Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழ்வின் ரகசியம்
அசலம்


Philosophy of life - image courtesy: Answers.com

அத்தியாயம் 6

நம் உடலியக்கம்:

உணவு சக்தியத் தருகிறது. இயக்கத்திற்கு விஷயங்களின் சேர்க்கை அவசியம். அது புற உலகிலிருந்து வரும் விஷயக்கோர்வைகள். நம் கண், காது, மூக்கு, நாக்கு, தவக்கு (சருமம்) வழியாக உட்புகுகின்றன. கண் உருவங்களை உட்கொள்கிறது. காது சப்தங்களாக வரும் விஷயங்களை உட்கொள்கிறது, மூக்கு வாசனைகளை நுகர்கிறது. நாக்கு ருசிபார்க்கிறது. சருமம் உணர்வாக கிரஹிக்கிறது. இப்படி நம் கிரஹண சக்தி படைத்த ஐன்புலங்கள் (5 senses of perception) உலக விஷயங்களை கிரஹிக்க உதவுகின்றன. ஆகையால் உடலை கிரஹிப்பவன் (Perceiver) என அழைக்கிறோம். இந்த விஷயங்களை விசாரமாக ஏற்கும் இயந்திரம் நம் மனம். அது இப்பேற்பட்ட விஷயங்கள் தூண்டிவிடும் விசாரங்களால் இயங்குகிறது. மனம் என்பது தொடர்ந்து வெகமாக வந்துபோகும் விசாரங்களின் கோர்வைகளால் தோன்றும் ஓர் அவ்யகத வஸ்து. இந்த மனம் உணர்பவன் (Feeler) என அழைக்கப் படுகிறது, ஆனால் மனதால் இந்த விசாரங்களை வகைதிருத்திப் பார்க்க இயலாது. இவைகளை வகைதிருத்திப் பார்க்கும் சக்தி நம் மூளைக்கு (புத்தி) இருக்கிறது. கிடைத்த விஷயங்களை தராதரம் நோக்கி, இது இன்னது, நல்லது, கெட்டது என்று கூறுவது புத்தி. புத்தியை ஆராய்பவன் (Thinker) எனக் கூறுகிறோம. சித்தம் எனப்படுவது ஆராய்பவனுக்கு உதவியாக நம் பழைய அனுபவங்களின் பொக்கிஷமாக உள்ள நினைவுக்கூடம் எனக் கொள்ளவேண்டும். புத்தி ஒரு விஷயத்தை ஆராயும்போது, அதை முன்னாலுள்ள அனுபவங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க இந்த சித்தத்தில் பழைய அனுபவங்களைத் தேடி அதன்படி விஷயங்களை ஆராய்ந்து வகை திரிக்கின்றது.

ஆனால் இவைகள் கொணர்ந்த விஷயங்களுக்கொப்ப நம் உடல் இயங்க வேண்டும். அதற்கு வேறு சில உபகரணங்கள் தேவை. அவைதான் இயங்க வைக்கும் ஐம்புலங்கள் (5 Senses of Action). கைகள், கால்கள், வாய், கழிவுநீர்க்குழாய், மலம் போகும் துவாரம் என ஐந்து உருப்புகள் உள்ளன. கால்களால் நாம் நடப்பது, நிற்பது, ஓடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறோம். கைகளால் வேலைகளைச் செய்கிறோம். வாய் நம் விசாரத்தைப் பேச்சாக வெளிக்கொணர உதவுகிறது. நம் உடலிலுள்ள கழிவு நீர், மலம் முதலியவற்றை வெளிக்கொணர கழிவுநீர்க்குழாயும் மலத்வாரமும் உதவுகின்றன. இப்படி இந்த 10 உருப்புக்காளால் நாம் உலகில் உடலாக இயங்குகிறோம். ஆனாலும் இவைகள் தானாக இயங்கும் சக்தியைப் பெறவில்லை. இவற்றை இயக்க ஓர் இயக்குனர் தேவை. அஹம் (EGO) எனும் இயக்குனர் நம்முள்ளிருந்து ஒவ்வொரு உருப்புக்கும் கட்டளை தருகிறது. அதன்படி அவை இயங்குகின்றன. உடலிலுள்ள இந்த முக்கியமான தேஹம் (Body), மனம் (Mind), புத்தி (Intellect) - BMI - எனப்படும். இம்மூன்று உருப்புகளின் ஒழுங்குபட்ட இயக்க சக்தி அஹம் எனும் இயக்குனரின் கட்டளையால் நமது இயங்க்வைக்கும் ஐம்புலங்கள் (Senses of Action) மூலம் இயங்குகிறோம். அல்லவா? இந்த BMI உருப்புக்களைத் தன்னுடயவை எனச் சொந்தம் கொண்டு அவை மூலமாகத் தன் விருப்பங்களை செயல் படுத்துகிறது. இந்த இயக்குனராகிய அஹம் (EGO). ஆனால் இந்த இயக்குனருக்கு விருப்பு வெறுப்பு எங்கிருந்து வருகிறது. ஒருவர் இயங்குவது அவர் விருப்பு வெறுப்புகளை ஒட்டித்தானே இருக்கவேண்டும்? அதுதான் "செயல்படாத விருப்பங்கள்" (Vasana) எனப்படும் முடிவுறாத ஆசைகளின் தொகுப்பு. இதைப்பற்றி விரிவாகப் பிறகு பார்ப்போம். உடலமைப்பையும் அதன் இயக்கத்தையும் பார்த்தோம். ஆனால் இந்த உடல் (BMI) எனப்படுவது ஒரு ஜெடம் தானே, அஹம் என்பது மூல விசாரம் என முன் தொடரில் பார்த்தோமே. இவைகளுக்கு இயங்கும் சக்தி எங்கிருந்து வருகிறது? அதாவது உயிர் எங்கிருந்து வருகிறது? நல்ல வினா. இதை நன்றாக ஆராயவேண்டும்.

உயிர் ( இருப்பு என்ற நிலை ) - (CONSCIOUSNESS):

ஜெடமான உடல் இயங்க உயிர் வேண்டும். அது என்ன? அதைத்தான் முன் தொடரில் "இருப்பு" என்ற சத்திய நிலை (Consiciousness) எனக் கூறியுள்ளோம்.. இது உணர்வு என்ற வடிவில் நமக்கு நம் நிலையை அறிவுறுத்துகிறது. இதுதான் இயங்க வைக்கும் சக்தி அல்லது உயிர் என அறியப்படுகிறது. இதை அறிய ஓர் உவமை தேவை. பார்ப்போம். மின்சாரக் கருவிகள் எப்படி இயங்குகின்றன? நம் உடலைப்போல அவைகளும் ஜெடப்பொருட்ககள் அல்லவா? மின்சாரம் (Electricity) எனும் ஒரு இயக்கும் சக்தி இவைகளுள் புகுந்து இவைகளுக்கு இயங்கும் சக்தியைத் தருகிறது. அந்த சக்தி எங்கிருந்து எப்படி வருகிறது? தண்ணீரிலிருந்து கருவிகள் மூலம் எடுக்கப்படும் சக்திதான் மின்சாரம். அது மின்சாரக் கம்பிகள் (Wire) வழியாக இந்த மின்சாரக் கருவிகளுள் புகுந்து அவைகளிலுள்ள இயந்கும் கருவிகளை (Mechanical Devices) இயங்க வைக்கிறது. அதனால் இந்த மின்சாரக் கருவிகள் இயங்குகின்றன. அதேபோல் ஜெடமாகிய நமதுடலுக்கு (BMI) இருப்புத்தன்மை (Consicousness) உயிரூட்டுகிறது. இதைத்தான் நாம் இறைவன் (GOD) என கூறுகிறோம். நம்முள் இருக்கும் இந்த இருப்புத்தன்மையானது (Consciousness) "இச்சாசக்தி", "கிரியாசக்தி", "ஞான சக்தி" என மூன்று சக்திகள் சேர்ந்த கலவை ஆகும். இச்சாசக்தி ஆசை, விருப்பம் என நினைவாக உருவெடுக்கிறது. வாழ்வு ஆசையிலிருந்து துவங்குகிறது. ஆசைகள் நிறைவெறுவதற்காகக் கிரியாசக்தி நாம் இயங்க உதவுகிறது, ஞான சக்தி அறிவை ஊட்டுகிறது. ஆனால் இது கண்ணுக்குப் புலப்படவில்லயே? எப்படி நம்புவது? என வினவலாம். மின்சாரம் கண்ணுக்குப் புலப்படுகிறதா? அதை நாம் எப்படி உணர்கிறோம்? இந்த மின்சாரக் கருவிகளின் இயக்கத்தை வைத்துத்தானே? மின்சாரக் கம்பிகளைத் தொட்டால் என்னவாகும்? அதுதான் SHOCK எனப்படுகிற ஒரு அனுபவம் (experience). தொடுவதால் மின்சாரத்தின் தன்மயை அனுபவபூர்வமாக உணரலாமே தவிர, பார்க்க முடியாது. கண்ணுக்குக் காணாவிட்டலும், மின்சாரம் உண்டு என நம்புவதில்லையா? அதேபோல் இந்த உயிர் எனப்படும் சக்தியை (Consciousness) அல்லது இறைவனை (GOD) பார்க்க இயலாது. ஆனால் உணர முடியும். எப்படி? அதைத்தான் முன் குறிப்பிட்ட வாழ்வின் லச்சியம் என்ற தொடரில் ஆத்மவிசாரமாக அறியவேண்டும் எனப் பார்த்தோம். ஆக, நாம் வாழ உலகம், உடலுருப்பு இவைகளைத் தவிர உயிர் அவசியம். இந்த உடல் உயிர் சேர்க்கையால் நாம் வாழ்கிறோம்.

எல்லா உடலிலும் இறைவனின் சக்தி உயிராக ஒன்றுபோல் இயங்குகிறது என அறிந்தோம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒன்றுபோல் இருக்கவேண்டுமே? ஒன்றுபோல் இயங்கவேண்டுமே? ஆனால் இல்லையே? அது எதனாளல் என்ற வினா எழலாம். பார்ப்போம்.

உறுப்புகளின் தரம்:

இதை அறிய, மின்சார உபகரணங்களை எடுத்துக்கொள்வோம். FAN நமக்குக் காற்றைத் தருகிறது. Air Conditioner குளிர்ச்சியைத் தருகிறது. Electric Stove கனலைத் தருகிறது. Electric Bulb ஒளியைத் தருகிறது. T.V. ஒளியையும் ஒலியையும் உருவாக்குகிறது. Heater உஷ்ணத்தைத் தருகிறது. இந்தக் கருவிகளில் எல்லாம் மின்சக்தி பாய்வதால் இவை இயங்குகின்றன. அந்த மின்சக்தி ஒன்றேதானே. எல்லாவற்றிலும் ஒன்றுபோலுள்ள மின்சக்திதானே ஓடுகிறது. அப்படியானால் ஏன் இந்தக் கருவிகள் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன? வித்தியாசமாக இனயங்குகின்றன? அவைகளின் உள்ளே பொருத்தியுள்ள இயந்திரங்கள் (Mechanical Devices) அவைகணின் உபயோகத்திற்கொப்ப இயங்குகின்றன. இந்தக் கருவிகள் ஏன் வித்தியாசமான உருவங்களில் தோன்றுகின்றன? அவைகளின் உபயோகத்தின் தன்மையை ஒட்டி அவைகளில் உருவ வேற்றுமை தரப்பட்டுள்ளது. அதேபோல் அவைகளில் நமக்கு வேண்டிய அனுபவத்திற்கேற்ப இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இல்லையா? விஞ்ஞானப்படி பார்த்தால், நாம் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது தாய் உட்கொள்ளும் உணவு சத்து நமக்கு தொப்புள் கொடி வழியாகக் கிடைக்கிறது. எல்லாத் தாய்மார்களும் ஒன்றுபோல் உணவு உட்ககொள்வதில்லை. நாம் உலகில் வந்த பிறகு நாம் ஒவ்வொருவரும் உண்ணும் உணவு வித்தியாசமாக உள்ளது. இந்த உணவின் தன்மையை ஒட்டி நம் உடல் வளருவதால் நம் உருவத் தோற்றமும் அதிலுள்ள BMI களின் தன்மையும் விததியாசமாக உள்ளன. தவிர, நம் ஆசாபாசங்களின் தன்மைகளையும், நம் கிரஹண சக்தியையும் இயங்கும் சக்தியையும் ஒட்டி BMI இயங்குகிறது இதனால் நம் உருவத்திலும் இயக்கத்திலும் வித்தியாசத்தைக் காண்கிறோம்.

உலக விஷயங்களை நாம் எப்படி கிரஹிக்கிறொம், ஆசாபாசங்கள் எப்படி, எதனால் உருவாகின்றன, நம் விசாரங்களின் உற்பத்தி ரக்சியம் என்ன, நாம் ஒவ்வொருவரும் பல தருணத்தில் பலவாறாக இயங்குவதற்குக் காரணம் என்ன, வாழ்க்கை வளமுடன் வாழ்வது எங்ஙனம், எப்படி நம் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவது, நம் வேத சாஸ்திர நியதி என்ன?, வழ்க்கைக்கு அவை எவ்வளவு முக்கியம் முதலிய விஷயங்களைப் பின்னால் வரும் தொடர்களில் ஆராய்வோம்.

தொடரும்...

அத்தியாயம் 5 அத்தியாயம் 7

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button