மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
இணையப் பாட்டி
|
|
அன்புக் குழந்தைகளே,
கோகுலாஷ்டமி என்றால் உங்கள் ஞாபகத்திற்கு வருவது சீடை, முறுக்கு, திரட்டிப்பால்.. இல்லயா? அம்மாவுடன் நீங்களும் சீடை உருட்டிப் போடப் பழகிக் கொள்ளுங்கள், பின் அந்தப் பால கிருஷ்ணனுக்குப் படையுங்கள், மனம் தன்னாலேயே மகிழ்ச்சியடையும். இப்போது அந்தக் கிருஷ்ணன் பிறந்த கதையைப் பார்க்கலாம். இந்தக் கிருஷ்ண ஜனனம் படித்தாலே நல்ல பலன் கிடைக்கும். மதுரா என்ற நகரிலே சூரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவரின் மகன் வசுதேவர் தேவகி என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அந்தத் தேவகியின் சகோதரன் கமசன் மனம் மகிழ்ந்து, திருமணம் முடிந்த பின் தன் சகோதரி தேவகியையும், வசுதேவரையும் நன்கு அல்ங்கரித்த தேரில் அமர்த்தித் தானே தேரோட்டினான். வீதியில் வலம் வரும்போது ஆகாயத்தில் ஒரு அசரீரி, "ஓ கம்சா, உன் தங்கையின் எட்டாவது மகன் மிகக் கொடியவனான உன்னைக் கொல்லப்போகிறான்" என்று சொல்லி மறைந்து விட்டது. அரக்கன் கம்சனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. தேவகியின் முடியைப் பிடித்து இழுத்துத் தன் வாளால் அவளைக் கொல்ல ஓங்கினான், அப்போது வசுதேவர் மனம் கலங்கி, பல நல்ல வார்த்தைகள் சொன்னார், ஒன்றும் பலனளிக்கவில்லை. அப்போது வசுதேவர் தனக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் அவனிடம் தருவதாக வாக்குறுதி அளித்தார். சற்று மனம் சமாதானமாகிக் கம்சன் தன் அரண்மனைக்குச் சென்றான். வசுதேவரும் தான் வாக்களித்தவாறே செய்தார். ஒரு நாள் தேவரிஷி நாரதர் தன் வீணையை மீட்டியபடியே 'நாராயணா நாராயணா' என்றபடி கம்சனிடம் வந்தார். கம்சன் நாரதரை வணங்கினான். நாரதர் அவனது நலம் விசாரித்துப்பின் சொன்னனர், "ஓ கம்சா, நீங்களோ அசுரர்கள், யாதவர்களோ தேவர்கள், இதை நீ அறிவாயா? உன்னைக் கொல்ல ஹரியே அந்தத் தேவகிக்குப் பிறப்பான்" என்று. அவ்வளவுதான் நாரதரின் கலகம் ஆரம்பித்து விட்டது. கம்சன் யாதவர்களைத் துன்புறுத்தலானான். அவர்களை ஊரை விட்டே ஓட்டினான். தேவகியையும் வசுதேவரையும் கம்சன் சிறையிலிட்டான். கை கால்களில் விலங்கைப் பூட்டினான். ஒரே இருட்டு அறை. இந்த நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தேவகியின் கர்ப்பத்தில் புகுந்தார். எட்டாவது குழந்தை பிறக்கும் நாளும் வந்தது. தேவகி வலியால் மயக்கமாகி விழுந்தாள். ரோஹிணி நக்ஷத்திரத்தில், ஆவணி மாத்த்தில் அஷ்டமி திதியில் நடு சாமத்தில் இயற்கையே மகிழ எல்லா இடமும் குளிர்ச்சி பெற சந்திரன் ஆகாயத்தில் பிரகாசிக்க, நீல நிறக் கண்ணனாக, காதில் குண்டலத்துடன் கையில் சங்கு சக்கிரத்துடன் இன்னொறு கையில் கதையுடன் தாமரை மலர் விரிய, முத்து மாலைகள் அசைய, கை வளைகள் குலுங்க, காதில் குண்டலமாட நீலவண்ணக் கண்ணன் அவதரித்தார். அந்த இருட்டு சூழ்ந்த சிறை ஒளிர்ந்தது. தேவகி கண் விழித்துப் பார்த்தாள். வசுதேவர் தேவகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட மனமும் கலங்க இந்தக் குழந்தைக்கு கம்சனால் என்ன கதி வருமோ என்று கவலை அடைய, அன்னை அந்தப் பகவானை சாதரணக் குழந்தை போல் தோன்ற யாசித்தாள். உடனே சின்னக் குழந்தையாக மாறினார் கண்ணன். பின் பேசவும் ஆரம்பித்தார், தன்னை நந்தகோபரிடம் சேர்க்கவும் அங்குப் பிறந்திருக்கும் தேவமாயா {துர்க்கையை} குழநதையை இங்கு எடுத்து வருமபடியும் கூறினார். உடனே அவர் காலில் இருந்த விலங்கு கழன்று போனது. அவர் அந்தக் குழ்ந்தையை ஒரு கூடையில் வைத்துத் தன் தலைமேல் வைத்துக் கொண்டார். மழை கொட்டி எங்கும் வெள்ளம். யமுனை பொங்கி வழிந்தது. கண்ணனது மாயையால் சிறைக் கதவுகள் தானாகவே திறந்து கொண்டன, கண்ணன் நனையாமல் இருக்க ஆதிசேஷன் தன் படங்களைத் திறந்து பிடித்தான். போகும் இடமெல்லாம் கூடவே சென்றான். யமுனா நதியின் அலை மகிழ்சியால் கன்ணனின் குட்டிப் பாதங்களைத் தொட்டு வணங்கிப் பின் வழிவிட்டது வசுதேவர் போகும் இடமெல்லாம் கணுக்கால் அளவே ஜலம் இருக்க வசுதேவர் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றார். அங்கு யசோதைக்கு மாயப் பெண் குழந்தை பிறந்து, யசோதை மயக்க நிலையில் இருந்தாள், எல்லோரும் மாயையால் உறங்க, கதவுகள் தானாகவே திறக்க, கண்ணனை யசோதைக்கு அருகில் அமர்த்தி, பின் அந்தத் துர்க்கயை எடுத்துத் திரும்பினார் வசுதேவர். தேவகியிடம் கண்ணன் பிறந்தான், யசோதையிடம் வளர்ந்தான்.
கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாயச
ஆவணி ரோஹிணியில் பிறந்தாய் நீ
தலைக்கீரீடம் பளீரென்று மின்ன, அன்புடன் அம்ம்ம்மா
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |