன் தன்னிலையில் இருப்பதே ஆத்மஞானம் எனப்படுவது. அப்படி நீண்டகாலம் இருந்தால் ஜீவன்முக்திக்கு வழி கிடைக்கும்.
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
ஸ்லோகம் 18:
கேளுங்கள்
ஸாரம்:
ஆலயங்களிலோ, மரத்தின் சுபட்டிலோ வெறும் நிலத்தில் மரவுரி கட்டி உற்ங்குபவனுக்கும் எல்லா உடமைகளையும் சுகங்களையும் தியாகம் சைய்து வைராகியம் கொண்ட (ஸமபாவனையுடன் கூடின) ஒருவனுக்கும் ஸுகம் எப்படி வராமலிருக்கும்?விளக்கம்:
நமக்கு ஸுகம் உலகில் கிடைக்கும் வஸ்துக்களிலிருந்து வருகிறது என நினைக்கிறோம். ஆனால் உண்மையான ஸுகம் எங்கிருக்கிறது? இடுப்பில் மரவுரி கட்டி, தன்னுடைய எல்லா உடமைகளிலிருந்தும் கிடைக்கும் ஸுகத்தையும் அந்த உடமைகளையும் துறந்து, ஆலயங்களிலோ, மரச்சுவட்டிலோ வெறும் தரையில் மரவுரி கட்டிப் படுத்துற்ங்கும் வைராக்கியம் கொண்ட (ஸமபாவனனையுடன்) ஒருவனுக்குக் கிடைக்கும் ஸுகத்தை யாரால் அடைய முடியும்? அதாவது உலகிலிலுள்ள எல்லா வஸ்துக்களிலும் உள்ள ஆசாபாசத்தைத் துறந்து, எல்லா உடமைகளையும் துறந்து, சுக துக்கங்களில ஸமபாவனை கொண்டு, திறந்த வெளியில் மரச்சுவட்டில் வெறும் தரையில் வஸ்தரஹீனனாய் மரவுரி உடுத்துறங்கும் யோகிக்கு ஸுகம் இல்லை என்று யார் சொன்னது? அவருக்கு உள்ள ஸுகத்தை யாரால் தடுக்க முடியும்? அதாவது உடமையற்று நிச்சிந்தயாய், கவலையில்லாமல் இருக்கும ஸுகமே ஸுகம் எனப் பொருள்
யோகரதோ வா போகரதோ வா
ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி ந்ந்தத்யேவ
ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி ந்ந்தத்யேவ
ஸ்லோகம் 19:
கேளுங்கள்
ஸாரம்:
(ஏதொருவன்) தியானத்திலிருந்தாலும், இந்திரியானுபவங்களில் மூழ்கியிருந்தாலும், மற்றவருடன் கூடியிருந்தாலும் அல்லது தன்னந்தனியே (ஏகாக்ரமாய்) இருந்தாலும் சரி (அவன்) பிரஹ்ம நிலையில் நிலைத்திருந்தால் ஸுகத்தை, ஸுகத்தை, ஸுகத்தையே அனுபவித்திருப்பான்.விளக்கம்:
ஏது ஸுகம் எனச் சென்ற ஸ்லோகத்தில் சொன்னார். இந்த ஸ்லோகத்தில் அதை விரிவு படுத்துகிறார். இரண்டின் கருத்தும் ஒன்றுதான். அதாவது, ஒரு யோகி எந்த நிலையில் இருந்தாலும் (உலக வாழ்க்கையில்) ப்ரஹ்ம நிஷ்டையில் இருந்தால் அவனுக்கு ஸுகமே கிடைக்கும். பிரஹ்ம நிஷ்டைக்குப் போகுமுன் என்ன செய்ய வேண்டும்? எல்லாப் பொருளையும், அவைகளிலுள்ள எல்லா ஸுகங்களையும் துறந்து, கிடைத்த இடத்தில் வாசம் செய்து, (கிடைத்ததை புஜித்து), ஸமத்ருப்தியுடனும் ஸமபாவனையுடனும் ப்ரஹ்மநிலையில் நிலைத்திருந்தால் கிடைக்கும் அனுபவமே ஸுகம் எனப் பொருள். ஸுகம் வெளியிலல்ல, நம் உள்ளில் உள்ளது எனத் தெரிகிறது.
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
ஸ்லோகம் 20:
கேளுங்கள்
ஸாரம்:
யாதொருவன் கொஞ்சமாவது பகவத்கீதயைப் படித்து, ஒரு துளியாவது கங்கா ஜலத்தைப் பருகி, சிறிது நேரம் முராரியை (முரன் என்ற அஸுரனைக் கொன்றவன் – ஸ்ரீ கிருஷ்னன்) பஜித்து வருகிறானோ (அவனுக்கு) யமனுடன் வாதாட வேண்டிய அவசியம் இராது.விளக்கம்:
ஏன் பகவத்கீதா படனம் என்று சொல்கிறார்? கீதை ஐந்தாவது வேதம் எனக் கூறப்ப்டுகிறது. அதில் வேதத்தில் சொன்ன எல்லா தர்மங்களும் அட்ங்கியிருக்கின்றன. அதைப் படித்தால் வேதத்தைப் படித்ததுபோல் ஆகும். அதே போல் ஏன் கங்காஜலபானம் ச்லாக்யம் எனக் கூறுகிறார்? ந்திகளில் முக்கியமானது கங்கை. கங்காஜலம் முக்தியளிக்கும் என நமக்குத் தெரியும். ஆகையால் கங்காஜல பானம் உசிதம். முரன் என்ற அஸுரனைக் கொன்றவன் கிருஷ்ணன். அதுமட்டுமல்லாமல், எப்பொழுதும் நித்திய ஸுகத்தில் இருப்பவன் கோவிந்தன் (கிருஷ்ணன்). ஆகையால் நித்திய ஸுகத்திற்கு அவனை பஜிக்க வேண்டும். இதிலிருந்து, நித்தியஸுகத்திற்கு என்ன வழி என விளங்குகிறது. புண்ய நதி ஸ்னானம், பகவத்கீதா படனம், இறைவன் வழிபாடு இவை நிஷ்டையுடன் செய்துவந்தால் அவனுக்கு யெமனுடன் வாதாட வேண்டியதில்லை, அதாவது மரண பயம் சிறிதும் இராது எனப் பொருள்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
ஸ்லோகம் 21:
கேளுங்கள்
ஸாரம்:
மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்பத் திரும்ப மாதாவின் கர்ப்பப் பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும் இந்த நிலையைக் (ஸம்ஸார சகரத்தை) கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம். ஹே முரனைக் கொன்றவனே! தயைகூர்ந்து (என்னை இந்த ஸம்சார சக்ரத்திலிருந்து) காப்பாற்று.விளக்கம்:
உலக வாழ்க்கையின் நியதியைப் பற்றி விவரித்திருக்கிறார். ஜனன மரணம் என்பது ஒரு சக்கரத்தின் இடைவிடாத சுழற்சிபோல். திரும்பத் திரும்ப வருகிறது. ஜனனத்திற்கு முன் 10 மாதம் மாதாவின் கர்ப்பப் பையில் கிடந்துழலும் கஷ்டம் நாம் அறிந்ததே. ஜனித்தால் மரிக்க வேண்டும். ஜனனம் மாதாவின் உதரத்திலிருந்தே என்ற நியதி மாறாது. இப்படி ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள வாழ்க்கைதான் ஸம்ஸார ஸாகரம் எனப்படும். இதிலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தன் நிலை அடைய வேண்டுமானால், இறைவனுடைய க்ருபை அவசியம். ஆகையால் நித்திய ஆனந்த நிலையில் திகழும் ஸ்ரீ கிருஷ்ணனை பஜி என்று கருத்து.
ரத்யா சர்பட விரசித கந்த:
புண்யாSபுண்ய விவர்ஜித பந்த:
யோகீ யோக நியோசித சித்தோ
ரமதே பாலோன்மத்தவதேவ
புண்யாSபுண்ய விவர்ஜித பந்த:
யோகீ யோக நியோசித சித்தோ
ரமதே பாலோன்மத்தவதேவ
ஸ்லோகம் 22:
கேளுங்கள்
ஸாரம்:
வழியில் கிடக்கும் கிழிந்த சாக்குத் துணிகள் முதலியவைகளை எடுத்து உடுத்தி, நல்லது கெட்டது ஆகிய வழிகளைத் துறந்து யோகநிலையில் (ப்ரஹம் நிலையில்) ரமித்திருக்கும் யோகி ஒரு குழந்தையைப்போல் அல்லது ஒரு உன்மத்தனைப் போல் காணப்பாடுகிறான்.விளக்கம்:
நித்திய ஸுகம் என்பது ப்ரஹ்மத்தில் நிலைத்திருப்பதது எனப் பார்த்தோம். அப்பேர்ப்பட்டவனுக்குப் பெயர் யோகி. தியானத்திலிருந்துகொண்டு ப்ரஹம நிலையில் உறைத்திருக்கும் ஒருவன் எப்படி இருப்பான் என விவரிக்கிறார். வழியில் கிடைத்த கந்தல ஆடையை எடுத்துடுத்தி, நல்லது கெட்டது என்ற (ஸுக துக்கம்) காரியங்களிலிருந்து அகன்று, எப்பொழுதும் த்யான நிலையில் ப்ரஹ்ம நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகி ஒரு குழந்தையைப் போல் அல்லது ஒரு உன்மாத பித்தனைப் போல் திகழ்வான். ஏன்? குழந்தையும் பித்தனும் எப்படி நல்லது கெட்டதைப் பிரித்தறிவார்கள்? அவர்களுக்கு எல்லாம் ஒன்றேதான். வித்தியாசமிருக்காது. ஒரு பித்தனையும் ஒரு யோகியையும் பிரித்தறிய இயலாது. அவர்கள் எப்பொழுதும் ஸுகதுக்கத்தை உணர மாட்டார்கள். இதற்குச் சான்று திருவண்ணாமலையில் இருந்த ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். அவர் இதேபொல் வழியில் கிடைத்ததை உடுத்துவார், வழியில் கிடைத்ததை எடுத்து புஜிப்பார், தடியால் அடிப்பர்ர், கடைகளில் புகுந்து துணிகளைக் கிழிப்பார், பொருள்களை வாரி இறைப்பார். ஆனால் அதன் உடமைகளுக்கும் ந்ஷடம ஏற்படாது என்று மட்டுமல்ல அவர்கள் வியாபாரம் செழிக்கும். இது கண்கூடாக அனுபவித்தோர் உண்டு. அவர் பரம யோகியாய்த் திகழ்ந்து ஸ்ரீ ரமண மஹருஷியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
காமே ஜனனீ கோமே தாத:
இதி பரிபாவய ஸர்வம் அஸாரம்
விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்
காமே ஜனனீ கோமே தாத:
இதி பரிபாவய ஸர்வம் அஸாரம்
விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்
ஸ்லோகம் 23:
கேளுங்கள்
ஸாரம்:
நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? என் தகப்பன் யார்? இந்த உலகம் ஒரு ஸாரமில்லா வஸ்து, அது ஒரு ஸ்வபனம் போல் என சிந்தித்து உலகத்தை விடு (மறந்து விடு).விளக்கம்:
ஸ்ரீ ரமண மஹர்ஷி இதைத்தான் சொல்லியிருக்கிறார். அதாவது உன்னை நீ அறிந்துகொள். எப்படி? நீ யார், நான் யார், எனது தாய் தகப்பன் யார், இந்த உலக வாழ்வு ஒரு ஸ்வபனம் என மனதில் சிந்தனை செய் என்று. உடல் வாழ்க்கை உலகில் இருக்கும்போதே, இந்த உலகம் ஒரு ஸ்வ்ப்னம் போல, நீ, நான், தாய் தகப்ப்ன் என்றெல்லாம் உற்வு கொண்டாடுவது வெறும் ஆசாபாசத்தால், இப்படி வேறுபாடு ப்ரஹ்மத்திற்கு இல்லை, நாம் ப்ரஹ்மத்தின் அம்சம் என்று இப்படி விடாது சிந்தனை செய்தால் ப்ரஹ்மமாகவே திகழலாம். அதுதான் நித்திய. சத்திய ஆனந்த நிலை. கீதையில் ஸ்ரீகிருஷ்னனும் இதைத்தான் சொல்கிறார். இந்த உற்றார் உறவினர்கள், நல்லது, கெட்டது, ஸுகம் துக்கம் போன்ற த்வந்தங்கள் வெறும் மாயை. இந்த உலகம் ஒரு ஸ்வ்பன வடிவம். அதில் நிகழும் வாழ்க்கை அநித்தியம் என அறிந்துகொள் என அர்ஜுனனுக்கு உரைக்கிறார். இப்படி மனத்தில் உறுதியாக சிந்தனை செய்தால் நாம் முக்தி அடையலாம்.(தொடரும்)
: ஹரி ஓம் :
achalam38@gmail.com மின்னஞ்சலுக்கு வரும் வினாக்களுக்கு நேரடியாக உங்கள் மின்ன்ஞ்சலுக்கு பதில் தரப்படும்.Websites of Guru Achalam:
இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.
Email Addresses of Guru Achalam:
achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














