மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

சுதந்திர தினம்

இணையப் பாட்டி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Indian National Flag - image courtesy: Wikipedia
அன்புக் குழந்தைகளே,

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் இல்லையா?

ஆஹா! கையில் வண்ண வண்ண பலூன்களுடன், சின்ன மூவர்ணக் கொடியுடன், மகிழ்ச்சியுடன் வலம் வருவதை நான் பார்க்கிறேன். தவிர, பட்டங்கள் ஆகாயத்திலும் பல பறக்க, அதை ஒருவர்க்கொருவர் வெட்டிவிட்டு உத்சாகத்துடன் மகிழ்வதும் கற்பனை செய்கிறேன்.

Kite - Artwork by mazalais kid
சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால் அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும். "என்க்கு சுதந்திரம் உண்டு, அதனால் வாழைப்பழத் தோலை எங்கு வேண்டுமானாலும் போடுவேன்" என்றோ, பேச்சு சுதந்திரம் உண்டு என்று எல்லோரிடமும் எப்படி வேண்டுமானாலும் பேச முடியுமா? எல்லாவிததிலும் ஒரு கண்ணியம், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், அதுதான் உண்மையான சுதந்திரம்.

இந்த சுதந்திர தினத்தன்று, "ஹையா ஒரு நாள் பள்ளி லீவு, கொட்டம் அடிக்கலாம் என்று இல்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்த தலைவர்கள் பற்றியும் தேசத் தொண்டர்கள் பற்றியும் படிக்கலாம், அல்லது பெற்றோரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், ஒரு நல்ல விதமாகப் பொழுதுபோக்க வேண்டும். பெற்றோர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யலாமே, கப்பல் ஓட்டிய தமிழன், கட்டபொம்மன் போன்ற படங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்க்கலாம், அவரிடம் சந்தேகங்களையும் கேட்கலாம்.

படங்கள் வரையும் ஆர்வம் இருந்தால் மூவர்ணக் கொடி வரைந்து நண்பர்களுக்குக் கொடுக்கலாம், பட்டம் வீட்டிலேயே த்யார் செய்யலாம்.

என்ன குழந்தைகளே ரெடியா?

ஒரு தமிழ் நாட்டு இளைஞர் வீரத்துடன் தேசப்பற்று மிகுந்து சுதந்திரப் போராட்டத்தில் தலைமை வகித்து நாட்டிற்காக உயிரையும் கொடுத்தார். அவரைப் பார்ப்போம்.

கொடி காத்த குமரன்

Tirupur Kumaran - image courtesy: Tamilnadu Government memorial
திருப்பூரில் உதித்த சூரியனே
அறப்போராட்டத் தலைவனே,
தேசத்திற்குக் கொடுத்தாய் உயிரோட்டம்
கலந்து கொண்டாய் மரியல் போராட்டம்
தேச பந்து இளைஞர் மன்றம் தலைவன் நீ
நாட்டுப் பற்று, விடுதலை வேட்கை கொண்டாய் நீ
வறுமையிலும் செழுமை கண்டாய் நீ
போராட்டத்தின் தலைமை ஏற்றாய் நீ
தடியடிப்பட்டு விழுந்தாய் நீ
மண்டை உடைந்து இரத்த வெள்ளமானாய் நீ
ஆனாலும் இந்தியக் கொடியை விடாது பிடித்தாய் நீ
கொடிக்காத்த குமரன் ஆனாய் நீ
எங்கள் மனதில் என்றும் அகலாமல் நீ!

அன்பு குழந்தைகளே நாட்டிற்க்காக நீங்களும் ஏதாவது சாதிக்க என் ஆசிகள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்,

அன்புடன்

அம்ம்ம்மா

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com