மழலைகள்.காம்
Bilingual Monthly. Issue 15 - August '07

 

Today's Children are future Leaders

Bring out the child in you



Create Tamil contents with Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications

மழலைகள்.காம்

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்

Dear friends,

Mazhalaigal.com 15th issue is on the net. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages.

We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders.

Thank you,

A.K. Rajagopalan
Editor

அண்ணாமலையான் - செபரா

திருவண்ணாமலையே சிவலிங்க உருவாக இருக்கையில், இங்கு 1000க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் புதைந்து கிடக்கின்றன. ஊரில் கல்லை நட்டால் அது சிவலிங்கம் என வணங்கும் மனமுடையவராக மக்கள் இருக்கிறார்கள். வானுயர உயர்ந்து நிற்கும் மரங்கள், இது தேவலோகம் என உரைப்பது போலத் தோன்றுகிறது

குருவருள் - அசலம்

“இவர் என்ன சாமியார், பார்ப்போம், போய் வருவோம், பேசுவோம் என்று தட்டிக்கழிக்கிறார். அவரிடம் பேசிப் பிரயோசனமில்லை. சில பேர்களுக்கும் உதவுகிறார், எல்லோருக்கும் சமமாக அருள் புரியவில்லை, நாம் போவோம்”

பொன்னெறிகள் பொலியும் புறநானூறு - முத்து. இராமமூர்த்தி

தமிழ் மொழி, என்றிவள் பிறந்தாள் என்றுலகறியா ஏற்றம் கொண்ட இனிய மொழி, உயர் தனிச் செம்மொழி. மொழிக்கு மட்டுமின்றி அம்மொழியைப் பேசும் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி, வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி, முச்சங்கங்கள் கண்ட முதிர்ச்சியான மொழி.

ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம் - புலவர் நீல பகவன்

விளங்கு விசையன் போன்றோர்தம் வில்லின் ஆற்றல் விரிவு பெறக் களத்திற் காட்டுந் திறனுக்கே காரணனான கணபதியே! அளக்க லாகா மதநீரை அருவியாக நிதம் பொழிந்தே களகம் ஊர்ந்த கணபதியே! களிக்கும் நெஞ்சிற் கதிபதியே!

பிரதாபன் கதை - வெற்றிவளவன்

அப்போது நீலகண்டனும் குதிரையில் விரட்டிக் கொண்டு வந்தான். அவன் முன்னால் வந்து மறித்த போது வண்டிக்குதிரைகள் நிற்காமல் அவனை நோக்கிப் பாய்ந்து வேகமாகப் போயின.

Adi sankara - akr

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Balaji - akr

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

நினைவில் நின்றவை - இணையப் பாட்டி, சீனு தாத்தா

புகலூர் காவிரிக்கரையின் கிழக்கு திசையில் பார்த்தால் தூரத்தில் வலதிசையாகத் திரும்பிக்கொண்டிருக்கும் காவிரியின் அக்கரையில் இரு மலைகள் தெரியும். முதலில் தெரிவதைக் கொள்ளி மலை

பெருமை வாய்ந்த பிள்ளையார்! - பகுதி 6 - கீதா சாம்பசிவம்

விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?

சுதந்திர தினம் - இணையப் பாட்டி

திருப்பூரில் உதித்த சூரியனே அறப்போராட்டத் தலைவனே, தேசத்திற்குக் கொடுத்தாய் உயிரோட்டம் கலந்து கொண்டாய் மரியல் போராட்டம்

சிந்துக்குத் தந்தை - கைலாசபதி

புதுமையான கருத்துக்களை வசனமாக எழுத முனைந்த அறிஞர் பலர் தமிழ்க் கவிதை எழுதிய போதிலும் பல்லுடைக்கும் கடின நடையிலே மரபு வழிவந்த பாடல்களையே பாடினர். அதுவரை எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்துவந்த வசனத்தை இவர்கள் தன்னம்பிக்கையுடன் கையாண்டனர்; அதன் எஜமானராயினர்.

நூல் நயம் - ஆகிரா

சிந்தனை வளமும், வந்தனை நலமும், கந்தனை மறவாக் காட்சியும், மாந்தனன் விழையும் மாண்பும், சந்தத் தமிழின் முழக்கும், சிந்தெனச் சிந்தையை ஈர்க்கும் இசையுள்ளமும் கொண்டவர் புல்வர் நீல பகவன்.

பாலாஜி - இணையப் பாட்டி

காவடி போல் தோளில் இரு பக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான்.

சின்னப் பையா! - என்.வி. சுப்பராமன்

வள்ளுவரும் வள்ளலாரும் பிறந்த நாடிது தெள்ளுதமிழ் இலக்கியங்கள் மலர்ந்த நாடிது! ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த நாடிது பாரதியும் வால்மீகியும் வளர்ந்த நாடிது!

வாழ்க்கை தத்துவம் - அத்தியாயம் 1 - அசலம்

“பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

பகவத் கீதா சாரம் - அசலம்

குழுமியிருக்கும் பந்துக்களின் விபரத்தைக் கூறி, இத்துனை பந்துக்கள் கொண்ட ஸேனையில் எவ்வளவு பேர் மடிவார்கள், பிறகு கிடைக்கும் ஜயத்தில், ராஜ்யத்தில், ஸுகத்தில் என்ன பலன் என்று வாதாடுகிறான். மனோதைரியம் போய், பிரமை பிடித்த அர்ஜுனன் தன் கடமையிலிருந்து நழுவப் பார்க்கிறான்.

விடுதலை! - புலவர் நீல. பகவன்

இறுக்கங்கொண்ட வெள்ளையர்கள் இரக்கம் கொள்ளை வில்லையடா! நொறுக்க வேண்டும் தலையெனவே நோக வைத்தார் நிலைகுலைய

வாழும் முறைமை - கடிதம் 4 - அசலம்

சுபாவ வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டியது போற்றக்கூடிய குணங்கள். அதாவது “சாந்தம், ஸமாதானம், பொறுமை, தன்னம்பிக்கை, தைர்யம், ச்ரத்தை, கடமை உணர்ச்சி, விடாமுயற்சி, மனோ நியந்தரணம், ஸூக்ஷ்ம புத்தி, பாசம், வினயம், அன்பு, பக்தி, தயை, கருணை, ஒற்றுமை உணர்ச்சி, பரோபகாரக் கொள்கை, ஸாமுதாயிக மனப் பான்மை, தன்னலமற்ற சுபாவம், வாழ்வின் லக்ஷியம்” எனப்படும். என்ன? இவைகளைக் கேட்டதும் மலைப்பாக இருக்கிறதா?

எண்ணிப் பாருங்கள்! - என்.வி.சுப்பராமன்

அவசரமாகப் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். எதிரில் வரும் பையன் சைக்கிளிலிருந்து விழுந்து விடுகிறான். என்ன செய்வீர்கள்? எண்ணிப் பாருங்கள்.

Park - Sarika

Little angel having a good time standing in the park All by herself singing like a skylark, It is not yet dark !

வீரப் பெண்மணி - இணையப் பாட்டி

1907ல் நடந்த ஒரு சம்பவம், இந்திய சோஷலிசக் கூட்டம் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நட்ந்து கொண்டிருந்தது. திடிரென்று ஒரு பெண்மணி கையில் நம் நாட்டு தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து அந்த இடத்தில் இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விட்டார்.

காஞ்சி மாநகர் வரலாறு - புலவர் த.கு. பத்மநாபன்

சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.

முத்தமிழ் முத்து - ஆகிரா

கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், நிகழ்ச்சிகள் மற்றும் விழா அமைப்பாளர் <br>கவியரங்கம், பட்டிமன்றம், வழக்குரை மன்றம், உரையரங்கம் முதலிய நிகழ்ச்சிகளில் (தலைமை, நடுவர் பணிகள் உட்பட) பங்கேற்பாளர்.

தந்தை காந்தி! - புலவர் நீல. பகவன்

யந்திரம்போல் ராட்டையை இயக்கி நின்ற காந்தியாம்! <br>இந்தியாவின் விடுதலை இசைத்துத் தந்த காந்தியாம்

Artist sisters - akr

YOUR BLESSINGS FOR THESE KIDS

Seashore - Sarika

I live in a house facing the seashore And enjoy life that is nature's gift The colorful land that lie beside And birds that fly by the seashore !

பஞ்ச முக ஆஞ்சனேயர் - மழலைகள் குழுவினர்

ஆஞ்சநேயரைப் பற்றிய சுதர்சன சம்ஹிதை என்ற நூலில் பஞ்சமுகி ஹனுமானைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது, கோவில் கர்பக் கிரஹத்தில் இன்னொரு ஆஞ்சநேயர் நிற்கிறார், ஒரு கையில் கதையுடன் வீர ஆஞ்சநேயராக்க் காட்சி தருகிறார். இவைகளெல்லாம் பார்த்தால் மனதிற்கு சாந்தி ஏற்படுகிறது.