Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத் கீதா சாரம்
அசலம்


image: Lord Krishna preaching Bagavatgita to Arjuna - courtesy: eprarthana.com

ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:

அர்ஜுன விஷாத யோகம் - கருத்துரை

இதிஹாஸ புராணங்கள் தரும் கதைகளில் கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை நம் வாழ்க்கைக்கு உதவும் தர்ம சிந்தனைகள் நிரம்பியதாக உள்ளன். அதேபோல் பகவத் கீதை முழுதும் வாழ்க்கைத் தத்துவத்தை மூலமாகக் கொண்டிருக்கின்றது. இதுவரை நாம் படித்த முதல் அத்தியாயத்தை ஸம்கிரஹமாகப் பார்க்க வேண்டியது அவசியம். அதில் தந்துள்ள கருத்துக்கள் யாவை. அவைகளை நம் வாழ்க்கை நடைமுறையில் எப்படிக் கையாள வேண்டும் என்பதை வெகு விரிவாக, தெளிவுகளுடன் தந்திருக்கிறார் ஸ்ரீ வ்யாஸ பகவான். அதை நாம் விரிவாகப் பார்த்து உணர வேண்டும். பாரத யுத்தக்களத்தில் நடைபெறும் விபரங்களை ஸஞ்சயன் வாய்மொழி வழி த்ருதராஷ்டிரர் தெரிந்துகொள்வதாகச் சித்திரித்திருக்கிறார். ஆனால் அதில் உள்ள கதையின் ஸாரமென்ன என்பதை நாம் ஊடுருவிப் பார்க்க வேண்டும். அதில் அட்ங்கியுள்ளா தத்துவங்கள் நம் இப்பொழுதைய காலத்தில் எங்கனம் உபயோகமாகும் என்றும் அதிலுள்ள கருத்துரை என்ன என்றும் அதில் தந்துள்ள வாழ்க்கை முறை யாவை என்றும் வகை திரித்துப் பார்க்க வேண்டும்.

யுத்தபூமியின் விவரணம் நம் வாழ்க்கையில் வரும் எதிர்ப்புக்களையும், இன்னல்களையும், தோல்விகளையும், மற்றும் சிரமங்களையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இரண்டு தரப்புச் சேனைகள் என்பது நம் மனதின் தன்மையைக் காட்டுகிறது. நம் மனம் இரண்டு பட்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அதாவது, நல்ல மனம், துர்மனம். ஒரு பாகம் நற்சிந்தனைகள் கொண்டது, மற்றொன்று துர்குணங்களை உடையது. இதுதான் பாண்டவ சேனை (நல்ல மனம்), மற்றும் கௌரவசேனை (துர்மன்ம்). நாம் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டோமானால் நம் மனதில் ஒரு போர்க்களமே உருவாகிவிடும். இப்படி நம் மனதில் நல்மனத்திற்கும் துர்மனத்திற்கும் இடையே நடக்கும் (விசார) போரைத்தான் பாரத யுத்தமாக விவரித்திருக்கிறார். அப்படி நடக்கும் பொரின் மையத்தைத்தான் போர்க்களமாக விவரித்திருக்கிறார்.

போர்க்களத்தில் அர்ஜுனனின் நிலை என்ன? சராசரி மனிதனின் நிலையை அர்ஜுனனாகக் சுட்டிக்காட்டியிருக்கிறார் இங்கு. அதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, சராசரி மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைச் சித்தரித்திருக்கிறார் இங்கு. அர்ஜுனன் மனம் தடுமாறி, லௌகீக பந்தங்களில் அகப்பட்டு, லௌகீக ஆசாரங்களைச் சுட்டிக்காட்டி, தன் வர்ணாசிரம தர்மத்தை விட்டு வெறும் ஒரு சாதாரண மனிதனாகத் திகழ்வதைப் பறைசாற்றுகிறார். தார்மீக சிந்தனை அற்று மாயையின் வசப்பாட்டு செய்வதறியாது தத்தளிக்கும் ஒரு மனித மனம் படைத்தவனாகக் காண்கிறான். சாஸ்திரங்கள் மிகத் தெளிவாகக் கற்றறிந்த அர்ஜுனன்கூட இந்த மானசீகப் போரில் சிக்குண்டு தவிப்பதைப் பார்க்கிறோம். இப்படி நம் தர்மத்தை சீர் குலைக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது எப்படி நாம் செயல்புரிவோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது இந்த அத்தியாயம். ஆசாபாச பந்தங்களில் ஈடுபட்டு, நம் செயல் மற்றவர்களைப் பாதிக்கும் என்றும், அது நாம் அவர்களுக்கு இழைக்கும் அதர்மம் என்றும் மட்டும்தான் நாம் வாதிப்போம். அது எதற்காக நாம் செய்கிறோம் அதன் கருத்து என்ன, அதன் பலன் சமுதாயத்திற்கு எவ்வளவு நன்மையைத் தரும், நம் தர்மம் என்ன எனபதையெல்லாம் சிந்திக்கும் மன நிலை நமக்கு இராது. கூடாது, நமக்கு வந்திருக்கும் இந்த இக்கட்டான நிலையைக் கண்டு பயம் கொண்டு, நாம் அதில் ஈடுபட்டால் நமக்கு விஜயம் கிடைக்கவில்லையானால் நமக்கு அது இழிவாக அமையும், நம் அபிமானம் குலையும், ஆகையால் அதிலிருந்து விலகப் பல காரணங்களைச் சுட்டிக்காட்டி இப்படி அவிவேகமாக விவாதிப்பது வழக்கம்.. இதற்குப் பெயர் “பேடித்தனம்” (Escapism or Cowardise) என்று கூற வேண்டும்.

இதற்கு அர்ஜுனன் தந்துள்ள விளக்கம் “தயை” என்பதாகும். நம் குல தர்மம் என்ன, இப்படி ஒரு நிலையில் நாம் என்ன செய்தால் தார்மீகமாக அமையும் என்றும் அப்படி நாம் தர்ர்மீகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற த்ருட நம்பிக்கையும் நமக்கு வர வேண்டும். நம் குலதர்மத்தை விடக்கூடாது, நல்வழி சென்றால் நமக்கு பாபம் இராது என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அதை விடுத்து, ஆசாபாச பந்தத்தில் மூழ்கி, பேடியாகி, நம் கடமையிலுருந்து பின்வாங்குவது வெறும் பேடித்தனம் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணனிடம் செய்யும் விதண்டாவாதத்தால் தன் மனதில் உள்ள பயம், பாசம், அஞ்ஞானம், பேடித்தனம், குழம்பிய மனம், ஆழ்ந்து சிந்திக்கும் சக்தியை இழந்த நிலை, நல்லது கெட்டது தரம்திரித்து அறியும் தன்மையை இழந்த நிலை, எல்லாம் விதிபோல் நடப்பதே அன்றி நம் வசம் ஒன்றும் இல்லை, நாம் நம் கடமையைச் செய்வதுதான் குலதர்மம் என்ற நீதியை மறந்த நிலை, இப்படி உருக்கொண்ட அர்ஜுனனின் நிலைதான் சராசரி மனிதர்களாகிய நம்முடைய நிலையும் என்பதைச் சொல்லமல் சொல்கிறார். ஒரு கணம் நம்மை எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் போர்க்களமாகவும் நம்மை அர்ஜுனனின் மனனிலையிலும் வைத்துப் பார்த்தொமானால் இங்கு கூறிய தத்துவம் நம்மைப் பொறுத்தவரை எவ்வளவு உண்மை என்று புரியும்.

அர்ஜுன விஷாத யோகம் என்று இதற்கு ஏன் பெயர் தந்திருக்கிறார்? விஷாதம் என்றால் சங்கடம் அல்லது குழப்பம் எனப் பொருள். நம்மை எதிரிடும் பிரச்சினைகள் ந்ம்மைக் குழப்பத்ததில் மூழ்கடித்து, செய்வதரியாது தத்தளிக்கும் நிலை மிக சங்கடகரமானதல்லவா? “யோகம்” என்றால் சேர்வது அல்லது சமைவது எனப் பொருள். அர்ஜுனனை மையமாகக் கொண்டு மனிதர்ர்களின் மன நிலையைச் சுட்டிக்காட்டுவதால், இதற்கு “அர்ஜுன விஷாதயோகம்” எனப் பெயர் தந்துள்ளார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாவது: “எந்த நிலை வந்தாலும் என்ன பிரச்சினை நம்மை எதிர்கொண்டாலும், நம் மனதை தார்மீக சிந்தனையில் புகுத்தி, கூர்ம புத்தியுடன் சிந்தித்து, நம் குலதருமப்படி செயல் புரிய வேணடுமேயன்றி, குழ்ப்பத்துடன் பேடியாகப் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் பின்மாறக் கூடாது." என்பதே.

சுருங்கச்சொன்னால், நம்மை எதிரிடும் பிரச்சினைகள் “யுத்தபூமியாகவும்”, நம் இரட்டை மனம் (நற்குண சிந்தனையுள்ள பாகம் ஒன்று துர்குண சிந்தனையுளள பாகம் இரண்டாவது) “இருதரப்பு சேனைகளாகவும்”, குழம்பி நிற்கும் அர்ஜுனனை“சராசரி மனிதராகிய நாம்” ஆகவும், அர்ஜுனனின் மன நிலையயை “நம் நிலையாகவும்” ஒரு படம் பார்ப்பதுபோல் தனியே நின்று நோக்கினால் நமக்கு இதன் தத்துவம் புரியும்.

இனி அடுத்த இதழ் முதல் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் உபதேசத்தைப் பார்ப்போம்.

ஹரி ஓம்

தொடரும்...

அத்தியாயம் 1, பாகம் 6

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக பதில் அனுப்பப்படும்.

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button