மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

வாழும் முறைமை

கடிதம் 6 - அசலம்

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Guru Achalam on philosophy of life

ஓம்

 

அருள் வாக்கு

Date: 1/09/2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

 

 

அருமைச் செல்வங்களே,

மனோபலம், ஸூக்ஷ்ம புத்தி எப்படி அடைவது எனப் பார்த்தோம். ஆனாலும், அதை ஸ்திரமாக நிலை நிறுத்த என்ன செய்யவேண்டும் எனப் பார்க்க வேண்டும். ஒரு தரம் மன நிலை சீராகி விட்டால், பிறகு அது சீர்குலையாமல் இருப்பது எப்படி எனப் பார்க்க வேண்டும். பார்பபோமா?

பாசம்: (Bonds)

சிறு வயதிலிருந்தே நாம் தாய் தந்தையினரின், பந்துக்களின் பாசத்தில் கட்டுண்டு வளர்கிறோம். அவர்கள் நம்மிடம் காட்டும் பரிவு, நாம் அவர்களிடம் வைத்திருக்கும் ஈடுபாடு இவைகள் தான் “பாசம்” எனக் கூறப்படுகிறது. நாம் செய்யும் காரியங்கள் இந்த பந்துக்களை பாதிக்காமல் இருக்க வேண்டும். நம் நலம் மட்டும் பார்க்காது இவர்களுடைய நலனையும் முன்வைத்து நாம் காரியத்தில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், நம் வளர்ச்சிக்கு இவர்கள் மூல காரணம். ஆகையால் நம் வாழ் நாள் முழுதும் இவர்களிடம் பாசம் காட்ட வேண்டும். அதற்கு நம் மனதைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

வினயம்: (Reverence)

நமக்குப் படிப்பு கற்றுத்தரும் குருநாதர்களும், மற்றவர்களும் நம் வழி காட்டிகளாகத் திகழ்கிறார்கள். இவர்களிடம் கற்றுக்கொள்வதுதான் நம்மை வளரும்போது நயிக்கிறது. உலகில் நாம் கற்கும் ஒவ்வொரு புது விஷயங்களும் இவர்களிடமிருந்துதான் பெறுகிறோம். ஆகையால் அவர்களிடம் நாம் எப்பொழுதும் அன்பாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் “வினயம்”. அதாவது அவர்களை மதித்து அவர்கள் காட்டிய வழியில் செல்வது அவசியம்.

அன்பு: (Love)

நாம் வாழ்வது ஒரு மனித ஸமூஹத்தில். அதில் நம்மைப்போல் பல கோடி நபர்கள் வாழ்கிறார்கள். நாம் செய்யும் காரியங்கள் மற்றவரை பாதிக்கும். அதேபோல் மற்றவர்களுடைய செயல்கள் நம்மை பாதிக்கும். ஆகையால் நாம் மற்றவர்களுக்குத் தீங்கு வராமல் நம் காரியங்களில் ஈடுபட வேண்டும். அப்படி நாம் அவர்களிடமும் அவர்கள் நம்மிடமும் காட்டும் பரிவு “அன்பு” என அறியப்படும். அதாவது மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிடம் கொண்டுள்ளா பிணைப்பு எனப் பொருள்.

பக்தி: (Love with devotion)

நம் உடல் அமைப்பு, அதன் வளர்ச்சி, அதன் நிலை முதலியவை நம் கையில் இல்லை. அவை இயற்கையாகவே அமைந்துவிடுகின்றன. ஆதேபோல் நாம் ஸ்வாசிக்கும் காற்று, நமக்குக் கிடைத்துள்ள வெளிச்சம், குடிநீர் போன்ற வஸ்துக்கள் இயற்கையாகவே நமக்குக் கிடைத்துள்ளன. அதேபோல் நம் வளர்ச்சி, இறப்பு நம் கையில் இல்லை. அது இறைவன் நமக்குத் தந்த பொக்கிஷம். இவை இல்லையேல் நம்மால் வாழ இயலாது. அதற்கு நாம் இறைவனிடம் வைத்துள்ள நம்பிக்கையுடன் கூடின பாசத்திற்குப் பெயர் “பக்தி”. அதாவது எல்லாம் இறைவன் செயல், நம்மால் இயலாது என்ற ஒரு த்ருடமான நம்பிக்கையுடன் கூடின உறவு எனப் பொருள்.

தயை: (Pity)

மனிதர்கள் எல்லோரும் ஒரேபோல் பொருளாதாரத்துடனும், படிப்புடனும், தேஹ சௌக்கியத்துடனும் இருப்பதில்லை. சிலர் ரொம்பவும் நலிந்த ஜீவிதத்தில் உழல்பவர்களாக இருப்பர்ர்கள். அவர்களின் நிலையில் நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு அன்பாக சௌகரியங்கள் செய்து கொடுக்க வேண்டும். இப்படி அவர்களின் நிலைக்கு நாம் காண்பிக்கும் வருத்தம் அல்லது அனுதாபம் கலந்த பாசத்திர்க்குப் பெயர் “தயை”. அதாவது மற்றவர்களின் சுகதுக்கங்களில் நாம் பங்குகொள்ளும் பாசம் எனப் பொருள்.

கருணை: (Kindness)

மற்றவர்களிடம் தயை காட்டுவதுடன் நிற்காமல், அவர்களுக்கு உதவி புரிய வேண்டும், அவர்களின் நிலையில் மனம் கசிந்து அவர்களுக்கு அதிலிருந்து மீள நம்மால் இயன்றவரை உதவி புரிய வேண்டும். உதவி நாடி வருபவர்களுக்கு நாம் செய்யும் உதவியின் அடிப்படையான பரிவுக்குப் பெயர் “கருணை” எனப்படும். அதாவது நம் நிலைக்குக் கீழ் வாழும் மனிதர்களிடம் நாம் வைத்துள்ள அன்பு அல்லது பரிவு எனப் பொருள்.

ஒற்றுமை உணர்ச்சி: (Feeling of One-ness)

எப்பொழுதும் நம் மனதில் இருக்க வேண்டிய உணர்வானது நாம் எல்லோரும் ஒன்றே என்பதாகும். ஏன்? உலகில் இயங்கவதற்கு முக்கியமாக வேண்டியது ஒற்றுமை உணர்வு. ஒருவருக்கொருவர் தாங்கலாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும். நாம் செய்யும் காரியங்கள் மற்றவருக்குத் தீங்கு இழைப்பதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்குச் சாதகமாகவும் இருக்க வேண்டும். இப்படி நாம் ஒருவருக்கொருவர் கட்டுப் பாட்டுடன் இயங்குவதுதான் “ஒற்றூமை உணர்ச்சி” என அறியப்படுகிறது. அதாவது எல்லோரும் கூட்டுறவுடன் செயல் படுவது எனப் பொருள்.

பரோபகாரக் கொள்கை (Living in Co-operation)

உலகம் அதிலுள்ள எல்லோருடைய செயலினால் இயங்குகிறது. சிலர் நல்ல நிலையில் இருப்பார்கள், சிலர் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களையும் நாம் நம் நிலலைக்கு உயர்த்தப் பாடுபட வேண்டும். ஒருவர் மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த மனப்பான்மைக்குப் பெயர்: ”பரோபகாரக் கொள்கை”. அதாவது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை எனப் பொருள்.

ஸாமுதாயிக மனப்பான்மை: (Feeling of Part of Society)

நாம் வாழ்வது தனித்தல்ல. உலகிலுள்ள மற்ற மனிதர்களுடன் என்று தெரிந்ததே. இப்படிப் பல மனிதர்கள் பல மத விச்வாஸத்துடனும், பல கொள்கைகளூடனும், பல ஜாதியிலும். பல பொருளாதார நிலையிலும் வாழுவது ஒரு ஸமுதாயம் எனப்படும். இப்படிப் பல பேர்கள் கொண்ட உலகில் நாம் வாழ்வது எல்லொருடைய உழைப்பின் பலனாலும் அவர்களூடய ஒத்துழைப்பினாலும் அமைந்துள்ளது. மாதா, பிதா, பந்துக்களூடன் கூடி வாழ்வது ஒரு குடும்பம். பல குடும்பங்கள் அட்ங்கிய கட்டுப்பாட்டுக்குப் பெயர் ஸமுதாயம். இப்படி நாம் வாழ்வது ஒரு ஸமுதாயத்தில் என்ற ஓர் நினைவுடன் வாழ்வதற்குப் பெயர் “ஸாமுததாயிக மனப்பான்மை”. அதாவது மனித குலம் மொத்தமாகவும் சேர்தது ஒர் ஸமுதாயம். அதில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நினைவு எனப் பொருள்.

தன்னலமற்ற சுபாவம்: (Selfless attitude)

மனித இயல்பு ஸ்வார்த்தம். நான், எனது, எனக்கு, என்னுடையது போன்ற விசாரங்களுக்குப் பெயர் ஸ்வார்த்தம். நம் நலனை மட்டும் சிந்தித்து செயல் புரிவது எனப் பொருள். அப்படி ஒவ்வொருவரும் ஒரு ஸமுதாயத்தில் இருந்தால் கலகம், பொறாமை, தாக்குதல், அடாவடித்தனம் போன்ற நிலை ஏற்படும். அப்படி இல்லாமல், நம் நலனைக் கருதாமலும், மற்றவருக்கு உதவியாகவும் செயல் படுவது நம் சுபாவ வளர்ச்சியைப் பொறுத்திருக்கிறது. மற்றவர் நலனைக் கருதிச் செய்யும் பணிகளில் நாம் காட்டும் ஆர்வத்திற்குப் பெயர் “தன்னலமற்ற சுபாவம்” என்ப்படும். அதாவது, பிறர் நலனை நம் லக்ஷியமாகக் கொண்டு செயல் புரியும் தன்மை எனப் பொருள்.

வாழ்வின் லக்ஷியம்: (Aim in Life)

மேற்சொன்ன குணங்கள் படைத்து நம் வாழ்வை நயிப்பதற்கு நமக்கு ஓர் குரிக்கோள தேவை. அதாவது, முதலில் நாம் எதற்காக வாழ்கிறோம். என்று திடமாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப்ப நம் வாழ்க்கை நியதியைக் கையாள வேண்டும். இப்படிக் குடும்பத்துடன், ஸமுதாயத்துடன் ஒற்றுமையாக, தன்னலமற்று, விரிந்த மனப்பான்மையுடன் வாழ ஒரு லக்ஷியம் (குரிக்கோள்) அமைத்துக்கொள்ள வேண்டும். எந்தக் காரியமும் செய்யுமுன் இப்படி ஒரு லக்ஷியத்தை நமக்கு நாமே தர வேண்டும். இப்படி நாம் அமைத்துக்கொள்ளும் குறிக்கோளூக்குப் பெயர் “வாழ்வின் லக்ஷியம்” எனக் கூறப்படுகிறது அதாவது வாழ்வதின் நோக்கம் அமைத்துக் கொள்வது எனப் பொருள்.

மனித சுபாவ வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டியது “போற்றக்கூடிய குணங்கள்” எனப் பார்த்தோம். ஆனால் இவை மட்டும் போதுமா? ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த ஒரு காரியம் செய்ய முனைந்தாலும், அதற்குச் சாதகமாகவும் (Positive), பாதகமாகவும் (Negative) சில அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். இதுவரை நாம் சாதகமான (ந்ற்குணங்களை) விஷயங்களைப் பற்றி ஆராய்ந்தோம். இதில் நாம் வெற்றி பெற்றாலும் பாதகமான விஷயங்கள் நம்மைத் தாக்காது காப்பாற்றிக்கொள்ள வெண்டும். அவை எவை என அடுத்த் இதழில் பார்ப்போம்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்
உங்கள் அசலம்

கடிதம் 5

 

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com