மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

வாழும் முறைமை

கடிதம் 6 - அசலம்

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Guru Achalam on philosophy of life

ஓம்

 

அருள் வாக்கு

Date: 1/09/2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

 

 

அருமைச் செல்வங்களே,

சென்ற இதழில் நம் சுபாவ வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் போற்றக்கூடிய நற்குணங்களைப் பற்றி ஆராய்ந்தோம். ஆனால் அது மட்டும் சுபாவ வளர்ச்சிக்குப் போதுமா எனற வினா எழுப்பினோம். இப்போது அதைப் பற்றிச் சிந்திப்போமாக. எந்த ஒரு காரியம் செய்ய முனைந்தாலும், அதற்குச் சாதகமாகவும் (Positive) பாதகமாகவும் (Negative) சில அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். இதுவரை நாம் சாதகமான விஷயங்களைப் (ந்ற்குணங்களை) பற்றி ஆராய்ந்தோம். இதில் நாம் வெற்றி பெற்றாலும் பாதகமான விஷயங்கள் நம்மைத் தாக்காது காப்பாற்றிக்கொள்ள வெண்டும். அவை எவை என் இங்கு பார்ப்போம்.

நாம் எப்பொழுதும் ஆறு துர்குணங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். அவை: “காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யம் எனவாகும். இவைகள் நமக்கு பாதகமான விளைவைத் தரும். நாம் கற்றறிந்த 22 நற்குணங்களையும் முறியடிக்கக் கூடிய கொடிய குணங்கள் இவை. விரிவாக ஆராய்வோமா?

காமம்: (Lust)

கீழ்த்தரமான ஆசைகள். இவை. நம்முடைய ஆசைகள், அதுவும் லௌகீக சுகத்தில் நாம் வைக்கும் நாட்டம், அதாவது பணத்தாசை, பெண்ணாசை, பொன்னாசை, ஆஹாராதிகளில் அசை, சுகபோகங்களில் ஆசை, இத்யாதி ஆசைகளைக் குறிக்கிறது. ஆசையே இல்லாமல் இருக்க வேண்டுமா? நாம் வாழ்வதற்கு என்ன வேண்டுமோ, அவை நம் ஆற்றலால் கிடைப்பதை வைத்து சந்தொஷப்படணும். பேராசை கூடாது. நினைத்தது நடந்து விட்டால் மிக சந்தோஷமடைவோம். நினைத்தது நடக்கவில்லயேல், அல்லது நினைத்ததற்கு விரோதமாக நடந்து விட்டால் வருந்தப்படுவோம். இரண்டும் நம் மனதைப் பாதிக்கும். மனச்சாந்தி இராது.

க்ரோதம்: (Anger)

இதுதான் கோபம் எனப்படுவது. நினைப்பது நடக்காவிட்டால் அல்லது எதிராக நடந்து விட்டால் அல்லது மற்றவர் நம்மைத் தூற்றினால் அல்லது தாக்கினால் நமக்குக் கோபம் வருகிறது. இதுவும் நம் மனதைப் பாதித்து மனச்சாந்தியைக் குலைக்கிறது. கோபத்தில் செய்யும் காரியம் சரிவர அமையாது. நம் சிந்தை குலையும். மூளைக்கோளாறு ஏற்படும். மற்றவர் நம்மை அணுக அஞ்சுவார்கள். ஆழ்ந்த சிந்தனை செய்ய இயலாமல் போகும்.

லோபம்: (Miserliness)

இதுதான் க்ஞசத்தனம் அல்லது கருமித்தனம் எனப்படுவது. கிடைத்ததைக் காப்பாற்றப் பாடுபடுவோம், மற்றவர் அதைக் கைப்பற்றாமல் பார்த்துக் கொள்வோம், நம்மிடம் உள்ளதை மற்றவருடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம், தானதர்மங்கள் செய்ய மாட்டோம், ம்ற்றவருக்கு உதவி புரிய மாட்டோம். இப்படிப்பட்ட குணத்திற்குப் பெயர் லோபம் அல்லது கருமித்தனம். இது நம்மை எப்பொழுதும் கவலைக்குள்ளாக்கும். அதனால் மன்ச்சாந்தி இல்லாமல் மனோ நிலை குலயும்.

மோஹம்: (Delusion)

இல்லாததை உள்ளதாகவும் உள்ளதை இல்லாததாகவும் கருதுதல், அதில் ஆசை வைத்தல், அஸத்திய நிலையில் வாழ்தல், அஞ்ஞான நிலையில் செயல்புரிதல் முதலிய குணங்களுக்கு மோஹம் எனப் பெயர். இதனால் வரும் பலன் நம் மனதைப் பாதிக்கும். அதனால் மனம் நிலைதவறித் தத்தளிக்கும். நம் புத்தியும் பேதலிக்கும். நல்லது கெட்டதைத் தரம் திரித்துப் பார்க்க இயலாது.

மதம்: (Egoestic)

ஸ்வார்த்த புத்தியுடன் வாழ்வது, எதிலும் உடமை கொள்வது, நான், எனது, எனக்கு போன்ற கருத்தில் இயங்குவது, மற்றவரை அப்புறப்படுத்தி எல்லாம் தனக்கு வேண்டும் என்ற சிந்தனை கொள்வது, தனது உடமைகளில் அதி ஆசை வைப்பது, எப்பொழுதும் நான் சொல்வதும் செய்வதும்தான் சரி என்ற வாதம் கொள்வது, மற்றவர்கள் கருத்தை ஏற்காது த்ன்னிச்சைபோல் நடப்பது போன்ற குணங்களுக்குப் பெயர் மதம். இது நம்மைக் குறுகிய வளையத்துள் கிடத்தும். புதிதாக ஒன்றும் கற்க இயலாது. நாம் நினைத்தது நடக்கப் பாடுபடுவோம், நடக்கவில்லயேல் சங்கடப்படுவோம். இப்படி இதுவும் நம் மனதைக் குலைக்கும். புத்தி விகாஸம் அடையாது. ஏனென்றால் புதிதாக மற்றவரிடமிருந்து கற்க இயலாது. அப்படி நம் மனதைக் குறுக்கிக் கொள்வோம்.

மாத்ஸர்யம்: (Fiting Attitude)

மேலே கூறின குணங்களின் விளைவாக, நாம் நினைத்தது நடக்க, ஆசைகொண்டதை அடைய, நம்முடையதைக் காக்க, மற்றவரை எதிர்த்துப் போராடும் தன்மைக்குப் பெயர் மாத்ஸர்யம். இப்படிப் போராடுவதால் நம் மனம் கலங்கி அமைதி கெடும். சிந்தனா சக்தி இழந்து விடுவோம்.

கருததுரை

ஆக, போற்றக்கூடிய நற்குணங்களைக் காக்கவும், அவைகளைப் பெருக்கவும் இந்த ஆறு துர்குணங்கள் நம்மைத் தாக்காமல் பாதுகாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு என்ன வழி? பக்தி சிரத்தையுடன் இறைவணக்கம் தினசரி செய்தல், மாதா பிதா, குரு போன்றவர்களையும் பெரியோர்களையும் அண்டி அவர்கள் உபதேசத்தைப் பெற்று அவ்வழி செல்லுதல், நல்ல புராணக் கதைகள் கேட்டு அவையின் கருத்தை (Moral) உணர்ந்து அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்ளுதல், முன்பு சொன்னனபடி கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் போன்ற வழிகளில் நம் வாழ்க்கையை நயித்தல் போன்ற வழிகளைப் பின்பற்றினால் நமக்கு மனச்சாநதியும், புத்தி ஸூக்ஷ்மத் தன்மையும் கிடைக்கும். இப்படி மனதை சுத்தமாகவும் சாந்தமாகவும் வைத்துக்கொண்டால் நம் சித்தம் தெளிவாக இருக்கும். இதனால் நம் குணம் அல்லது இயலபு போற்றக்கூடியதாக அமையும், இதைத்தான் மனித குணம் அல்லது இயல்பு வளர்ச்சி (Personality Development) எனக் குறிப்பிட்டோம். இதை நம் வாழ்க்கை முறையாகக வேண்டும்.

என்னுள் நானாய் நின்று உண்மையறிந்து ஓங்கிநிற்கும் அந்தப்
பொன்காலம் உன்னுள்ளே புகுந்துவிடும் இக்காலம்
அன்பனே உன் பணியை இன்பமுடன் நீ தொடர
எம்முடைய ஆசிகளும் இத்துடன் நான் தருவேன்

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்
உங்கள் அசலம்

கடிதம் 5

 

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com