Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழ்வின் ரகசியம்
அசலம்


Philosophy of life - image courtesy: Answers.com

அத்தியாயம் 8

நம் இயக்கத்தின் அடிப்படை:

நம் இயக்கம் (தொடர்கிறது)

வாழ்க்கை வளமுடன் வாழ்வது எங்கணம்? எப்படி நம் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவது? நம் வேத சாஸ்த்திர நியதி என்ன? வாழ்க்கைக்கு அவை எவ்வளவு முக்கியம்? இந்த வினாக்களுடன் சென்ற இதழ் முடிவடைந்தது. இதை ஆராய்வோம்.

நம் இயக்கம் நம்முள் உள்ள மூன்று குணங்களை ஒட்டியே உள்ளன எனப் பார்த்தோம். ஆனால் இந்த குணங்கள் எப்படி மாறுகின்றன? இதற்கு மூல காரணம் நாம் உட்கொள்ளும் உணவின் தன்மையை ஒட்டி உள்ளது என்று வாழ்வின் லட்சியம் என்ற தொடரில் பார்த்தோம். நம் உணவின் தரம் நம் விசாரத்தின் தன்மைக்கு ஹேதுவாகிறது எனப் பார்த்தோமல்லவா? ஸத்வ உணவு ஸத்வகுணத்தைக் கிளறுகின்றது. அதேபோல் மற்ற ரக உணவுகள் அநதந்த குணங்களை உருவாக்குகின்றன. ஆகையால் நாம் எப்படி இயங்கவேண்டும் என்பது நம் கையில்தான் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள், நம் இயக்கத்தின் தன்மைக்கு யார் பொறுப்பு? நாமேதான் அல்லவா? விசாரங்கள் நம் உணவு வகைகளின் உறுப்பை ஒட்டி உதிக்கின்றன.

நல்ல உணவு நல்ல விசாரங்களைத் தரும். ஆனால் உணவு மட்டும்தானா நம் விசாரங்களின் தரத்திற்குக் காரணம்? அல்ல. முதல் பாகத்தில் சொன்னதுபோல், நாம் பிறக்கும்போது வித்தாக நம்முள் VAASANA (முன் பிறவியில் முடிவுறாத ஆசைகள்) உருவில்லாது ஓர் சக்தியாக மிஞ்சித் திகழ்ந்து மறு பிறவியில் அந்த ஆசைகள் நிறைவேறும் வகையில் உள்ள ஓர் உடலையும் அதற்கு உதவியாக உள்ள ஓர் இடத்தையும் தேர்ந்தெடுத்து, புதுப் பிறவியாக உருவெடுக்கிறது. அதுதான் நம் ஒவ்வொருவருடைய பிறவி ரகசியம். இந்த வாஸனா எனப்படும் சக்தியின் இயக்கத்தால் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் சேர்க்கைத் தரம் அமைந்து அந்த ஆசைகள் நிறைவேறும் பொருட்டு குணங்களை நம்முள் உருவாக்குகிறது. இது நமக்குத் தெரியாமலே நிகழ்கிறது. நம் இயக்கம் நல்லபடி அமைய வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்கும் உணவுப்பொருட்கள் நல்லபடியாக அமைய வேண்டும். இது நம் கையில் உள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் தரத்தை அறிந்து, ஸத்வகுணப்ரதானமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கு நம் ஆசைகளை அளவுடன் நம் உடல் நிலை, நம் பொருளாதாரம், நம் வாழ்க்கை லட்சியம் இவைகளுக்கு ஒப்ப அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பார்த்தால் முதலில் நம் வாழ்க்கை லட்சியம் நன்றாக அமைய வேண்டும். லட்சியம் நல்லபடி அமைந்தால் உணவு அதற்கு ஏற்ப அமையும். உணவு நல்லதாக இருந்தால் விசாரம் நல்லபடி அமையும். விசாரம் நல்லபடித் திகழ்ந்தால் நம் செய்கைகளும் நல்லதாகவே இருக்கும். நம் செய்கைகளின் விளைவுகளும் நன்றாகவே திகழும். அப்பொழுது நம் வாழ்க்கை வளமுடன் அமையும். இப்படி வாசன, உணவு, விசாரம், லட்சியம், செய்கை எல்லாம் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன். இதில் வாழ்க்கை லட்சியத்தை முதலில் நன்றாக அமைத்துக்கொண்டால் மற்றவை தானாக திகழும். இதுதான் நம் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வழி. நம்மை இயக்கும் இந்த வாசானா சக்தியை எப்படி நம் வழிக்குக் கொணர முடியும்? அதை நம்மால் கீழடக்க முடியுமா? இதற்கு என்ன உபாயம்?

நமது சுபாவ வளர்ச்சி:

நாம் பிறந்ததும், நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. நாம் வளர வளர நினைவுகள் வளர்ந்து நமக்கு நேரடியாகக் கிடைக்கும் அனுபவத்தால் அறிவு வளர்கிறது. நம் உற்றார் உறவினர்களுடனும், சமுதாயத்துடனும் உறவு கொண்டு அதன்மூலம் வரும் பந்தங்களிலிருந்து சிறுக சிறுக நம் சுபாவம் உருவாகிறது. இப்படிப் பல தடவை ஒரு காரியத்தில் ஈடுபடும்பொழுது நாமே நம் குணநிலையின் தரத்தையொட்டிப் பழக்க வழக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். வெளி உலக பந்தத்தால் கட்டுண்டு நமது சுபாவம் வளர்கிறாது. சுபாவம் நல்லபடி அமைய வேண்டுமானால் நமக்கு ஓர் வாழ்க்கை லட்சியம் தேவை. நல்ல லட்சியத்தை உருவாக்க குருவின் வடிவில் ஓர் வழிகாட்டி அவசியம்.

வேத சாஸ்திரங்கள்:

இங்குதான் நம் வேத சாஸ்திரங்கள் நமக்கு உதவி புரிகின்றன. குருவின் அருளால் நமது வேத சாஸ்திரங்களைப் படித்து அதன்படி நடந்தால் நம் குணம் சரிவர அமையும். அதற்குப் பிறவிமுதல் விதித்திருக்கும் நாமகரணம், ஜாதகரணம், அன்னப்ராசனம், குடுமி, உபநயனம், விவாஹம் போன்ற ஸ்ம்ஸ்கார கர்மங்களை ஒழுங்குடன் அனுஷ்டிக்க வேண்டும். இவை நாம் நமது சாஸ்திரத்தில் நம்பிக்கை கொள்ள உதவுகின்றன. பிறகு நமக்கு விதித்துள்ள ஆசாரப்படி இறை வழிபாடு, குருவினிடம் வினயம், பெரியோர்களிடம் மரியாதை, சிறுவர்களிடம் அன்பு, உறவினரிடம் பாசம் என நமது சுபாவத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். நமது வேத சாஸ்திரம் வாழ்க்கை வாழும் முறை, வாழ்வின் ரகசியம், நம் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும், எப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களைத் தெள்ளத் தெளிய உபநிஷத், புராணம் போன்ற கிரந்தங்களின் மூலம் எடுத்துரைக்கின்றது. நாம் சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்து, மாதா, பிதா, குரு, போன்றவர்களின் சொற்படி நடந்தால் நமது வாழ்க்கை ஓர் ஒழுக்கத்துடன் அமையும். நம் வேதம் அருளுவது என்ன?

“ஸத்யம் வத – தர்மம் சர
மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ,
ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோ பவ”

என்ற மந்திரத்தால் நமக்கு ஒழுக்கத்துடன் வாழும் வழியைக் காடுகிறது. மாதா, பிதா, குரு, அதிதி (நம்மை நாடி வருபவர்கள்) என நான்கு வழிகாட்டிகளைச் சுட்டிக் காட்டுகிறது. அவர்களை தெய்வமாகக் கொண்டாட வேண்டும் என உரைக்கிறது. நாம் இந்த உலகில் தோன்ற ஹேதுவாக அமைந்து நம்மைத் தன் உதரத்தில் பத்து மாதம் சுமந்து கஷ்டங்களை அனுபவித்து, நம்மை வளர்த்து ஆளாக்கப் பாடுபட்ட மாதாவிற்கு நாம் முதலில் கடமைப் பட்டுள்ளோம். பிறகு நமக்கு வளரப் பொருளாதாரம் திரட்டி, நமக்கு வழிகாட்டியுமாக அமைந்த நமது பிதாவிடம் அன்பும் பாசமும் கொள்ள வேண்டும். நமக்கு ஞானத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் நமது குருநாதரிடம் மரியாதையும் அடக்கமும் காட்ட வேண்டும். நம்மை நாடி வருவோர்க்கு உதவி புரிந்து, அவர்களை பஹுமதித்து, அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். நாம் இந்த உலகில் வந்து நலமுடனும் வளமுடனும் வாழ வழிவகுத்த தெய்வத்திடம் பக்தி செலுத்த வேண்டும். இப்படி நம் வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொள்வோமாகில் நாம் வளமுடனும் நலமுடனும் வாழ வழி அமையும்.

வாழ்வின் ரகசியம்:

வாழ்வின் லட்சியம் என்ன என முன் தொடரில் பார்த்தோம். இனி வாழ்வின் ரகசியம் என்ன என்று பார்ப்போம். “வாஸன” எனப்படும் (முன் ஜென்மாவில் நிறைவுறாத ஆசைகள்) சக்தி, ஆசைகள் நிறைவேற சாதகமான சூழ்நிலையை உருவக்கிக் கொண்டு, உலகின் ஓர் தகுந்த இடத்தில், உகந்த உடலுருவத்தை அமைத்துக்கொண்டு உருவாவதுதான் நம் ஜெனன ரகசியம். இப்படி உருவான உடலை, நம் அறிவீனத்தால், நிரந்தரம் எனக் கருதி அதை போஷிப்பித்து, அழகு படுத்தி ஆசாபாச பந்தத்தால் உலகில் கட்டுண்டு நம் சுயநிலை தெரியாமல் அஹம் அனும் பாவத்தை வளர்த்துக்கொண்டு ஸுக துக்கங்களினால் பீடித்து உலகில் தத்தளிக்கிறோம். இது மாயா சக்தியினால் ஆவன. இதிலிருந்து விடுபட்டு நம் சுய உருவை உணருவதுதான் நம் வாழ்க்கை லட்சியமாக அமைய வேண்டும் எனப் பார்த்தோம். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலிருந்து எழும் பலனை நாமேதான் அனுபவிக்கவேண்டும். நல்லகாரியம் செய்தால் ஸுகமும், கெடுதல் செய்தால் கஷ்டமும் நேரும் என எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதானே? இப்படி நல்ல காரியம் செய்தாலும், கெடுதல் செய்தாலும் அதன் பலனை நாமே அனுபவிக்க வேண்டும். அதற்காக வாழ்ந்தே தீரும். வாழ்வு என்பது ஸுக துக்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நியதி. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸுக துக்கங்கள் இல்லாமலிருக்க வேண்டும். அதற்குக் கர்மா பண்ணாமல் இருக்க வேண்டும். அதெப்படி முடியும்? கர்மா புரியாமல் இருக்க முடியாது. கர்மாவில் ஈடுபடுவதுதான் வாழ்க்கை எனப் பார்த்தோம். அப்படியானால் ஸுகதுக்கத்திலிருந்து விடுபட்டு நம் சுய உருவை எப்படி உணர முடியும்? இதை அறிந்துகொண்டால் வாழ்வின் ரகசியம் புரிந்துவிடும்.

நாம் இந்த உலகில் பிறந்து, பால்யம், கௌமாரம், யௌவனம், வார்தக்யம் என்ற நாலு நிலைகளை அடைந்து முடிவில் உலகிலிருந்து மறைந்துவிடுகிறோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அனுபவத்துடன் வாழ்துவருகிறோம். இந்நிலைகளில் நாம் பலவித உடல், மனம் சம்பந்தப்பட்ட அநுபவங்களில் வாழ்துவருகிறோம். இந்த வித்தியாசமான அனுபவங்களுக்கு என்ன காரணம்? நாம் வாழும் வாழ்க்கையின் தரமேதான். நமக்கு வாழ்க்கையில் வரும் சுகதுக்கங்கள் நாம் செய்யும் காரியங்களின் தன்மையை ஒட்டியே நிகழ்கின்றன. ஆதலால் வாழ்க்கையில் நிகழும் அனுபவத்திற்கு நாமே காரணம் எனத் தெரிகிறது. அப்படியானால் நம் வாழ்க்கையை நம்மால் நியந்தரணம் பண்ண முடியுமா என வினா எழலாம். ஆம், நாமே நம் வாழ்க்கைத் தரத்திற்கு வழி வகுத்துக்கொள்கிறோம் எனச் சொன்னால் மிகையாகாது. அப்படியானால் எங்கணம் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்?

வேத சாஸ்த்திர நியதி:

வேத சாஸ்திரங்கள் ஓதும் வாழ்க்கை முறையை மிகத் தெளிவாக பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனனை வ்யாஜமாகக்கொண்டு நமக்கு அருளிச் செய்திருக்கிறார்.

“கர்மண்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசனா”

இந்த ஒரு ஸ்லோகத்தால் ஒரு பெரிய ரகசியத்தைத் தந்துள்ளார். கர்மா பண்ணுவதை பட்டுமே உனது கடமையாகக்கொள். அதன் பலனைப்பற்றி சிந்தனை செய்யாதே. ஏனென்றால் கர்மாவின் தரப்படி தகுந்த பலன் தானே அமையும். கர்ம பலனில் கவனம் செலுத்தாமல் அந்தக் கர்ம பலன் என்னைச் சேர்ந்தது எனக்கொள். ஆனால் பிற்பாடு விவரித்திருப்பது ரொம்ப முக்கியம். எப்படிக் கர்மா பண்ண வேண்டும்? என்ன மனநிலை இருக்க வேண்டும்? எபபேர்ப்பட்ட கர்மா பண்ணலாம், ஏது கர்மாக்கள் பண்ணக் கூடாது என விளக்கியுள்ளார். மேற்கூறியபடி வேதம் சொல்லும் “ஸ்த்யம் வத” என்ற மந்திரம் மிக உயர்வான தத்துவத்தை போதிக்கிறது. நான் செய்கிறேன் என நினைக்காமல் கர்மாவைப் பண்ணவேண்டும். அப்படியானால் அதன் விளைவு நம்மை பாதிக்காது. “விதை விதைத்தவன் மரத்திற்கு வெள்ளம் தருவான்” என்ற பழமொழி எல்லோர்க்கும் தெரிந்ததே! நமக்கு வாழ்வளித்த பகவான் நமக்கு வேண்டியதைத் தருவான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். சுய நோக்கத்துடன் கர்மா பண்ணலாகாது. எல்லோர் நலனையும் கருதிக் கர்மா பண்ணவேண்டும். அப்பொழுது அந்தக் கர்மபலன் சுகத்தைத் தந்தாலும் துக்கத்தைத் தந்தாலும் அது நம்மைச் சேராது. அதை பகவத் அர்ப்பணமாக நினைக்க வேண்டும். இப்படி சுகதுக்கங்களை ஸமபாவத்துடன் எதிர்கொண்டு காரியத்தை செய்வோமானால், நம் மனம் ஓர் நிலையில் நிற்கும். சஞ்சலமடையாது. மனம் ஒருநிலைப்பட்டால் நம் த்ருஷ்டி உள்னோக்கித் தானே செல்லும். அங்கு நமது சுய உருவம் தெரியும். பிற்பாடு நாம் தவறு செய்ய நேராது. காரணம் நாம் நம்மை அரிந்துகொண்டோமானால், நம் வாழ்வின் ரகசியம் புரிந்துகொண்டோம் எனக் கருத்து. இதைக் “கர்மயோகம்’ என அழைக்கிறோம்.

கர்மயோகம்:

இந்த யோகத்தின் அடிப்படைத் தத்துவமானது: நாம் செய்யும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அதன் விளைவைப்பற்றிக் கவலை கொள்ளலாகாது. பலன் தானே வரும். இதன் பொருள் என்ன? காரியத்தில் கவனம் செல்லவில்லையானால் அந்தக் காரியம் சரிவரச் செய்ய முடியாது. பலனும் நன்றாக அமையாது. பலனைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டால் காரியம் நன்றாகத் நிகழாது, பலனும் விரோதமாக அமையும். உதாரணமாக ஒரு ரப்பர் பந்தை நேரிலுள்ள சுவரில் எறிவதாக வைத்துக்கொள்வோம். எந்தத் திசையில் எறிகிறோமோ, எந்த வேகத்தில் வீசுகிறோமோ அதே வேகத்துடன் சுவரில் பட்டு எதிர்த் திசையில் திரும்பி வரும் இல்லையா? இதுதான் கர்மபல நியதி. எறிவது நம் கையிலுள்ளது. ஆனால் அது திரும்பி வருவது நம் கையில் இல்லை. அது ஒரு இயற்கை நியதிக்குட்பட்டுத் தானாகவே நிகழும். நாம் அந்தப் பந்து எங்கு வந்து விழ வேண்டும், எத்துனை வேகத்தில் திரும்பிவர வேணடும் என முதலில் தீர்மானித்து அதற்கேர்ப்பப் பந்தை எறிவதில் கவனம் வைக்க வேண்டுமே தவிர அது எப்படித் திரும்பிவரும் என கவலை கொள்ளலாகாது. பலனில் கவனம் சென்றால் நாம் செய்யப்போகும் கிரியை சரிவர அமையாது. பந்து நம் கையில் இருக்குமட்டும் நம்மால் அதை உபயோகிக்கும் தரம்பற்றித் தீர்மானிக்கமுடியும். அது நம் கையிலிருந்து சென்றுவிட்டால் அதன் போக்கைப் பிறகு நம்மால் நிர்ணயிக்க முடியாது. ஆதலால் அதன் பலனைப் பற்றி கவலைப்படுவதில் என்ன கிடைக்கும்? இதுதான் கர்மயோகத்தின் மூல தத்துவம். கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. கர்மம்தான் வாழ்வின் அடிப்படைத் தத்துவம். அதை நிஷ்காம்யமாகச் செய்வோமாகில் நற்பலன் நிச்சயம். அடுத்த இதழில் மற்ற வழிகளைப் பற்றி ஆராய்வோமாக.

தொடரும்...

அத்தியாயம் 7 அத்தியாயம் 9

 

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button