Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பகவத் கீதா சாரம்
அசலம்


Sketch: drawn by mazalais kid S. Dinesh

ஓம்

இறை வணக்கம்

கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்

கேளுங்கள்

ஸாரம்:

யானயினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.

விளக்கம்:

எந்த ஒரு காரியம் எடுத்துக்கொண்டாலும் முதலில் விக்னமில்லாமல், தடை இல்லாமல் அது நடந்தேற கணபதி வணக்கம் செய்வது அவசியம். ஏன்? பெரிய தலை ஞானத்தைக் குறிக்கிறது. மூளை இருக்குமிடம் தலை. அது பெரிதாக இருக்கு என்றால் பரம ஞானி, ஞானத்தின் இருப்பிடம் என்று கொள்ள வேண்டும். கணபதி ஞானத்திற்கு அதிபதி. பூதகணங்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்த பயமுறக்கூடிய் சரீரமுடனும், முரட்டுத்தனமாக செயல் புரிந்துவருகிற துஷ்டர்களைக் குறிக்கலாம். ஆனால் இங்கு நாம் கோள்ள வேண்டிய ஸாரமானது:

நம் தேகத்தில் உள்ள ஒவ்வோரு அணுவிலும் சக்தி திரண்டிருக்கிறது. ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தேவதை குடிகொண்டிருக்கிறது. கால், கை, முகம், கண், செவி, மூக்கு போன்ற ஒவ்வொரு அங்கமும் சரிவர இயங்க வேண்டுமானால் அவைகளுக்கு சக்தி வேண்டும். அது யாரால் தரப்படுகிறது? அதுதான் ஒவ்வொரு தேவதைகள் குடிகொண்டு அதை இயக்குகிறார்கள். இந்த தேவதைகளுக்கு ஊக்கம் தருபவர் கண்பதி பகவான். நம்மைப்போல் பஞ்சபக்ஷ பரமான்னம் சாப்பிடக் கூடியவரா கணபதி? இல்லை. மித ஆகாரம், ஆனால் நல்ல ஸத்து தரும் உணவு, ஜம்பு பலத்தை மட்டுமே சாப்பிட்டு வருபவர். அதாவது ஆசயை அடக்கியவர் என்று பொருள். ஆகாரம் என்றால் உணவு மட்டுமல்ல. உலக விஷயங்களில நமக்குள்ள ஆசை. அதை அடக்கியவர் என்று பொருள். தடங்கலை அடக்கும் சக்தி பெற்றவர், நம் துக்கத்தைப் போக்கடிக்கக் கூடியவர். அப்பேற்கொத்த விநாயகனை முதலில் ஸேவித்தால் சைய்யப்போகும் காரியம் தடையில்லாமல் ஸுலபமாக அமையும் என்று பொருள்.

ஸ்ரீ ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

கேளுங்கள்

ஸாரம்:

அழகுடனும் தேஜஸுடனும் விளங்கும் ஹே ஸரஸ்வதீ தேவி! நான் உன்னை நமஸ்கரிக்கிறேன். நான் இப்பொழுது ஆரம்பிக்கப் போகும் ஞானம் பருகுதல் என்ற வழிக்கு உனது அருள் கிடைக்க வரம் கோருகிறேன்.

விளக்கம்:

எப்பொழுதும் படிக்க அல்லது அறிவு பெற நாம் முயலும்போது அதற்கு அதிபதியாக விளங்கும் ஸரஸ்வதியை வழிபட வேண்டும. வெள்ளை நிற வஸ்திரம் சுத்த அறிவைக் குறிக்கிறது, முகத்தில் தேஜஸ் ஸௌம்யத்தைக் காட்டுகிறது, கையிலுள்ள புத்தகம் அறிவை உணர வழி காட்டுகிறது, வீணை இசையைச் சுட்டிக் காட்டுகிறது, ஏனெனில் படிப்பிலும் ஒரு ஸ்ருதி லயம் அவசியம். இதுதான் ஸரஸ்வதியின் உருவம். பெரியோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் தன்மயைச் சுட்டிக் காட்டும்படி ஒவ்வொரு வடிவம் அமைத்து, இந்த தியான ஸ்லோகங்களைத் தந்துள்ளார்கள். அவர்கள் உருவமே நமக்கு அவர்களின் சக்தியை உணரவைக்குமாறு அமைத்திருக்கிறார்கள்.

நம:

குருப்ரஹ்மா குருர் விஷ்ணோ: குருர்தேவோ மஹெச்வரா குருஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

கேளுங்கள்

ஸாரம்:

ப்ரஹ்ம்மா, விஷ்ணு, சிவன் கூடிய மூன்று சக்திகளும் ஒன்றாகத் திகழும் ஹே பரமாத்மன் (பரப்ரம்மம்)! நீங்களே எனக்கு குருவாக இருந்து அருள்வீராக.

விளக்கம்:

நமக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய முதல் தெய்வம் பரம்பொருள். அவரே மூன்று வித வழிகளிலும் நம்மை நயிப்பவர். ப்ரஹ்ம்மா படைக்கிறார். விஷ்ணு காக்கிறார். சிவன் அழிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் நமக்கு வழிகாட்டிகளாகவும், குரு ஸ்தானத்திலிருநு நம்மை நயிப்பவற்களாகவும் திகழ்கிறார்கள். அதனால் இம்மூன்று பணிகளையும் நடத்திவரும் இவர்களைத் தவிர வேறு குருவை அடைய முடியுமா? குரு என்பவர் எல்லாம் தெரிந்தவரும், அறிவைப் புகட்டும் தகுதி படைத்தவரும், வழிகாட்டியுமாகத் திகழவேண்டும். உலகத்தில் இந்த மூன்று பணிகளில் எல்லாம் அடங்கி விட்டது. அதை நயிக்கும் இம்மூன்று பேரையும் சேர்த்துப் பரம்பொருள் என்று கூறப்படுகிறது. இந்தப் பரம்பொருளையே நமக்கு குருவாகக் கொள்வது மிகப் பொருந்தும்.

ஏதொரு கரியம் துவங்குவதற்கு முன்னும் இம்மூன்று ஸ்லோகங்களையும் சொல்லி வணங்க வேண்டியது மிக அவசியம்.

முன்னுரை:

பல இன்னல்களுக்கிடையில் நாம் வாழ்ந்து வருகிறோம். பல இடையூறுகள் நம்மை நோக்கி வருகின்றன. அதை சமாளிக்க நம்மால் இயலவில்லை. காரணம் அவை நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. அப்போது நாம் என்ன செய்கிறோம்? மற்று யாருடைய உதவியை நாடுகிறோம். நம் பெரியோர்கள் அறிவுரை தரலாம் அல்லது நம் குருநாதர் நமக்கு உதவலாம் அல்லது ஞானியர்களை நாம் நாடலாம். இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரிதானது. அதை யாராலும் அளவிட முடியாது, - வாமனனைத் தவிர. இதில் நிறைந்து கிடக்கும் விஷயங்களை அறிய ஒரு ஜென்மா போதாது. ஆனாலும் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்தாக வேண்டும், அதுவும் பலருக்கு உதவியாக இருக்க வேண்டும். யாருக்கும் ஓர் தீங்கும் இழைக்கக் கூடாது. இந்தக் குறிக்கோளுடன் வாழ்வோமானால், நற்கதி அடைய முடியும். ஆனால் நம் வாழ்வின் தரம் எப்படி இருக்க வேண்டும்? நாம் என்னென்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? எப்படி வாழ வேண்டும்? நற்கதி அடைய என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். அது எங்கு இருக்கிறது? எப்படி அறியலாம்?

ஸனாதன தருமம் எனப்படும் வேதாந்த இரகசியம் நமக்கு முன்னோர்கள் வேதம், வேதாங்கம், வேதாந்தம், உபனிஷத், புராணம் இத்யாதி கிரந்தங்கள் மூலமாகத் தந்துள்ளார்கள். ஆனால் அவை கிரந்தாக்ஷரங்களிலும் சம்ஸ்க்ருத பாஷையிலும் உள்ளன. நமக்குப் புரியாது, கூடாது, அவைகளைப் படித்து உணர்வதற்கு ஒரு ஜென்மா போதாது. நம்மால் இயலவும் இயலாது. பிறகு என்ன செய்யலாம்? கவலை வேண்டாம். ஜெகதீச்வரன் நாராயண பகவானே அர்ஜுனனை வைத்துத் தன் கீதோபதேசம் வழியாக நமக்கு மேற்கூறிய கிரந்தங்களின் சாரத்தை ஒன்று விடாமல் தந்துள்ளார். நமக்குத் தெரிந்து நாலு வேதங்கள் உள்ளன. ருக், எஜுர், ஸாம, அதர்வண வேதங்களே அவை.

இந்த நாலு வேதங்களின் சாரத்தை அப்படியே நமக்கு எளிதான பாஷையில் தந்துள்ளார். ஆகையால் இந்த பகவத் கீதை ஐந்தாவது வேதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதில் தந்துள்ள உபதேசம் மேற்கூறின வேதங்களின் முழுத் தத்வார்த்தங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. அவை எந்தக் காலத்திலும், எந்த தேசத்திலும். எந்த சமயத்திலும், எந்த மனிதராலும் பின்பற்றி, வாழ்வின் இலக்ஷித்தை அடைய உதவுவதாக அமைந்துள்ளது. இங்கு அடியேன் எமக்குத் தெரிந்தபடி இந்த கீதையின் ஸாரத்தை மட்டும் தர ஆசை கோள்கிறேன். நான் பெரிய பண்டிதனோ, மேதையோ அல்ல. என் குருநாதர் ஸ்ரீ ரமண பகவான் என்னுள் இருந்து இதை அளிக்கிறாரே தவிர, எனது சாமர்த்தியத்தால் உருவானதல்ல என்ற உண்மையை இங்கு அறிவிக்க விரும்புகிறேன். நான் அவர் கைக்கருவி. அவர் என்னுள் இருந்து ஊக்குவிப்பாராக.

நன்றியுரை:

இந்த யக்ஞத்தை எடுத்து ஓர் தொடராக எழுதுமாறு ஸ்ரீ A.K.R. அவற்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதை என்னால் தட்ட முடியவில்லை. ஏனெனில் அவர் இந்த "மழலைஸ் காம்" தளத்தின் மூலமாக செய்யும் ஞான யக்ஞத்தில் எமக்கும் ஓர் பங்கு தந்ததில் மகிழ்சியடைகிறேன். இதன் முழு பலமும் அவரைச் சேரும். அடுத்த இதழ் முதல் நாம் கீதா ஸாகரத்தில் மூழ்கி விலை மதிக்க முடியாத அம்ருதத்தைப் பருகுவோமாக.

இதனைத் தமிழில் உருவாக்க உதவிய அழகி என்ற "Tamizh Transliteration Software"க்கும் அதன உருவாக்கிய விஷி என்பவர்க்கும் எனது அன்பு கலந்த பாராட்டைத் தெரிவிக்கிறேன்.

அடுத்த இதழில் கீதாஸாரம் துவங்குமுன் அதன் கருத்துரை தரப்படுகிறது.

ஹரி ஓம்

தொடரும்...

அறீமுகம் கருத்துரை

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button