மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| வாழும் முறைமை - கடிதம் 8 அசலம் |
உள்ளே இணையப் பாட்டிஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
ஓம்
அருள் வாக்குDate: 1/09/2007கடிதம்Fromஅசலம்
அருமை செல்வங்களே, இதுவரை நாம் வரைந்த கடிதங்களைப் படித்து அதுபோல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என உறுதி கொண்டிருப்பீர்கள். நம் குணம் நாம் செயயும் காரியங்களை ஒட்டியிருக்கும் எனப் பார்த்தோம். என்ன செய்கிறோம் என்பதை விட எந்த நோக்கத்துடன், எந்த மனப்பான்மையுடன் என்ன கொள்கையுடன் நாம் செயல் புரிகிறோம் என்பது மிக முக்கியம். அதற்கு ஒரு குறிக்கோள் அல்லது லக்ஷியம் தேவை. அது எங்கிருந்து கிடைக்கும்? அதற்கு. நம் பெரியோர்கள் விட்டுச்சென்ற தர்ம சாஸ்த்திரங்கள் உதவும். அதில் ஒன்றுதான் புராணம். பாகவதம், இராமாயணம், கந்தபுராணம், சிவபுராணம் போன்ற நூல்களில் பல கதைகள் மூலம் ந்மக்கு வாழும் முறைமை எப்படி அமைய வேண்டும் என்பதை எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்தக் கதைகளில் வரும் தத்துவங்களைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் நமக்கு க்ஷேமம் உண்டாகும். அப்படித் தந்த ந்ர்குணங்களில் ஒன்றைப் பார்ப்போம். பிதுர்வாக்கிய பரிபாலனம் (தந்தை சொல் மிக்க மந்திரமில்லை): இராமாயணம் மஹா காவ்யத்தில் அயோத்தியை என்ற ஒரு நாட்டை ஆண்டுவந்தார் ஸ்ரீ தசரத மஹா சக்கிரவர்த்தி என்பவ்ர். இவர் ஸூரியகுலத்தில் பிறந்தவர். அவருக்கு. கௌஸல்யா, கைகேயி, ஸுமித்ர என மூன்று மனைவிமார்கள் இருந்தார்கள். ஆனாலும் அவருக்கு புத்திரபாக்கியம் இல்லாமல் போய்விட்டது. குரு வஸிஷ்டரின் உபதேசப்படி “புத்திரகாமேஷ்டி” என்ற ஒரு யாகம் செய்தார். அதிலிருந்து வந்த ஒரு தேவதை ஒரு பாயசக் கிண்ணத்தை அவரிடம் தந்து, “இதை உன் ம்னைவிமார்கள் உட்க்கொள்வார்களேயானால் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும் என அருளிச்சென்றது. அப்பொழுது அங்கிருந்த இரண்டு மனைவிகளை (கௌஸல்யா, ஸுமித்ரா) அழைத்து அந்தப் பாயச பாத்திரத்தைத் தந்து உண்ணச் சொன்னார். அவர்கள் இருவரும் தங்கள் பங்கிலிருந்து ஒர் பங்கு கைகேயி என்ற பிறிதொரு ம்னைவிக்குத் தந்தார்கள். அப்படி கௌஸல்யா தேவிக்கு இராமனும், ஸுமித்ராதேவிக்கு லக்ஷுமணனும், கைகேயி தேவிக்கு பரதன், சத்ருக்னன் என்ற இரண்டு பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வர்ணமுமாக நல்ல பிள்ளைகளாக வளர்ந்தார்கள். அவர்க்ளுக்கு உபநயனம் சைய்வித்து குருகுலத்தில் படிப்பு கற்க அனுப்பி வைத்தர்கள். அவர்களும் குருபக்தியுடன் வித்தைகள் கற்று மிக சாமர்த்தியசாலிகளாகத் திகழ்ந்துவந்தார்கள். ஒரு சமயம் ராஜதர்பார் நடக்கும்பொழுது, குரு விச்வாமித்திரர் அங்கு வர தசரதன் அவரை மிகப் பணிவன்புடன் வரவேற்று ஆஸனம் தந்து அமரச் செய்தார். முனிவர்களுக்கு தானம் செய்வது வழக்கத்திலுண்டு. அதை ஒட்டி தசரதன் குரு விச்வாமித்திரரிடம் என்ன வேண்டும் தருகிறேன் கேளுங்கள் என வினவ, அவரும் தாம் நடத்தும் வேள்வியை (யாகத்தை) இராக்ஷதர்கள் முறியடிக்க முயல்கிறார்கள். ஆதனால் தம் யாகம் குலைந்துவிடுகிறது. அதைக் காத்து அந்த துஷ்டர்களை நிக்கிரஹம் செய்ய எமக்கு உன் பிள்ளை இராமனைக் கொடு என வினவினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தசரதன், மனம் கல்ங்கி அவரிடம் யாசித்தார். இராஜ்யம் தருகிறேன், நிறையப் பொருள் தருகிறேன், அல்லது யாகத்தைக் காக்கத் தாமே மிகப் பெரிய போர்ப்படையுடன் வருகிறேன், இராமன் சிறிய பிள்ளை, அவனுக்கு இராக்ஷதர்களை முறியடிக்க இயலாது, அவனைப் பிரிந்து எம்மால் இருக்க இயலாது எனக் கெஞ்சினார். விச்வாமித்திரர் கோபம்கொண்டு, “என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து, இப்பொழுது பின்வாங்குகிறாயே? நீ என்ன தரும வழியை விட்டு விலகுகிறாய், எமக்கு இராமன்தான் வேண்டும், அவன் பராக்கிரமத்தை நீ அறிய மாட்டாய், எனக்கு அவன் வீரத்தில் ந்ம்பிக்கை உண்டு, அவன் சக்தியை ந்ன்று உணர்ந்தவன் நான், அவனால் தான் என் வேள்வி நிறைவுறும், அதனால் அவனையே தருவாயாக” எனப் பிடிவாதமாகக் கூறினார். குரு வஸிஷ்டரும் தசரதனை சமாதானப்படுத்தி இராமனை அவர்கூட அனுப்புமாறு கூற, தசரதன் மனமில்லா மனத்துடன் சம்மதித்தார். இதைக்கண்ட ஸுமித்ராதேவி தன் பிள்ளை லக்ஷுமணனை அழைத்து “நீயும் அன்னனுக்கு சேவை புரியக் கூடச் செல்” என உத்தரவிட, அவனும் ஆயத்தமானான். இப்படி முதல் தடவையாக இராம்னும் லக்ஷுமணனும் தந்தை சொல் தட்டாமல் குரு விச்வாமித்திரர் கூட வேள்வியைக் காக்கப் புறப்பட்டார்கள். தந்தையிடம் அவர்கள் எதிர்த்து ஒரு வாக்கு சொல்லவில்லை. தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தத்துவத்தைக் கடைப்பிடித்தார்கள் இருவரும்.. வேள்வியைக் குலைக்க வந்த அரக்கர்களை முறியடித்து குரு விச்வாமித்திரர் நடத்திய வேள்வியைப் பூர்த்தி செய்ய உதவிபுரிந்த அவர்களை மிதிலாபாட்டிணத்தில் நடக்கும் ஸீதா ஸ்வயம்வரரத்திற்கு (ஸீதையின் கல்யாணம்) அழைத்துச்சென்றார். அங்கு வைத்துள்ள சிவதனுசை யாராலும் நாண் கூட்ட முடியவில்லை. குருவின் சொற்படி இராமன் அந்த வில்லை எடுத்து ஞாண் பூட்டி உடைத்தார். அப்படி ஜனக மஹாராஜாவின் புத்திரியான ஸீதையை மணந்துகொண்டார். லக்ஷுமணனும் ஜனகரின் இரண்டாவது பெண் ஊர்மிளையை மணந்துகொண்டான். அவர்களைத் திரும்ப அயோத்தியைக்கு அழைத்துச்சென்று தசரதரிடம் ஒப்படைத்தார் விச்வாமித்திரா. பித்ருவாக்கிய பரிபாலனம் குருவின் சொற்படி நடத்தல் இவைகளின் விளைவு எவ்வளவு நன்மையைத் தந்தது பாருங்கள். புத்திரர்கள் பெரியவர்களானதும் மூத்த பிள்ளையாகிய இராமனுக்கு யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய ஏற்ப்பாடு செய்தார் தசரத மஹாராஜா. அப்பொழுது கைகேகியின் தோழியாகிய மந்தரை என்பவள் கைகேகியை அழைத்து “இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்தால், உனக்கும் உன் மக்களுக்கும் ராஜ்யத்தில் பங்கு கிடையாது. நீங்கள் தனியே விடப்படுவீர்கள், தசரதனுக்குப்பின் உங்கள் கதி அதோகதிதான் என துர்ப்புத்தி புகட்டினாள். இராமனிடம் கைகேகிக்கு மிகப் பிரியம் உண்டு. இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றதும் அவள் சந்தோஷப்பட்டாள். ஆனால் மந்தரையின் துருபதேசம் அவள் சித்தத்தை மாற்றிவிட்ட்து. அதற்கு என்ன செய்யலாம் என அவள் வினவ, மந்தரை சொற்படி அவளும் தசரதரிடம் தனக்கு முன்பு தந்த இரு வரங்கள் தருமாறு கேட்டாள். (முன்பு அரக்கர்களுடன் நடந்த யுத்தத்தின்போது, ரதத்தின் சக்கிரத்தின் ஆணி கயன்றபோது, கைகேகி தன் விரலைச் சக்கிரத்தின் அச்சில் புகுத்தி ரதத்தை நிலையில் நிறுத்தி தசரதனைக் காப்பாற்றினாள். அப்பொழுது தசரதன் இரண்டு வரம் தருவதாகவும் வேண்டியதைக் கேள் என்றும் அவளிடம் சொன்னபோது, “எனக்கு வேண்டிய தருணம் கேட்கிறேன் இப்பொழுது வேண்டாம் என உரைத்தாள்”.) அந்த இரண்டு வரங்களை இப்பொழுது கேட்டாள். அவை என்ன? ஒன்று இராமன் 14 வருடம் காட்டில் வசிக்க வேண்டும், இரண்டு, தன் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும் எனபதாகும். இதைக் கேட்ட தசரதன் மனம் கலங்கி, கோபம் கொண்டு, “பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தல் எனக் கேட்டிருக்கலாம், ஏன் இராமனை 14 வருடம் காட்டிற்கு அனுப்ப வேண்டும்” என வினவினார். அதற்கு அவள் “இராமன் இங்கிருந்தால் பரதனால் ராஜ்ய பரிபாலனம் செய்ய இயலாது, அவன் அண்ணனிருக்கும்போது இதை ஏற்க மாட்டான். அதனால் இராமன் காட்டிற்குப் போக வேண்டும் என உறுதியாக உரைத்தாள். இதைக் கேட்ட தசரதன் மூர்ச்சையாக விழுந்தார். அங்கு வந்த இராமன் கைகேகியிடம் வினவ அவளும் அவனிடம் அந்த இரண்டு வர்ங்களை பற்றி உரைக்க, இராமன் உடனே பித்ருவாக்ய பரிபாலனம் பெரிது எனக் கருதி, தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வனவாஸத்திற்கு ஆயத்தமானான். தந்தை நேரடியாக அவனிடம் கூறவில்லை. தசரதன் கைகேகியின் வினாவுக்குச் சரி என சம்மதமும் தருமுன் மூர்ச்சையாகிவிட்டார். ஆனாலும் தந்தை கைகேகிக்குக் கொடுத்த வாக்கைக் காக்க வேண்டியது தனயனாகிய தன்னுடைய கடமை எனக் கருதி வனவாஸாததிற்குச் செல்லத் துணிந்தான். கூடவே இராமன் மனைவி ஸீதையும், தம்பி லக்ஷுமணனும் சென்றார்கள். இப்படி இராமன் வனவாசம் சென்றதால்தான் இராமாயணம் என்ற காவ்யம் உருப்பெற்றது. அது எவ்வளவு நல்ல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது? தந்தை தாய் சொல்லுக்கு எப்படி மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதுவே சான்று. இந்தத் தததுவத்தை கடைபிடிப்பீற்களாக. (தொடரும்) எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக. அன்புடன் Websites of Guru Achalam:இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.
Email Addresses of Guru Achalam:
achalam38@aim.com |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|